Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, July 17, 2018 4 Zul-Qida 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, August 1, 2007
சூப்பர் பவர் இந்தியா, டிஜிட்டல் இந்தியா எனக்கூறி உலகை சுற்றி வரும் நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் படுகொலைகள் குறித்து பிரதமர் மோடி வெளிநாட்டினருக்கு என்ன பதில் அளிக்க போகிறார்? பாராளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி முழக்கம்


சூப்பர் பவர் இந்தியா, டிஜிட்டல் இந்தியா எனக்கூறி உலகை சுற்றி வரும் நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் படுகொலைகள் குறித்து பிரதமர் மோடி வெளிநாட்டினருக்கு என்ன பதில் அளிக்க போகிறார்? பாராளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி முழக்கம் புதுடெல்லி, ஆக. 01-சூப்பர் பவர் இந்தியா, டிஜிட்டல் இந்தியா எனக்கூறிக் கொண்டு உலகம் முழுவதும் வலம் வரும் பிரதமர் மோடி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் கும்பல் படுகொலைகள் குறித்து வெளிநாட்டினர் கேள்வி கேட்டால் அதற்கு என்ன பதில் அளிக்க போகிறார்? என பாராளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பி.கே. குஞ்ஞாலி குட்டி நேற்று (31-07-2017) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வருமாறு:-மாண்புமிகு சபாநாய கர் அவர்களே! இந்த அவையில் எனக்கு பேச வாய்ப்பளித்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாநில சட்டப்பேரவையில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளேன். அண் மையில் நடைபெற்ற மலப்புரம் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பல்வேறு சமூகத்தினரிடம் இருந்து 5 லட்சத்திற்கும் மேற் பட்ட வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளேன். வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா போன்றவை குறித்து விவாதித்து வரும் நிலையில் கும்பல்களாக சென்று படுகொ லைகள் செய்யும் சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. டிஜிட்டல் இந்தியா பற்றி அதிகம் பேசி வரும் நமது பிரதமர் உலகம் முழுவதும் வலம் வருகிறார். நீங்கள் வெளிநாடு ஒன்றிற்கு செல்லும்போது, """"நீங்கள் 21-வது நூற்றாண்டில் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசி வருகிறீர்கள். மேலும், இந்தியா சூப்பர் பவராக மாறிக்கொண்டு வருகிறது என்றும் கூறி வருகிறீர்கள். இந்நிலையில் இந்தியாவில் கும்பல் படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து வெளிநாட்டினர் கேள்வி எழுப்பினால் பிரதமர் அதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள்"".

அரசியலமைப்பு சட்டம்

சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவது கவலை யளிக்கிறது. நாம் பேணிப் பாதுகாத்து வந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கைகள் மற்றும் மதசார்பற்ற தன்மை யின் சித்தாந்தங்கள் போன்ற வவைக ளுக்கு கும்பல் படுகொலை களால் அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது.

சிறுபான்மையினர், தலித்துகள்

இந்த வன்முறை சம்ப வங்களுக்கு ஆளும் கட்சி யுடன் தொடர்புடைய அமைப் புகளின் பேச்சுகளே காரண மாகும். நாட்டின் பல் வேறு மாநிலங்களில் சிறுபான் மையினர் மற்றும் தலித்துகளை குறிவைத்து படுகொலைகள் நடை பெறுகின்றன. எனவே, அவர்கள் நாட்டில் பாதுகாப் பற்ற நிலை நிலவுவதாக அஞ்சு கின்றனர். இதற்கு முன்னர் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இன்னும் சொல்லப் போனால் இதற்குமுன் ஆண்ட பா.ஜ.க. ஆட்சியிலும் கூட இதுபோன்ற வன்முறைகள் நடைபெற்றதில்லை.

அப்பாவி மக்கள்

ஆனால், தற்போது முன் எப்போதும் இல்லாதவகையில் இந்த வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அப்பாவி மக்கள் இந்த வன்முறை தாக்குலுக்கு பலியாகின்றனர். சில மாநிலங்களில் நடைபெறும் படுகொலைகளுக்கு மாண்பு மிகு உறுப்பினர்கள் சில காரணங்களை குறிப் பிட்டனர். ஆனால், கும்பல் படுகொலை என்பது மிகவும் கொடூரமானது. இது மக்கள் மத்தியில் பீதியை யும், அச்சத்தையும் ஏற்படுத் துகிறது. இதுதான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சி னையாகும். இந்த வன்முறை சம்பவங் களுக்கு இலக்கா னவர் களின் வர லாற்றை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முஹம்மது அஹ்லாக்

முஹம்மது அஹ்லாக் என்பவர் யார்? அவர் ஒரு இராணுவ வீரரின் தகப்பனார். அவரது மகன் ஒரு பொறியாளர். அவர் இந்திய விமானப்படையில் சேவையாற்றி வருபவர். நாட் டிற்காக சேவை செய்யும் இவர் தான் அவரது தந்தையை இழந் துள்ளார். இதுபற்றி நாம் என்ன நினைக்கிறோம்? தந்தையை இழந்த அவரின் மனநிலை எப்படி இருக்கும்? ஜூனைத்கான்

ஜூனைத்கான் பற்றி அனை வரும் தற்போது பேசி வருகின் றனர். அவர் ஒரு இளைஞர். ரயிலில் இருக்கை பிடிப்பது தொடர்பான தகறாரில் அவர் கொலை செய்யப்பட்டார் என்று மாண்புமிகு உறுப் பினர்கள் சிலர் கூறினர். இது உண்மையல்ல. அவரது உடை, தாடி மற்றும் அவர் அணிந்திருந்த தொப்பி ஆகியவற்றின் அடிப் படையில்தான் அவர் கொலை செய்யப்பட்டார். அவரது தந்தை மற்றும் உறவினர்களை பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தித்த போது இந்த உண்மை வெளிச் சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் ரயிலில் நடைபெற்றுள்ளது.

சுற்றுலா பயணிகள்

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இதுபற்றி என்ன நினைப்பார்கள்? இந்தியாவிற்கு சென்றால் சிலர் ஒன்றுகூடி சில கார ணங்களை குறிப்பிட்டு நம்மை கொலை செய்து விடுவார்கள் என்ற எண்ணம் தானே அவர்க ளுக்கு ஏற்படும். இது நாட்டிற்கு நல்லதல்ல. 21-வது நூற்றாண் டில் நாம் இவ்வாறு நடை போடக்கூடாது. சீர்திருத்த சட்டங்களை கொண்டுவரும் போது அதனால் மக்களின் வாழ் வாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என ஸ்ரீ தாதகத் சத்பதி இங்கு கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இறந்த மிருகங்களின் தோல் களை பதப்படுத்தும் பணி இங்கு தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் நீங்கள் திடீரென்று இந்த தொழிலை நடத்தக் கூடாது என்று ஒரே நாளில் அதற்கு தடை விதித்து சட்டம் இயற்றுகிறீர்கள். இதுபோன்ற சீர்திருத்த நட வடிக்கைகள் சரியல்ல என் பது எனது கருத்து. பண மதிப்பி ழப்பு நடவடிக் கையை அறிவித் தீர்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிந்திப்பது இல்லை. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயம், தொழில்துறை, ஏற்றுமதி, இறைச்சி வர்த்தகம், வேலையிழப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பொருளா தாரத்திலும் பாதிப்பு ஏற்படும். இதன் விளைவுகளை எதிர் காலத்தில் நாம் உணர வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு குஞ்ஞாலி குட்டி பேசினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்