Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, February 1, 2007
* அல்லாஹ்வோடு போட்டியிட்டவர் உலகில் இல்லாமல் ஆக்கப்பட்டதே வரலாறு * இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் சிறுபான்மையினர் வாழ்வுரிமையை நிலை நிறுத்துவோம் * மத்தியிலும்-மாநிலத்திலும் நல்லரசுகள் அமைய உறுதி ஏற்போம் கடையநல்லூரில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் நெல்லை மேற்கு மாவட்ட மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பிரகடனம்


கடையநல்லூர், பிப்ரவரி01- கடையநல்லூரில் 27/01/2018 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருநெல்வேலி மேற்கு மாவட்ட சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாடு பிரகடனத்தில் பேசியதாவது:-திருநெல்வேலி மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில், சிறுபான்மையினர் வாழ் வுரிமை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் மாவட்டத் தலைவர் செய்யித் சுலைமான் ஹாஜியார் அவர்களே! இங்கே வருகை தந்திருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முன்னணி தலைவர்களே, நிர்வாகிகளே! உங்கள் அனைவருக்கும் என் அன்பான ஸலாமையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடையநல்லூர் அன்சாரிகள்

கடையநல்லூர் சரித்திரத்தில் இடம்பெற்ற ஊர். காயிதேமில்லத் அவர்கள் நடமாடிய பூமி. அவர்களது வாழ்க்கையில் அன்ஸாரிகள் என்றழைக்கப்பட்ட ஊர். இஸ்லாமிய வரலாற்றில் அன்ஸாரிகள் என்றால், இஸ்லாம் மார்க்கத்திற்காக எல்லா வகை தியாகங்களையும் செய்தவர்களைக் குறிக்கும். நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாம் கூறும் அழகிய வாழ்வியல் நெறியை மனித சமூகத்திடம் எடுத்து வைத்தபோது, எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட கால கட்டத்தில், மனமுவந்து உதவிய மதீனா நகரத்து மக்களைத்தான் அன்ஸாரிகள் என்றழைப்பர். அதேபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு இங்குள்ள முன்னோர்கள் அளப்பரிய உதவிகளைச் செய்த காரணத்தால்தான், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களால் அன்ஸாரிகள் என அம்முன் னோர்கள் அழைக்கப் பட்டார்கள்.

நினைவில் வாழும் தலைவர்கள்

அப்பேர்பட்ட சிறப் பிற்குரிய இந்த ஊரில், பெருமைக்குரிய அண்ணன் ஏ.கே.ரிஃபாஈ ஸாஹிப் அவர்களின் நினைவுக் கம்பத்தை நிறுத்தி, பாம்பு கோவில் சந்தை பெரியவர் செய்யிது பட்டாணி ஸாஹிப் அவர்களுடைய நினை வரங்கத்தை அமைத்து, கடையநல்லூர் அண்ணன் அப்துல் கரீம் ஸாஹிப், புளியங்குடி ஹாஜி முஹம்மது அப்துல்லாஹ் ஸாஹிப் ஆகியோரது நினைவு நுழைவாயிலையும் உருவாக்கி, நெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த காயிதேமில்லத் திடலில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துவதில், அதில் பங்கு பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர், நீங்கள் சொன்னது போல கேரளத்து சிங்கக்குட்டி குஞ்ஞாலிக் குட்டி அவர்கள் அழகிய சிறப்புரையாற்றிவிட்டு, நீண்ட பயணத்தைக் கருத்திற்கொண்டு முற்கூட்டியே விடைபெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் இம் மாநாட்டின் சார்பில் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். இம் மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கும் நெல்லை மாவட்ட - கடையநல்லூர் நகர நிர்வாகிகள், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிற இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தம்பி நெல்லை மஜீத் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளைஞர்களின் பேரணி

ரவணசமுத்திரம் சொல்லின் செல்வர் எம்.எம்.பீர் முஹம்மத் ஸாஹிப் அவர்கள் தமிழ்நாட்டிலேயே மிகச்சிறந்த சொற்பொழிவாளர். அவர்கள் """"நான் மணிக் கணக்கிலும் பேசுவேன்... சில மணித்துளிகளிலும் பேசு வேன்"""" என்று அடிக்கடி சொல்வார்கள். அதுபோல, மணிக்கணக்கில் பேசக்கூடிய தலைவர்கள் முஸ்லிம் லீகில் நிறைய பேர் உள்ளனர். மணித் துளிகளிலும் அற்புதமான உரைகளை ஆற்றிட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், இம்மாநாட்டின் துவக்கத்தில் இளைஞர்களின் பேரணி நிறைவுறுகையில், அருமைத் தம்பி செய்யது பட்டாணி, அமீன் உள்ளிட்ட சில தம்பிகள் ஆற்றிய உரைகள் அமைந்திருந்தன.

