Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, November 17, 2007
முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்... முன்னுரை


முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் வரலாறு என்பது நாட்டின் வரலாற்றோடு இணைந்ததாகவும், இந்திய முஸ்லிம்களின் பாரம்பரிய பெருமைகளையும், அரசியல் எழுச்சியையும் எடுத்துக் காட்டுவதாகவும் விளங்குகின்றது. முஸ்லிம் லீக் வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு பரப்புரை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

முஸ்லிம் லீக் தொடர்பான செய்திகளை சேகரித்து முறைப்படுத்தி, ஆவணப்படுத்திடும் நடவடிக்கைகள் தலைமை நிலையம், காயிதே மில்லத் மன்ஜிலில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் காலத்திலிருந்து தாய்ச்சபையின் கூட்ட நடவடிக்கைகளை புத்தக வடிவில் ஆவணப்படுத்தியிருக்கின்றோம். 2017 மார்ச் 10 அன்று நெல்லையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது நிறுவன நாள் மாநாட்டில் சரித்திர சாதனைகளை விளக்கும் கண்காட்சியை நடத்தினோம்.

மதராஸ் மாகாணம்

அன்றைய மதராஸ் மாகாணம் என்பது இன்றைய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதாகவும், 1,27, 768 சதுர மையில் பரப்பளவிலும், 49.8 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாகும். அன்றைய மதராஸ் மாகாணத்தில் 25 மாவட்டங்கள் இருந்தன. 1. விசாகப்பட்டணம், 2. கிழக்கு கோதாவரி, 3. மேற்கு கோதாவரி, 4. கிருஷ்ணா, 5. குண்டூர், 6. நெல்லூர், 7. கடப்பா,

8. கர்னூல், 9. பெல்லாரி, 10. அனந்தப்பூர், 11. மதராஸ், 12. செங்கல்பட்டு, 13. சித்தூர், 14. வடஆற்காடு, 15. தென்னாற்காடு, 16. சேலம், 17. கோயம்புத்தூர், 18. தஞ்சாவூர், 19. திருச்சிராப்பள்ளி, 20. மதுரை, 21. இராமநாதபுரம், 22. திருநெல்வேலி,

23. நீலகிரி, 24. மலபார், 25. தெற்கு கனரா (கர்நாடகா) ஆகிய மாவட்டங்களாகும்.

சட்டமன்ற கீழ் அவை- எம்.எல்.ஏ

மதராஸ் மாகாணம் சட்டமன்றம் (கீழ் அவை) த்தில் 212 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 30 தனித் தொகுதிகளையும் சேர்த்து 146 பொதுத்தொகுதிகளும், முஸ்லிம்களுக்கான 28 தனித் தொகுதிகள், ஆங்கிலோ இந்தியர்களுக்கான 2 தனித்தொகுதிகள், இந்திய கிறிஸ்துவர்களுக்கான 8 தனித்தொகுதிகள், தொழிலதிபர்கள்-வர்த்தகர்களுக்கான 6 இடங்கள், நிலச்சுவாந்தார்கள் 6 இடங்கள், பல்கலைக்கழத்திலிருந்து ஒருவரும், 6 தொழிற்சங்கத்தினர், 8 பெண்கள் மற்றும் பின்தங்கிய பழங்குடியினர் ஒருவர் என மொத்தம் 212 உறுப்பினர்களை கொண்டதாக மதராஸ் மானாண சட்டமன்றம் (கீழ் அவை) இருந்தது. 1946ல் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கான 28 தொகுதிகளிலும் முஸ்லிம் லீகை சேர்ந்தவர்களே வெற்றி பெற்று சரித்திர சாதனை புரிந்தனர். அப்போது முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்றவர்கள் மற்றும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப்-, சென்னை, 2. அப்துல் ஹமீதுகான், -கர்னூல், 3. பி. போக்கர் சாகிப்- கோழிக்கோடு, கன்னனூர் மற்றும் தலைச்சேரி, 4. எம்.எஸ். அப்துல் மஜீத் தென்னாற்காடு மற்றும் செங்கல்பட்டு,

5. மு.ந. அப்துல் ரஹ்மான்- திருநெல்வேலி, 6. கோயெப்பத்தோடு எம். அஹமது குட்டி-மலப்புரம், 7. எம்.எஸ். அத்தாவுல்லா, -சேலம், கோவை மற்றும் நீலகிரி, 8. பேகம் சுல்தான் மிர் அமீருத்தீன்- சென்னை நகர் (பெண்களுக்கான தொகுதி), 9. எம். இப்ராஹிம் குன்ஹி- சிரக்கல், 10. அசன் கோயா சாகிப்- கோழிக்கோடு, 11. எச்.எஸ். ஹுசைன்-மங்களுர், 12. எம்.வி. ஐதருஸ்- பாலக்காடு, 13. மௌலவி எஸ்.ஏ.எப். இப்ராஹிம் சின்னகாஜியார்-மதுரை (போட்டியின்றி தேர்வு), 14. ஜாபர் மொய்தீன்-அனந்தபூர், 15. ஏ.கே. காதர்குட்டி-,

