Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, December 29, 2007
முத்தலாக் தடை மசோதா அரசியல் உள்நோக்கம், சட்டத்திற்கு எதிரானது இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு


புதுடெல்லி, டிச. 29- முத்தலாக் தடை மசோதா அரசியல் உள் நோக்கம், சட்டத்திற்கு எதிரானது என்று இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முத்தலாக் மசோவை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., ஜேபிஎன் யாதவ் (ராஷ் ட்ரிய ஜனதா தளம்), அசாதுதீன் ஒவைசி (ஏஐஎம்ஐஎம்), பி.மஹதாப் (பிஜு ஜனதா தளம்), மற்றும் அன்வர் ராஜா (அதிமுக) உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக பேசினர். குறிப்பாக, அரசியல மைப்பு சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இந்த மசோதா உள்ளதாகவும் இதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் தெரி வித்தனர். குறிப்பாக, சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவை நீக்கக் கோரினர்.

இ.டி. முஹம்மது பஷீர்

இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. பேசியதாவது:- முத்தலாக் மசோதாவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அரசியல மைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற 25-வது பிரிவின் கீழ் சொல்லப் பட்டுள்ள மதசார்ப்பின்மை, பன்முகத்தன்மை அனைத்தும் பறிக்கப்பட்டி ருக்கிறது. இந்த மசோதாவை சட்ட விரோதமானது. அரசி யல் உள்நோக்கம் கொண் டது என்று பேசினார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். எனினும், இவர்கள் முன் கூட்டியே நோட்டீஸ் கொடுக்காததால் இந்த மசோதா மீது பேச அனுமதி வழங்கப்படவில்லை. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடை பெற்றது. இதற்கு ஆதரவாக போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா திருத்தம் எதுவும் இன்றி நிறைவேறியதாக மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதா சட்டமா னால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் செல்லு படியா கும். இதன்படி வாய்வழி யாகவோ, எழுத்து மூலமோ அல்லது இமெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு ஊடகம் மூலமோ உடனடி யாக முத்தலாக் கூறு வது சட்டவிரோதம் ஆகும்.

இந்த சட்டத்தை மீறுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். மேலும் முத்தலாக் கூறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவனிடம் தனக்கும் தனது குழந்தைக்கும் நிவாரணம் வழங்குமாறு கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.

முன்னதாக, நேற்று காலையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த மசோதாவின் அம்சங்கள் குறித்து சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எம்.பி.க்களுக்கு விளக்கம் அளித்தார்.

இந்த மசோதா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறும்போது, """"உடனடி முத்தலாக் நடை முறையை தடை செய்ய வழி வகுக்கும் இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால், முஸ்லிம் பெண்களின் உரிமை யை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவில் சில திருத்தங்களை மேற் கொள்ள வேண்டும். குறிப்பாக, முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனை சிறையில் அடைத்தால் அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் நிவாரணம் எப்படி கிடைக்கும்? எனவே, பெண்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்"" என்றார்.

மாநிலங் களவை யில் பாஜகவுக்கு பெரும் பான்மை இல்லை என்பதால், அங்கு தாக்கல் செய்யப்படும்போது இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த மசோதா வை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்