Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, November 19, 2017 29 Safar 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, October 16, 2007
சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க. அரசின் அனைத்து திட்டங்களும் தோல்வி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை காயல்பட்டினத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு


காயல்பட்டினம், அக்.16- சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய பாஜக அரசு அனைத்து திட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.பொருளாதார வீழ்ச்சியி லிருந்து நாட்டை பாதுகாக்க மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட் டம் சார்பில் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணைப்பு- சிறுபான் மையினர் வாழ்வு ரிமை மாவட்ட மாநாடு 14.10.2017 அன்று மாலை காயல்பட்டினம் சதுக்கை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி. மீராசா மரைக்காயர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன் வரவேற்புரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாநில பொதுச் செயலாளரும், கடைய நல்லூர் சட்டமன்ற உறுப் பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் துவக்க வுரையாற் றினார். தேசிய அமைப்புச் செய லாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., உள்ளிட்ட பலர் சிறப் புரையாற்றினர்.

மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசிய தாவது:-

சாதனை மாநாடு

காயல்பட்டினம் சதுக்கை மைதானத்தில், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் மேடை அமைத்து, ஹாஜி அபூபக்கர் பக்ரீன், தூத்துக்குடி குலாம் ஹஸன், மேத்தப்பிள்ளை மரைக்காயர் நுழைவாயில் என் றெல்லாம் பெயரிட்டு, சாதனை புரியக்கூடிய ஓர் அரிய அற்புத மான மாநாட்டை நீங்கள் இங்கே நடத்தியிருக்கிறீர்கள்.

மாநாட்டின் பொறுப்பா ளர்கள், அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, வழிகாட் டிய கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில துணைச் செயலாளர் இப்றாஹீம் மக்கீ மற்றுமுள்ள அருமை நண்பர்களுக்கு எனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயல்பட்டினத்தில் நடை பெறுகிற இந்த மாநாட்டில், சிறுபான்மையினர் வாழ்வுரிமை பற்றியும், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கருத்தரங்கம் பற்றியும் இணைத்ததோடு, அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறந்த நூலையும் இந்த மாநாட்டில் சேர்த்து, மிகப் பெரிய விழாவாக ஆக்கியிருக் கிறீர்கள்.

தூத்துக்குடி பெயர்பெற்ற துறைமுகம். பழைய வரலாற்றிலே தூத்துக்குடியில்தான் முத்து கிடைக்கும். அந்த முத்து கருமுத்து. உலகத்தில் கருமுத்து கிடைக்கும் இன்னொரு பகுதி அரபு அமீரகம். ஆக, கருமுத்து கிடைக்கக் கூடிய அந்த அரபு அமீரகத்திலே உருவாகியிருக்கிற காயிதேமில்லத் பேரவை கருமுத்து கிடைக்கும் தூத்துக் குடியைச் சார்ந்த காயல்பட்டி னத்தில் இந்த மலர் வெளியீட்டு விழாவை நடத்தி யிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று. கருமுத் துகளின் வழி யாக இரண் டும் இணைந்திருக் கின்றன என்பதை எடுத்துக் காட்டும் ஒரு சரித்திர நிகழ்வு இது.

காயிதேமில்லத்

காயிதேமில்லத் அவர் களைப் போல வாழுகிறான் என்று சொல்வதற்கும், காயிதே மில்லத்தாய் வாழ்கிறான் என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் போல வாழவே முடியாது. ஒவ்வொரு மனிதனும் அவரவருக்குரிய வழிமுறை யில்தான் வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியும். ஆண்டவனை அணுகுகிற ஆன்மிகத் துறையிலுள்ள அவ்லியாக்கள் நிறைந்த இந்த ஊரில், அவர்கள் கூறியிருக்கிற கருத்து ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவனை அடையக்கூடிய வழி ஒன்றாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கையில், காயிதே மில்லத் அவர்களாய் காதர் மொகிதீன் வாழுகிறான் என்று நீங்கள் வேண்டுமானால் ஆசைப்படலாமே தவிர அது எதார்த்தமாக ஆகிவிட முடியாது. ஆனால், என் மீது அன்பு - பரிவு கொண்டு, ஏதோ செய்திருக்கிற சில பல காரியங் களுக்காக பாராட்ட வேண்டும்; அப்படிப் பாராட்டி இவனை மேலும் காரியங்கள் செய்யத் தூண்ட வேண்டும் என்ற உள்ளுணர்வோடு இதைச் செய்திருப்பதாகவே நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இமயமலை - மலைக்கோட்டை

