Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 18, 2018 1 Jumad Al-Awal 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<Previous
Wednesday, January 3, 2007
ஷரீஅத் சட்டத்தை மாற்றம் செய்வது ‘குர்ஆனை’ மாற்றுவதற்கு சமமாகும் முத்தலாக் எதிரான சட்டத்தை மக்களவையில் தோல்வியடைய செய்ய வேண்டும் அனைத்து கட்சிகளுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்


ஷரீஅத் சட்டத்தை மாற்றம் செய்வது குர்ஆனை மாற்றுவதற்கு சமமாகும் என்றும், முத்தலாக் எதிரான சட்டத்தை மக்களவையில் தோல்வியடைய செய்ய வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜ.க. அரசு முஸ்லிம்களுக்கு எதிராக பல சட்டங்களை கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் முத்தலாக் சட்டம். ஒரு சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் இச்சட்டத்தை தாக்கல் செய்த போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் இ.டி.முஹம்மது பஷீர் கடுமையாக எதிர்த்தார். இந்த சட்டம் முஸ்லிம் சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்தார். எனவே இந்ந சட்டத்தை நாங்கள் ஏதிர்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , காங்கிரஸ் , அதிமுக , உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் மத்திய அரசு முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்த போது மக்களவையில் ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தும் கண்டித்தும் பேசினார்கள்.

பா.ஜ.க.வுக்கு பெரும் பான்மை ஆதரவு இருந்ததால் சட்டத்தை இயற்றினார்கள். காங்கிரஸ் இந்த மாசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்புங்கள் என்று கூறியது. இதனை பா.ஜ.க. அரசு நிராகரித்து விட்டது.

வருகிற ஜனவரி 5ஆம் தேதி மாநிலங்களவையில் இச்சட்டம் தாக்கல் செய்யும் போது இந்ந மாசோதாவை எதிர்காட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தோல்வி அடையச் செய்வார்கள். அப்படி ஓரு வேலை இந்த மாசோதா மாநிலங்களவையில் வெற்றி பெற்றால் கூட நிலைக்குழுக்கு அனுப்பினால் அதை ஆராய்ந்து இந்த சட்டத்தை மறுஆய்வு செய்யப் படுவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஏன் என்றால் இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முஸ்லிம்கள் அமைப்புகள் யாருக்கும் விருப்பமில்லை. ஓவ்வொரு மதத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் எங்களது மதசட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று சொன்னால் மட்டுமே அந்த சட்டத்தை மாற்றி அமைக்க முடியும்.தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக வரவேண்டும் என்று இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.அதன் படி அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சராக பணியாற்றுவதற்கு சட்டத்தை கொண்டு வந்ததது.

ஆனால் முஸ்லிம் சட்டத்தை மாற்றி அமைத்து தாருங்கள் என்று இந்த அரசை மதத்தலைவர்கள் யாரும் கேட்க வில்லை. ஆனால் பிஜேபி அரசு தானகவே முன்வந்து ஓரு சில முஸ்லிம்கள் சொன்னதை வைத்துக்கொண்டு முத்தலாக் சட்டத்திற்கு எதிராக இந்த சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் பொது சிவில் சட்டத்தையும் கொண்டு வருவதற்கான முயற்சியை இந்த அரசு மேற்கொள்ள இருக்கிறது. அகில இந்திய தனியார் முஸ்லிம் சட்ட வாரியத்திடம் முத்தலாக் சட்டம் குறித்து பா.ஜ.க. அரசு எந்தவித ஆலோசனையும் செய்யவில்லை . முஸ்லிம் சட்ட வாரியம் எங்களுக்கு என்ன ஆலோசனை செய்து அறிவிப்பு செய்வார்களோ அதை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். முஸ்லிம்கள் ஷரீஅத் சட்டம்பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

முத்தலாக் சட்டத்தின் மூலம் மூன்று முறை தலாக்கை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.ஓரு சில நபர்கள் தலாக்கை தவறாக பயன்படுத்தி விட்டார்கள் என்பதற்காக ஓட்டு மொத்த முஸ்லிம்கள் இதையே பயன்படுத்துவதாக நினைத்து பிஜேபி அரசு இதை கொண்டு வந்துள்ளது.

எனவே இந்த சட்டத்தை பொறுத்த வரை கணவன் சிறைக்கு சென்று விட்டால் தலாக் சொல்லப்பட்ட மனைவிக்கு எப்படி ஜீவானம்சம் கொடுக்க முடியும். இதையெல்லாம் பா.ஜ.க.அரசு கண்டு கொள்ளவில்லை. எப்படி இந்த சட்டம் சாத்தியம் படும்.

