Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, November 19, 2017 29 Safar 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, November 1, 2007
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்


கடலூர், அக்.30-கடலூர் வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ் வுரிமை மாநாடு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு, கல்வி விழிப்புணர்வு கருத்த ரங்கம் 28/10/2017 சனிக்கிழமை, கடலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு கத்தார் காயிதெ மில்லத் பேரவை தலைவர் முஸ்தஃபா தலைமை தாங்கினார் கட லூர் வடக்கு மாவட்ட தலைவர் ராஜா ரஹிமுல்லா தொகுத்து வழங்க மஞ்சக் குப்பம் பள்ளிவாசல் இமாம் முஹம்மது யஹ்யா மன்பஈ இறைவசனம் ஒதினார்.

மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில் அனைவரையும் வரவேற்று பேசினார்.

திமுக கடலூர் நகர செயலாளர் ராஜா, எம்.கே.எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் பஷீருல் லாஹ், மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், மாநில துணை செயலாளர்கள் ஆப்பனூர் ஜபருல்லா, எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் லால்பேட்டை ஏ.ஆர்.அப்துல் ரஷீத், கோட்டகுப்பம் அன்வர் பாஷா, தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் ஃபாரிஸ், மாணவர் பேரவை வேலூர் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், உடக துறை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட் டோர் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்றனர்.

மாவட்ட துணை தலைவர் அப்துல் கரிம், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஷித், மாணவர் பேரவை மாவட்ட பொருளாளர் நசீர் அஹமத், கடலூர் நகர கௌரவத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் மாநாட்டு தீர்மனங்களை வாசித்தனர்.கடலூர் நகர தலைவர் ஜாபர், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அப்துல் ரஜாக் உலவி, கடலூர் ரஹ்மானியா பள்ளி இமாம் இஸ்ஹாக் அலி சிராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் சுக்கூர், தலைமை நிலைய பேச்சாளர் ரஷீத் ஜான், மாணவர் பேரவையின் கோட்டக்கல் மண்டல தலைவர் அப்துல் வஹாப் (கேரளா), நெல்லிக்குப்பம் இஸ்லாமிய இளைஞர்கள் அறக்கட்டளை டிரஸ்டி அஸ்கர் அலி, திமுக மாநில செயலாளர் இள.புகழேந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, மாணவர் பேரவை மாநில தலைவர் பழவை அன்சாரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், முதன்மைத் துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கடலூர் நகர ஐக்கிய ஜமாஅத்திற்கு காயிதெ மில்லத் விருது மற்றும் கடலூர் புதுப்பாளையம் பள்ளியில் 25 ஆண்டுகள் இமாமாக பணியாற்றி வரும் அப்துல் அஜீஸ் மன்பஈ அவர்களுக்கு அல்லாமா அமானி ஹஜ்ரத் விருது வழங்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் 1958ல் திருச்சி முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டில் பங்கேற்ற எஹ்யா நானா, நெல்லிக்குப்பம் நகர தலைவர் ஹாஜி வி.எம்.அப்துல் ஹாதி, முத்த முஸ்லிம் லீக் உறுப்பினர் கடலூர் நகர பொருளாளர் ஷரீப் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்விப் பரிசுகள் வழங்கப் பட்டது.கடலூர் நகர செயலாளர் ரஃபீக் நன்றியுரை ஆற்றினார்.

மாவட்டத் தலைவரின் நன்றி அறிக்கை:

கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராஜா ரஹிமுல்லா வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பு அறிக்கையில் கூறியுள்ளதாவது:-கடலூர் வடக்கு மாவட்ட வாழ்வுரிமை மாநாட்டை வெற்றி மாநாடாக ஆக்கிக் கொடுத்த வல்ல இறைவ னுக்கும் தாய்சபையின் தலை வர்களுக்கும் சமுதாய சொந் தங்களுக்கும் நன்றி.பொதுவாக மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்துதான் அறிக்கை வரும் ஆனால் சற்று வித்தியாசமாக நன்றி தெரிவித்து அறிக்கை விடு கிறோம் தலைமையின் அனுமதி:-

