Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, October 19, 2017 28 Muharram 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, May 3, 2007
முஸ்லிம் யூத் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு தேசிய தலைவராக சாபிர் கப்பார், பொதுச்செயலாளராக சி.கே. ஜுபைர், பொருளாளராக எம்.கே. முஹம்மது யூனுஸ் தேர்வு


முஸ்லிம் யூத் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு தேசிய தலைவராக சாபிர் கப்பார், பொதுச்செயலாளராக சி.கே. ஜுபைர், பொருளாளராக எம்.கே. முஹம்மது யூனுஸ் தேர்வு பெங்களுரு, மே 03- முஸ்லிம் யூத் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு பெங்களுருவில் புட்டண்ணா செட்டி டவுண் ஹாலில் ஏப்ரல் 27ம் தேதி நடைபெற்றது.

இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை நிலைநிறுத்துவதை இலக்காக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.

இதில் முஸ்லிம் யூத் லீக் தேசிய தலைவராக மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாபிர் கப்பார், பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த சி.கே. ஜுபைர், பொருளாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.கே. முஹம்மது யூனுஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

மேலும் டெல்லியை சேர்ந்த ஆசிப் அன்சாரி, கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பைசல் பாபு, மகாராஷ்டிராவை சேர்ந்த ஜுபைர்கான், ஆந்திரபிர தேசத்தை சேர்ந்த சாம்பசிவராவ், கர்நாடகாவை சேர்ந்த உமா இனாம்தார் ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த இம்ரான் அஷ்ராபி, தமிழ் நாட்டைச் சேர்ந்த நஸ்ருல்லாஹ் கான்,மகாராஷ்டிராவை சேர்ந்த மன்பிரித்சிங், ஜார்கண்டை சேர்ந்த முப்தி செய்யது ஆலம், ராஜஸ்தானை சேர்ந்த முஹம்மது காலித் ரஸா ஆகியோர் இணைச்செயலாளர் களாக தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.

முஸ்லிம் யூத் லீக் தேசிய செயற்குழுவின் உறுப்பினர் களாக அபூபாரிஸ்-தமிழ்நாடு, யூசுப் படனிலம்- கேரளா, ஜுபைர் மீரட்-உத்திரபிரதேஷ், கே.சி. முஜிபுர் ரஹ்மான்-கேரளா, மிர்ஸா ஐஜாஸ்-ஐதராபாத், வழக்கறிஞர் ஏ.வி. அன்வர்-கேரளா, வழக்கறிஞர் கே.சி. சல்மான்-கேரளா, முஹம்மது அப்துல் அஜீஸ்-தெலங்கானா, செய்யது மர்ஜுக்-டெல்லி, பி. லம்ராத் -கேரளா, ஹலிம்-டெல்லி, வழக்கறிஞர் கே.எம். ஹனீபா-கேரளா, சி.எல். பஷீர்-கேரளா, ரஷீத்-புதுச்சேரி, பி.எம். முஹம்மது அலி பாபு-கர்நாடகா, சிபூ மீரான்-கேரளா, செய்யது சித்தீக்-கர்நாடகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

கேரள மாநில நிர்வாகிகள் அனைவரும் செயற்குழு உறுப்பினராவார்கள். மேலும் இதர 8 உறுப்பினர்கள் தேசிய கமிட்டியில் சேர்க்கப்படுவார்கள். ஆக இந்த செயற்குழுவில் மொத்தம் 25 உறுப்பினர்கள் இருப்பார்கள். இது தவிர மேலும் 7 உறுப்பினர்கள் பின்னர் சேர்க்கப்படுவார்கள்.

