Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, February 7, 2007
* 360 பள்ளிவாசல்களை கட்டியவர் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் * மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பை வலுப்படுத்த போட்டி ஜமாஅத்துக்களை நிறுத்துங்கள் * தமிழகத்தில் தி.மு.க., மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான நல்லரசுகள் அமைய உறுதியேற்போம் விவேகானந்தர் கூறிய வேதாந்த சிந்தனையும் - இஸ்லாமிய சட்டமுமே இந்தியாவை வல்லரசாக்கும் இராமநாதபுரத்தில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பிரகடனம்


* 360 பள்ளிவாசல்களை கட்டியவர் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் * மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பை வலுப்படுத்த போட்டி ஜமாஅத்துக்களை நிறுத்துங்கள் * தமிழகத்தில் தி.மு.க., மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான நல்லரசுகள் அமைய உறுதியேற்போம் விவேகானந்தர் கூறிய வேதாந்த சிந்தனையும் - இஸ்லாமிய சட்டமுமே இந்தியாவை வல்லரசாக்கும் இராமநாதபுரத்தில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பிரகடனம் இராமநாதபுரம், பிப்ரவரி 07- விவேகானந்தர் கூறிய வேதாந்த சிந்தனையும் - இஸ்லா மிய சட்டமுமே இந்தி யாவை வல்லரசாக்கும். தமிழகத் தில் தி.மு.க., மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான நல்லரசுகள் அமைய உறுதியேற்போம் என இராமநாதபுரம் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான் மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது:-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல இறைவனின் திருநாமம் போற்றித் துவங்கு கிறேன். இராமநாதபுரம் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில், சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டை ஏற்பாடு செய்து, தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் மாவட்டத் தலைவர் மதிப்பிற் குரிய வரிசை முஹம்மத் ஹாஜி யார் அவர்களே! இங்கே வருகை தந்து, முன்னிலை வகித்துக் கொண்டிருக்கும் சங்கைக் குரிய உலமாக்களே! சமுதாயப் புரவலர்களே! இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களே! திராவிட முன்னேற்றக் கழகத் தின் மாவட்டச் செயலாளர் நண்பர் சுப. திவாகர் அவர் களே! மாவட்ட துணைச் செயலாளர் அஹ்மத் தம்பி அவர்களே! சகோதரி பவானி ராஜேந்திரன் அவர்களே! காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் அவர்களே! இங்கே பெருந்திரளாகக் கூடியி ருக்கும் பெரியோர்களே! அன்புத் தாய்மார்களே! உங்கள் அனைவருக்கும் துவக்கமாக எனது நன்றியையும், நல்வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று மாலை 04.30 மணியளவில் இம்மாநாடு துவக்கப்பட்டு, நமது இஸ்லாமிய எழுச்சி முரசு தம்பி முகவை சீனி முஹம்மத் அவர்களின் இனிய இன்னிசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாநாட்டை அற்புதமாகத் தொகுத்து வழங்கி, அருமையாகப் பேச் சாளர்களைப் பேச வைத்து, எனக்கு மாநாட்டின் பிர கட னத்தைச் செய்திட உத்தரவு பிறப்பித்திருக்கிற தம்பி ஹமீதுர் ரஹ்மான் அவர்களுக்கும், மாநாட்டின் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை முதற்கண் தெரி வித்துக் கொள்கிறேன்.

இம்மாநாடு, மவ்லானா முஹம்மத் யூனுஸ் அவர்களின் கிராஅத்தோடு துவங்கி, மாவட்டச் செயலாளர் தம்பி முஹம்மத் ஃபைஸல் வரவேற் புரையாற்ற, மாவட்டத் தலைவர் வருசை முஹம்மத் அவர்கள் தலைமையுரையாற்றி, தொடக்கவுரை துணிந்த உரை இன்றைய காலத்திற்குத் தேவையான உரையாக மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜ ஹான் அவர்கள் உரையாற்ற, அருமைத் தம்பிகள் செய்யித் பட்டாணி, சிராஜுத்தீன், அமீன், மாநில செயலாளர் நிஜாமுத்தீன், சமுதாய இலக்கியச் செல்வர் ரிஃபாய், சீனா தானா காக்கா செய்யித் அப்துல் காதிர், காஜி காதர் பக்ஷ் ஹுஸைன், காஜி ஸலாஹுத்தீன் ஹஸ்ரத் ஆகியோரும், இன்னபிற நண்பர்களும் அருமையான கருத்துரைகளையாற்றி அமர்ந்திருக்கிறீர்கள்.

