Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, December 18, 2017 30 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, September 25, 2007
சமய நல்லிணக்கம்-சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லங்கள் - கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.,


சமய நல்லிணக்கம்-சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லங்கள் - கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநிலம் சார்பாக 2013 ம் ஆண்டு மறைந்த தலைவர் செய்யது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் நினைவாக நிலம் இருந்தும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் பைத்துர் ரஹ்மா எனும் இறையருள் இல்லங்கள் முதல் கட்டமாக ஒரு வருடத்தில் 150 வீடுகள் மலப்புரம் மாவட்டத்தில் கட்டி கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டம் கேரள முஸ்லிம் லீகினரால் மிகவும் வரவேற்கப்பட்டு கேரள முஸ்லிம் கல்சுரல் சென்டர் (கே.எம்.சி.சி.) உற்சாகத்தோடு நடைமுறைப்படுத்தி இன்று வரை 4200 இறையருள் இல்லங்கள் இறையருளால் இன்று வரை கேரளாவில் மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு வீடு கட்டுமானத்திற்கு ரூ. 6,50,000 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவாகிறது. பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லங்கள் ஏழை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக கேரளா திரூர் அருகிலுள்ள பி.பி. அங்காடி என்ற இடத்தில் 25 இந்து சகோதர குடும்பங்களுக்கு இறையருள் இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முஸப்பர் நகர் இறையருள் இல்லங்கள்

உத்திரபிரதேசம் மாநிலம் முஸப்பர் நகர் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தால் சொந்த வீடுகளை இழந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு ஷிஹாப் தங்ஙள் காலனி என ஒரு பகுதியே உருவாக்கப்பட்டு சுகாதாரத்தோடு - இயற்கை அழகோடு 61 பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லங்கள் சென்ற மாதம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., முயற்சியில் உருவாக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. அதே காலனியில் மறைந்த தலைவர் இ. அஹமது சாகிப் நினைவாக பள்ளிக் கூடம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அஸ்ஸாம், மேற்கு வங்காளத்தில் கல்விக் கூடம்

அஸ்ஸாம், மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக அடிப்படை தேவைகள் முதலுதவியாக வழங்கப்பட்டதோடு, அம்மக்களின் பின் தங்கிய கல்வி நிலையை கருத்தில் கொண்டு பல லட்சம் ரூபாய் செலவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்விக் கூடங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லங்கள்

கேரளாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லம் கேன்சர் நோயாளிகளுக்கான சி.எச். முஹம்மது கோயா சென்டர், கிட்னி நோயாளிகளுக்கான டையாலிசிஸ் சென்டர், குடி தண்ணீர் இல்லாத கிராமங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்தல் போன்ற நற்பணிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு கிளையும் செயலாற்ற வேண்டுமென இரண்டு வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

கடலூரில் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லங்கள்

2016ம் ஆண்டு துவக்கத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் வர்தா புயலால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டதோடு, பழவேற்காடு அன்சாரி தலைமையிலான முஸ்லிம் மாணவர் பேரவையின் தன்னார்வ தொண்டர்கள் களப்பணிகளாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பல லட்ச ரூபாய் மதீப்பிட்டில் செய்து கொடுக்கப்பட்டது. வீடுகளை இழந்த கடலூர் நெல்லிக்குப்பம் பகுதி மக்களுக்கு கேரள முஸ்லிம் கல்சுரல் சென்டர் (கே.எம்.சி.சி.) தமிழ்நாடு கிளையின் முயற்சியால் இதுவரை 11 இறையருள் இல்லங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதிகளில் இறையருள் இல்லங்கள் வழங்கிட கே.எம்.சி.சி., கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடையநல்லூர் தொகுதியில் இறையருள் இல்லங்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக 2016ம் வருடம் தேர்வு செய்யப்பட்டபின் அத்தொகுதியில் செங்கோட்டை ஒன்றியம், கதிவரன் காலனியில் உடல் ஊனமுற்ற இந்து, முஸ்லிம் ஆகிய இரண்டு நபர்கள் மற்றும் அச்சன்புதூரை சேர்ந்த ஒரு கிறிஸ்துவர் என மூன்று இறையருள் இல்லங்கள் , மற்றும் கடையநல்லூரில் தாய்ச்சபையின் ஊழியர் திலகத்திற்கு ஒரு இறைருள் இல்லமென கடையநல்லூர் தொகுதியில் நான்கு இறையருள் இல்லங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீனவர்களுக்கு பள்ளிக் கூடம்