திருச்சியிலே மலைக் கோட்டை இருக்கிறது... இந்தி யாவின் வடகோடியில் இமய மலை இருக்கிறது... இமய மலையை மலைக்கோட்டை யோடு ஒப்பிடக் கூடாது. காயிதே மில்லத் அவர்கள் இமயமலை யைப் போன்றவர்கள். நானோ மலைக்கோட்டையைச் சேர்ந் தவன். ஆக, மலைக்கோட்டை வேறு; இமயமலை வேறு!

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் நாம் செல்ல வேண்டும். அப்படிச் சென் றால்தான் இங்கே கூடியிருக் கிற மஹல்லா ஜமாஅத் ஒருங்கி ணைப்பையும் நாம் காண முடியும். சிறுபான்மையினர் வாழ்வுரிமையையும் பெற முடியும் என்ற நெறியை, கருத்தை, சிந்தனையைத் தூண் டும் வகையில் இந்த மாநாட் டின் நிகழ்வுகளை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள். தமிழ் நாட்டிலேயே இதுதான் முதல் மாவட்ட மாநாடு. இந்த மாநாட்டின் மூலமாக பல் வேறு மாவட்டங்களிலே எப் படிப்பட்ட மாநாடுகள் நடத்த வேண்டும்; அம்மாநாடுக ளில் என்னென்ன கருத் துக்கள் இடம்பெற வேண் டும் என்பனவற்றைச் சுட்டிக் காட்டுவது போல இம்மா நாட்டின் மாவட்ட நிர்வாகி களும், மற்றுமுள்ள நண்பர் களும் வழிகாட்டிகளாக அமைந்திருக்கிறீர்கள். அதற்காக வும் உங்களை நான் பாராட்ட விரும்புகிறேன்.

இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் இ.முபாரக் அலி ஒரு நூலை வெளியிட்டிருக்கி றார். மாணவர்கள் 5 ஆயிரம் வினா-விடைகளைப் படித்து, போட்டித் தேர்வுகளிலே வெற்றி பெறுவதற்குண்டான வழிகளைக் கொண்ட ஒரு நூலையும் இம்மாநாட்டில் நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். அத் தோடு, மத்திய மாநில அரசுகள் சிறுபான்மை மக்க ளுக்கு வழங்கியிருக்கக் கூடிய உரிமைகளையும், சலுகை களையும் விளக்கும் தொகுப்பு நூல் ஒன்றையும் இங்கு வெளி யிட்டிருக்கிறீர்கள். இந்த வெளியீடுகள் மூலமாக தமிழ் நாட்டிலுள்ள சிறு பான்மை முஸ்லிம் சமுதாய மக்க ளுக்கு நல்லதொரு வழி யைக் காட்டக் கூடிய ஒரு நெறிமுறையை இம்மாநாடு வெகு சிறப்பாக செய்திருக்கிறது. விருதுகள்

