Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, November 1, 2007
வடக்கே வீசக்கூடிய வாடைக்காற்றுக்கு தென்னாட்டில் இடம் கிடையாது 1400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கொள்கைகள் பல நாடுகளில் சட்டமாக்கப்பட்டு வருகின்றன தளபதி ஷபிகுர் ரஹ்மான் இல்லத்திருமண விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


லால்பேட்டை, அக்.31-1400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இஸ் லாமிய கொள்கைகள் பல நாடுகளில் இன்று சட்டம் ஆக்கப்பட்டு வருகின்றன என்று இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

இ.யூ.முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் இல்லத்திருமணம் லால்பேட் டையில் 29-10-2017 ஞாயிற்று கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு தலைவர் பேசியதாவது:- நமது சங்கைக்குரிய மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதல்வர் முஹம்மது இஸ்மாயில் மணமகனுக்கும், அருமை சகோதரர் ஹபிபுர் ரஹ்மான் புதல்வி முஷ்பீரா மண மகளுக்கும் முபாரக் மஸ் ஜிதில் சிறப்பாக நடை பெறக்கூடிய இந்த திருமண விழாவிலே உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களுடைய நலத்துக்கும், வளத்துக்கும் துஆ செய்கிறேன்.

இறைவனுக்கு நன்றி

எனது உடல்நிலை காரணமாக பல நிகழ்ச்சிகளை ரத்து செய்த போதும் இந்த திருமணத்திலே கலந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இங்கே வந்து உங்களிடம் உரையாற்றிக் கொண்டி ருக்கிறேன். அதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டி ருக்கிறேன். நேற்று கடலூரில் மாவட்ட வாழ்வுரிமை மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற்றது. நான் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போதும் இந்த மாநாட்டை மிக சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெ. ஜீவகிரிதரன்

இன்றைய தினத்தில் சென்னையில் நமது மாநில செயலாளர் அருமை நண்பர் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் மகனாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருக்கிறது. திருமணம் பெங்க ளூரில் நடந்தது. அதற்கு மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துர் ரஹ்மான் அவர்களை தலைமை நிலையத்தின் சார்பாக வாழ்த்தி வரச்சொன்னோம். அவரும் சென்று வாழ்த்தி வந்தார். இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் அந்த மணமக்களுக்கும் நம் எல்லோர் சார்பாகவும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். இந்த திருமணத்தினுடைய சிறப்பு அவர்கள் செய்து வரக் கூடிய சேவைகளையெல்லாம் இங்கே உரையாற்றிய அனை வரும் சிறப்பாக சொல்லி யிருக் கிறார்கள்.

தளபதி ஷபிகுர் ரஹ்மான்

தளபதி ஷபிகுர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள், ஒரு பழுத்த அப்பழுக்கற்ற உண்மையை சொன்னால் ஒரு வெறிகொண்ட முஸ்லிம் லீகர். முஸ்லிம் லீகை பற்றி யாராவது குறை சொன் னால் அவர் வெகுண்டெழுந்து தண்டாயுதம் கொண்டு தண்டிப்பது போல் உடனடியாக தனது எதிர்ப்பை தெரிவித்து முஸ்லிம் லீகை தூக்கி பிடிப்பதில் தன்னை முழுமையாக ஈடு படுத்தி வருபவர். அவர் மனைவியார், அவரது மக்கள் அனைவரும் அப்படிப்பட்ட கொள்கைப்பிடிப்பில் உள்ள வர்கள். தனித்துவமிக்க தளகர்த்தகர்கள். அந்த அடிப் படையிலே தான் இந்த திருமணத்தில் தாய்ச்சபையின் மாநில நிர்வாகிகள், சமுதாய புரவலர்கள், உலமா பெருமக்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பங்கேற்று சிறப்பித் திருப்ப தோடு, இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பதை மிகப்பெரிய பேராக கருது கிறார்கள்.

