Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, July 17, 2018 4 Zul-Qida 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, July 19, 2007
* நாட்டின் பன்முக கலாச்சாரம், கண்ணியத்தை காப்பதே எங்கள் லட்சியம் * பசு பாதுகாப்பு என்ற போர்வையில் நடைபெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் தேச ஒற்றுமையை காக்க மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசியதலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


* நாட்டின் பன்முக கலாச்சாரம், கண்ணியத்தை காப்பதே எங்கள் லட்சியம் * பசு பாதுகாப்பு என்ற போர்வையில் நடைபெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் தேச ஒற்றுமையை காக்க மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசியதலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு நாட்டின் பன்முகக் கலாச் சாரம், கண்ணியம் மற்றும் மாண்பை காப்பாற் றுவதே எங்கள் லட்சியம். பசு பாதுகாப்பு என்ற போர்வையில் நடைபெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். தேச ஒற்றுமையை பாதுகாக்க மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் டெல்லியில் பேசினார்.

டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வன்முறைக்கு எதிராகவும் மாணவன் ஹாபிஸ் ஜூனைத்கான் உள்ளிட்ட அப்பாவிகளின் கொலை களை கண்டித்தும், பாராளு மன்றத்தை நோக்கி பேரணியும் ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டமும் நேற்று (18-07-2017) நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்சாலி குட்டி எம்.பி, தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வகாப் எம்பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்பி துவக்க உரையாற்றினார். நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி மந்திபாக்கிலிருந்து காலை 10.30 முதல் தொடங்கி 12 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் டெல்லி ஜந்தர் மந்தரை வந்தடைந்தது. இவ்வார்ப்பாட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறும் இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் எந்தவித சுயநல நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல. இந்த ஜந்தர் மந்தரில் இன்று ஊதிய உயர்வு, விவசாயிகளின் உரிமை, ஜி.எஸ்.டி. வரியை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கை களை வலியுறுத்தி தனிப் பட்ட முறையில் 24 ஆர்ப் பாட்டங்கள் நடைபெறு கின்றன. ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டம் நாட்டின் பன்முக கலாச்சாரம், கண் ணியம், மாண்பு மற்றும் கவுர வத்தை பாதுகாத்தல் மற்றும் நிலைநாட்டுதல் என்ற உன்னத லட்சியத்தை இலக்காக கொண்டு நடத்தப்படுகிறது.

அல்லாமா இக்பாலின் ‘ஸாரே ஜஹான்ஸோ அச்சா, ஹிந்துஸ்தான் ஹாமாரா’ என்ற - உலக நாடுகளில் இந்தியா தான் சிறந்தது என்ற கவிதை இங்கு நினைவு கூறத்தக்கது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் மத ரீதியாக வேறுபடுத்தி பார்க்க கூடாது. அனைத்து மதத்தையும் சேர்ந்த ஆன்மீக வாதிகளை போற்றுவது தான் இந்த நாட்டின் பண்பாடு. சகோரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

அண்ணல் மகாத்மா காந்தி மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களும், வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் நாட்டின் பன்முக கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்கள். இவர்களை பின்பற்றி இந்தியாவில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் எல்லாம் நாட்டின் சட் டத்திற்கு உட்பட்டு சமூக நல்லிணக்கத்துடன் மத சார்பற்ற தன்மையில் ஆட்சி செய்து வந்தன. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியினர் தங்களுடைய இந்துத்துவா கொள்கைகளை திணிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிம் களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

பசுபாதுகாப்பு என்ற போர்வையில் காட்டு மிராண்டித்தனமான வன் முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோர் மாதத்தில் உத்திரப் பிரதேச மாநிலம், தாத்ரி கிராமத்தில் பசு பாதுகாவலர் களால் முஹம்மது அஹ்லாக் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜுன் 22-ந்தேதி பல்லாப்கர் ரயில் நிலையத்தில் 16 வயது இளைஞர் ஹாபிழ் ஜூனைத் கான் படுகொலை செய்யப்பட்டார். அஹ் லாக்கில் தொடங்கி ஜூனைத் கான் வரை பசு பாதுகாப்பு என்ற போர் வையில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். இந்த தகவல் இந்தியா டூ டே பத்திரி கையில் வெளியாகி யுள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினர் தேசத்தை பிளவுபடுத்தும் நடவடி க்கைகளில் ஈடுபட்டு வருகின் றனர். பா.ஜ.க. ஆளும் 11 மாநிலங்களில் பசு அறுப்பு தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பசு அறுப்பு தடை சட்டத்தை உடடினயாக வாபஸ் பெற வேண்டும்.