இம்மாநாட்டில் நான் மிக முக்கியமாகக் கருதுவது, காழி அலாவுத்தீன் ஆலிமும், அவர்களோடு சேர்ந்த அருமைப் பெரியவர்களும்! இங்கே வரிசையாக நிரலாக நின்று, அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளைப் பெற்று, அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அவ்வாறு முழக்கம் எழுப்பிய இந்தப் பெரியவர்கள், 1958 ஜனவரி 11, 12 இரண்டு நாட்களில் திருச்சி ஜாமிஆ மஸ்ஜித் மைதானத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டில் பங்கு பெற்றவர்கள். அங்கு ஒரு புதிய எழுச்சியைப் பெற்று அந்த எழுச்சியின் வளர்ச்சி இன்னும் இருக்கிறது... அன்று பெற்ற அந்த எழுச்சி, உற்சாகம் இன்றும் எங்களிடத்தில் இருக்கிறது என்று காட்டும் அளவில் காழி அலாவுத்தீன் ஆலிம் அவர்கள் இங்கே முழக்கத்தை எழுப்பினார்கள். இவர்கள் அந்த மாநாடு விதைத்த விதைகள். இன்று விருட்சமாக வளர்ந்து ஓங்கியிருக்கிது. அப்பேர்பட்டவர்களை மீண்டும் இந்த சமுதாய மக்களுக்கு நினைவுபடுத்துவதற்காக விருதுகளை வழங்கியிருப்பது தமிழகத்தில் எங்கு நமது மாநா டுகள் நடந்தாலும், அந்தந் தப் பகுதிகளிலுள்ள தாய்ச் சபைக்காக உழைத்து ஓங்கிய பெரியவர்களுக்கு இந்த விருதுகளை வழங்கும் நிகழ்ச் சியையும் இணைக்க வேண்டும் என்று வழிகாட்டு வதாகவே நான் கருதுகிறேன். இந்த முன்னு தாரணமான காரியம், இனி மற்ற மாவட்டங்களில் நடத்தப் படவுள்ள மாநாடுகளுக்கும் பொருந்தும். அவ்வாறு செய்யப் பட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் - கேட்டுக் கொள்கிறேன்.

காயிதேமில்லத் பேரவை சார்பில் அதன் தலைவர் குத்தாலம் லியாக்கத் அலீ, துணைத்தலைவர் முஹம்மத் தாஹா, செயலாளர் கீழக்கரை ஹமீதுர்ரஹ்மான், பொருளாளர் அப்துர்ரஹ்மான், பரக்கத் அலீ உள்ளிட்ட அருமை நண்பர்கள் இணைந்து ஒரு சிறந்த மலரை வெளியிட்டிருக்கிறீர்கள். அதை வெளியிடுவதற்கான வாய்ப்பை இங்கே பெற்று, கேரளத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் இ.டி.முஹம்மத் பஷீர் எம்.பி. அவர்கள் இங்கே வெளியிட்டு, இந்த மாநாட்டிற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். அவர்களோடு, மறைந்த பானக்காடு செய்யித் முஹம்மத் அலீ ஷிஹாப் தங்ஙள் அவர்களின் அன்பு மகனார் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்பாளர் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் அவர்களும் இங்கே வந்து பாராட்டு தெரி வித்துப் போயிருக்கின்றார். அவருக்கும் உங்கள் அனைவரின் சார்பில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

14 தீர்மானங்கள்

இம்மாநாட்டில் 14 தீர்மானங்களை அனைவரின் வரவேற்புகளோடும் நிறைவேற்றி இருக்கிறீர்கள். அவற்றுள் ஓரிரு தீர்மானங்கள் தவிர எஞ்சிய அனைத்தும் இம்மாநாடு நடை பெற்றுக் கொண்டிருக்கிற இந்த தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுகிற, கோரிக்கைகளை முன்வைக் கிற தீர்மானங்களாக அமைந்துள் ளன. அப்பேர்பட்ட தீர்மானங் களை மத்திய, மாநில அரசு கள் நிச்சயம் நிறைவேற்ற வேண் டும். அதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் நாம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் வர வேண்டும். அப்படியான அரசியல் வர வேண்டும் என்கிற தீர்மானத்தை 2ஆவது தீர்மானமாக நீங்கள் ஆக்கியிருக்கிறீர்கள். ஆக, இந்த 14 தீர்மானங்களும் நிறைவேற்றப் படுவதற்கு, 2ஆவது தீர்மானத்தை நாம் நிறைவேற்றினால், எஞ்சிய 13 தீர்மானங்களும் மாநிலத்திலும், மத்தியிலும் நிறைவேற்ற முடியும் என்கிற உணர்வு நமக்கு வர வேண்டும்.