காயல்பட்டினத்தில் தூத்துக்குடி மாவட்ட மாநாடு அறிவித்த உடன் நாமும் மாநாடு நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் தலைமை நிலை யத்தில் சங்கமித்தோம். தலைவர் பேராசியர் முழு மன துடன் வாழ்த்தி சிறப்பாக நடத்து வோம் என்றார்கள். பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநாட்டிற்கு அனைத்து உத்திகளையும் உணர்த்தினார். பொருளாளர் ஷாஜஹானிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றோம். முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மானிடமும் ஆலோசனை பெற்றோம். கல்வித் திருவிழா:- மாநாட்டிற்கு பத்து நாட்களுக்கு முன்பாக நெல்லிக் குப்பத்தில் கல்வித்திருவிழா மாநிலபொதுச் செயலாளர் தலைமையில் நடத்துவது என்று முன்கூட்டியே திட்ட மிடப்பட்டுவிட்டதால் கல்வித்திருவிழா, மாவட்ட மாநாடு இரண்டையும் நடத்த வேண்டியது கட்டாய மாகிவிட்டது. எனவே கல்வித்திருவிழாவை வெற்றி கரமாக நடத்தி முடித்துவிட்டு .மாநாட்டு வேலைகளில் முழுமையாக ஈடுபட்டோம்.

மாநாட்டு குழுக்கள்:-

மாநாட்டு வேலைகளு கென மாவட்ட செயலாளர் இஸ்மாயில், கடலூர் நகர தலைவர் எம்.எம். ஜாஃபர், நெல்லிக்குப்பம் நகர செயலா ளர் எஸ்.அப்துல் ரஜாக் ஹஜ்ரத், மாணவர் பேரவை மாவட்ட தலைவர் ஏ.ஆர்..அபுபக்கர் ரஸ்வி என நான்கு பேர்கள் தலைமையிலும் தனித் தனி குழுக்களாக பிரிந்து முழு மூச்சாக எங்களுக்கு கிடைத்த எட்டு நாட் களில் மிக சுறுசுறுப்பாக செய்து முடித்தோம். நான் நான்கு குழுக்களுக்கும் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே செயல் பட்டேன்.

வெற்றி மாநாடு:-

கடலூரில் 25 ஆண்டுகள் சிறப்பாக இமாமாகதீன் சேவையா hற்றிவரும்மௌலானா எம்.அப்துல் அஜீஸ் மன்பஈ அவர்களின் சேவையை பாராட்டி அல்லாமா அமானி ஹஜ்ரத் விருதும், கடலூர் நகரில் மிக சிறப்பான சமுதாய சேவையாற்றிவரும் நகரத்தில் உள்ள அனைத்து மஹல்லா ஜமாஅத்தும் ஒருங்கிணைந்த கடலூர் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் சேவையை பாராட்டி காயிதெ மில்லத் விருதும், 1958 திருச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தாய்சபையின் ஊழியர்களான ஹாஜி எஸ்.எம்.எஹ்யா நானா, ஹாஜி வி.எம்..அப்துல் ஹாதி மற்றும் மூத்த உறுப்பினர் எம்.எஸ்.ஷரீப் ஆகியோருக்கு பாராட்டும் மற்றும் அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் சமுதாய மாணவர்களை கௌரவப்படுத்துதல் என மாநாடு உலமாக்கள், ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்களுடன் முஸ்லிம் லீகினர் இணைந்த வெற்றி மாநாடாக களைக்கட்டியது.

மாநாட்டு அழைப்பு:-

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தெற்கு பகுதிக்கும் அருகி லுள்ள மாவட்ட பிரைமரி களுக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தபோது அவர்கள் எங்களை வர வேற்று உபசரித்தவிதம் மிக மகிழ்ச்சியான தருணமா கும் எங்களின் கூட்டு உழைப்பின் முயற்சியால் இறைவன் எங்களுக்கு வெற்றியை தந்தான் என மாநாட்டு அரங்கிலேயே இறைவனுக்கு கண்ணீரால் நன்றி தெரிவித்தோம்.மீண்டும் மீண்டும் வல்ல இறைவனுக்கும் தாய்சபையின் மாநில நிர்வாகிகளுக்கும் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் உலமா பெருமக்கள், கல்வி யாளர்கள் மற்றும் தாய்ச்சபை சொந்தங் களுக்கும் மாநாட்டு வரவேற்பு குழுவின் சார்பில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்