முஸ்லிம் லீக்

முஸ்லிம் லீகில் அவர் எப்படி உறுதியாகவும், முஸ்லிம் லீகின் கொள்கை களை வெளிப் படுத்துவதில் சளைக்காமலும் இருக்கிறாரோ அது மாதிரி அவரு டைய மக்களும் அப்ப டியே இருந்து முஸ்லிம் லீகில் ஒரு முன்மாதிரியான குடும்பமாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட குடும்பங் கள் தமிழகத்திலும், ஏன் இந்தியாவிலும் வருமே யானால் தாய்ச்சபையின் வளர்ச்சி நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இந்தியாவில் மிகப் பெரிய சக்தியாக உருவாகும். அதற்கு காரணம் நமது இயக்கக் கொள்கை, கோட்பாடுகள், மிகத் தெளிவானவை. குழப்பமில்லா கொள்கை

முஸ்லிம் லீகுடைய கொள்கை குழப்பமில்லாதது. யாரையும் குழப்பாதது. சமு தாயத்தில் சந்தர்ப்பவாத போக் கில்லாதது. நமது தலைவர்கள் நேரிய வழியில் தூரநோக்கு சிந்தனையோடு உருவாக்க ப்பட்ட இயக்கம் தான் நம் இயக்கம். அதனால்தான் தெளி வான பாதையை போட்டுக் கொடுத்து அதன்படி நடக்க நம்மை பணித்துவிட்டு சென்றி ருக்கிறார்கள். எனவே, அதில் செல்வ துதான் வெல்லக்கூடிய வழி. சமுதாயத்திலே பல்வேறு இயக்கங்கள் வழிநடத்தி சென்ற hலும், அதுவெல்லாம் பயன ளிக்காது. நான் இப்படி சொல் வதனாலே மற்ற இயக்கங்களை குறை சொல்வதாக நீங்கள் எண்ணி விடக் கூடாது. முஸ்லிம் லீக் இன்று அரசியல் என்று வருகிற போது இந்திய ஜனநாயகத்தில் முஸ்லிம் லீகுடைய வரலாறு அதனுடைய கொள்கை, சரித்திரம், அதுதான் இந்திய முஸ்லிம்களுக்கு உரியது. முஸ்லிம்கள் சிறுபான்மை யாக வாழக்கூடிய ஒரு நாட்டிலே ஒரு சிறுபான்மை முஸ்லிம்க ளுக்கு ஜனநாயக நாட்டில் எப்ப டிப்பட்ட ஒரு அரசியல் இருக்க வேண்டுமோ! அது முஸ்லிம் லீக் மாதிரியாகத்தான் இருக்க முடியும். இதை இலங்கையில் இருந்து வரக்கூடிய அறிஞர்கள், மலேசி யாவிலிருந்து வரக்கூடிய அறிஞர்கள் எல்லாம் சொல்லி வருகிறார்கள்.

ஜனநாயக இயக்கம்

இந்தியாவில் 23 கோடி முஸ்லிம்கள் வாழக்கூடிய இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக ஒரு இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அது முஸ்லிம் லீக்காகத்தான் இருக்க வேண்டும். அப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்றால், இந்த இயக்கம் நடந்து வரும் முறை சிறந்தது. வழி சிறந்தது. இந்த வழியை தவிர வேறு எந்த வழியும் சிறந்த வழி இல்லை. இதுகாட்டுகின்ற வழி சரியானது. ஆக இந்த வழியில் தான் சென்றுக் கொண்டிருக்கின்றோம். உலமாக்களின் ஆதரவையும், பிரார்த்தனையையும் நாம் தொடர்ந்து பெற்று வருகிறோம். உல மாக்கள்

இந்திய மக்களுக்கு மார்க்கம் என்று வருகிற போது சங்கைக்குரிய உல மாக்கள் என்ன வழியை நமக்கு காட்டு கிறார்களோ அந்த வழியை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று நாம் தொடர்ந்து சமுதாயத்தை வலியுறுத்தி வருகிறோம். மார்க்க விஷயத்தில் நான் சொல்வதோ! டிவியில் பலபேர் கூறுவதோ! அல்லது வேறு யாரும் கூறுவதோ மார்க்கம் கிடையாது. இந்தியாவில் மார்க்க சம்பந்தமான விஷயங்களை முடிவெடு க்கக்கூடிய முழு அதிகாரம் பெற்ற அமைப்பாக முஸ்லிம் பெர்சனல் லா போர்டை நாம் அங்கீகரித்து அது சொல்லக்கூடிய முடிவுகளை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மட்டுமல்ல, இந்தியா வில் உள்ள அனைவரும் ஏற்க வேண்டும். அரசாங்கம் ஒன்று சொல்கிறது. புதிது புதிதாக வரக்கூடியவர்கள் மார்க்கம் என்று ஒன்றை சொல் கிறார்கள். அதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்

அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத் உலமாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை பின்பற்றுவது தான் நமக்கு முன்சென்ற தலைவர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள். அதைத்தான் நாமும் உணர்ந்து பின்பற்றி வருகிறோம். சங்கைக்குரிய உலமாக்கள் ஒவ்வொரு மூலை முடுக்காக சென்று மார்க்கத்தை பரப்பிய தன் காரணத்தினால் தான் நாமெல்லாம் இன்று இஸ் லாத்தை முழுமையாக பின்பற்றி வருகிறோம்.