திமுக தலைமையிலான நல்லாட்சி

தமிழகத்தைப் பொருத்த வரை, திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைமையிலான ஒரு நல்லாட்சி வர வேண்டும். அப்படிப்பட்ட நல்லாட்சியை மக்கள் தர வேண்டும். அதற்கு நாமெல்லாம் உழைத்துப் பாடுபட வேண்டும். அத்தோடு, மத்தியில் ஆளும் இன்றைய அரசு டைய கொள்கைகள், திட்டங் கள், அது பின்பற்றி வரக்கூடிய பாரதூரமான பாரபட்சமான சமூக விரோதமான மதச் சார்பற்ற கொள்கைக்கு விரோத மான, அக்கொள்கையை மண் ணுக்குள் போட்டுப் புதைக் கும் வகையிலான நடவடிக் கைகள் போக்கப்பட வேண் டுமானால், இந்த மத்திய அரசு மாற்றப்பட வேண்டும். அதன் எடுபிடியாக மத்திய அரசு சொல்லக்கூடியவற்றை அப்ப டியே நிறைவேற்றும் அரசாக தமிழகத்தில் உள்ள அரசு இருக் கிற காரணத்தினால், மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள இரண்டு அரசுகளையும் மாற்றி, வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இந்தியா வில் நல்ல அருமையான, பெருமைக் குரிய, பாராட்டத்தக்க ஜன நாயகத்தை, சமயசார் பற்ற கொள்கையைத் திரும்ப வும் மீட்டுக் கொண்டு வரக் கூடிய நல்ல அரசுகளைத் தமிழகத்திலும், மத்தியிலும் கொண்டு வருவதற்கான ஒரு தூண்டுகோலாகத்தான் இந்த மாநாட்டின் 2ஆவது தீர்மா னத்தை நீங்கள் நிறைவேற்றியிருக் கிறீர்கள். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியதோடு நின்றுவிடா மல், அதைச் செயல்படுத்தி வெற்றி காண இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நாம் அனைவரும் ஓர் உறுதிப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இதை யெல்லாம் நமது அருமை நண்பர் பீட்டர் அல்ஃ போன்ஸ் அவர்களும், இந்த காயல் பட்டினத்தை உள்ளடக் கிய திருச்செந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரிவாக விளக்கி, விடைபெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

அனைத்து மாவட்டங்கள்

இம்மாநாட்டின் சிறப்புக்கு யார், யார் காரணமென்று நான் சொல்லித் தெரியும் நிலையில் நீங்கள் இல்லை. இம்மாநாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை நமது மாநில பொதுச் செயலாளர் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அது அருமையான ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கருத்து. அதனடிப்படையில்தான் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்ற ஓர் எண்ணம் பிறந்திருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் எல்லா மாவட்டங்களிலும் இன்று செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கருத்தை நாமும் வரவேற்று, ஒவ்வொரு மாவட்ட மாநாடும் ஒரு மாநில மாநாட்டைப் போல சிறப்பான முறையில் நடக்கக் கூடிய அளவில் நமது முயற்சிகள் இருக்க வேண்டும் என்ற அன் பான வேண்டுகோளையும் உங்கள் முன் வைக்கிறேன்.

இங்கே காயல்பட்டினத் திலுள்ள அறிஞர்கள், மார்க்க மேதைகள், சமுதாயப் பிரமு கர்கள், கல்வியாளர்கள் அனை வரும் இந்த ஊரின் பெருமக் கள். மார்க்கம், சமுதாய முன்னேற்றம், கல்வி வளர்ச்சியில் அவர்க ளின் ஈடுபாடுகள் மிக மிக அதிகம். அது எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இருக் கவும் வேண்டும். அப்படி இருக்கக் கூடிய தவ்ஃபீக்கை, வல்லமையை எல்லாம்வல்ல இறைவன் இந்த ஊர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்க வேண்டியது நமது முக்கியமான கடமை. முஹம்மது அபூபக்கர்