மாட்டிறைச்சி சம்பந்தமாக மத்திய அரசு 27 விதிகளை வெளியிட்டிருக்கிறது. இந்த விதிகளுக்கு சென்னை, மதுரை நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில் அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் இந்த 27 விதிகளுக்கு தடை வழங்கியுள்ளது. விதிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திரும்ப பெற வேண்டும்.

புனித திருக்குர்ஆனின் படி பன்றி இறைச்சியை சாப்பிடுவது தடை செய்யப் பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் உணவு விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 56 முஸ்லிம் நாடுகள் பன்றி இறைச்சி உண்ணகூடாது என்று சட்டம் போடவில்லை. ஆனால் நம் நாட்டிலோ வேதத்தை பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.க.வினர் அந்த சித்தாந்தத்திற்கு எதிராக நடக்கின்றனர். பசுக்களை அவர்களை சாப்பிட வில்லை என்று சொல்கிறார்கள். ரிக் வேதத்தை பாருங்கள். கடவுளை வழிபடுபவர்கள் மாட்டிறைச்சியை குறிப்பாக பசு இறைச்சியை சாப் பிட்டதாக கூறப்பட்டுள்ளது. பசு இறைச்சியுடன் சோம பானத்தை அருந்தியு ள்ளதாக ரிக் வேதத்தில் கூறப்பட் டுள் ளது. ஆனால், இப்போது அவர்கள் அவர்களுடைய வேதத்தை பின்பற்றுவதில்லை. அவர்களது வேதத்தின் கொள் கைக்கு மாற்றாக மாட்டி றைச்சியை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள்.

மத்திய பா.ஜ.க. அரசு சமய நல்லிணக்கத்திற்கு எதிராகவும் பாரம்பரிய பண்பாட்டை, சரித்திரத்திதை மாற்றவும் சதி செய்கிறது.

இதனை முறியடிக்கும் வகையில் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு பாதையில் மதசார்பற்ற கோட் பாட்டில் நம்பிக்கையுள்ள அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். இந்த கொள்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அளவில் முன்னெடுத்து செல்லும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

இவ்வார்ப்பாட்டத்தில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சான்டி, கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், எம்.கே .ராகவன், குடிகுன்னல் சுரேஷ், ஜே.என்.யு. மாணவர் நஜீப் தாயார் நபீஸா பாத்திமா, ஜூனைத்கான் தந்தையார் ஜலாலுதீன், தேசிய துணைத் தலைவர் அட்வகேட் இக்பால் அஹமது, தேசிய செயலாளர்கள் குர்ரம் அனீஸ் உமர், நயீம் அக்தர், ஷஹீன் ஷா ஜஹாங்கீர், தேசிய துணைச் செயலாளர்கள் கௌஸர் ஹயாத்கான், டாக்டர் மத்தீன் கான், கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ.மஜீத், மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி தங்ஙள், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் டாக்டர் எம்.கே.முனீர், சட்டமன்ற உறுப்பினர் உபைதுல்லா, டெல்லி மாநில தலைவர் மௌலானா நிஸார் அஹமத், பொதுச் செயலாளர் இம்ரான் இஜாஸ், இணைச் செயலாளர் நூர்ஸம்ஸ், மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் அப்ஸர் அலி, பஞ்சாப் மாநிலத் தலைவர் முஹம்மது அஹமது திந்த், முஸ்லிம் யூத் லீக் தேசிய தலைவர் சாபிர் கப்பார், பொதுச் செயலாளர் சி.கே.சுபைர், துணைத் தலைவர்கள் பைஸல் பாபு, ஆசிப் அன்சாரி, இணைச் செயலாளர் இம்ரான் அஷ்ரபி, முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய தலைவர் டி.பி.அஷ்ரப் அலி, தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், துணைத் தலைவர்கள் அஹமது சாஜூ, சிராஜ் முஹம்மது நத்வி, இணைச் செயலாளர்கள் இ.ஷமீர், என்.ஏ.கரீம், சுதந்திர தொழிலாளர் யூனியன் தேசிய தலைவர் சையது அம்ஜத் அலி, தேசிய பொதுச் செயலாளர் அட்வகேட் ரஹமத்துல்லா, தேசிய பொருளாளர் ஜி.எம்.ஹாசிம், தமிழ்நாடு மாநில பொதுச் செய லாளர் அய்யம்பேட்ட பைசல், துணைச் செயலாளர் சையது அலி, காசர்கோடு அப்துல் ரஹ் மான் உள்ளிட்ட நிர்வா கிகள் ஆயிரக்கணக்கான தொண் டர்கள் பங்கேற்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்