உலமாக்களை கண்ணியப்படுத்துதல்

அவர்களுடைய அர்ப்ப ணிப்பு பணிகள் அன்றைய ஸஹாபாக்கள், எப்படி பல்வேறு நாடுகளுக்கு பிரிந்து சென்று இஸ்லாத்தை பரப்பி னார்களோ அந்த பணியைத் தான் உலமாக்கள் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட உலமாக்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்கின்ற உயரிய அடிப்ப டையில் இங்கே வருகை தந்திருக்கக்கூடிய சமு தாய புரவலர் ஒயிட் ஹவுஸ் அப்துல் பாரி ஹாஜியார், நோபுல் மரைன் ஷாகுல் ஹமீது ஹாஜி யார் போன்ற பெருமக்கள் உலமாக்கள் இருக்கக்கூடிய அந்தந்த பகுதிகளுக்கே சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை கண்ணியத்தோடு செய்து வரக்கூடிய பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார்கள். உலமாக்கள் எப்படி சமுதாய மக்களை பார்த்து சிரமப்பட்டு, உண் மையை எடுத்து சொன் னார்களோ அப்படிப்பட்ட உலமாக்களுடைய பேச்சை நாம் கேட்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் சொல்லிக் கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்ட உலமாக்களை கவுரவப்படுத்த வேண்டும் - கண்ணியப்படுத்த வேண்டும் என்று இன்றைய தினத்திலே அந்த உலமாக்கள் இருக்கும் இடத்திலே போய் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒரு கட்டளையாக ஏற்று தாமே முன்நின்று செய்து வரக்கூடிய சரித்திரப்பூர்வமான சாதனையை இங்கே தமிழகத்திலே இங்கே வந்திருக்கக்கூடிய புரவலர்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப் பட்ட ஒரு சரித்திரப்பூர்வமான சேவை வருங்காலத்தில் இந்தியா முழுவதும் அல்ல, உலகம் முழுவதும் பரவி விரிவடைய வேண்டும். என்று நாம் விரும்புகிறோம்.இந்த சமுதாயத்தை ஒன்று படுத்தி, ஒற்றுமைப்படுத்தி இணைத்து உருவாக்கக்கூடிய பொறுப்பு முஸ்லிம் லீகிற்கு இருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகம்

ஜுனியர் விகடன் பத்திரி கையில் கேள்வி பதிலில் எழுதியிருந்தார்கள். அதிலே பல்வேறு அரசியல் கட்சிகளை பற்றி எழுதும்போது திராவிட முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் கொள்கை அளவில் வேறல்ல என்று எழுதி யிருந்தார்கள்.அதைப்பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் வேறுவேறு அல்ல. அது ஒன்று என்பது தமிழ்நாட்டில் மட்டு மல்ல, இந்தியா முழுவதும் அந்த கொள்கை பரவவேண்டும் என்று தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

மதவாத அரசியல்

இன்று இந்திய அரசியல் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. இன்று இந்திய மக்கள் மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது இந்திய நாட்டினுடைய வர லாற்றை மாற்றக்கூடிய பண்பு கிடையாது. இல்லாத ஒன்றை திணிப்பதற்கான முயற்சி நடக்கிறது. அந்த முயற்சியை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு அணை, ஒரு மதில் சுவர் மாதிரி, இந்திய மக்களை ஒரு ஜாதியின் பக்கம் அல்லது ஒரு மதத்தின் பக்கம் அழைத் துப்போகக்கூடிய ஒரு அரசியல் சித்தாந்தத்தை தடுத்து நிறுத்திய பெருமை எங்கே தோன்றியது என்றால் இந்த மண்ணில்தான் தோன்றியது. திராவிட முன்னேற்ற கழகத் தில்தான் இருக்கிறது. திராவிட பாரம்பரியத்தில்தான் இருக்கிறது.

