Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, December 18, 2017 29 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, September 18, 2007
இ.யூ.முஸ்லிம் லீக் மத்திய பிரதேச மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு தலைவர்: ஜபல்பூர் ஜாவித் கான், பொதுச் செயலாளர்: வழக்கறிஞர் ஜாகீருத்தீன், பொருளாளர்: ரத்லம் மௌலவி அப்துல் லத்தீப்


இ.யூ.முஸ்லிம் லீக் மத்திய பிரதேச மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு தலைவர்: ஜபல்பூர் ஜாவித் கான், பொதுச் செயலாளர்: வழக்கறிஞர் ஜாகீருத்தீன், பொருளாளர்: ரத்லம் மௌலவி அப்துல் லத்தீப் ஜபல்பூர், செப் 18- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மத்திய பிரதேச மாநில பொதுக்குழுக் கூட்டம் 17.9.2017 பிற்பகல் 2.00 மணியளவில் ஜபல்பூர் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது.

அஸ்லம் மாஜித் ஜபல்பூரி தலைமை தாங்கினார். புர்கான்பூர் நயிம் அக்தர் கிராஅத் ஓதி அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் ஜபல்பூர் ஜாவித் கான், போபால் டாக்டர் யாசர் ராஜ், புர்கான்பூர் வழக்கறிஞர் ஜாகிருத்தீன், ரத்தன் மௌலானா அப்துல் லத்தீப், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அஸ்லம் முல்லா, எம்.எஸ்.எப். மண்டல செயலாளர் நூர் அஹமது சேட், எம்.எஸ்.எப். தேசிய பொதுச் செயலாளர் அர்ஷத் ஆகியோர் உரையாற்றினர்.

தேசிய துணைச் செயலாளர் ஆம்பூர் அப்துல் பாசித் சிறப்புரையாற்றினார்.

தமிழ்மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மத்திய பிரதேச மாநில நிர்வாகிகள் தேர்தலை நடத்தி நிறைவுரை யாற்றினார்.

மத்திய பிரதேச மாநிலத் தலைவராக ஜபல்பூர் ஜாவித் கான், மாநில பொதுச் செயலாளராக வழக்கறிஞர் ஜாகீருத்தீன், மாநில பொருளாளராக ரத்லம் மௌலவி அப்துல் லத்தீப் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

மாநில துணைத் தலைவர்களாக ஜபல்பூர் நயீம் அக்தர், இந்தூர் சாஜித் அலி ஆகியோரும், மாநில துணைச் செயலாளர்களாக குவாலியர் காலிப் அலி, ஜெபல்பூர் பைசான் அலி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

முஸ்லிம் யூத் லீக் மாநில தலைவராக போபால் டாக்டர் யாசர் ராஜ், பொதுச் செயலாளராக முஹ்னுத்தீன் உஸ்மானி ஆகியோரை முஸ்லிம் யூத் லீக் தேசிய துணைத் தலைவர் நாக்பூர் ஜுபைர் கான் அறிவித்தார்.

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவராக புர்கான்பூர் அட்வகேட் முதாசிர் அஹமது, பொதுச் செயலாளராக புர்கான்பூர் பாருக்குரைஷி, பொருளாளராக போபால் ஆதில் சித்திக், துணைத் தலைவராக போபால் முதாஸிர் கான், துணைச் செயலாளராக ஜெபல்பூர் முஹமது சாஜித் ஆகியோரை எம்.எஸ்.எப். தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத் அறிவித் தார்.

கூட்டத்தில் மாட்டங்கள் தோறும் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும், பொதுக் கூட்டங் கள் நடத்தி இயக்கத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்திய யூனியன் மகளிர் அணி மாநில அமைப்பாளராக புர்கான்பூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் தன்வீர் கவுசர் தேர்வு செய்யப்பட்டார். சுதந்திர தொழிலாளர் யூனியன் நிர்வாக தேர்தல் சமீபத்தில் நடை பெற்றது என்பது குறிப்பிடதக்கதாகும்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்