தலைவர்களை கண்ணியப்படுத்துதல்

கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் என்ற இளைஞரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதன் தலைமைப் பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உருவாக்கியிருக்கிறது. இளைஞர்களும், அந்தத் தலைமைக்கான தகுதிகளைப் பெறக்கூடிய வகையில் இன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது மகிழ்ச்சிக்குரிய செயல் மட்டுமல்லாது, அதுதான் இந்தக் கட்சியின் மிகப்பெரிய சாதனையாகவும் அமையும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது, அதன் வருங்காலத்திற்கான தலைவர்களை , உரிய முறையில் பயிற்சியளித்து உருவாக்கு வதில்தான் அமைந்திருக்கிறது. இருக்கும் தலைவர்களைக் கண்ணியப்படுத்துவதிலும், சரியான தகுதிகளைக் கொண்ட தலைவர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவும் இந்த மண் சிறப்புற இயங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு சாட்சி, கரீம் அண்ணன் போன்றோர்கள்.

உடல், பொருள் கொடுத்த சிறப்பிற்குறிய மண்

ரிஃபாஈ ஸாஹிப் அவர்கள் பன்னூலாசிரியர்; மிகப்பெரிய அறிஞர்; நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றியவர்; காயிதேமில்லத் அவர்களின் குடும்பத்தவர். இந்த எளியவன் இங்கே வருகிற நேரத்திலே, இங்கிருக்கும் பெரியவர் துராப்ஷா அவர்கள் செயலாளராக இருந்தார்கள். ரயில் நிலையத்திற்கு வரும்போது துராப்ஷா அவர்களோடு மற்ற நண்பர்கள் வருவர். அங்கு முதல் ஆளாக அண்ணன் ரிஃபாஈ அவர்கள் துண்டை வைத்துக்கொண்டு நிற்பார். அப்படி ஒருமுறை நின்றபோது, ""அண்ணே! இந்த வயது முதிர்வில், அதிகாலை நேரத்தில் நீங்க ஏன் இப்படி வரணும்? நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேனா?"""" என்று கேட்பேன். ""நான் காதர் மொகிதீனுக்காக வரவில்லை... முஸ்லிம் லீக் தலைவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக வந்தேன் என்றார்கள். அப்பேர்பட்ட மண் இது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அப்படி உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து வளர்த்த இம்மண்ணில் இச்சிறப்பான மாநாடு நடப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

மாநாட்டு பிரகடனம்

இம்மாநாட்டில் எனக்கு அளித்திருக்கும் பொறுப்பு, மாநாட்டுப் பிரகடனத்தை உரைப்பது. ஆனால், எனக்கு முன் பேசிய அனைவருமே அதை அழகுற செய்துவிட்டனர். மாநாட்டுக்கான தீர்மானங் களை யெல்லாம் சிறப்புற வடிவமைத்து நிறை வேற்றியிருக்கிறார்கள். ஆக, இம்மாநாட்டின் பிரகடனம் என்பது இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள தீர் மானங்களும், ஆற்றப்பட்ட உரைகளும்தான். அவற்றுள் விடுபட்ட அம்சங்களை, அடுத்து உரையாற்றவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய நிர்வாகிகள் தொட்டுத் தொடர இருக்கிறார்கள். எனவே, நான் ஒன்றும் உங்களுக்குப் பெரிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சிறுபான்மையினர் என்றால் யார்?

என்றாலும், நான் சொல்ல விரும்பும் பிரகடனம், சிறு பான்மையினர் வாழ்வுரிமை பற்றியதாகும். இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்றால் யார்? மொழி, மதம், கலாச்சாரம், இனம் என பல வழிகளைக் கொண்ட சிறுபான்மையினர் உள்ளதாக அரசியல் சட்டத்தில் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. 1992ஆம் ஆண்டில் இந்தி யாவின் ஜனாதிபதி வெளியிட்ட பிரகடனத் தின்படி, இந்தியாவிலுள்ள சிறு பான்மை மக்கள் யாரெனில், மத வழிபட்ட மக்கள்தான். கர்நாடகத்திலுள்ள தமிழ் மொழி பேசும் மக்கள் அங்குள்ள மொழி வழி சிறுபான்மையினர். அது அலங்காரமாகச் சொல்லப் பட்டதே தவிர, இந்த நாட்டில் சிறுபான்மையினர் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மத வழி சிறுபான்மையினர் மட்டும்தான். அவர்களுள் பெரும்பான்மையாக உள்ளவர்கள்தான் முஸ்லிம் சமுதாயத்தினர். ஆக, எல்லா சிறுபான்மை சமுதாயங்களின் வாழ்வுரிமைக்காகவும் - குறிப்பாக மிகப்பெரிய சிறுபான்மைச் சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுப்பதும் நம்முடைய கடமை.

இஸ்லாமிய மார்க்கம் வழிகாட்டியிருக்கின்றது

மதவழிபட்ட சிறுபான்மையினராகிய நமக்கு பள்ளிவாசல்கள், தர்காக்கள், வக்ஃப் சொத்துக்கள், முஸ்லிம் சமுதாயத்தின் நிறுவனங்கள், ஷரீஅத் சட்டம், பள்ளிவாசல்களின் இமாம், முஅத்தின், பாங்கு சொல்வது, நிகாஹ், தலாக், சொத்து பாகப் பிரிவினை போன்ற இவ்வனைத்து அம்சங்களிலும் இஸ்லாமிய மார்க்கம் நமக்கு எப்படி வழிகாட்டியிருக்கிறதோ அதைப் பேணி நடை முறைப்படுத்தும் உரிமையை இந்த இந்தியத் திருநாட்டின் சட்டம் நமக்கு முழுமையாக வழங்கியிருக் கிறது. அந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட நாள்தான் நேற்று நாம் கொண்டாடிய குடியரசு நாள்.