இந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் அளவில் இன்றைய நாளில் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, அவர் ஆற்றுகிற பணியை, அவரது அணுகுமுறையை, அவர் வாதங்களை எடுத்து வைக்கும் போக்கை, பிரச்சினையை முன் வைத்து அது தொடர்பான கோரிக்கையில் எப்படியாவது வெற்றிபெறுகிற அவரது முனைப்பை, சாதுவான அதே நேரத்தில் சாதுர்யமான அவரது பண்பை - சட்டமன்றத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் மட்டுமின்றி, ஆளுங் கட்சியிலுள்ள அமைச்சர்கள் கூட, அதன் சட்டமன்ற உறுப்பி னர்கள் கூட பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செயல்பாடுகள் தொடரவும், இன்னும் வலிமை பெறவும் நாம் அனைவரும் பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

சட்டமன்றத் தேர்தலின் போது, அபூபக்கர் அவர்களை வேட்பாளராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இல்லை. காரணம், அவர் பொதுச் செயலாளராக இருந்து செய்கிற வேலைகள் நிரம்ப இருக்கிறது... சட்டமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டால், மிகப்பெரிய சுமையை அவரது தலையில் சுமத்தியதாகிவிடுமே... என்ற கவலை கூட எனக்கிருந்தது. ஆனால், எல்லாவற்றையும் கடந்து அவர் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்.

கடையநல்லூர் தொகுதி

அப்போது அவர் என்னிடத்திலே கூறினார்: """"சார்! தமிழ்நாட்டிலே முஸ்லிம் லீக் சார்பில் வேட்பாளர்களாக பல ஊர்களிலிருந்தெல்லாம் எம்.எல்.ஏ.க்கள் வந்திருக் கிறார்கள்... ஆனால், காயல் பட்டினத்திலிருந்து இது வரை ஒரு எம்.எல்.ஏ. கூட வரவில்லை!"" என்று அவர் சொன்னபோதுதான், """"ஆஹா... இந்த ஊரின் பெருமையை விட்டுக்கொடுக்காமல், ஊர்ப் பற்றோடு அவர் பேசும் இந்தப் போக்குக்காகவே அவர் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவருக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது... இங்கே நிறைந்திருக்கிற கடைய நல்லூரைச் சேர்ந்த நிர்வா கிகளும், தோழர்களும் அவருக்கு நிறைவான உழைப்பைத் தந்து வெற்றிபெறச் செய்திருக்கிறீர்கள். அதன் மூலமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு, ஏணி சின்னத்திற்கு, தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் சரித்திரத்திற்கு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தைச் செய்திருக்கிறீர்கள்.

மு.க.ஸ்டாலின் - சிங்கம்

தளபதி மு.க.ஸ்டாலின் ஒருமுறை என்னிடத்தில் பேசுகிறபோது என்னித்தில் சொன்னார்: """"அண்ணே! நீங்கள் அனுப்பியிருப்பது ஒரேயோர் ஆளாக இருந்தா லும், ஒரு சிங்கமாக அனுப் பியிருக்கிறீர்கள்..."" என்றார். அப் பொழுது நான் சொன்னேன்...