தி.மு.க.வும் முஸ்லிம் லீகும்

திராவிட பாரம்பரியம் என்பது ஒன்றே குலம்; ஒருவனே தேவன். யாதும் ஊரே; யாவரும் கேளீர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எல்லோரும் சகோ தரர்கள் என்ற தத்துவத்தை தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், அதன்பிறகு டாக்டர் கலைஞர்அவர்கள், அதனைத் தொடர்ந்து இன்று தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திலே நிலைநிறுத் தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனாலே, அந்த கொள்கைக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இஸ் லாமிய மார்க்கத்தில் சொல்லப் பட்ட ஒன்றே குலம்; ஒருவனே தேவன், யாதும் ஊரே; யாவரும் கேளீர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்திலே வேறுபாடு இல்லை. அப்படி இல்லாத காரணத்தினாலே தான் தமிழகத்திலே அரசியலில் தி.மு.க.வும், முஸ்லிம் லீகும் கொள்கையில் ஒன்று என்று சொன்னதை நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுதான் நடக்க வேண்டும்.இந்தியாவில் இதுபோன்ற நிலைமை உருவாகும் போது தமிழகத்திலே உள்ள 8 கோடி தமிழர்களோடு, இந்தியாவில் வாழக்கூடிய 20 கோடி முஸ்லிம் சமுதாயமும் ஒன்றுசேரும் போது இந்த கொள்கையை இந்தியா முழுவதிலும் நிலை நிறுத்தக்கூடிய ஒரு ஆற்றலை நாம் நிச்சயமாக பெற முடியும். அந்த அடிப் படையில்தான் நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். வடக்கே வீசக்கூடிய அந்த வாடைக்காற்றுக்கு தென்நாட் டிலே இடம் கிடையாது. வடநாட்டிலே வீசக்கூடிய வாடைக்காற்றை, மதச்சாயத்தை, மததுவேசத்தை, மதவெறுப்பை, மதஅடிப்படையிலான ஒரு குறுகிய மனப்பான்மையை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று சொன்னால், தமிழ்நாட் டில் மட்டும் பாடுபட்டால் போதாது. இந்தியா முழுவதும் இந்த கொள்கையை எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அந்த பொறுப்பின் அடிப்படையில் தான் திராவிட முன்னேற்ற கழகத்தை, திராவிட பாரம்பரியத்தில் உள்ள இயக்கங்களை ஒன்றிணைத்து செல்ல வேண்டும் என்று நாம் தொடர்ந்து செய்து கொண்டி ருக்கிறோம்.வரும் நவம்பர் 8-ந்தேதி இந்தியா முழுவதும் ஒரு மிகப் பெரிய எழுச்சி உருவாகக் கூடிய அளவுக்கு, மாபெ ரும் கூட்டங்களை நடத்து வதற்குண்டான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அதில் திராவிட முன்னேற்ற கழகத்தி னுடைய செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை கேரளா வுக்கு அழைத்து வரவேண்டும் என்று அங்குள்ள நண்பர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஓரிரு நாளில் சென்னை சென்று தளபதியை சந்தித்து அவர்களின் ஆவலை தெரிவிக்க இருக்கிறேன்.

இரண்டு தண்டவாளம்

திரும்ப திரும்ப நான் சொல்ல விரும்புவது திராவிட முன்னேற்ற கழகமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் பேரில் வேறாக இருந்தாலும் கொள்கையில் ஒன்றுபட்டு இரண்டு தண்டவாளத்தைப் போல, இரண்டு சக்கரம் பூட்டிய வண்டியை போல, இந்தியாவில் ஒரு மாபெரிய சமுதாய மாற் றத்தை உருவாக்கக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். சமுதாயத்தை ஏற்ற தாழ்வுள்ள சமுதாயமாக மாற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம். இன்று நாடு முழுவதும் நண்பர்கள் சொன்னது மாதிரி கம்யூனிசத்தை பற்றி பல்வேறு காரணங்களை சொல்லி முஸ்லிம்களை பற்றியும், குர்ஆனை பற்றியும், ஹதீஸை பற்றியும் தவ றான ஒரு விளக்கங்களை சொல்லி இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத் தின் வரலாற்றின் மீதும் வெறுப்பு வர வேண்டும் என்ற அடிப்படையில் ஊடகத்தின் மூலமாக, பத்திரிகையின் மூலமாக, இணையதளங்கள் மூலமாக தொடர்ந்து பிரச்சாரம் நடக்கிறது.