கண்ணியத்துடன் வாழ்வது

இந்திய அரசியல் சட்டப்படி, இந்தியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மத வழிபட்ட உரிமைகள், இந்திய அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள், அவர்களைத் தொடர்ந்து வந்த சட்ட மேதை ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்கள், இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் போன்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களெல்லாம் வழிகாட்டியிருக்கிறார்கள். ஆக, முஸ்லிம் சமுதாயத்திற்கு நம் தலைவர்கள் விட்டுச் சென்றிருக்கும் ஒரு வேண்டுகோள் என்னவெனில், இந்தியாவில் முஸ்லிம்களாக நாம் வாழ்வதற்கு ஆபத்துக்கள், இடைஞ்சல்கள் வந்தால் அதைத் தடுப்போம்; இல்லாமலாக்குவோம். முஸ்லிம்களாக இந்தியாவில் கண்ணியத்தோடு நாம் வாழ ஆங்கிலத்தில் சொல்வதானால்,

hடிரnடிரசயடெந நஒளைவயnஉந

ஆக வாழ நம் தலைவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.இந்தியாவில் முஸ்லிம் கள் முஸ்லிம்களாக வாழ வேண்டுமானால் திருக்குர்ஆனைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். நாம் இந்திய முஸ்லிம்கள் என்பதால், திருக்குர்ஆனை ஒரு கையிலும், இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சமநீதி, கண்ணியம், மதிப்பை வழங்கியிருக்கிறது என்பதால் , இந்திய அரசியல் சாசனத்தை மறு கையிலும் பிடித்துக்கொண்டு தொடர்ந்து நடக்க வேண்டிய பொறுப்பு இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறது என்று நமக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இதை ஆணித்தரமாக சொன்னவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள். அவர்களது முதலாமாண்டு நினைவு நாள் பிப்ரவரி 01ஆம் நாளன்று வருகிறது. இந்தியாவின் பாராளுமன்ற வரலாற்றில், பாராளுமன்றம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் உயிர் நீத்தவர்கள் அவர்கள் என்பதால், அந்நாளை இந்தியாவின் சமய நல்லிணக்க நாளாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரியிருக்கிறது. அது நடக்கும் என்றும் நம்புவோம்.

முத்தலாக் தடைச்சட்டம்

அண்மையில், சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள இரண்டு நடவடிக்கைகள் (1) முத்தலாக் பிரச்சினை. லோக் சபையில் சட்டத்தை நிறைவேற்றிவிட்டனர். ஆனால் ராஜ்ய சபையில், பாஜகவைத் தவிர, அதற்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் கூட அந்த முத்தலாக் சட்டத்தை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். எனவே அச்சபையில் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவில், மொழி வேறுபாடின்றி எல்லா ஊடகங்களும் சொன்னது: தலாக் என்பது ஒரு குடும்பத்தின் மணவாழ்வு தொடர்பான பிரச்சினை. கணவன் - மனைவிக்குள் சண்டை ஏற்பட்டால் சமாதானம் செய்வது அந்த சமுதாயத்தின் பொறுப்பில் உள்ளது. அப்படியிருக்க, அச்சமுதாய மக்களின் தனியுரிமையில் தலையிட்டு, பெயிலில் கூட வெளிவர முடியாத ஜெயில் என்று சட்டம் கொண்டு வர என்ன காரணம்? என்று இந்நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் கண்டித்துப் பேசியிருக்கின்றன. ஊடகங்கள் தலையங்கம் தீட்டியிருக்கின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் அதை வலிமையாக எதிர்த்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஊடகங்களுக்கும் இச்சட்டத்தை எதிர்த்துக் குரல் எழுப்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டியிருக்கிறது.

அயோக்கியர்கள் யார்?

இந்தக் குரல்கள் எதையுமே கண்டுகொள்ளாமல், மக் களவையில் அவசர அவசரமாக சட்டம் இயற்றிவிட்டு, மாநிலங் களவையிலும் முயற்சித்த போது முடியாமல் போனதால், ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரச் சட்டமாக அதை வெளியிடுவோம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவெனில், முஸ்லிம் சமுதாயத்தில் - தம்பி அபூபக்கர் சொன்னது போல - மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத்துகள் கட்டுக்கோப்புடன் இயங்கிய வரை எந்தப் பிரச்சினையும் எழவில்லை. மாறாக - தொலை பேசியிலும், வாட்ஸ்அப்பிலும், இதர தொலைதொடர்பு ஊடகங்கள் வாயிலாகவும் முத்தலாக் சொல்வது போன்ற இந்த வேண்டாத வேலைகளை இந்த நாட்டில் செய்யக் காரணமான அயோக்கியர்கள் யார்? மஹல்லா ஜமாஅத் கட்டுக்கோப்பைச் சிதைத்து, போட்டி ஜமாஅத்துகளை உருவாக்கிய அந்த அயோக்கி யர்களும், போக்கிரிகளும்தான் இச்செயல்களுக்குக் காரணமானவர்கள். இந்தப் போக்கிரித்தனத்தின் விளைவுதான் இன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக இன்று இந்த நாட்டில் பேசும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மஹல்லா ஜமாஅத் கட்டுக்கோப்பு