அண்ணாவின் நினைவு நாளில் மாநாடு

தமிழகத்தின் முஸ்லிம் களின் உணர்வுகளை அவர் களின் உள்ளங்களில் ஊடுரு விப்பார்த்தறிந்திருந்த - தமிழ்நாட்டு வரலாற்றில் சிறுபான்மை சமுதாயங்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர் களின் நினைவு நாளான இன்று சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.

சுவாமி விவேகானந்தர்

மாநில பொருளாளர் ஷாஜஹான் அவர்கள் சொன் னது போல, மாநாடு நடக் கும் இராமநாதபுரம் மாவட்டம் இந்த மாநகரம், சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றிலும் தனி அடையாளம் பெற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் பழம்பெருமையை, அதன் தொண்மையை, ஆன் மிகத் தலைமையை உலக சமூகத்திற்கு எடுத்துச் சொன்ன சுவாமி விவேகானந்தர் அவர் களை - சேதுபதி மன்னர் அவர் கள் முயற்சியில் - சிகாகோ நகருக்கு அனுப்பிய பூமி இந்த பூமி. அங்கே ஏழெட்டு ஆண் டுகள் பணியாற்றி, இந்தி யாவுக் குத் திரும்புகையில் சுவாமி அவர்கள் கால் பதித்த பூமி இந்த பூமிதான். அவருக்கு வரவேற்பளித்த முதல் சேதுபதி இந்த சமஸ்தான சேதுபதிதான்.

ஆக இம்மண்ணில்தான் சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு வழியனுப்பும் நடைபெற்றது; வரவேற்பும் நடைபெற்றது. அந்த மாபெரும் ஆத்மீக ஞானியின் வரலாற்றை நினைவுபடுத்தும் பூமியாகவும் இந்த பூமி திகழ்கிறது.

அத்தோடு, உலகமே இங்கிருந்துதான் தோன்றியது என்பதால் இது - இந்தியாவினது மட்டுமல்ல; உலகத்தின் பழம் பெருமையைப் பறைசாற் றும் பூமியாகவும் உள்ளது. ஆதம் எனும் முதல் மனிதன் இறக்கப்பட்ட இடம் இந்த பூமி.

சிந்திக்கும் மனது சிறப்பாக செயல்படும்

குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என வாதிப் போர் ஸசூடி ஞயசயபசயயீh ளுவலடந]க்ஷஹசுஹசூஐமூ10மூ12மூகூநுஓகூக்ஷழஹசுஹகூமூ10.5மூ11.5உண்டு. அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த மணவாளர் ராமானுஜம் அவர்கள், """"குரங்கிலிருந்து அல்ல! பன்றியிலிருந்துதான் மனிதன் பிறந்தான்!"" என்றார். ஆனால், மனிதன் குரங்கி லிருந்தும் பிறக்கவில்லை. பன்றி யிலிருந்தும் பிறக்கவில்லை. இயற்கையின் அடிப்படையில், வானத்தின் ஏதோ ஒரு மண்டலத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக - இந்த பூமிக்கு ஓர் ஆணும், பெண்ணும் தூக்கி யெறியப்பட்டனர்; அதுபோல, இங்கேயும் குழப்பம் ஏற்பட்டு, யாரோ ஓர் ஆணும், பெண்ணும் வேற்றுக் கிரகத்திற்குத் தூக்கியெறியப்படுவார்களோ என்பது ஆராய்ச்சிக்குரியது. அப்படிப்பட்ட சிந்தனை களையெல்லாம் இம்மாநாட்டில் உரைகளாக நண்பர்கள் தந்திருக்கிறார்கள். சிந்திக்கும் மனது இன்று மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. அவர் களுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்ட தலைவர் வருசை முஹம்மது