""""உங்களிடத்தில் 89 சிங்கங்கள் இருக்கிறபோது, கூடுதலாக ஒரு சிங்கமாகத்தானே அவர் இருக்கிறார்?"" என்றபோது அவர் அதைக் கேட்டு மகிழ்ந் தார். அவரைப் பெருமைப் படுத்துவதற்காகவோ, பாராட்டு வதற்காகவோ இதை இங்கு நான் கூறுவில்லை. மாறாக, இந்த ஊரைச் சேர்ந்த தம்பி அபூபக் கரை தமிழகத்திலுள்ள அனை வரும் பாராட்டும் அளவில் அவரது சேவைகள் இருந்து கொண்டிருக்கின்றன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை இந்தியா முழுவதும் வலிமையோடும், பொலிவோடும் ஆக்குவதற்காக நாம் முயன்றிருக்கிறோம். அண்மைக் காலத்தில், இக்கட்சிக்கு அகில இந்திய அளவில் மகளிர் பிரிவை, மாணவர் பிரிவை, இளைஞர் பிரிவை, தொழிலாளர் யூனியன் பிரிவையெல்லாம் உருவாக்கியிருக்கிறோம். இது இந்திய அளவிலே இதுவரை இல்லாத ஒரு முறை. தற்போது இந்தியா முழுவதிலும் இவ்வமைப்புகளையெல்லாம் நாம் உருவாக்கி, அதன் தொடர்ச் சியாக, டெல்லி, ஹைதராபாத் பல்கலைக் கழகங்களில் முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்.) தேர்தலிலே நின்று வெற்றிபெற்றிருக்கிறார்கள். மும்பை பல்கலைக் கழகத்திலும் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆக மாணவர் தம்பிகள், இன்று தேசிய அளவில் மிகச் சிறந்த முறையில் தமது வலிமையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இளைஞர்களுக்கெல்லாம் நல்ல ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கும் இளைஞர ணியின் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் இங்கே வந்திருக்கின்றார்கள். அவரது அருமையான ஆலோசனையில் இன்று நாடு முழுவதிலும் முஸ்லிம் லீக் வேகமாக எழுச்சி கண்டு வருகிறது. இந்த எழுச்சி தமிழ்நாட்டிலும் தொடர வேண்டும். இங்கும் சில பல அமைப்புகள் உருவாகியி ருக்கின்றன. பல்வேறு மாவட் டங்களில் இன்னும் உருவாக்கப் படவில்லை. இதையெல்லாம் மாற்றியமைக்கும் வகையில், இனி தொடர்ந்து நடக்கக் கூடிய ஒவ்வொரு மாவட்ட மாநாட்டிற்காகவும் நீங்கள் கூடுகிறபோது, அங்கே யுள்ள எம்.எஸ்.எஃப்., இளை ஞரணி, தொழிலாளர் யூனியன், மகளிரணி ஆகிய பிரிவுகள் முறைப்படி உருவாக்கப் பட்டுள்ள செய்தியை அம்மாநாட்டில் அறிவித்து, அவற்றின் நிர்வாகிகளைக் கண்ணியப்படுத்தக் கூடிய நல்ல தொரு காரியத்தை நாம் செய்வோமேயானால், நம் தமிழ்நாட்டிலே மிகப் பெரிய எழுச்சியை உண்டாக்க இயலும்.

தமிழகத்து மக்கள் இன்று ஆளும் அரசு மீது எல்லா வகையிலும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்னவெனில், நாட் டில் நடக்கும் அட்டூழியங் களுக்கு அளவே இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, வெட்டு, குத்து, பாலியல் வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக் கின்றன. வீட்டிலே கூட பெண்கள் நிம்மதியாக இருக்க இயலவில்லை. தனியே வெளியே செல்லும் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் திருடப்படுகின்றன. டெங்கு காய்ச்சல் என்று ஒன்று வந்து மாநிலம் முழுவதிலும் இந்த மக்களைக் குறைத்துக் கொண்டிருக்கிறது. மாநில மக்கள் அனைவரையும் அது அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டி ருக்கிறது.

மது ஒழிப்பு

இப்படிப்பட்ட நிலைகளுக் கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது மது எனும் குடிப் பழக்கம். தமிழ்நாட்டில் அம்மை யார் ஜெயலலிதா அவர்கள் """"மதுவைப் படிப்படியாக நான் ஒழிப்பேன்"" என்று வாக்கு றுதி கொடுத்தார். ஆனால் அந்த வாக்குறுதியை மீறி இன்றிருக்கும் தமிழக அரசு புதிது புதிதாக டாஸ்மாக் கடை களை அதிகளவில் திறந்து கொண்டும், அதிக விலையை யும் பெற்று வருவதன் மூலம் மதுவில் மூழ்கியிருக்கும் மக்களின் குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், ஆளும் அரசில் ஆற்றலையோ, அறிவு ஞானத்தையோ பார்க்க முடியவில்லை. அறிவு சூனியத் தைத்தான் பார்க்க முடிகிறது. நாளை என்ன நடக்கப் போகிறது, மக்களுக்கு என்ன நிகழப் போகிறது என்பனவற்றை முன்பே யோசித்து, அதற் கான நடவடிக்கைகளை மேற் கொள்வதும், தடைகளைப் போடுவதும் மந்திரிக்கு அழகு என்று சொல்வார்கள். ஆனால் இன்றுள்ள மந்திரி கள், """"வரும்பொருள்"" என்ப தற்கு வேறு பொருள் வைத்துக் கொண்டு, தமக்கு என்ன பொருள் வருகிறது என்பதை மட்டுமே கவலையாகக் கொண்டு நாட்டிலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழக அரசை மாற்ற வேண்டியது நம் கடமை.