1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலம் தொட்டு, மஹல்லா ஜமாஅத்துகள் இந்நாட்டில் கட்டுக்கோப்பாக இயங்கி வந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முஸ்லிம் சமூகத்தினரின் திருமண உறவுகளில் பிரச் சினை ஏற்பட்டால், அந்தந்த மஹல்லா ஜமாஅத்துகள் தலையிட்டு, பேசித் தீர்க்கும் பிரச்சினைகள் என்றால் பேசி சமாதானத்தை ஏற்படுத்தி வைப்பார்கள்.மனைவியைக் குறை சொல்லும் கணவனிடம், ""ஆயிரம் குறைகள் அவளிடம் இருந்தாலும், ஒரு நல்லது கூடவா இல்லாமல் போய்விட்டது? மூன்று குழந்தைகள், ஐந்து குழந்தைகள் பெற்றிருக்கிறாய்... பல பத்து வருடங்கள் இணைந்து வாழ்ந்திருக்கிறாய்... இத்தனை ஆண்டுகளில் அவள் செய்த குறைகள் மட்டும்தான் உன் கண்களில் பட்டனவா? நிறைகள் படவேயில்லையா? உன் குழந்தையைச் சுமந்து, பெற்று, பால் கொடுத்து, போற்றிப் போற்றி வளர்க்கவில்லையா? உனக்கு சுகம் தருவதற்காக உன்னோடு வாழ்ந்திருக்கின்றாளே? அதற்கு ஈடு இணை உண்டா? எடுத்த எடுப்பில் தலாக்! பெண் என்றால் எதையும் செய்து விடலாம் என்ற மிதப்பா உனக்கு?"" என்றெல்லாம் பேசி பிரச்சினைக்கு நல்ல தீர்வைக் கொடுத்தார்கள் அந்த மஹல்லா ஜமாஅத்துகளை நிர்வகித்து வந்த பெரியவர்கள். இன்று அந்தக் கட்டுக்கோப்பையெல்லாம் சிதைத்துச் செயல்பட்டு வருகிற காரணத்தால்தான், இதுபோன்ற கட்டுப் பாடற்ற தலாக்குகள் சொல்லப்படுகிறது. மறுபுறம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் பறிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றி, முஸ்லிம் சமு தாயத்தின் மாண்பையே கொச்சைப் படுத்தி, இழிவுபடுத் திட முயற்சிக் கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஷரீஅத் பஞ்சாயத்து

இவ்வாறு சமுதாயத்திற்கு எதிராக மேற்கொள்ள முயற்சிக்கப்படும் நட வடிக்கைகளை, சமுதாய மக்களிடம் தெளிவுபடுத்தும் வேலையைத்தான் இன்று நம் சமுதாயத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத் முறைப் படியான மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பு மீட்டுரு வாக்கப்பட்டு, அங்கே ஷரீஅத் பஞ்சாயத்துகள் உருவாக்கப் பட்டு, தமிழகம் தழுவிய அளவில் ஒரு கட்டுக்கோப்பான சமுதாயத்தைக் கட்டி யெழுப்பும் நல்ல நோக்கத்தில் தான் தமிழகம் முழுவதையும் பத்து மண்டலங்களாகப் பிரித்து, மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடுகளை நடத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக உலமாப் பெருமக்களையும் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறை நிரப்பும் போராட்டம்

ஆக, இந்த சமுதாய மக்களைப் பந்தாடுவதற்காக முத்தலாக் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றி, தலாக் சொல்லும் புருஷன் மார்களையெல்லாம் ஜெயி லுக்கு அனுப்பும் செயலில் ஈடுபட்டால், தெளிவாகவே சொல்கிறோம்... இந்த நாட்டின் அரசு கணக்கின் படி இந்தியாவிலுள்ள 19 கோடி மக்களைக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் ஆண்கள் அனைவரும் ஜெயிலுக்குப் போவார்கள். சிறை நிரப்பும் போராட்டத்தைச் செய்வார்கள். அது இங்கே தீர்மானமாகவும் இயற்றப் பட்டுள்ளது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தைப் பாதுகாக்க ஜிஹாத் செய்ய வேண்டியதில்லை... கருவி தூக்க வேண்டியதில்லை... காந்தி காட்டிய வழிமுறைப்படி சத்தியாக்கிரக முறையிலே இந்நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளையும் நிரப்பக் கூடிய நிலைக்கு இந்த சமுதாயம் தள்ளப்படும் என்பதை மட்டும் நான் தெளிவாகக் கூறி எச்சரிக்கிறேன்.

ஹஜ் மானியமா?