வருசை முஹம்மது ஹாஜியார் அவர்கள், தன் வயது முதிர்வையும் பொருட்படுத் தாமல் இளைஞர்களோடு நின்று, இம்மாநாட்டு ஏற்பாடுகளைச் சிறப்புற செய்து வருகிறார். இம்மாநாட்டின் வெற்றிக்காக, இங்கே அமர்ந்திருக்கும் பெரியோரும், சமுதாயப் புரவலர்களும் பேராதரவாக இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றி தெரிவிப்பது எமது கடமையாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக காலமெல்லாம் பாடுபட்டு, உழைத்து, ஓடாகத் தேய்ந்து, பல தியாகங்களைச் செய்து, உடல் ,பொருள், ஆவி என்று சொல்வார்களே அந்த அடிப்படையில் தொண்டு புரிந்து தியாங்கள் செய்த இந்த மாவட்டத்தின் முன்னாள் தலைவர் ஷவுக்கத் அலீ, சென்னை புரசைவாக்கம் மஸ்ஜிதின் தலைவராக இன்று சேவையாற்றிக் கொண்டிருக் கும் முஸ்தஃபா ஹாஜியார் போன்ற பெரியவர்களின் சேவை களையெல்லாம் நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி, பழைய நினைவுகளை மீட்டெடுத் தமைக்காக, இம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

எக்கரைக்குப் போனாலும் அக்கறை உள்ளவர்கள்

இந்த உலகின் எக்கரைக்குப் போனாலும், இச்சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு .ஈடிணையில்லாக் கொடைகளைச் செய்து, பேரும் புகழும் சிறக்க வாழும் கீழக்கரை மண்ணில் தோன்றி, அரு ஞ்சேவைகளாற்றியவர்கள்தான் டீ.எஸ்.ஓ.அப்துல் காதர், எம்.கே.இ.மவ்லானா, நூருத்தீன் காக்கா, பி.எஸ்.அப்துல் ரஹ்மான் காக்கா, மறைந்த மெஜஸ்டிக் அப்துல் கரீம் காக்கா போன்ற பெரும் தனவந்தர்கள். கீழக் கரையில் உள்ள தனவந்தர்கள் வெறுமனே இராமநாதபுரத்து முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் சேவைகளாற்றாமல், இங்குள்ள அனைத்து சமயங்களைச் சார்ந்த மக்களுக்கும் நீடித்த பயன்களைப் பன்னெடுங்காலம் வழங்கும் அற்புதமான பல சேவைகளை ஆற்றி, நலக் காரியங்கள் செய்வதில் முன் மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எம்.எஸ். அப்துல் ரஹிம் திடல்

அப்பேர்பட்ட பழைய தொண்டுகளையெல்லாம் நினைவுபடுத்தும் வகையில், பெரியவர் டீ.எஸ்.ஓ.அப்துல் காதர் அவர்களின் பெயரை இம்மேடைக்கு வைத்திருக் கிறார்கள். எனது இளமைக் காலத்தில் நான் இங்கே வருகிறபோது இங்கே லாட்ஜ்கள் கிடையாது. பழைய பேருந்து நிலையத்தில், குப்பை கூளங்கள் நிரம்பியதாக - நகராட்சியின் ஒரேயொரு லாட்ஜ் இருந்தது. அதில் தங்கித்தான் நாங்கள் இங்கே பணியாற்றியிருக் கின்றோம். அப்போது எங்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள்தான் அண்ணன் எம்.எஸ். அப்துர்ரஹீம் அவர்கள். அவர்களின் இல்லத்திற்கு நாங்கள் இன்று சென்றபோது, பழைய நினைவுகளெல்லாம் வந்தது. அவர்களது பெயரை நினைவுகூர்ந்து, எம்.எஸ். அப்துர்ரஹீம் நினைவுத் திடல் என இத்திடலுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். பாரம்பரியத்தில் வந்தவர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான்