பொருளாதார நிலை

அதேபோல மத்தியில் இருக்கும் அரசு எல்லா வகையிலும் தோற்றுப் போய் விட்ட ஓர் அரசாகும். இன்று ஏழை விவசாயி கள், பாட்டாளி மக்கள், தொழிலாளர்கள், அன்றாடங்காய்ச்சிகள் என ஒருவர் பாக்கியில்லாமல் அனை வரையும் ஒட்டுமொத்தமாக மத்திய அரசு பாதித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் வருகிறபொழுது மதுரையிலே கடைவீதிகளைப் பார்த்தோம். பொதுவாக தீபாவளி நெருங்கும் காலங்களில் மிகவும் பரபரப்பாக விற்பனைகள் நடைபெறும் கடைகளிலெல்லாம் ஈ ஓட்டிக் கொண்டிருப்பதை மட்டுமே இப்போது காண முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான். இந்நிலையிலிருந்து தமிழகத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல; இந்தியாவின் பொருளாதார நிலையையும் மாற்றியமைத்திட ஒரு மாற்று தேவை. அதற்கு மத்தியிலும், மாநிலத்திலுமுள்ள அரசுக ளை வீட்டுக்கு அனுப்புவ துதான் வழியே தவிர வேறு வழியில்லை என்பதை நினைவு படுத்தும் அளவில் இந்த மாநாட்டின் மூலம் நீங்கள் உணர்த்தியிருக்கி றீர்கள்.

பாராட்டு

இந்த மாநாட்டின் சிறப்புக்கா கப் பாடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இங்கே வந்து சிறப்புற உரையாற்றிய எமது பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், முதன் மைத் துணைத்தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், உரையாற் றிச் சென்றிருக்கிற பீட்டர் அல்ஃபோன்ஸ், அனிதா ராதாகிருஷ்ணன், இ.டீ.பஷீர், டீ.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ஹஸ்ரத் உள்ளிட்ட அனைவ ருக்கும் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிறைவாக, இனி வருங்கா லங்களில் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் மாநாடுகளின் போது, இந்த மாநாட்டிலே என் னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளனவோ குறிப்பாக 1958இல் மாநாட்டில் நிகழ்ந்த நினைவுகளை மீண்டும் மலரச் செய்யும் அளவுக்கு நிகழ் முறைகள் அமைக்கப்பட வேண்டும்.

1958 ஜனவரி 11, 12 நாட்களில் நடைபெற்ற மாநாட்டின்போது, திருச்சியிலே 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நானும் கலந்துகொண்டு பெரும் பிரச்சாரங்களைச் செய் தோம். அந்த மாநாட்டிற்குப் பல்லா யிரக்கணக்கான மக்கள் வந்தனர். அவர்கள் அமர ஓலைப்பாய் விரித்தே மாநாடு நடத்தப்பட்டது. அதில்தான் அனைவரும் அமர்ந்தனர். மாநாட்டுப் பந்தலுக் குள் நுழையுமுன், நுழைவாயி லிலேயே மக்கள் தமது காலணிகளைப் போட்டுவிட்டு உள்ளே வந்தனர். அவர்களது காலணிகளையெல்லாம் பாது காக்கும் பொறுப்பை நாவலர் யூஸுஃப் ஸாஹிப் அவர்கள் எனக்கு வழங்கினார்கள். ஆக, மாநாட்டில் செருப்புகளைப் பாதுகாக்கும் பணியில் நான் ஈடுபட்டிருக்கிறேன் என்ப தையும் இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.

அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து ஒவ்வொருவருக்கும் அஞ்சல் அட்டை எழுதி அனுப்பப்பட்டது. அவ்வா றாக அஞ்சலட்டை எழுதும் வேலை யைச் செய்வதற் காக, ‘மறுமலர்ச்சி’ அலுவல கத்திற்கு வந்து, ஆயிரக்க ணக்கான கார்டுகளை நான் எழுதியி ருக்கிறேன். அவ்வாறு எழுதிய பின்பு, நாவலர் ஏ.எம்.யூஸுஃப் ஸாஹிப் அவர்கள் அதில் கையெ ழுத்து போடுவார்கள். இவ்வாறாகத் தான் 1958இல் அந்த மாநாடு நடைபெற்றது.

1948இல்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் (ஊடிளேவவைரவiடிn) வந்தது. 1958இல் மாநாடு நடந்தது. 1967இல் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்றத்தில் அதன் தோழர்கள் இடம்பெற்றனர். அதுபோல இன்று மாநாடு நடைபெற்றிருக்கிறது. தேர்தல்

தமிழகத்தில் இனி எப்போது தேர்தல் அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை. அவ்வாறு அறிவிக்கப்படும்போது, நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தம்பி அபூபக்கர் தலைமையில் குறைந்தபட்சம் 5 எம்.எல்.ஏ.க்களாவது சட்டமன்றத்திற்குள் செல்ல வழிசெய்யும் வகையில் நமது பணி முனைப்புடன் தொடர வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை நாம் சேர்ந்திருக்கும் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கும் என்ற உறுதியான நம்பிக்கையையும் இப்போதே தெரிவித்து, வருங்கால தமிழகம் மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் சிறப்பானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய அரசியல் சூழல், ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்கு இவற்றையெல்லாம் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. நமக்குச் சொல்லப் பட்டிருப்பது, """"நேற்றை விட இன்று நல்லதை உங்களுக்கு நான் வழங்கியிருக்கிறேன்"" என்பதாக. திருமறை குர்ஆனில், """"வலல் ஆஃகிரத்து ஃகைருன் லக மினல் ஊலா"" (முதலாவதை விட பிந்தியது உமக்கு நல்லதாக உள்ளது) என்ற வசனம் நமக்கு அதைத்தான் உணர்த்துகிறது. இன்றை விட நாளையை உங்களுக்கு மிக மிக நல்லதாக ஆக்குவேன் என்பதையே அல்லாஹ் நமக்குக் கூறுகிறான்.

இங்கே இருக்கும் மாவட்டத் தலைவர் மீராசா, மாவட்டச் செயலாளர் ஹஸன் ஆகியோரெல்லாம் இன்று பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளீர்கள். ஆனால், நேற்று இவ்வளவு செல்வச் சிறப்போடு நீங்கள் இருக்க வில்லை. உங்கள் குடும்பம் இப்படி இருக்கவில்லை. இங் குள்ள பலரும் தமது கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு நீங்கள் இப்படி இருக்கவில்லை. இன்று நன்றாக இருக்கிறீர்கள். இவ்வாறாக ஒப்பிட்டுப் பார்த்தால், நேற்றை விட இன்று நாம் நன்றாக இருக்கின்றோம் என்பதை உணர முடியும். இறைவன் சொல்கிறான்: நேற்றை விட இன்று உங்களை நன்றாக வைத்த நான், நாளை உங்களை மிக மிக நன்றாக வைப்பேன் என்பதாக.

யாருக்கும் அஞ்சிடாத சிங்கங்கள்

ஆக, முஸ்லிம் சமுதாயத் திற்குச் சொல்லப்படும் அச்சுறுத் தல்கள், பயமூட்டல் கள், விமர் சனங்கள் என எத்த னையோ செய்திகள் வருகின் றன. இவற்றையெல்லாம் பார்த்து சமுதாயம் அஞ்சுவ தாக நினைக்கிறார்கள். ஆனால், இந்தச் சமுதாயம் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருக்கும் சிறிதும் அஞ்சிடாத சிங்கங்களைக் கொண்டது. அப்பேர்ப்பட்ட இந்தச் சமுதாயம் தனது தனி வழியில் செல்லும், வெல்லும். அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்