Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, December 18, 2017 29 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, July 21, 2007
நீட் தேர்வுக்கு எதிராக 27-ந்தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்


நீட் தேர்வுக்கு எதிராக 27-ந்தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் நீட் தேர்வுக்கு எதிராக 27-ந்தேதி தி.மு.க. சார்பில் நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீகினர் பெருந்திளராக பங் கேற்க வேண்டும்என்று தேசிய தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத் துள்ள செய்தியில் கூறியிருப் பதாவது:-தமிழக மருத்துவத்துறை மாணவர்களின் வருங்காலம் இருண்டு போகும் அளவுக்கு ‘நீட்’ தேர்வை மத்திய அரசு நடத்தியதோடு, தொடர்ந்து நீடிக்கும் போக்கையும் கடைப் பிடித்து வருவதை தமிழக அரசியல் இயக்கங்கள் வன்மை யாகக் கண்டிப்பதோடு, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நீடித்த விலக்கு அளிக்கக் கோரிப் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டி ருக்கின்றன.

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிப்பதோடு, தமிழகச் சட்டப் பேரவை நிறைவேற் றியுள்ள ‘நீட்’ தேர்வு மசோதா களுக்கு உடனடியாக ஒப்புதலை குடியரசுத் தலைவர் அவர் கள் வழங்க வேண்டும் என் னும் கோரிக்கையும் வலியுறுத் தப்பட்டு வருகிறது.திராவிடர் கழகம் தலைமை வகித்து வரும் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த 12.07.2017ல் தமிழகம் எங்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பியும், மின் னஞ்சல் அனுப்பியும் ‘நீட்’ தேர்வை தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் அறப் போhராட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தை மேலும் வலிமையுள்ளதாக ஆக்கும் விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வரும் 27.07.2017 வியாழன் அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ‘மனித சங்கிலி போராட்டம்’ நடத்துவதற்கு அறிவிப்புச் செய்திருக்கிறது.திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவருமான தளபித மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கு பெறுவதையும், அதை வெற்றி பெறச் செய்வதையும் தமிழக மக்களுக்குச் செய்யும் மகத்தான சேவையாகும் என்று கருதுகிறது.

27.07.2017 வியாழன் அன்று மால 4 மணி முதல் 5 மணி வரை நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்டத் தலைநகரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகளும், ஊழியர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெறும் வகை யிலும் தொடரும் இந்தப் போராட் டத் தில் இந்திய யூனியன் முஸ் லிம் லீகினர் எழுச்சியுடன் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்