இவ்வாறாக - கீழக்கரை , இராமநாதபுரம் ஆகிய தர்மத் தாலும், நற்சேவைகளாலும் முன்னின்ற ஊர்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தில் தான் நமது மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹானும் நிற்கிறார். மிகப்பெரும் ஆன்மிகத் தலைவராகத் திகழ்ந்த செய்யித் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மத் முபாரக் ஆலிம் அவர்கள். அவரும் ஒரு வலிய்யுல்லாஹ்வாகவே வாழ்ந்து, புனித மக்காவில் தன் வாழ்வை முடித்திருக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அவர் ஆற்றிய சேவைகள் ஏராளம். அதேபோல மண்டபம் மரைக்காயர் லியாக்கத் அலீ அவர்கள், எக்கக்குடி ராவுத்த பிள்ளை. இந்தப் பேருந்து நிலையத்தில் கடை வைத்து, அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு பத்திரிக்கை வாங்கி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்குக் கொடுத்த பெருமை அவருக்குண்டு. பெரியகுளம் அப்துர்ரஹ்மான் அவர் களோடிணைந்து, இந்த மாவட்டத்தில் ஊர் ஊராகச் சுற்றி, கட்சிப் பணியாற்றிய மகா தொண்டர் அவர். அவரது அன்பு மகன்தான் நமது முஹம்மத் யஃகூப். அதுபோல, பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இன்று நம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கங்கள்.

சிறந்த சேவை

இவர்களையெல்லாம் ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால், இவர்கள் அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக தம் வாழ்நாளின் பெரும் பகுதியை ஒதுக்கிச் சேவை யாற்றியவர்கள். அதனால்தான் இந்த மாநாட்டு மேடையில், திடலில் எங்கும் அவர்களின் பெயர்கள் நினைவு கூரப்பட்டுள்ளன. இங்கே சீனா தானா அவர்கள் பேசுகையில், எனக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அட்டை இல்லை என்றார். அது தேவையே இல்லை. முஸ்லிம் லீக் எடுக்கும் முடிவின் அடிப்படையில் செயல்படுவதே அதன் உறுப்பினர் என்பதைப் பறைசாற்றும். அவரோடு ஜாகிர் ஹுஸைன், அல்தாஃப் உள்ளிட்டோருக்கெல்லாம் நான் இதை அன்போடு தெரிவித்துக் கொள்வது என்னவெனில், """"முஸ்லிம் லீகில் நீங்கள் உறுப்பினராக இருங்கள்!"" என்று நாங்கள் கேட்கப் போவதில்லை. அதன் சமுதாய நலன் கருதிய நடவடிக்கை களுக்கு, அரசியல் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பளித்து, நல்ல பல ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கினால் அதுவே சிறந்த சேவையாக இருக்கும். அது உங்களின் முழு பொறுப்பாகும். தைக்கா சுஹைபு ஆலிம்

இந்த மாநாடு சிறுபான்மை யினர் வாழ்வுரிமை மாநாடு என்ற தலைப்பைக் கொண்டது. இம்மாநாட்டில், அல்ஹாஜ் தைக்கா சுஹைபு ஆலிம் அவர்களின் பெயரை வைத்து சன்மார்க்கச் சுடர் விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தைத் தருவதில் மட்டுமல்ல! ஆன்மிகத்திலும் மிகச் சிறந்த பணியைத் தந்தவர்கள் இந்த மண்ணில் ஏராளம். அவர்களுக்குத்தான் இன்று விருதுகள் வழங்கி கண்ணி யப்படுத்தப்பட்டுள்ளது.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் ,எனக்குத் தெரிந்த வரலாற்றின் படி 360க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை தமிழகத்திலும், இலங்கையிலும் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். சிறந்த ஆன்மிகச் செம்மலாக விளங்கி, அரபு மொழியின் பிறப்பிடமான அரபு நாட்டிலுள் ளவர்களுக்கே அரபியில் ஆன்மிகம் கற்றுத் தந்த ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் இங்கே அடங்கி யிருக்கிறார்கள். அவர்களின் வாரிசாகத் திகழ்பவர்தான் நமது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள். இம்மஹான்களின் பெயர்களைத் தாங்கிய விருதுகளை இம்மாநாட்டில் சேவையாளர்களுக்கு வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது ஆகும்.