கோட்டயம், 16. மகபூப் அலி பேக்-மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, 17. மாயின் சாம்நாடு-புதூர், 18. முஹம்மது ரபியுத்தீன் அஹமது அன்சாரி- நெல்லூர், 19. பி.கே. மொகைதீன்குட்டி-பாலக்காடு ரூரல், 20. முஹம்மது அப்துல் ஸலாம்,- குண்டூர், 21. முஹம்மது இஸ்மாயில் ஹாஜி- பெல்லாரி, 22. என். முஹம்மது அன்வர் சாகிப்- வடஆற்காடு, 23. எம்.ஏ. முஹம்மது இப்ராஹிம்- தஞ்சாவூர், 24. வி.எஸ். முஹம்மது இப்ராஹிம்-திருச்சி, 25. எஸ். முஹம்மது இஸ்மாயில் சாகிப்-விசாகப்பட்டினம்-கிழக்கு கோதாவரி, 26. முஹம்மது ரஜாக்கான்- சித்தூர், 27. கே.எம். சீதி சாகிப்- மலப்புரம், 28. ஷாஆலம்கான் ஷவாய்-கடப்பா தொகுதியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அத்தோடு லெப்பைக்குடிக்காடு மௌலவி அப்துல் காதர் ஜமாலி -இராமநாதபுரம் தொகுதிக்கு சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சுதந்திர இந்தியாவின் முதல் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. என்ற பெருமையை பெற்றார்.

சட்டமன்ற மேலவை எம்.எல்.சி.

இதே போன்று மதராஸ் மாகாண சட்டமன்ற (மேலவை)த்தில் 54 எம்.எல்.சி.க்கள் இருந்தனர். இதில் முஸ்லிம்களுக்கான 7 தொகுதிகளிலும் முஸ்லிம் லீகை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர். அதன் விவரம் வருமாறு:- 1. அப்துல் லத்தீப் பாரூக்கி-வடக்கு மத்திய சென்னை, இவர் சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். 2. திருநெல்வேலி கே.டி.எம். அஹமது இப்ராஹிம்- தென்சென்னை, 3. நாகப்பட்டினம் வி. ஹமீது சுல்தான் மரைக்காயர்- மத்திய- தென்சென்னை, 4. கே. முஹம்மது ரஹ்மத்துல்லாஹ்- அனந்தபூர், 5. எஸ்.கே. ஷேக் ராவுத்தர்- சென்னை மேற்கு கடற்கரை, 6. டாக்டர் எஸ். தாஜுதீன்- தென்சென்னை, 7. கே. உப்பி சாகிப்-சென்னை மேற்கு கடற்கரை ஆகிய 7 எம்.எல்.சி.க்கள் பணியாற்றியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவராக காயிதே மில்லத்

இராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ். குமாரசாமி ராஜா மதராஸ் மாகாண முதல்வராக இருந்த காலத்தில் 1946 முதல் 1951 ஆம் ஆண்டு வரை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப் சட்டமன்ற முஸ்லிம் லீக் கட்சித் தலைவராகவும், மதராஸ் மாகாண எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்கள்.

1950ம் வருட கால கட்டத்தில் மதராஸ் மாகாணத்தில் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் எஸ்.கே. அஹமது மீரான்,

இ. மொய்து மௌலவி, வி.எம். உபைதுல்லா, ஷேக் காலிபு ஆகிய நால்வரும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள்

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களாக 1967 ஆம் ஆண்டு மேலப்பாளையம் தொகுதி- ரவண சமுத்திரம் எம்.எம். பீர் முஹம்மது, ராணிப்பேட்டை தொகுதி - அப்துல் கபூர், சென்னை துறைமுகம் தொகுதி - ஹபீபுல்லாஹ் பேக் ஆகியோரும், 1971 ஆம் ஆண்டு சென்னை துறைமுகம் தொகுதி - திருப்பூர் ஏ.எம். முகைதீன், வாணியம்பாடி தொகுதி - எம். அப்துல் லத்தீப், ராணிப்பேட்டை தொகுதி - வந்தவாசி கே.ஏ. வஹாப், அரவக்குறிச்சி தொகுதி- பள்ளப்பட்டி அப்துல் ஜப்பார், மேலப்பாளையம் தொகுதி - எஸ்.எம். கோதர் முகைதீன், புவனகிரி தொகுதி - லால்பேட்டை அபூசாலிஹ் ஆகியோரும், 1977 ஆம் ஆண்டு வாணியம்பாடி தொகுதியிலிருந்து எம். அப்துல் லத்தீப் சாகிபும், 1980ஆம் ஆண்டு கடையநல்லூர் தொகுதியிலிருந்து அ. ஷாகுல் ஹமீது சாகிபும், 1984 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி- சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது சாஹிப், பாளையங்கோட்டை தொகுதி - வி.எஸ்.டி. சம்சுல் ஆலம் ஆகியோரும், 2006 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதி - பள்ளப்பட்டி எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி தொகுதி - ஆம்பூர்

ஹெச். அப்துல் பாசித் ஆகியோரும் சிறப்பாக பணியாற்றியிருக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணிகளாற்றி வருகின்றார்.

