Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, June 18, 2018 4 Shawwal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, December 16, 2007
இந்தியா முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் வரும் 22-ந்தேதி பாலஸ்தீன பாதுகாப்பு அனுசரிப்பு தினம் கேரளாவில் நடைபெற்ற இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு அவசர கூட்டத்தில் முடிவு


பானக்காடு, டிச. 15- இந்தியா முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் வரும் 22- ந்தேதி பாலஸ்தீன பாதுகாப்பு அனுசரிப்பு தினம் நடத்துவது என கேரள மாநிலம் பானக்காட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பானக் காட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாக குழு அவசரக்கூட்டம் இன்று (15-12-2017) காலை 10 மணியளவில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில், கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிபாப் தங்ஙள் முன்னிலையில் நடை பெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப் பினரருமான குஞ்ஞாலி குட்டி, பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய பொரு ளாளருமான பி.வி. அப்துல் வஹாப், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பு செயலாளருமான இ.டி. முஹம்மது பஷீர், கேரள மாநில பொதுச்செயலாளர் எம்.ஏ. அப்துல் மஜீத் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்சியின் நிலைமை குறித்தும், இந்திய தேசிய அரசியல் பற்றியும், பாலஸ்தீன- ஜெருசீலம் விவகாரம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் வரும் 22-ந்தேதி வெள்ளிக்கிழமை பாலஸ்தீன பாதுகாப்பு அனு சரிப்பு தினம் கடைபிடிப்பது என முடிவு செய்யப்பட்டது. 28-12-2017 டெல்லியில் தேசிய தலைமை நிர்வாக குழு கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அந்த கூட்டத்தில் பல்வேறு மாநில ங்களின் கட்சிப் பணி, இந்திய அரசியல் சூழ்நிலை, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சி ஆகியவை பற்றி முக்கியத் தீர்மானங்கள் நிறை வேற்றப்படவுள்ளன. தேசிய நிர்வாக குழு கூட்டம் நடத்துவதற்கு முந்தைய தினம் அதாவது 27-12-2017 அன்று மாநிலங்களில் கட்சி பிரச்சினைகள் பற்றி பேசி தீர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, சர்ச்சைக் குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக் கவும், அந்த நாட்டுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல்அவீவ் நகரிலிருந்து ஜெசலேமுக்கு மாற்றவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்திருந்தார். இதற்கு கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்ஸிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். டிரம்பின் தவறான முடிவால் ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும் மேற்காசிய பிரச்சினையில் எண்ணையை ஊற்றியது போல் ஆகிவிடும் என துருக்கி அரசும் எச்சரித்தி ருந்தது. சீனா, கத்தார், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை ஐ.நா. பாதுகாப்பு சபையும் நிராகரித்தது. இந்த பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் டிரம்ப்பின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் பாலஸ் தீனத்தின் தலைநகரா ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சர்வதேச அளவில் பெரும் பிரச்சினையாக உரு வெடுத்துள்ள இதற்கு தீர்வு காணும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், இந்தியா முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் வரும் 22-ந்தேதி பாலஸ்தீன பாதுகாப்பு அனுசரிப்பு தினம் நடத்த முடிவு செய்துள்ளது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்