டாக்டர் ஜாகிர் நாயக்

மூன்று, நான்கு நாட்களாக டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் குர்ஆனில் உள்ள வசனத்தை பற்றி அவர் கூறிய விளக்கத்தை வைத்துக் கொண்டு அவர் தீவிரவாதத்தை பரப்புவதற்கு எல்லா உதவியையும் செய்தார் என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் நடக்கிறது. டாக்டர் ஜாகிர் நாயக் சொல்லக்கூடிய கருத்தை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக்கொள்வதில்லை. இங்குள்ள இஸ்லா மியர்கள் ஏற்றுக்கொள்வது சுன்னத்வல் ஜமாஅத் சார்ந்திருக்கக்கூடிய உலமாக்கள் சொல்வது தான் இஸ்லாமிய கொள்கை என்று ஏற்று கொண்டு ஒப்புக் கொண்டிருக்கிறோம். டாக்டர் ஜாகிர் நாயக் இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்திருக்கலாம். அரசியலைப் பற்றி ஆய்வு செய்திருக்கலாம். ஆனால், அவர் சொல்லக்கூடிய கருத்து இஸ்லாமிய கொள்கைகளின் கருத்தாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒப்புக்கொள்வது நியாயமாகாது. 1400 ஆண்டு காலமாக நாம் பின்பற்றி வரக்கூடிய முறை என்பது சுன்னத்வல் ஜமாஅத் உலமாக்கள் சொல்லக்கூடியது தான். இதற்கு மாற்றமாக எவ்வளவு பெரிய அறிவாளிகளாக, அறிஞர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லக்கூடியது எல்லாம் இஸ்லாம் என்று நாம் ஏற்றுக்கொள்வதில்லை. அதைப்போன்று ஜாகிர் நாயக் கூறிய கருத்து நமக்கு ஏற்புடையதல்ல. திருக்குர் ஆனில் சொல்லப்பட்டிருக்கிற வசனமானது """"ஹுவல்லதி அர்ஸல ரசூலஹூ பில் ஹூதா வதீனில் ஹக்கீ லீ யுல்ஹிரஹூ அலத்தீனி குல்லிஹி வ கஃபா பில்லாஹி ஷஹீதா "" இந்த ஆயத்திற்கு ஜாகிர் நாயக் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அவர் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் என்றால், இஸ்லாமிய மார்க்கம் சத்தி யத்தை கொண்டு, உண்மையை கொண்டு, நபியின் மூலம் அனுப்பப் பட்டிருக்கிறது. இந்த மார்க்கம் உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும், இந்துவத்தையும், கிறித்துவ த்தையும், புத்தத்தையும், ஜெய்னத்தையும், மார்க்சி சத்தையும், பார்சிசத்தையும், கம்யூனிசத்தையும் எல்லா இனங்களையும் இது அழித்துவிட்டு இஸ்லாமே மேலாங்கி நிற்கும் என்று அவர் சொன்னதாக சொல்லப் படுவதும், உலகத்திலுள்ள எல்லா மதங்களையும் இஸ்லா மிய மார்க்கம் அழித்து விடும் என்று சொன்னதாக சொல்லி குர்ஆன் உலகத்தில் உள்ள எல்லா மதங்களுக்கும் விரோதமானது இல்லையா? என நாடு முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கற்றறிந்த உலமாக்கள், மார்க்க அறிஞர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தது இஸ்லாமிய மார்க்கம் எந்த மதங்களையும் அழிப்பதற்கு வந்தது அல்ல. இஸ்லாமிய மார்க்கம் எல்லா மதங்களையும் ஒப்புக்கொண்ட மார்க்கம். எனவே, இஸ்லாமிய மார்க்கம் எல்லாம் மதங்களையும் அழிக்க வந்த மார்க்கம் என்று சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும். இஸ்லாமிய மார்க்கம் சொல்லக்கூடிய உண்மைகளை பிரச்சாரம் செய்யும் போது உலகத்தில் இருக்கக்கூடிய மார்க்கத்திலே என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ, என்னென்ன தவறுகள் இருக்கிறதோ அத்தனையும் வெளிப்பட்டு அந்தந்த மார்க்கத் திலுள்ள உண்மைகள் வெளிவரும். இந்து மதத்திலே உருவ வழிபாடு இல்லை. """"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"""" என்கிற வேதத்தை எடுத்துப்பார்த்தால் எங்கே சிலை இருக்கிறது. கீதையி லும் உருவவழிபாடு இல்லை. எல்லா மதங்களையும் ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாமிய மார்க் கத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ அதுதானாக வெளிப்படும்.

