Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, December 14, 2018 5 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, September 15, 2007
* மனிதாபிமான உதவிகளுக்கு தடைவிதிக்கக் கூடாது * கலவரம் கட்டுக்குள் வரும் வரை அகதிகள் எல்லைகளில் தங்க இந்தியா அனுமதிக்க வேண்டும் மியான்மர் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் விசாரணை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர் ஆணையாளரிடம் இ.யூ. முஸ்லிம் லீக் மனு


* மனிதாபிமான உதவிகளுக்கு தடைவிதிக்கக் கூடாது * கலவரம் கட்டுக்குள் வரும் வரை அகதிகள் எல்லைகளில் தங்க இந்தியா அனுமதிக்க வேண்டும் மியான்மர் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் விசாரணை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர் ஆணையாளரிடம் இ.யூ. முஸ்லிம் லீக் மனு புதுடெல்லி, செப். 15- மியான்மர் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர்ஆணையாளரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனு கொடுத்துள்ளது. இதில் மனிதாபிமான உதவிகளுக்கு மியான்மர் தடைவிதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் படு கொலைகள், வன்முறைகள் மற்றும் அநீதிகள் குறித்தும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடி க்கைகள் எடுப்பது குறித்தும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஆணையாளர் அலு வலகத்தின் இந்தியாவிற்கான தலைமை செயல் அதிகாரி யாசூகோ சிமுசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் அமைப்பு செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான இ.டி. முஹம்மது பஷீர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- இனப்படுகொலை மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டவிழித்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலைகள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருவது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவர நீங்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும். உலகிலேயே ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது தான் அடக்குமுறைகள் அதிக அளவில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. பல பத்தாண்டுகளாக இந்த அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மியான்மர் நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் நிலையிலும் 1982-ம் ஆண்டில் அவர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு இழந்தவர்களாக உள்ளனர். இடம்பெயர்தல், திருமணம், கல்வி மற்றும் மத சுதந்திரம் போன்றவைகளில் கடும் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் எரிப்பு ரோஹிங்கிய முஸ்லிம்கள் எல்லைகளை தாண்டி வங்காள தேசத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று மியான்மர் அரசாங்கம் கூறுகிறது. இதனை காரணமாக வைத்து மியான்மர் அரசாங்கமும், இராணுவமும் இந்த மக்களை ஈவு, இரக்கமின்றி தாக்குதல் நடத்தி கொலை செய்து அவர்களது வீடுகளை எரித்தும், பெண்களை மானபங்கப்படுத்தியும், கீழ்த் தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறைகள் 2012-ம் ஆண்டில் உச்சகட்டத்தை அடைந்தது. அப்போது இரண்டு மிகப்பெரிய கலவரங்கள் நடந்து பல ஆயிரக்கணக்கான பேர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது. ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், ராக்கைன் புத்த மதத்தினருக்கும் இடையில் நிறவெறி பேதம் ஏற்பட்டது. இதன் பிறகு ரோஹிங்கிய முஸ்லிம்கள் மோசமான நிலைகளில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. பிஞ்சு குழந்தைகள் கடந்த இரண்டு மாதங் களாக ராகைன் மாநிலத்தில் மியான்மர் இராணுவம் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியர்களை கொன்று குவித்தது. 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர். எந்தவித காரணமுமின்றி பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் பிஞ்சு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதாபிமானம் அடிப்படையில் இந்த மக்களுக்கு உதவி கரம் நீட்டும் தன்னார்வ அமைப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் அண்டை நாடுகளாக இந்தியா மற்றும் வங்காள தேசங்களில் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் இந்த நாடுகளோ உரிய வசதி இல்லாததால் அவர்களை திரும்ப அனுப்பும் நிலையில் உள்ளன. மியான்மரில் நடந்த சம்பவங்களை கடந்த காலத்தில் நடந்த ரூவாண்டா, தார்ஃபூர், போஸ்னியா மற்றும் கோசோவா போன்ற கலவரங்களுக்கு நிகரானது என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாசிச ஹிட்லரால் யூதர்களை கொன்ற இனக்கலவரத்துடன் இதனை ஒப்பிட்டு சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் நுழைய தடை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் அலுவலகத்தின் வங்க தேச தலைவர் ஜான் மிக்கிசிக்கும், மியான்மரில் நடைபெறுவது இனஅழிப்பு நடவடிக்கை என்று தெரிவித்தார். ராக்கைன் மாநிலத்தில் மற்றவர்கள் நுழைவதற்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஏற்க முடியாதது என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு செய்தியாளர் யான்கிலீ தெரிவித்துள்ளார். மியான்மரில் நடை பெறும் வன்முறைகள் குறித்து தினந்தோறும் புகைப்படங்களும் மற்றும் செய்திகளும் ஊடகங்களில் வந்தவண்ணம் உள்ளன. இந்த வன்முறைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த வன்முறைகள் குறித்து ஊடகங்கள், பி.பி.