Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, November 9, 2007
கோல்வாக்கர் - கோட்சே கொள்கைகளுக்கு முடிவு கட்டி காந்தி - நேரு பாதையில் ஆட்சி நடத்தும் சரித்திரத்தை உருவாக்குவோம் கோழிக்கோட்டில் இ. யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


கோழிக்கோடு, நவ. 09- கோல்வாக்கர் - கோட்சே பாதைக்கு மூடு விழா கண்டு இந்திய தேசத்தில் காந்திஜி, நேருஜி காட்டிய வழியில் ஆட்சி நடத்தும் சரித்திரத்தை மீண்டும் உருவாக்குவோம் என கோழிக்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் நேற்று (08-11-2017) யூ.டி.எஃப் (ஐக்கிய ஜனநாயக முன்னணி) சார்பில் மாபெரும் ஜனநாயக பேரணி நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கரன் வரவேற் புரையும், எம்.எம். ஹஸன் தலைமை உரையும் நிகழ்த்தினர்.

இந்த கூட்டத்திற்கு தலைமை விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசியதாவது:-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய இறைவன் திருப் பெயரால் துவங்குகிறேன்

கோழிக்கோடு கடற் கரையில் இலட்சக் கணக்கில் கூடியுள்ள இந்த மாபெரிய மக்கள் கூட்டத்திற்கு முன்னிலை வகிக்கிற பானக் காட்டு ஞானத்தங்கம் சையது ஹைதர் அலி ஷிகாப் தங்ஙள் அவர்களுக்கும், கேரள முன் னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்களுக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும், கடலெனத் திரண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.

நவம்பர் 1ம் தேதி காசர் கோட்டில் துவங்கிய படை யொருக்கம் என்னும் இந்த ஜனநாயக வீரர்களின் அணிவகுப்பு கேரள எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அவர்கள் தலை மையில் சிறப்பாக நடந்து, வரும் டிசம்பர் 1ம் தேதி திருவனந்தபுரத்தை அடைய இருக்கிறது.

டிசம்பரில் இந்தப் படை, திருவனந்தபுரத்தில் நுழையும்போது, கேரளாவில் யு.டி.எஃப் ஆட்சி மலர்கிறது; அதே சமயத்தில் டெல்லி செங்கோட்டையில் ராகுல் காந்தி தலைமையில் யு.பி.ஏ. ஆட்சி பிறக்கிறது என்னும் செய்தி வரவேண்டும்; அதற்கு உங்களின் ஒற்றுமையான ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

ராணுவ அணிவகுப்பைப் போன்ற இந்த ஜனநாயகப் பேரணி, இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்னும் கேள்வியை எழுப்புகிறது. இளைஞர் பட்டாளம் இலட்சக்கணக்கில் படை யென திரண்டு அணிவகுத்து வரும் போது தம்பி உடையான் படைக்கஞ்சான் என்னும் பழமொழியை நமக்கு நினை வூட்டுகிறது. இன்றைக்கு இப்பேர்பட்ட ஜனநாயக பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? இந்திய தேசம் - நமது பெருமைக்குரிய நாடு, காந்திஜி - நேருஜி காட்டிய வழியில் நடந்தது; மலர்ந்தது; சிறந்தது; உலக மக்களின் பாராட்டைப் பெற்றது.

ஆனால், இன்றைக்கு நாட்டை கோல்வாக்கரும், கோட்சேயும் போன வழியில் நடத்தும் அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

கேரளாவில் உள்ள யு.டி.எஃப் (ஐக்கிய ஜனநாயக முன்னணி) போல, இந்தி யாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக வேண்டும்; இத்தகைய ஜன நாயகப் பேரணியில் ஒன்று திரள வேண்டும். அதை நிகழ்த்தும் காலம் இன்றைக்கு வந்திருக்கிறது.

இந்த தேசத்தில் காந்திஜி - நேருஜி காட்டி வழியில் ஆட்சி நடத்தும் சரித்திரத்தை மீண்டும் உருவாக்குவோம்; கோல்வாக்கர் - கோட்சே பாதைக்கு மூடு விழா காண்போம். ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமூக நீதி பேணும் சக்திகளை ஓரணியில் திரட்டுவோம் - நாட்டில் நல்லாட்சியைக் கொண்டுவர பாடுபடுவோம். ஜனநாயகப் பேரணி எல்லாவகையிலும் வெற்றியைக் குவித்திட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் பேசும்போது குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் சையது அலி ஷிஹாப் தங்ஙள், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யூ.டி.எஃப் சேர்மன் பி.பி. தங்கச்சன், தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி., இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப் எம்.பி, தேசிய செயலாளர் எம்.பி. அப்துல் ஸமது சம்தானி, கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எம். ஹஸன், ஐக்கிய ஜனதா தள கேரள மாநில தலைவர் எம்.பி. வீரேந்திர குமார், புரட்சிகர சோசலிச கட்சி தலைவர் கேரள மாநில செயலாளர் எம்.எம். ஹஸீஸ், கேரள காங்கிரஸ் (ஜக்கப்) மாநில தலைவர் ஜானி நெல்லூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநில பொதுச்செயலாளர் சி.பி ஜான், இ.யூ. முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி. அப்துல் மஜித், கேரள மாநில பொருளாளர் பி.கேகே. பாவா ஹாஜி, மாநில செயலாளர் கே.எஸ். அம்சா, கேரள சட்டமன்ற கட்சி துணைத் தலைவர் இப்ராஹிம் குஞ்ஞ] எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கோழிக்கோடு மாவட்ட தலைவர் உமர் பண்டியஷாலா, மாவட்ட பொதுச்செயலாளர் பி.கே. அப்துல் ரசாக் மாஸ்டர், முஸ்லிம் யூத் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பி.கே. பிரோஸ், எம்.எஸ்.எஃப் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், எம்.எஸ்.எஃப் தேசிய துணைத்தலைவர் பி.வி. அஹமது ஷாஜூ, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்