மஹல்லா ஜமாஅத்துக்களை பிசகற பின்பற்றுதல்

முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படையான - இயற்கை யான அமைப்புகள் மஹல்லா ஜமாஅத்துகள்தான். அந்த அடிப்படையைப் பிசகற பின்பற்ற வேண்டிய பொறுப்பு இந்த நாட்டின் ஒவ்வொரு முஸ்லி முக்கும் உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று வைத்திருக்கிறோம். நாளை இல்லாமல் கூட போகலாம். இச்சமுதாயத்தில் எத்தனையோ கட்சிகள், அமைப்புகளெல்லாம் இருக்கின்றன. நாளை அவை இருக்கும் என்று சொல்ல முடியாது. நமக்குத் தெரிந்து, இங்கிருக்கும் அறுபது எழுபது ஆண்டு கால சேவை யாற்றியவர் களுக்குத் தெரிந்து இச்சமுதாயத்தில் எத்தனையோ அமைப்புகள் வந்தன... இருந்தன... புகழ்பெற்றன... அதே வேகத்தில் காணாமலும் போய்விட்டன. ஆக இவையெல்லாம் ஏதோவொரு காலத்தில் இருக்கலாம்; இல்லாது போகலாம்.

போட்டி ஜமாஅத்துக்களை நிறுத்த வேண்டும்

ஆனால், என்றும் நீடித்து நிலைத்திருக்கும் சமுதாயத் தின் அடிப்படைப் பேரமைப்பு தான் பள்ளிவாசல்களை மைய மாகக் கொண்டு இயங்கும் மஹல்லா ஜமாஅத்து கட்டமைப் பாகும். அதைப் பாதுகாத்து, கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு இச்சமுதாயத்தின் ஒவ்வோர் ஆண் பெண்ணுக்கும் உண்டு. இந்தக் கட்டுக்கோப்பைச் சிதைத்து, போட்டி பள்ளி வாசல்கள், போட்டி ஜமாஅத்து களை உருவாக்கும் போக்கு இத்தோடு நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு போட்டி யாகத் துவக்கப்பட்ட ஜமாஅத் துகள், பள்ளிவாசல்களை நிர்வகிப்போரை நான் அன்போடு கேட்டுக்கொள்வேன்... நீங்கள் உண்மையிலேயே சமுதாயத் திற்குப் பாடுபட வேண்டும்; உழைக்க வேண்டும் என்று கருதினால், அனைவரும் மஹல்லா ஜமாஅத்தில் இணைந்து, நல்லாலோசனை களை வழங்கி, அவற்றின் முன்னேற்றத்திக்குப் பாடுபட வேண்டும் என உங்களைப் பணிவோடு வேண்டுவது எனது கடமை எனக் கருதுகிறேன்.

சிராஜுல் மில்லத் பிறந்தநாள் மாநாடு

வரும் அக்டோபர் 04ஆம் நாளன்று சிராஜுல் மில்லத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்திலே மஹல்லா ஜமாஅத் விழிப்புணர்வு மாநாடு நடத்திட ,பொதுச் செயலாளருடன் கலந்து முடிவெடுத்திருக் கிறோம். இடம் விரைவில் முடிவு செய்யப்படும். அம்மாநாட்டில், மஹல்லா ஜமாஅத் கட்டுக் கோப்பை வலியுறுத்தும், விளக்கும் கருத்துக்களைப் பொதுமக்களுக்கு முன்வைக்க திட்டமிட்டுள்ளோம். அம்மாநாடு சிறக்க பொதுமக்களாகிய உங்கள் அனைவரது ஒத் துழைப்பும் இன்றியமையாத தாகும். தமிழகத்தில் ஏறத்தாழ ஆறாயிரம், ஏழாயிரம் மஹல்லா ஜமாஅத்துகள், பள்ளிவாசல் கள், மத்ரஸாக்கள் உள்ளன. இவ்வனைத்தும் இம்மாநாட்டில் சிறப்பாகப் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அரசு மானியத்தில் ஹஜ் செய்வதில்லை