முஸ்லிம் யூத் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு கிராஅத்துடன் தொடங்கியது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி வரவேற்புரை நிகழ்த்தினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையுரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் விவகாரகுழு தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இ.டி. முஹம்மது பஷீர் , மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வகாப், தேசிய செயலாளர்சிராஜ் இப்ராஹிம் சேட், மகளிரணி தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நூர்பினா ரஷீத், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மகளிரணி மேற்கு மண்டல செயலாளர் தஷ்னீம் இப்ராஹிம் சேட் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,முஸ்லிம் யூத் லீக் தேசிய ஒருங்கிணைப்பாளரு மான எம். அப்துல் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதை தடுத்தல்

முஸ்லிம் யூத் லீக் தேசிய தலைவர் ஆசிப் அன்சாரி முன்மொழிந்துள்ள இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டிருப் பதாவது:- பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை சிறுபான்மை சமூகத்தினர்கள் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வரு கிறார்கள். இந்த எதிர்ப்பு நாடு முழுவதும் வலுவடைந்துள்ளது. மத சுதந்திரம் மற்றும் பொதுசிவில் சட்டத்தை நாட்டில் பலவந்தமாக அமல்படுத் தக்கூடாது என்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. இது முஸ்லிம்கள் பிரச்சினை மட்டுமல்ல அனைத்து தரப்பினரின் பிரச்சினையாகும்.

சிறுபான்மை சமூகத் தினரின் மதம் மற்றும் கலாச்சார தனித்தன்மை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்து கிறது. பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு அளவில் ஆதரவு அளிப் போம்.

இவ்வாறு இந்த தீர்மானத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற தன்மை காப்பாற்றப் படவேண்டும்

இந்த தீர்மானத்தை முஸ்லிம் யூத் லீக் இணைச்செயலாளர் மன்பிரித் சிங் முன்மொழிந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- மதச்சார்பற்ற தன்மை என்பது நமது நாட்டின் உயிர் மூச்சாகும். ஆனால் இன்றைக்கு சங்பரிவார் அமைப்புகள் இதனை சீர்குலைக்கும் வகையில் பாசிச நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியில்லாத இந்தியா பாசிச இந்தியாவுக்கு சமம் என்பதை மதச்சார்பற்ற கட்சிகள் உணர வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பை உருவாக்க இந்திய தேசிய காங்கிரஸ் முன்வரவேண்டும். அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டை உருவாக்குவதில் முஸ்லிம் மற்றும் தலித் இளைஞர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு கண்டனம்

இந்த தீர்மானத்தை முஸ்லிம் யூத் லீக் துணைத் தலைவர் வழக்கறிஞர் பைசல் பாபு முன்மொழிந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- பிறந்த மண்ணிலேயே முஸ்லிம்களை பிரித்து பார்க்கும் நடவடிக்கை மிகவும் வேதனை அளிக்கிறது. போலி எண் கவுண்டரில் முஸ்லிம்களை கொன்று விடலாம் என்ற நிலை மிகவும் ஆபத்தானது. இது முஸ்லிம்கள் மற்றும் தலித் இளைஞர்களின் உள்ளத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

பயங்கரவாதம் என்ற போர்வையில் பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் விசாரணை கைதிகளாக சிறையில் வாடி வருகின்றனர்.

இவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். கால தாமதப்படுத் தப்பட்ட நீதி, நீதியை மறுப்பதற்கு சமமாகும். இந்த பிரச்சினையை இந்த நாடு ஒரு உரிமை மீறல் விஷயமாக கருதுகிறது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு குரல் கொடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் தொடர்

முஸ்லிம் யூத் லீக் மாநாட்டை தொடர்ந்து பிரதிநிதிகள் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் முஸ்லிம் யூத் லீக் தேசிய பொதுச்செயலாளர் சி.கே. ஜுபைர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தேசிய தலைவர் சாபிர் கப்பார் தலைமையுரையும், முஸ்லிம் யூத் லீக் கேரள மாநில தலைவர் செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் துவக்க உரையும் நிகழ்த்தினார்.

முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய தலைவர் டி.பி. அஷ்ரப் அலி, முஸ்லிம் யூத் லீக் தேசிய துணைத்தலைவர்கள் ஜுபைர்கான், ஆசிப் அன்சாரி மற்றும் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.கே. பைரோஸ், தேசியபொருளாளர் எம்.கே. முஹம்மது யூனுஸ் ஆகியோர் சொற்பொழி வாற்றினார்கள்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்