Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, August 18, 2017 25 Zul-Qida 1438

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, April 30, 2007
சிவகாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் தேர்வு


சிவகாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் தேர்வு தலைவர்: பழவேற்காடு எம். அன்சாரி, செயலாளர்: திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி, பொருளாளர்: லால்பேட்டை ஏ.எஸ். அஹமது சிவகாசி, ஏப்ரல். 30- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் கூட்டம் சிவகாசியில் பேப்பர் மெர்ச்சென்ட் அசோசியேசன் அரங்கில் 29-04-2017 அன்று மாநில செயலாளர் பழவேற்காடு எம். அன்சாரி தலைமையில் கிராஅத்துடன் ஆரம்பமானது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் எம். இப்ராஹிம்ஷா, மாவட்ட துணை அமைப்பாளர் ராஜபாளையம் எச். லிவாவுதீன், அமைப்புக்குழு உறுப்பினர் எஸ். முஹம்மது, நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வி.ஏ.எம். இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்ட மாணவர் பேரவை அமைப்பாளர் எம். அப்துல் மஜீத் வரவேற்றார்.

முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய தலைவர் டி.பி. அஷ்ரப் அலி துவக்கயுரையாற்றினார்.

தேசிய பொதுச் செயலாளர் வாணியம்பாடி எஸ்.எச். முஹம்மது அர்ஷத், தேசிய இணைச்செயலாளர் புளியங்குடி முஹம்மது அல் அமீன், மாணவர் பேரவை இணைச்செயலாளர்கள் லால்பேட்டை ஏ.எஸ். அஹமது, திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி, மாணவர் பேரவை பிரநிதிகள் மதுரை அஜ்மல்கான்,

நெல்லிக்குப்பம் அபூபக்கர் ரஸ்வி, விழுப்புரம் செய்யது பாவா, புளியங்குடி ஏ. மைதீன் பிச்சை நெல்லை பேட்டை முஹம்மது ஹனீபா, இராமநாதபுரம் சிராஜுதீன், வேலூர் அப்துல் ரஹீம், கன்னியாகுமரி சித்தீக், திருப்பூர் ரஹ்மத்துல்லா, திருச்சி அப்துல் ரஹ்மான், சேலம் லியாக்கத் அலி புளியங்குடி அபுசாலிஹ், தஞ்சாவூர் அபூதாஹிர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய செயலாளர் இ. ஷமீர், ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.

புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவராக பழவேற்காடு எம். அன்சாரி, மாநில செயலாளராக திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி, மாநில பொருளாளராக லால்பேட்டை ஏ.எஸ். அஹமது, மாநில துணைத்தலைவர் களாக ஈரோடு பாரூக், மங்கலம் அப்பாஸ்,

மாநில இணைச் செயலாளர்களாக மதுரை அஜ்மல்கான், இராமநாதபுரம் சிராஜுதீன் ஆகியோரின் பெயரை மாநில பொதுச் செயலாளர் அறிவித்தார்.

கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹிம், துணைச்செயலாளர் ஏ. அப்துல் வகாப், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாட்டபத்து முஹம்மது கடாபி, இராமநாதபுரம் ஆர். முஹம்மது யாகூப், மணிச்சுடர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, சிவகாசி நகர செயலாளர் எம்.டி. ஷாகுல் ஹமீது, அபுதாஹிர், கடையநல்லூர் கே.எம். ரஹ்மத்துல்லா உட்பட தமிழகம் முழுவதிலிமிருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு

மத்திய பாஜ.க. அரசு மாநிலத்தினுடைய அதி காரத்தை பறிக்கும் விதமாக மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியிருக்கிறது. இது கிராமப்புற ஏழை, அடித்தட்டு மாணவர்களை வஞ்சிக்கும் விதமாகவும், சமூக நீதி கொள்கைக்கு எதிராகவும் உள்ளது. எனவே மத்திய பா.ஜ.க. அரசு கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும் வகையில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவத்திற்கான பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் காணாமல் போன நஜீப் அஹமதுவை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு பதவியேற்றதி லிருந்து சிறுபான்மையினர் மீதான குறிப்பாக முஸ்லிம் கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பசு பாதுகாப்பு, தேசிய ஒருமைப் பாடு என்ற போர்வையில் முஸ்லிம்கள், தலித்கள் அதிகம் தாக்கப் பட்டு வருகின்றனர்.டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நஜீப் அஹமது என்ற மாணவர் அகில பாரதீய வித்யா பரிஷத் அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் காணா மல் போனார். 6 மாதங்கள் கடந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகம் மற்றும் காவல் துறை சரியான நட வடிக்கை எதுவும் எடுக்க வில்ல. பல்கலைக் கழக நிர்வாகம் நஜீபை தாக்கியவர்களுக்கு பாதுகாப்பு அளித்து நஜீபை குற்றவாளியாக வர்ணிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே நஜீபுக்கு நீதி வழங்க மோடி அரசு மறுத்து வருவதை இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது. எனவே, மாணவர் நஜீப் அஹமதுவை தாக்கிய குற்ற வாளிகள் மீது வழக்கு தொடர்வதுடன் நஜீப் அஹமதுவை உடனடியாக கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கமும், உள் துறை அமைச்சகமும் எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் மாணவர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விழிப்புணர்வு

மத்திய மாநில அரசுகள் வழங்குகின்ற சிறுபான்மை மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகையின் பயன்கள் முழுமையாக கிடைக்கச் செய்வதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் முழு முயற்சி மேற்கொள்ள கேட்டுக்கொள்வதோடு, இது தொடர்பாக முஸ்லிம் மாணவர் பேரவையும் மாநிலம் தழுவிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

மாணவர்களுக்கான உயர் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்

உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சிரமப்பட்டு பட்டம் பெற்றாலும் உடனடியாக வேலை கிடைப்பதில்லை. அப்படி வேலை கிடைத்தாலும் படிப்புக்கேற்ற வேலையோ ,எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஊதியமோ இல்லை. இதனால் படிப்பிற்காக கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

நாட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் எண்ணற்ற இலவச திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. மேலும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகையை தள்ளுபடி செய்கின்ற இக்கால கட்டத்தில் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான கல்விக்கடனை முழுமையாக ரத்து செய்ய மத்திய-மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

சிறுபான்மை மாணவர்களுக்கு விடுதி

கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு கல்வி கற்க வருகின்ற மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிக்க வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் விடுதி கட்டணங்கள் பல ஆயிரங்களை தாண்டுவதால் கிராமப்புர மாணவர்கள் கல்வி பெறுவதற்கு தடங்கலாக இருக்கிறது.

எனவே பொருளா தாரத்தில் மிகவும் நலிவடைந்த இம்மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கவும் வசதி இல்லை.

எனவே சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களிலும் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் தங்கி படிக்க சிறுபான்மை மாணவர்களுக்கான விடுதிகளை அமைக்க தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டம் -2009

ஏழை, எளிய மாணவர்கள், நலிந்த பிரிவினர் தங்களுக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியைப் பெறும் வகையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து தனியார் பள்ளிகளிலும் கடந்தாண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலையும் இந்த ஆண்டிற்கான (2017) மாணவர் சேர்க்கைக்கான தகவலையும் அறிவிப்பு பலகையில் வெளியிடுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இதை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாணவர் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவை அமைக்குமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திருப்பூர் அப்பாஸ் நன்றி கூறினார். துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்