ஆக, மத்திய அரசுக்குப் புத்தி இருக்கும் என்று நம்புகிறேன். எல்லா மக்களின் கோரிக்கையையும் ஏற்று, இந்த அரசு இனியேனும் தன்னைத் திருத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.அதுபோல, முஸ்லிம் களின் கடமையான ஹஜ் புனிதப் பயணத்தைக் கொச்சைப் படுத்தும் முயற்சியையும் இந்த மத்திய அரசு தற்போது செய்திருக்கிறது. ஹஜ்ஜுக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை எடுத்துவிட்டதாகக் கூறுவது தான் அது. உண்மையில் இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்பதை இந்நாட்டின் ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தே இருக்கிறான். ஹஜ்ஜுக்கு பயணியரை அழைத்துச் செல்ல அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானம் ஏர் இந்தியா விமான நிறுவனம் மட்டும்தான். ஹஜ் பயணியருக்கு அரசு மானியம் அளிக்கவுமில்லை. அப்படி மானியத்தைப் பெற்றுத்தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற நிலையும் முஸ்லிம்களுக்கு இல்லை. மாறாக, யாருக்கு ஹஜ் பயணத்தின் முழுச் செலவையும் ஏற்கும் அளவில் பொருளாதார வசதி இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் ஹஜ் பயணியரின் பயணக் கட்டணம் 65 ஆயிரம் ரூபாய். அரசு தருவதாக சொல்லப்படும் மானியம் என சில ஆயிரங்களைக் கழித்து, மீதித் தொகையைக் கட்ட வேண்டுமாம். வேடிக்கை என்னவெனில், வெறும் 25 ஆயிரம் ரூபாயை மட்டும் பயணக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு. ஹஜ் பயணியரை சவுதி அரபிய்யா அழைத்துச் சென்று மீண்டும் இந்தியாவில் விடும் விமான நிறுவனங்கள் நிறைய உள்ளன. எனவே, அந்நிறுவனங்களுக்கெல்லாம் ஹஜ் பயணியரை அழைத்துச் செல்லும் அனுமதியை மட்டும் இந்த அரசு வழங்கினால் போதும். மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

தபூக் ஹாஜி திட்டம்

மலேஷியாவிலுள்ள கூலித் தொழிலாளிகள், நடைபாதை வணிகர்கள், இல்லத்தரசிகள் என பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஹஜ் பயணத்திற்கு அழைத்துச் செல்ல தபுக் ஹாஜி சிஸ்டம் என்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்கள். அத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் கூட்டங்கூட்டமாக பொதுமக்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதே போன்ற திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முனைந்திருக்கிறது. இது தொடர்பாக, ஹஜ் கமிட்டி நிர்வாகி அஃப்ஸல் பாயிடமும் பேசியிருக்கிறோம். ""இதற்கான முறைகளை வகுத்து, இத்திட்டத்தை விரைவில் தமிழகத்தில் துவக்கிடவும், அதை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா முழுக்க அதை நடைமுறைப்படுத்திடவும் விரைவில் ஆவன செய்வோம்... இதன் மூலம், இந்தியாவிலுள்ள சாதாரண ஏழை - எளிய மக்களும் கூட யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் ஹஜ் பயணம் சென்று வர ஏற்பாடு செய்வோம்""என்று அவர் கூறியிருக்கிறார். இத்திட்டத்தை நடை முறைப்படுத்த சமுதாய மக்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப் பளிக்க வேண்டும்.

அணிகளின் மண்டல பயிலரங்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அது மக்களுக்கு நன்மை செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டதாகவே அமைந்திருக்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை 10 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் உட்பட்ட மாவட்டங்களிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அமைப்புகளான மாணவரணி (ஆளுகு), இளைஞரணி(ஆலுடு), மகளிரணி (ஐருறுடு),

சுதந்திர தொழிலாளர் யூனியன் (ளுகூரு) ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பயிலரங்கத்தைத் தொடராக நடத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடுத்த தலைமுறைக்கான தலைவர்களை உருவாக்க பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் பயிற்சி முகாம்களுக்கான ஒருங்கிணைப்பாளர், மாவட்ட வாரியான பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலை - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தின் சார்பில் விரைவில் ‘மணிச்சுடர்’ நாளிதழ் வழியாக அறிவிக்கவுள்ளோம். அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.அத்தோடு இந்தப் பயிலரங்குகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு, கொள்கை, தேர்தல் அணுகுமுறை, பிற கட்சிகளுடன் கூட்டணி, முஸ்லிம் லீகின் சட்ட திட்டங்கள், அமைப்பு வடிவமைப்புகள், கட்சியின் சார்பில் செய்யப்பட்டு வரும் / செய்யப்படவிருக்கும் நலத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பற்றி நமது வருங்கால இளங்குருத்துக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

பைத்துர் ரஹ்மா திட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தற்போது தமிழகத்தில் ‘பைத்துர் ரஹ்மா’ எனும் இறையருள் இல்லம் அமைத்துக் கொண்டிருக் கிறோம். இத்திட்டத்தின் படி, அனைத்து சமுதாயங்களின் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான பொதுக் கிணறுகள், கல்வி - மருத்துவ இலவச உதவிகள், திருமண உதவி, இயற்கைப் பேரிடர் நிவாரண உதவிகள் உள்ளிட்டவற்றைத் தங்குதடையின்றி தொடராகச் செய்யவிருக்கிறோம். இதற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வெள்ள நிவாரணத்திற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் துவக்கப்பட்ட நிவாரண நிதி