இங்கே ஹஜ் மானியம் குறித்துப் பேசினார்கள். ஹஜ் மானியம் என்பது மத்திய அரசால் செய்யப்படும் ஒரு தவறான பரப்புரையே ஆகும். மானியத்தைப் பெற்றுக் கொண்டு எந்த ஒரு முஸ்லிமும் ஹஜ்ஜுக்குச் செல்வதில்லை. அது மானியமும் அல்ல. ஏற்கனவே இருந்த கப்பல் போக்குவரத்தை நிறுத்தி விமானப் போக்குவரத்தைக் கொண்டு வந்தார்கள். ஒரு மடங்கு கட்டணம் நான்கு மடங்கானது. அது குறித்து இந்திரா காந்தியிடம் சொன்னபோது, அக்கட்டண உயர்வை ஈடுகட்டும் வகையில் விமானக் கட்டணத்தைக் குறைக்க ஆவன செய்வதாகக் கூறினார். ஹஜ்ஜுக்கான பயண ஏற்பாடுகளை அரசாங்கமே செய்வதனால் வந்த வினைதான் இது. இதில் அரசு தலையிடாமல், அவரவர் விருப்பப்படி செல்லுங்கள் என்று கூறிவிட்டால், இன்றிருக்கும் விமானக் கட்டணத்தில் பாதியைக் கொண்டு ஹஜ் பயணம் சென்று வந்துவிடு வார்கள். அந்தளவுக்கு போட்டி போடக்கூடிய விமான சர்வீஸ்கள் இன்று உலகத்திலே பரவலாக உள்ளன.

மத்திய அரசின் தவறான போக்கு

ஆக, தராத மானியத்தைத் தந்ததாகக் கூறி மத்திய அரசு பெருமை பட்டுக்கொள்வது மிகவும் தவறான போக்காகும். இந்தப் போக்கையெல்லாம் வேறு வழியில் மாற்ற நாடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதியதாக ஒரு திட்டத்தைக் கையிலெடுக்கிறது. மலேஷியாவில் தபுங்கு ஹாஜி திட்டம் என்று ஒன்று உள்ளது. அங்குள்ள மக்கள், ஆண்டுக்கொரு முறை குறிப்பிட்ட ஒரு தொகையை டெபாசிட் செய்து, ஒவ்வோர் ஆண்டும் குலுக்கல் முறையில் ஏராளமான ஏழை எளிய மக்களை புனித ஹஜ் பயணத்திற்கு யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் கண்ணியமாக, கவுரவமாக அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நிலை தமிழகத்திலும் உருவாக வேண்டும் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் அஃப்ஸல் ஸாஹிப் அவர்களிடம் பேசினோம். ஒரு வார காலத்திற்குள் தமிழகத்தின் முக்கியஸ்தர்களைக் கலந்தா லோசித்து, மலேஷியாவைப் போல தமிழகத்திலும் தபுங்கு ஹாஜி சிஸ்டத்தைக் கொண்டு வரவும், பின்னர் அதை இந்திய அளவில் விரிவுபடுத்தவும் விரைவில் முடிவெடுப்பதாகக் கூறியிருக்கிறார். அதன்படி, விரைவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த தபுங்கு ஹாஜி சிஸ்டத்தைத் துவங்கவிருக்கிறோம். அதற்குப் பொதுமக்களும், சமுதாயப் பிரமுகர்களும் முழு ஒத்துழைப்பளிக்கவும் வேண்டுகிறேன்.

