Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, December 18, 2017 30 Rabiul Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, September 26, 2007
தஞ்சை மாவட்டம் கண்டியூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 4 இறையருள் இல்லங்கள் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்தார்


தஞ்சை மாவட்டம் கண்டியூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 4 இறையருள் இல்லங்கள் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்தார் கண்டியூர், ஜூலை. 23- தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டம் கண்டியூரில் 2016 ஜூலை மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் மரணமடைந்தனர். 57 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. செய்தியறிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவுறுத்தலின் பேரில் மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான் தலைமையிலான குழுவினர் உடனடியாக நேரில் பார்வையிட்டு, சேத விவரங்களை கேட்டறிந்து அறிக்கை தயாரித்து தலை மைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 2016 ஜூலை 16-ந்தேதி சனிக்கிழமை மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் நேரில் பார்வை யிட்டனர்.எரிந்த குடிசைகளை பார்வையிட்டு, திருமண மண்டபத்தில் தங்கியிருந் தவர்களிடம் ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிந்தனர்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 25 ஆயிரம், திருமணம் நடைபெற உள்ள குடும்பங்களுக்கு 40 ஆயிரம், மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உடனடியாக வழங்கப்பட்டது. மண்டபத்தில் தங்கவைக்கப் பட்டிருந்தவர்களின் இரண்டு நாள் செலவினை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தஞ்சை தெற்கு மாவட்டமும், இரண்டு நாள் செலவை தஞ்சை வடக்கு மாவட்டமும் ஏற்றுக்கொண்டன.முற்றிலும் எரிந்து நாசமான 57 குடிசைகளுக்கு பதிலாக பைத்துல் ரஹ்மா திட்டத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுப்பது பற்றி திட்ட அறிக்கை பெறப்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அறிவித்தார்.

இறையருள் இல்லம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

அதன் அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் அமீரக காயிதே மில்லத் பேரவை அனு சரணையில் பைத்துர் ரஹ்மா எனும் 4 இறையருள் இல்லம் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி 23-09-2017 சனிக் கிழமை காலை 11 மணியளவில் கண்டியூர் பாத்திமா நகர் ரோட்டில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் எம். முஹம்மது சுல்தான் தலைமையில் நடைபெற்றது. மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் மௌலவி அபுதாலிப் கிராஅத் ஓதினார்.

ஒ.ஆர்.ஏ. முஹம்மது பாரூக் வரவேற்புரை ஆற்றினார். கண்டியூர் மொய்தீன் பள்ளிவாசல் மௌலவி ஏ. பாவா மொய்தீன், முஸ்லிம் லீக் மூத்த தலைவர் எம்.ஏ. குலாம் மொய்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிம்லா பி.ஏ. முஹம்மது நஜீப், தஞ்சை வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஜெ.எம். அப்துல் காசிம் ராஜாஜி, மாவட்ட பொருளாளர் இசட். ஜூல்ஃபிகார், மாநில கவுரவ ஆலோசகர் எம். முஹம்மது பாரூக், எஸ்.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் எம். முஹம்மது பைசல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எம். ரியாஸ் அஹமது, கண்டியூர் ஜமாஅத் நிர்வாகிகள் எம்.எஸ். ஜாபர் அலி, கே. முஹம்மது இக்பால், எம். ஷேக் அலாவுதீன், எஸ். செய்யது ஷாஜகான், எம்.எம்.எஸ். ஷாஜகான், ஏ. முஹம்மது ஹாலிது, எம். முஹம்மது அன்சாரி, இ.யூ. முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.டி. அப்துர் ரஹீம், ஏ. முஹம்மது சர்புதீன், எஸ்.ஏ. ஷேக் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில கல்விப்பணி செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். அப்துர் ரஹ்மான், மாநில சமூக பணிச்செயலாளர் மில்லத் எஸ். பி முஹம்மது இஸ்மாயில், மாநில கவுரவ ஆலோசகரும், சமுதாய புரவலருமான நாகூர் ஆலியா ஷேக் தாவூத் மரைக்காயர், அமீரக காயிதே மில்லத் பேரவை துணைச்செயலாளர் எம்.எஸ். ஏ. பரக்கத் அலி, மாநில மின்னணு ஊடகப் பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெ.ஏ. ஜமால் முஹம்மது இப்ராஹிம், தஞ்சை திராவிட கழக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அமர்சிங், தொழில்அதிபர் அய்யம்பேட்டை புருணை ஜபருல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இறையருள் இல்லங்களை திறந்து வைத்து விழா பேரூரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் குவைத் காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் வடக்கு மாங்குடி அப்துல் முத்தலிப், ரியாத் காயிதே மில்லத் பேரவை செய்தி தொடர்பாளர் அய்யம்பேட்டை முஹம்மது இப்ராஹிம் அர்ஷத், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.எம் நூருல்லா, முஸ்லிம் யூத் லீக் மாநில இணைச்செயலாளர் அபு ஃபாரிஸ், திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.யூ. அமைப்பாளர் ஜி.எச். ஹக்கீம், திருச்சி சம்சுதீன், திருச்சி ஷாகுல், தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் ஒ. முஹம்மது உசேன், ஆர். கமாலுதீன் ஃபைசி, எம். உமர் ஜஹாங்கீர், பி. முஹம்மது நதீர், முஸ்லிம் யூத் லீக் மாவட்ட அமைப்பாளர் ஏ. யூசுப் அன்சாரி, கண்டியூர் பிரைமரி தலைவர் என். கலீபுல்லா, செயலாளர் எச். ஹபிபுர் ரஹ்மான், பொருளாளர் எஸ். ஆபிதீன் மற்றும் ஜமாஅத்தார்கள், பிரைமரியின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.எம். சாலிபு நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்