முஸ்லிம் சமுதாயத்தில் தலாக் சொல்லுவதில் தவறுகள் நடந்து இருக்கிறது ஓத்துக் கொளாகிறோம். தவறுகளை திருத்திக்கொள்ள ஓரு வருடம் கால அவகாசம் வேண்டும் தவறுகளை திருத்திக் கொள்கிறோம் எனறும் முஸ்லிம்கள் சார்பாகவும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் வாரியம் மத்திய அரசை கேட்டுக் கொண்டது. ஆனால் பிஜேபி அரசு நிராகரித்து விட்டது.

இந்தியாவில் முஸ்லிம் அமைப்புகள், முக்கியமான ஆலிம்கள் முஸ்லிம் சார்ந்த அரசியல் கட்சிகள்தலைவர்கள் இருக்கிறார்கள் அவர் களிடமும் முத்தலாக் சட்டம் மாற்றம் செய்வது குறித்து எந்தவித கருத்தும் ஆலோ சனைகளையும் அரசு கேட்க வில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஓரு சில அமைச்சர்களை கொண்டு கமிட்டி அமைத்து இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் இயற்றி யுள்ளனர்.

இந்த சட்டத்தில் மூன்று ஆண்டுகள் தண்டனை சொல்லி இருக்கிறது.இது வினோதமான தண்டனை கணவன் சிறைக்கு சென்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் யார் ஜீவானம்சம் யார் கொடுப்பது இதை திருத்தி அமையுங்கள் என்று தான் சொல்லப்படுகிறது.உலகத்தில் உள்ள 22 நாடுகளில் முத்தலாக் சட்டத்தை மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் இயற்றிய சட்டத்தில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆச்சிரியமாக இருக்கிறது.

இந்த சட்டம் விதிமுறை களுக்கு மீறலான சட்டம். இந்த சட்டம் தேவையில்லாமல் விதிமுறைகளை மாற்றி அமைக்கப்படவேண்டும். முஸ்லிம் ஷரீஅத்தை சட்டத்தை மாற்றம் செய்யம்போது நபிகள் நாயகம் உருவாக்கிய குர்ஆனை மாற்றுவதற்கு சமமாகும். நபிகள் நாயகம் சொன்னதுக்கு மாற்றமாகும்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முஸ்லிம்களுக்குகெதிரான இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டுமென்று நேரிலும், கடிதம் மூலமும் கேட்டு கொண்டது.

அது மட்டுமல்லாமல் பிதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த சட்டத்தை விளக்கி கூற வேண்டும் என்றும் கேட்டார்கள். ஆனால் அவர்களை சந்திக்க விடவில்லை ஆகையால் பா.ஜ.க. தனிச்சையான இந்த முடிவை கண்டிக்கிறோம்.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், மாநிலங்களவையில் இந்த சட்டம் கொண்டு வரும்போது திமுக சார்பில் கடுமையாக எதிர்த்து போராடுவோம் என்றும் சொல்லி இருக்கிறார்.

அதே போன்று மக்களவை யில் அதிமுக எதிர்த்து பேசியது போல மாநிலங்களவையிலும் எதிர்த்து போராடும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகவே ஒட்டுமொத்த இந்தியாவில் காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்கள் , திமுக, அதிமுக , ராஸ்ஷீடிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான முத்தலாக் சட்டத்தை மாநிலங்களவையில் கொண்டு வரும் போது அதை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டு கொள் கிறேன்.

மாநிலங்களவையில் தாக்கல் செய்யும் போது காங்கிரஸ் , திமுக , அதிமுக , முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் எதிர்ப்பார்கள் முடிந்த அளவுக்கு இந்த மசோதாவை அமல்படுத்தவிடாமல் தடுக்க கூடிய முயற்சியில் எதிர்க்கட்சிகளை ஒருங் கிணைத்து இ.யூ.முஸ்லிம் லீக் செயலாற்றும். அதை மீறி அமல்படுத்தப்பட்டால் 25கோடி இந்திய முஸ்லிம்களும் பொங்கியெழுந்து ஆர்ப்பாட்டம் , போராட்டம் , சிறை நிரப்பு போராட்டம் என்ற ரீதியில் தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம். எங்கள் உயிரினம் மேலான ஷரியத்தில் மத்திய அரசு கைவைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் வேண்டுகோளை ஏற்று சட்டம் இயற்ற வேண்டும் மாறாக செயல்பட்டால் மசோதா நிறைவேறாது நிறைவேறவும் விடமாட்டோம்ஓரு வேலை முத்தலாக் சட்டம் ஜனவரி 5ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றினால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்தியாவில் உள்ள 25 கோடி முஸ்லிம்கள் ஒன்றைனைத்து அனைத்து இடங்களிலும் தெருக்களில் போராட்டம் நடத்துவதற்க்கு நாங்கள் தயராகி வருகிறோம்.

எனவே பிஜேபி அரசு தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகிறது. இதற்கு நாங்கள் அஞ்சமாடோம் அதை துணிச்சலாக எதிர்கொள்ள நாங்கள் தயராக இருக்கிறோம் இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன கூறினார்.

<<Previous

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்