ஐருஆடு-கூசூ-சுநடநைக குரனே

வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படவுள்ளது.இன்று முஸ்லிம்கள் பலர், தமது வங்கிக் கணக்கில் வழங்கப்படும் வட்டி என்ற கமிஷன் தொகையைப் பெறாமலோ அல்லது அதைப் பெற்று யார் யாருக்கோ கொடுத்துக்கொண்டோ இருக்கின்றனர். அத்தொகை களை ஒன்று திரட்டி, அதைப் பயன்படுத்தத் தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய திட்டமுள்ளது. இதே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தம்பி அபூபக்கர் முயற்சியில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த ஒருவொரு ஏழைக் குடும்பங்களுக்கு இந்த பைத்துர் ரஹ்மா மூலம் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல கடலூரில் 40 வீடுகள், அய்யம்பேட்டையில் தீயினால் பாதிக்கப்பட்ட 65 வீடுகளில் 5 வீடுகள், கண்டியூரில் ஐந்தாறு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தைச் சிறப்புற செய்திட, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அனைத்து அணிகளும் முழு வீச்சில் உழைக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறை விருதில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு

இறுதியாக நான் சொல்ல விரும்புவது: இன்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசுகள் சிறுபான்மை மக்களின் உரிமைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவதே கிடையாது. நேற்று கவர்னர் காவல்துறையில் சிறப்புற செயல்பட்ட 23 பேருக்கு விருது வழங்கியிருக்கிறார். அப்படி வழங்கப்பட்டவர்களுள் ஓரிரு முஸ்லிம்களாவது ஆண்டு தோறும் இருப்பர். ஜெயலலிதா காலத்திலும் அப்படி இருந்தது. ஆனால் நேற்றைய அறிவிப்பில் ஒரு முஸ்லிம் பெயர் கூட கிடையாது. முஸ்லிம்கள் அதிகளவில் இல்லை என்று அதற்குப் பொருள். கல்வித்துறையில் குழப்பம்

கல்வித் துறையிலும் ஒரே குழப்பம். நீட் தேர்வில் கடும் குழப்பம். தமிழகத்தில் 08ஆம் வகுப்பு வரை யாரையும் தேர்ச்சி வழங்காமல் நிறுத்துவது கிடையாது. ஆனால், கல்வித்துறை இப்போது அறிவித்துள்ளது: 05ஆம் வகுப்பிலும், 08ஆம் வகுப்பிலும் ஃபெயில் ஆக்க வேண்டும் என்று. 10, 12ஆம் வகுப்புகளில்தான் ஃபெயில், பாஸ் என்பது இருந்தது. தமிழகத்தில் சத்துணவு ஆயாக்களாக வேலைக்குச் சேர 08ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்ற நிலை உள்ளது. ஆனால், இப்போதைய இந்த ஃபெயில் சட்டம் நடைமுறையானால், 08ஆம் வகுப்பு சான்றிதழைக் கொண்டு சென்று யாரும் பணியில் சேர இயலாது. கிராமங்களில், தாழ்த்தப்பட்ட ஏழை எளிய குடும்பத்துப் பெண்கள் ஏதோ அரசு வேலை என சத்துணவு ஆயாக்களாகச் செல்வதையும் இப்போது இந்த அரசு தடுத்துக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு மோசமான காரியமும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்லூரிகளிலே 62 வரைதான் கல்லூரியில் முதல்வராக இருக்க முடியும். அதற்கு மேல் முடியாது என்பது தமிழகத்து சட்டம். ஆனால், தற்போது மத்திய அரசு, 62 வயதுக்கு மேலுள்ளவர்களையும் முதல்வராக வைத்துக்கொள்ள முடியும் என்று சொல்கிறது. இதன் பொருள், அந்தளவுக்கு வயதுடையவர்களெல்லாம் மேல் ஜாதிகளிலுள்ள படிப்பாளிகளாகத்தான் இருப்பார்கள். ஆக, அவர்களை மட்டும் தகுதி யுடையவர்களாகக் கொண்டு கல்லூரிகளில் முதல்வர் களாக்கவே இத்திட்டம். இவ்வாறாக, புதுப்புது சட்டங்களை வெளியிடுவதன் மூலம் இந்த மத்திய அரசு மக்கள் விரோத ஏழை எளியோருக்கு எதிரான அரசாக தன்னை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் ஒரு பெரிய குழப்பதைச் செய்து, தமிழக மக்களைப் படுகுழியில் தள்ளுவதற்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது.

ஊடகத்திற்கு வேண்டுகோள்

இப்படிப்பட்ட மத்திய மாநில அரசுகளிலிருந்து இந்த நாட்டை விடுவிக்கும் நல்ல நாளை நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குஞ்ஞாலிக்குட்டி அவர்கள் சொன்னது போல, இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. நேற்றைய மாலைப் பத்திரிக்கையிலே ஒரு செய்தியைப் படித்தேன். கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் ஒருவர் அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக தேர்தல் பரப்புரையில் பேசுகிறோம் என்ற பெயரில், ""இந்தத் தேர்தல் பாஜக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலானது அல்ல! மாறாக, ராமருக்கும் அல்லாவுக்கும் இடையிலானது""என்று கூறியிருக்கிறார். அதை அந்தப் பத்திரிக்கை கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு வெளி யிட்டுள்ளது. தயவுசெய்து ஊடக நண்பர்கள் இதுபோன்ற தலைப்புகளை இட வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதே போன்ற உளறல்களை பாஜக உறுப்பினர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல்வேறு தருணங்களில் பேசிக் கொண்டுதான் உள்ளனர்.

வீர வசனம் பேசியவர்கள் எங்கே?