வக்ஃபு வாரிய தேர்தல்

இங்கே, தம்பி நிஜாமுத்தீன் அவர்கள் பேசுகையில், வக்ஃப் வாரியப் பிரச்சினையைக் குறிப்பிட்டார். வக்ஃப் வாரியத்தில் ஒரு வேடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. வக்ஃப் வாரியத்திற்குத் தேர்தல் நடத்த வேண்டும். எம்.பி. யாக அன்வர் ராஜா வக்ஃப் வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். எம்.எல்.ஏ.க்கள் இருவராக தம்பி அபூபக்கரும், செஞ்சி மஸ் தானும் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டனர். பார் கவுன் சிலிலிருந்து வழக்குரைஞர் களான சிராஜுத்தீன், அஜ்மல் கான் ஆகிய இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முத்தவல்லிகள் சார்பாக தேர்தல் நடத்தி, டாக்டர் கே.மஜீத், அக்பர் அலீ ஆகி யோர் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டனர். மார்க்க விழுமியங்களை நன்கறிந்த வர்களாக இருவரை அரசாங்க நியமனமாக அறிவிக்க வேண்டும். ஷியா தலைமை காஜியையும், நமது தலைமைக் காஜி ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களையும்தான் இத்தனை காலம் வழமையாகத் தேர்ந் தெடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால், பல்லாண்டு கால இந்தப் பாரம்பரிய வழமையை இன்றைய தமிழக அரசு நிறுத்திவிட்டு, நமது சிராஜுல் மில்லத் அவர்களின் மகள் ஃபாத்திமா முஸஃப்பரையும், ஷியா சமுதாயத்தைச் சேர்ந்த ஆதிகா என்ற பெண் மணியையும் நியமித்திருக் கிறார்கள். அதுபோல, அரசாங்கம் ஒருவரைப் பொது வாக நியமிக்க வேண்டும். அந்த இடத்தில் தமிழ்மகன் உசேனை நியமித்திருக் கிறார்கள். அதுபோல, அரசு நியமிக்கும் இருவராக ஒருவர் இந்த சமுதாயத்திலிருந்தும், இன்னொருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் என மொத்தம் 11 பேர் வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுவிட்டனர்.

செயல்படாத தமிழக அரசு

இந்நியமனம் நடைபெற்று 6 மாதங்களாகியும், இன்றளவும் வக்ஃப் வாரியத்தின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த தலைவர் பதவி விலகி 2 ஆண்டுகள், 2 மாதங்களாகிவிட்டன. இவ்வாறிருக்க, அப்பொறுப் பிற்குப் புதியவரைத் தேர்ந் தெடுக்க தமிழக அரசு எந்த முயற்சியையும் இன்றளவும் எடுக்கவேயில்லை. இதுபோன்ற எண்ணற்ற காரண காரியங்களை அடிப்படையாக வைத்தே, திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அரசை செயல்படாத அரசு என தொடர்ந்து அறிக்கைகள் மூலம் கண்டித்துக்கொண்டிருக்கிறார்.

அதுபோல, வக்ஃப் வாரியத்தில் ஊhநைக நுஒநஉரவiஎந டீககiஉநச (ஊநுடீ) என்று இருக்கிறார். அவர் நிரந்தரமாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய தமிழக அரசு அப்பொறுப்பிற்கு ஒரு மெடிக்கல் டைரக்டரை நியமித்து, அவரை - வக்ஃப் வாரியத்தின் எந்தப் பணியிலும் ஈடுபட இயலாத நிலையிலாக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே, அல்லாபக்ஷ் என்ற திறமையான அதிகாரி பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். அந்தப் பொறுப்பில் இப்போது யாருமே இல்லை. அதுபோல, வக்ஃப் வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சூப்பிரண்டு நியமிக்கப்பட்டிருப் பார். 32 மாவட்டங்களைக் கொண்ட தமிழகத்தில், இப்போது 17 மாவட்டங்களில் மட்டும் தலா ஒரு சூப்பிரண்டு உள்ளார்.

ஆக, முஸ்லிம் மக்களின் ஜீவாதார உரிமையான, மத்திய அரசின் சட்டத்திட்டத்தின் படி வடிவமைக்கப்பட்ட வக்ஃப் வாரியத்தின் இந்தப் பொறுப்புகளுக்கு முறையாக இந்த அரசு பொறுப்பாளர்களை நியமிக்கவில்லை. இந்தக் கொடுமையிலிருந்து தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை விடுவிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

முஸ்லிம் லீக் அர்ப்பாட்டம்

ஆகவே, நிரந்தர சி.இ.ஓ. ஒருவரை நியமித்தல், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு சூப்பிரண்டை நியமித்தல், வக்ஃப் வாரியத்திற்கு முறையாக ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும், வேண்டு மென்றே தமிழக அரசு செய்து வரும் காலதாமதத்தைக் கண்டித்தும், இம்மாதம் 14ஆம் நாளன்று மாலை 05.00 மணியளவில் சென்னை யிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டத்தை நடத்தவுள்ளோம். அதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த வர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதுவரை சென்று வந்த வழிமுறைக்கும், இனி செல்லவிருக்கிற வழிமுறைக் கும் சில வேறுபாடுகள் உள்ளது என திருநெல்வேலி மாநாட்டில் நான் குறிப்பிட்டேன். இக்கட்சி இனி போர்க்குணம் கொண்ட கட்சியாக மாறும், மாற்றப்படும் என்று அங்கே சொன்னோம். அதை நிரூபிக்கும் வகையில்தான் வரும் 14ஆம் நாளன்று துவக்கமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், அதனைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கைகள் அடிப்படையில் தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