ஒரே இறைவன்

இந்து மதத்தை தோண்டி ஆராய்ந்து பார்த்தால் இந்து மதத்திலும் ஒரே ஆண்டவன், உருவமில்லாத கடவுள் அந்த இறைவன், அந்தப் பரம்பொருள் என்றிருக்கும். அப்படி வெளிக்கொணரக்கூடிய சக்தி இந்த இஸ்லாத்திற்கு இருக்கிறது. ஆக, """"ஹுவல்லதி அர்ஸல ரசூலஹூ பில் ஹூதா வதீனில் ஹக்கீ லீ யுல்ஹிரஹூ அலத்தீனி குல்லிஹி வ கஃபா பில்லாஹி ஷஹீதா ""என்ற வசனம் சொல்லக் கூடிய தாத்பரியம். அது சொல்லக்ககூடிய அர்த்தம். மற்ற மதங்களை அழிப்பது அல்ல. அந்தந்த மதத்திலே இருக்கக்கூடிய உண்மைகளை குளங்களிலே பாசிபடிந்திருப்பதை போக்கு வதைப் போல அதில் இருக்கக் கூடிய தவறுகளை போக்கக் கூடியதாக இஸ்லாமிய மார்க்கம் வழி காட்டும். அதைத்தான் குர்ஆன் சொல்கிறது. அதைத் தான் மார்க்க அறிஞர்கள் குறிப் பிடுகிறார்கள்.

சொத்துரிமை

ஆக, ஜாகிர் நாயக் எங்கேயோ எதையோ சொன் னார் என்பதற்காக இஸ்லா மிய மார்க்கம் உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் அழிப்பதற்கு வந்தது என்று நீங்களாகவே கற்பனை செய்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பாக முடியும். ஆக, இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள உண்மைகள் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டி ருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாம் பெண் களுக்கு சொத்துரிமை வழங் கியது. இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கு சொத்துரிமை பற்றி பேசப்பட்டு வருகிறது. பல நாடுகளில் சட்டமாக்கப்பட்டு வருகிறது.

ஜப்பான்

ஒன்றை சொல்லி நிறைவு செய்கிறேன். ஜப்பானிலே ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந் தைகள் பிறந்தது. ஒரு குழந்தை ஒருமாதிரி இருந்தது. இன்னொரு குழந்தை வேறு மாதிரி இருந்தது. இதை ஆராய்ச்சி செய்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்து அக்குழந்தைளின் தாயாரிடம் விசாரித்த போது எனக்கு முதலில் ஒரு கணவர் இருந்தார். அவர் என்னை விவாகரத்து செய்தார். உடன் வேறு ஒருவரை நான் திருமணம் செய்தேன். உடன் கர்ப்பம் தரித்து குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறினார்.

மரபணு பரிசோதனை

அப்பொழுதுதான் மரபணு பரிசோதனை செய்த பொழுது ஒரு குழந்தை முந் தைய கணவருக்கும், மற்றொரு குழந்தை தற்போதைய கணவருக்கும் உருவாகியி ருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். இப்பொழுது அந்த நாட்டில் இதுவரை இல்லாத ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இஸ்லாம் என்ன சொன்னதோ அதாவது, ஏதாவது காரணத்தினாலே திருமண முறிவு ஏற்பட்டால் அப்பெண் மூன்று மாதவிடாய் காலத்திற்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக திருமணம் செய்யக்கூடாது என்பது இஸ்லாமிய சட்டம். அதற்கு என்ன காரணம் என்றால் அந்த மூன்று மாதவிடாய் காலத்திலே ஏதாவது கர்ப்பம் தரித்திருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான் அந்த காலத்தை பார்க்கக்கூடிய ஒரு காலம். அப்படி 1400 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட இஸ்லாமிய சட்டம் ஜப்பானில் ஏதோ ஒரு காரணத்தினாலே விவாகரத்தான அப்பெண் ஆறு மாத காலத்திற்கு பிறகு தான் மறுமணம் முடிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இது ஒன்று, இரண்டு அல்ல உலகத்திலே உள்ள பல்வேறு நாடுகளில் இதுமாதிரியான சட்டங்கள் வந்துகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ, அது அத்தனையும் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர்க ளாகவே கற்றுணர்ந்து உண்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் வந்துக்கொண்டிருக்கிறது. இதைத்தான் உலமாக்கள் நமக்கு சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள். எனவே, அறிவார்ந்த முறையில் சட்டரீதியாக செல்வோம். அனைத்திலும் வெல்வோம் என்று கூறி இந்த மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ் வாங்கு வாழ உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.

இவ்வாறு பேராசிரியர் பேசினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்