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 65 ஆண்டு காலமாக நாம் பார்த்து வருவது, ""அந்த ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது!""என்று வீர வசனம் பேசிவிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து காணாமல் போனவர்கள்தான் இங்கு அதிகம். ஆண்டவனை இழுக்காதீர்கள். அதுவும் அல்லாவை இழுக்காதீர்கள். ராமன் ஜனக மகாராஜாவின் மகன். சீதைப் பிராட்டியாரின் கணவன். ஆனால், அல்லா யாருடைய மகன்? யாருடைய கணவன்? அல்லா என்றால் யார் எனத் தெரியுமா உனக்கு? கடவுள் என்றால் யார் என்று பொருள் தெரியுமா? கட + உள் = உள்ளதைக் கடந்து நிற்பது. உள்ளது எதுவும் கடவுள் அல்ல. உள்ளதைக் கடந்த ஒன்றே கடவுள். இன்னொரு படி மேலே சொல்வதென்றால், உள் என்றால் உள்ளுதல். பகுத்தறிவுப் பாதையில் சிந்திக்கச் சிந்திக்க, தெரியத் தெரிய உனக்குத் தெரியாததெல்லாம் தெரியும். ஆக உள்ளத்தை, உள்ளதை, உள்ளுவதையெல்லாம் கடந்ததுதான் கடவுள். அந்தக் கடவுளுக்கு அரபிச் சொல்தான் அல்லா. இப்படிப்பட்ட அல்லாவுக்கு எதிராக ராமனைச் சண்டை போட வைக்கிறாயா? அழிவுப் பாதை வந்துவிடும்.அல்லாஹ்வை வணங்கும் கஃபத்துல்லாஹ்வை இடித்து துவம்சம் செய்வேன்"""" என்று அபீஸீனியா இன்றைய எத்தியோப்பியா நாட்டு கவர்னர் யமன் தேசத்திலிருந்து யானைப் படையை அனுப்பினானே...? நடந்தது என்ன? திண்டுக்கல் தவ்ஃபீக் புக் டிப்போ மூலம், ""வெள்ளி மேடை"" என்று ஜம்பை ஜப்பார் மவ்லானா எழுதி வெளியிடப்பட்டுள்ள நூலில் - அப்றஹா யானைப் படைகளை அனுப்பினான்; அபாபீல் பறவைகளை அனுப்பி யானைப் படைகளை அழித்தானே...? இது நகைப்பிற்குரியதாக இல்லையா? என்று உலகம் கேட்கிறது... ஆனால், இன்றைய விஞ்ஞானம் சொல்வதோ: வானத்தில் பறக்கும் கழுகு தன் அலகில் சிறிய கல்லைக் கவ்விக்கொண்டு, யானையின் காதுகளில் போட, அந்த யானை துடிதுடித்துச் சாகிறது... பின்பு, ஏராளமான கழுகுகள் சேர்ந்து அதை உண்டு முடிக்கின்றன... என அண்மையில் ஜியோக் ரஃபிக்கல் சொஸைட்டி வெளியிட்ட கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ்வோடு யாரும் போட்டி போட முயற்சிக்க வேண்டாம்!

ஆக, யானைப்படையை அழிப்பதற்கு அபாபீல் பறவை வந்தது போதும். அதைச் செய்தது ராமன் அல்ல. அல்லாதான் செய்தான். அந்த அல்லாவோடு போட்டி போட யாரும் முயற்சிக்காதீர்கள். அவ்வாறு போட்டி போட்டவர்கள் இல்லாமல்தான் போயிருக் கிறார்கள். அல்லாஹ்வுடன் போட்டி போட்ட நம்ரூத், ஃபிர்அவ்ன் உள்ளிட்ட யாரும் இருந்ததாக வரலாறு இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, இதுபோன்ற ஒப்பீடுகளெல்லாம் அறிவீனமானவை; அவற்றைப் பத்திரிக்கைகளில் வெளியிடுவதும் அறிவீன மானவை என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன். இன்றைய மத்திய மாநில அரசுகளின் போக்குகள் மக்கள் விரோதப் போக்காக உள்ளது. இந்தியாவை இந்துத்துவ நாடாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த நாடு இந்தியத்துவம் மிக்கதே தவிர, இந்துத்துவ நாடு அல்ல. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், காயிதே மில்லத், காமராஜர், பெரியார், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி ஆகிய இவர்களெல்லாம் வளர்த்தது இந்தியத்துவமிக்க மக்களை மட்டுமே.ஆக, இந்த இந்தியத் துவத்தின் அடிப்படையில் இந்த நாட்டின் எல்லா சமய மக்களும் அண்ணன் , தம்பிகளாக அவரவர் மத உரிமைகளின் படி வாழ்ந்து, பிற மதங்களோடு நல்லிணக்கத்துடன் வாழும் அற்புதப் பாரம்பரியமாக இந்த நாட்டிற்குத் தரப்பட்டதுதான் இந்தியத்துவம். அப்பேர்பட்ட இந்தியத்துவத்தை அழித்து விட்டு, இந்துத்துவமாக ஆக்க முயற்சிப்பது, சமுத்திரத்தை அழித்துவிட்டு, சாக்கடையை சமுத்திரமாக்க முனைவது போல; தாமிரவருணியை இல்லாமலாக்கிவிட்டு, எங்கள் வீட்டுக் கரையில் ஓடும் சாக்கடையை தாமிர வருணி யாக்குவதாகச் சொல்வது நடக்குமா? அது நடக்கவே நடக்காது என்று தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. வின் நாடகம்