சி, அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் தலைவர் கோஃபி அனன், தெரசா மே, ஜெர்மி கார்பின், போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்கள் மியான்மர் அரசாங்கம் ராக்கைன் மாநிலத்தின் ரோஹிங்கிய சிறுபான்மை யினருக்கு எதிராக நடைபெறு இனக்கலவரம் குறித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். காவல்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதியன்று மியான்மர் எல்லையில் காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 மியான்மர் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனைதொடர்ந்து வன்முறை வெடித்தது. இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்கள் யார் என்பது குறித்த உண்மை இன்னும் கண்டறியப்படவில்லை. இருப் பினும் மியான்மர் இராணுவம் ரோஹிங்கியர்களின் சில பிரிவினர் மீது குற்றம் சாட்டுகிறது. இது உண்மையாக இருக்கும் என எடுத்துக் கொண்டாலும், இராணுவம் நடத்திய தாக்குதல் நியாயமற்றது. தாக்குதல் தொடர்பாக சந்தேகப்படுபவர்களை விசாரித்திருக்க வேண்டும்.இதைசெய்யாமல் பாமர மக்கள் மீது தாக்குதல் நடத்தியும், பெண்களை மானபங்கப்படுத்தியும், குழந்தைகள் தீயில் எறியும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் இந்த சம்பவம் குறித்து ஆய்வு நடத்திய ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறுகையில், "இடம் பெயரும் மக்களை அரசு சுட்டுக்கொல்கிறது. அவர்கள் வீடுகளை சூழ்ந்து ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து வருகின்றனர். மக்களை பயமுறுத்தி வருகின்றனர். பெண்களை மானபங்கப்படுத்துவதாக அச்சுறுத்தியும் வருகின்றனர்"" என்று தெரிவித்துள்ளது. இரண்டு மகன்கள் கைது தனது இரண்டு மகன்களை கைது செய்தது குறித்து அவர்களது தாயார் கூறுகையில், "ஒருநாள் அதிகாலையில் இராணுவ த்தினர் எனது வீட்டை சூழ்ந்து கொண்டு எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னையும், என் குழந்தைகளையும் வெளி யேறும்படி கூறினர். அவர்கள் எனது இரண்டு மகன்களையும் கைகளை பின்புறமாக கட்டி மிகக்கடுமையாக தாக்கினர். இராணுவத்தினர் அவர்களது மார்பில் மிதித்தனர். இதனை நேரில் கண்ட நான் கதறி அழுதேன். நான் அழுதபோது இராணுவத்தினர் துப்பாக்கியை என்னை நோக்கி காட்டி பயமுறுத்தினர். எனது மகன்களை துன்புறுத்த வேண்டாம் என எனது பச்சிளம் குழந்தைகள் இராணுவத் தினரிடம் கெஞ்சின. எனது மகன்களை இராணுவத்தினர் 30 நிமிடங்களுக்கு மேல் அடித்துவிட்டு, அவர்களை பிடித்து சென்றனர்" என்று கூறினார். அதன்பிறகு அந்த தாயாரால் மகன்களை இதுவரை காண முடியவில்லை. உலகத்தலைவர்கள் டா ஆங் சான் சூ கீ-க்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையிலும் ரோஹிங்கியர்களுக்கு முழு மற்றும் சமகுடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கை எதையும் அவர் எடுக்கவில்லை. ஓர் அவசர வேண்டுகோள் 1. ரோஹிங்கிய மக்கள் அவசர கால உதவிகளை பெறும் வகையில் , மனிதாபிமானம் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதற்கு மியான்மர் அரசுக்கு உத்தரவிட வேண்டும். பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பாளர்களுக்கு அங்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும். தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகளின் உண்மை நிலையை கண்டறிய ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். 2. இதனை ஒரு அவசர நிகழ்வாக கருதி பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய நிகழ்ச்சியாக கருதும்படி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப் பினர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும், இதை ஒரு முன்னுரிமையாக கருதி பொதுச்செயலாளரை அடுத்த சில தினங்களில் மியான்மருக்கு சென்று பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும். 3. மியான்மர் கலவரம் கட்டுக்குள் வரும்வரை எல்லைகளில் உள்ள அகதிகளை அவர்களது நாடுகளில் தங்க அனுமதிக்க வேண்டும் என இந்தியா மற்றும் வங்காளதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இதற்காக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஆணையர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. இருப்பிடத்தை இழந்து உண்ண உணவின்றியும், மருத்துவ வசதி இல்லாமலும் தவிக்கும் இந்த அகதிகளுக்கு உடனடியாக உதவி வழங்க வேண்டியது அவசியம். எல்லைகளில் மனிதர்கள் வசிக்க முடியாத இடங்களில் தங்கியிருக்கும் இந்த அகதிகள் உணவு மற்றும் இருக்க இடமின்றி தத்தளிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதி மற்றும் வங்காள தேசத்தின் பெரும்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த சூழ்நிலையும் அவர்களுக்கு மேலும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. ரூவாண்டா கலவரத்துக்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறவே கூடாது என்று உலகத்தலைவர்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்திருந்தனர். இந்த உறுதிமொழியை சர்வதேச சமுதாயம் நிறைவேற்ற வேண்டிய காலம் தற்போது வந்துவிட்டது. மனித சமுதாயத்துக்கு எதிராக இழைக்கப்படும் இந்த அநீதியை வேடிக்கை பார்ப்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் இனியும் நடைபெறக்கூடாது என்று நாம் சபதம் எடுக்க வேண்டும். மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இந்த சமூக நீதிக்கு புறம்பான மற்றும் காட்டுமிராண்டித்தனமான இந்த பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணவும், பாதுகாப்பு அளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்