தூத்துக்குடி நகரில் திரேஸ்புரம் பகுதியில் மீனவ சமுதாயத்தினர் அதிகளவில் வாழ்கின்றனர். அப்பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தினர் நடத்தி வந்த ஒரு பள்ளிக்கூடமும் வசதி இல்லாமல் மூடும் சூழ்நிலை ஏற்பட்டதை தலைவர் பேராசிரியர் கவனத்திற்கு ஜமாஅத்தினர் எடுத்து கூறியதை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக புதிய பள்ளிக் கூட கட்டிடத்தை உருவாக்கி கொடுக்க வேண்டுமென தலைவர் பேராசிரியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கிரசன்ட் பள்ளிக் கூடம் ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி. மீராசா மரைக்காயர், மாவட்ட பொருளாளர் கே. மீராசா ஆகியோர் முயற்சியில் சமுதாய புரவலர்களின் அனுசரணையோடு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இறையருள் இல்லங்கள்

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் கண்டியூரில் தீ விபத்து ஏற்பட்டு வீடுகளை இழந்து குடியிருந்தவர்கள் நிராயுதபாணியாக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படை தேவைகளுக்கான வசதிகள் கண்டியூர் ஜமாஅத்தினுடைய வழிகாட்டுதலோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டதோடு அங்கு அமீரக காயிதே மில்லத் பேரவை அனுசரணையோடு 4 இறையருள் இல்லங்கள் உருவாக்கப்பட்டு 23.09.2017 அன்று தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள்அர்பணித்துள்ளார்கள்.

அய்யம்பேட்டையில் இறையருள் இல்லங்கள்

சென்ற மாதம் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி முஹம்மதியா தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜமாஅத்தினரின் வழிகாட்டுதலோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆரம்ப உதவிகள் செய்து கொடுக்கப்பட்டு, 23.09.2017 அன்று 3 இறையருள் இல்லங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் வழங்கிட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.

சமூக நலப்பணிகளில் முஸ்லிம் லீக்

சமயங்களை கடந்து மனித நேய மாண்புகள் இந்திய திருநாட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற இலட்சிய துடிப்போடு வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான பைத்துர் ரஹ்மா எனும் இறையருள் இல்லங்கள் இதுவரை 4, 300 க்கும் மேற்பட்ட வீடுகளும், கல்விக் கண் திறந்திட பாட சாலைகளும் உருவாக்கப்பட்டிருப்பதை போன்று தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழை கிராம மக்களுக்கு குடி தண்ணீருக்கான ஆழ்துளை கிணறுகள் இறைவனை வணங்கி வழிபட மஸ்ஜித், மதரஸா அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

அதே போன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்அமைப்பான தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை சார்பாக திருநெல்வேலியில் கேன்சர் நோயாளிகளுக்கான மருத்துவ நல உதவி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மேலும், மாட்டுக்கறி பிரச்சனையில் இந்துத்துவ பாசிச கும்பலால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி காவல் நிலையத்திலேயே ஷகிதான இளைஞன் மின்ஹாஜி குடும்பத்தினருக்கு வருவாய் உருவாக்கி கொடுக்கும் வகையில் அவரது தந்தைக்கு வாடகைக்கு ஓட்டிட கார் வாங்கி கொடுக்கப்பட்டது.

இச்சமூக நலப்பணிகள் வரலாற்று பேரியக்கம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சரித்திரத்தில் என்றும் நிலைத்து நிற்கும். இப்பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நல்லுள்ளங்களுக்கு இறையருள் கிட்டுமாக. ஆமீன்...

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்