தமிழகத்திலும், மத்தியிலும் ஆளக்கூடிய அரசுகள் விரைவில் மாற்றப்பட வேண்டியவை. இன்று தமிழகத்திலுள்ள அதிமுக கட்சியிலுள்ள அனைத்து தரப்பினரும் ஓர் அற்புதமான நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது எஞ்சிய மூன்றாண்டு கால ஆட்சியை ஓட்டுவதற்காக, ஓபீஎஸ் ஈபீஎஸ் தினகரன் போட்டி என பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்குப்பதை ராஜ தந்திரமாகக் கருதிச் செய்துகொண்டிருக்கிறார்கள். வெளியிலே அடித்துக் கொள்வது போல காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் கூடிக்கூடிப் பேசி, எஞ்சிய ஆண்டுகளிலும் இந்த ஆட்சியை எப்படியேனும் தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். ஆனால், பொதுமக்களோ இந்த ஆட்சி எப்போது வீட்டுக்குப் போகும் என்று ஏங்கி நிற்கிறார்கள். பேருந்து கட்டண உயர்வு

பேருந்துக் கட்டணத்தை ஏற்றியதால் கொதித்துப் போன ஓர் அம்மையார் டீவியில் பேட்டி கொடுக்கிறார்: ""இந்த ஆட்சியிலிருப்போருக்கு அறிவிருக்கிறதா...? சாராயக் கடையை, சாராய விலையைக் குறைக்கிறார்கள்... பேருந்துக் கட்டணத்தை ஏற்றுகிறார்கள்... அறிவு கெட்டவனே...! சாராய விலையை 10 மடங்காக, 100 மடங்காக ஏற்ற வேண்டியது தானே? யாரடா உன்னைக் கேட்பார்? எவனோ அருந்தும் சாராயத்தின் விலையைக் குறைத்துக் கொண்டு, அன்றாடம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பேருந்தின் கட்டணத்தை உயர்த்தி யிருக்கிறாயே...? உன்னை யார் மந்திரியாக்கியது? நாளை இதே மந்திரிகள் எங்களிடம் வாக்குக் கேட்டு வரும்போது எங்கள் கையில் இருப்பவற்றைக் கொண்டு நாங்கள் பதில் சொல்வோம்!"""" என்றெல்லாம் கீறிக் கிழித்தார். விளக்குமாறு என்று சொல்லவில்லை. இந்தப் பேட்டியை அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொடுக்கவில்லை. மாறாக, பொதுமக்களுள் ஒரு பெண்மணி கூறியிருக்கிறார்.

தலையெடுப்பவர்களெல்லாம் தலைவர்களா?

ஆக, தமிழகத்தில் இன்று குழப்பமான அரசியல் களம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சினிமா அரிதாரம் பூசியவர் களெல்லாம் இன்று அரசியல் ஆதாரமாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக் கிறார்கள். அக்காலம் போல இக்காலத்து மக்கள் இல்லை. தமிழக அரசியலில் தலையெடுப்பவர்களெல்லாம் தலைவர்களாகி விட முடியாது. மகாத்மா காந்தி என்று பெயர் வைத்தோரெல்லாம் மகாத்மா காந்தியாகிவிட முடியாது.

மு.க. ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி

தமிழகத்தின் முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று இப்போதே பத்துப் பதினைந்து பேர் பேசிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் எத்தனை பேர் வருவரோ தெரியாது. ஆனால் எத்தனை பேர் தமிழகத்தில் தலையெடுத்தாலும், இந்தத் தலைகளையெல்லாம் மிஞ்சி உயர்ந்த தலையாக தமிழகத்திற்குத் தமிழினம் தந்துள்ள தலை தளபதி மு.க. ஸ்டாலினின் தலை! அந்தத் தலையை நம்பி தமிழக மக்கள் தமிழகத்தில் ஆட்சியைக் கொடுக்க முடி வெடுத்திருக்கிறார்கள். மத்தியிலுள்ள மக்கள் விரோத ஆட்சியை இந்த நாட்டிலிருந்து வேரறுப்பதற்கு நாட்டு மக்கள் முடிவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் துவக்கம் குஜராத் தேர்தலில் வெளிப் பட்டிருக்கிறது. போகப் போக அது இன்னும் தெளிவாக வெளிப்படும். அதன் மூலம் தமிழகமும், ஒட்டுமொத்த இந்தியப் பூங்காவும் பாதுகாக்கப்படும்.

பாருக்குள்ளே நல்ல நாடு, பாரத நாடு

சாரே ஜஹான் ஸே அச்சா இந்த நாடு. பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரத நாடு. அப்பேர்பட்ட இந்தப் பொன் னாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, இந்நாட்டில் பின்பற்றப்படும் ஜனநாயகம், சமய சார்பற்ற கொள்கை, சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக் கொள்கை, அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் அற்புதக் கொள்கை, மத உரிமைகளுக்கு பாதுகாப்பளிக்கும் கொள்கை உள்ளிட்டவை நிலை நாட்டப்படும். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பளிப்பர். அந்தக் காரியத்தை சிறப்புற செய்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் முழு வீச்சில் இயங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விடை பெறுகிறேன், நன்றி!

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டில் பிரகடனப்படுத்தினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்