காயிதே மில்லத் பேசுகிறார்

காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவுகள் இன்றும், இனி என்றும் நமக்கு வழிகாட்டும் பாடமாக இருக்கின்றது. காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் சட்டமன்ற உரைகள் 5.6.1983 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்ட மாநாட்டில் ‘காயிதே மில்லத் பேசுகிறார்’ என்ற தலைப்பில் நூலாக அன்றைய மாநில பொருளாளரும், நெல்லை மாவட்டத் தலைவரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ. ஷாகுல் ஹமீது சாஹிப் முயற்சியில் வெளியிடப்பட்டது. இந்நூல் இன்றைய நம் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் தொகுக்கப்பட்டு, அவர்களின் திருச்சி ‘தாருல் குர்ஆன்’ அச்சகத்தில் பிரசுரிக்கப்பட்டது.

இந்நூலுக்கு தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது சாஹிப் அணிந்துரை அளித்துள்ளார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் அனைத்தையும் சேகரித்து ‘மணிச்சுடர்’ நாளிதழில் தொடர்ந்து வெளியிட வேண்டும், நூலாக ஆவணப்படுத்த வேண்டுமென்று முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் பாராளுமன்ற உரைகளின் ஒரு பகுதி பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி சாஹிபின் முயற்சியால் காயிதே மில்லத் நூற்றாண்டு மலரில் வெளியிடப் பட்டுள்ளது. எழுத்தரசு ஏ.எம். ஹனீப் சாஹிப், முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு என்ற நூலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். முஜாஹிதே மில்லத்

ஜி.எம். பனாத்வாலா சாஹிபின் பாராளுமன்ற உரைகள் அவர்களாலேயே ஆங்கிலத்தில் நூலாகவும், அதனை நம் மாநில செயலாளர் வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் பாராளுமன்ற உரைகளின் ஒரு பகுதி அமீரக காயிதே மில்லத் பேரவையின் வெள்ளி விழா சிறப்பு மலரில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் உரைகளை சேகரித்து ‘மணிச்சுடர்’ நாளிதழில் தொடர்ந்து வெளியிட்டு, அதை நூலாக வெளியிட வேண்டுமென தலைவர் முனீருல் மில்லத் அவர்களிடம் தெரிவித்த போது அறிவுரை வழங்கி வாழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் அவர்களை அணுகி சில மாதங்களுக்கு முன் அணுமதியை பெற்றோம்.

பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ள தமிழக சட்டமன்ற நூலகத்தில் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் உரைகளை மட்டும் தனியாக பிரித்து அங்கிருந்தபடியே புகைப்படம் எடுக்க வேண்டும், பின்பு கணினியில் பதிவு செய்து நகல் எடுக்கும் பணிகளை யாரை வைத்து செய்வதென சற்று தயக்கமாக இருந்தது. இப்பணிச் சுமைகளை பெருமனதோடு வெற்றிகரமாக நிறைவேற்றிருக்கும் மாநில ஊடக துணை ஒருங்ணைப்பாளர் மேலப்பாளையம் எம்.ஏ. அப்துல் ஜப்பார், மதுரையிலிருந்து வெகுதூரம் இப்பணிக்காகவே சென்னைக்கு வந்து சேவையாற்றியிருக்கும் மாணவர் பேரவை மாநில இணைச் செயலாளர் அஜ்மல்கான் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. பழமையான ஆவணங்கள் அங்கும், இங்குமாக தமிழக சட்டமன்ற நூலகத்தில் இருப்பதால் முடிந்த வரை முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் உரைகளை மணிச்சுடர் நாளிதழிலும், தொடர்ந்து நூலாக வெளிவர அச்சகப் பணிகளாற்றி வரும் தலைமை நிலைய மேலாளர் நீப்பத்துறை சித்தீக், டிஸைனர் ஆர். பால் சார்லஸ் உள்ளிட்ட ‘மணிச்சுடர்’ செய்தி அச்சகப் பிரிவு குழுவினருக்கும் நன்றி!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றை தெளிவாக உணர்ந்திடுவோம்!

நம் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற பணிகளின்போது கால சூழ்நிலைகளுக்கேற்ப சமயோஜிதமாக ஆற்றியிருக்கும் உரைகளை பாடமாக படித்துணர்ந்து நம் சேவைகளை உள்ளத் தூய்மையோடும், தியாக உணர்வோடும் தொடர்ந்திடுவோம்! தமிழக சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளை இன்று முதல் தொடர்ந்து ‘மணிச்சுடர்’ நாளிதழில் வெளியிடவுள்ளோம். அனைவரும் படித்து பயன்பெற வேண்டுகிறோம். அன்புடன்,

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்

(மாநில பொதுச் செயலாளர் - சட்டமன்ற கட்சித் தலைவர் & இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

நிர்வாக இயக்குநர், வெளியீட்டாளர்- & மணிச்சுடர் நாளிதழ்)

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்