Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, June 27, 2017 2 Shawwal 1438

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, April 17, 2007
கேரளாவில் சாதனை படைத்த குஞ்ஞாலிகுட்டி தேசிய அளவிலும் தனிமுத்திரை பதிப்பார் மலப்புரம் தொகுதியில் வெற்றி வாகை சூடியதற்கு இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து


கேரளாவில் சாதனை படைத்த குஞ்ஞாலிகுட்டி தேசிய அளவிலும் தனிமுத்திரை பதிப்பார் மலப்புரம் தொகுதியில் வெற்றி வாகை சூடியதற்கு இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து சென்னை, ஏப்.17- கேரள மாநிலத்தில் சாதனை படைத்த குஞ்ஞாலிகுட்டி தேசிய அளவிலும் தனி முத்திரை பதிப்பார் என்று மலப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப் பதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி சாஹிப் 1, 71, 023 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மலப்புரம் தொகுதி மக்கள் பாரம்பரியமாக முஸ்லிம் லீகிற்கு தொடர்ந்துவெற்றியை அளித்து வருகிறார்கள். இதன் மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அளவில் உயர்வாக மதிக்கப் படக்கூடிய இயக்கமாக வளர்ந்து இருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு பெரும் உதவி புரிந்துள்ள மலப்புரம் வாக்காளப் பெருமக்களுக்கு நமது நன்றியை உரித்தாக்குவோம்.

கேரள அரசியலில் பி.கே. குஞ்ஞாலிகுட்டி எல்லா தரப்பு மக்களின் இதயங்கவர்ந்த தனிப் பெருந்தலைவராக திகழ்ந்து வருபவர். தற்போது தேசிய அளவிலும் சேவையாற்ற இறைவன் அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளான்.

மக்களுக்கு சேவை யாற்றுபவர்களை ‘சிங்கக் குட்டி’ என்று பாராட்டும் வழக்கம் கேரள மக்களிடத்தில் வேரூன்றி இருக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள கேரள சிங்கக்குட்டியான பி.கே. குஞ்ஞாலிகுட்டி இனிமேல் பாரத நாட்டின் சிங்க குட்டியாக திகழ்வார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கேரள மாநிலத்தில் அமைச்சராக பணியாற்றி, அனைத்து மக்களுடைய நல்லெண்ணத்தையும், வாழ்த்தையும் பெற்று இருப்பவர் குஞ்ஞாலி குட்டி. சமூக நல்லிணக்கத்தின் தலைநாயகர். பொது நலச் சேவையில் ஞாயிறு போன்றவர். இவருடைய பணி தேசிய அளவில் சிறந்து ஓங்கும் என்பதில் எல்லோரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

மலப்புரத்து மக்கள் வெற்றியைத் தந்து வழியனுப்பி வைக்கப்பட்டுள்ள குஞ்ஞாலிகுட்டி சாஹிப் அவர்களை இந்தியத் தலைநகரான டெல்லி இருகரம் ஏந்தி வரவேற்கிறது.

கேரளாவில் அவர் சாதித்த சரித்திரத்தை இனி இந்திய அளவில் சாதிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அவருக்கு நமது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

அவரைத் தேர்ந்தெடுத்த மலப்புரத்து மக்களுக்கும், இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட இந்திய யூனியன் மு.ஸ்லிம் லீக் ஊழியர் திலகங்களுக்கும், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குவோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்