நாளைய தலைவர்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இதுவரை பிரைமரிகள் என்ற கிளை அமைப்புகள் மட்டும்தான் இருந்தன. ஆனால் தற்போது மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலாளர் யூனியன், ஊடகப் பிரிவு என 5 அமைப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 5 அமைப்புகளிலிருந்து உருவாக்கப் படுவோர்தான் நம் சமுதாயத்தின் நாளைய தலைவர்கள். மாணவரணி யிலிருந்து உருவாகி வளர்ந்தவர்தான் இன்றைய நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், மாநில பொதுச் செயலாளருமான தம்பி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள். தம்பி ஹமீதுர் ரஹ்மான் இதே மாணவரணியிலிருந்து வளர்ந்து, இன்று இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி, நாளைய தலைமைக் குத் தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

மண்டல பயிலரங்கம்

இந்த நாட்டின், சமுதாயத் தின், பொதுமக்களின் நலன் சார்ந்த அம்சங்களில் இந்த 5 அமைப்புகளும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்கும் வகையில் சிறப்புப் பயிலரங்கம் தமிழகம் முழுக்க நடத்தப்பட வேண்டும். அதற்கு, சென்னை, வேலூர், நாகூர், திருச்சி, திருப்பூர், கம்பம், தூத்துக்குடி, இராமநாத புரம் என 8 மண்டலங்களாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிரித்து, அவ்வனைத்து மண்டலங்களிலுமுள்ள மேற்படி 5 அமைப்புளைச் சேர்ந்த மாநில , மாவட்ட தோழர்கள் ஒருநாள் முழுவதும் கலந்துகொள்ளும் வகையில் அப்பயிலரங்கங்கள் நடத்தப்படவுள்ளன. அதற்கான வழிமுறைகளை பொதுச் செயலாளர் விரைவில் மணிச்சுடரில் அறிவிப்பார்.

மாநில செயற்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் விரைவில் கூடவிருக்கிறது. டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மாபெரும் தலைமையகம் கட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அதற்காக ஒவ்வொரு மாநிலத் திலிருந்தும் நிதி திரட்ட வேண்டிய நிலையும் உருவாக்கப் பட்டிருக்கிறது. இவை குறித்தெல்லாம் விவாதித்து முடிவெடுப்பதற்காக, இம்மாதம் 14ஆம் நாளன்று சென்னை யிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் மாநில செயற்குழு கூடவிருக் கிறது. அதில், இப்பயிலங்கத் திற்கான ஒருங்கிணைப்பாளர், அட்வைசர், மாநில மஹல்லா ஜமாஅத் அமைப்புகளுக்கான திட்டங்கள், தேசிய அளவிலான சமுதாய நலத் திட்டங்கள் குறித்தெல்லாம் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இம்மாதம் 05ஆம் நாளன்று, டில்லியில் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இ.அஹ்மத் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக, மத்திய அமைச்சராக ஏறத்தாழ பத்தாண்டுகாலம் சேவையாற்றி னார். அவரது காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியாவில் மட்டுமல்ல! உலகம் முழுவதிலும் சிறப்புப் பெற்றது. அவரது நினைவு நாளான பிப்ரவரி 01ஆம் நாளன்று இனி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

முர்ஷிதாபாத்தில் எஸ்.டி.யூ. தேசிய கவுன்சில்

அதுபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலாளர் யூனியன் ஆகியவற்றின் தேசிய அளவிலான ஒன்றுகூடல்களை நடத்தவிருக்கிறோம். அந்த அடிப்படையில், தொழிலாளர் யூனியன் தேசிய அளவிலான ஒன்றுகூடல், வரும் 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் நடத்தப்படுகிறது. அதில் இந்தியா முழுவதிலுமுள்ள தொழிலாளர் யூனியன் அங்கத் தினரெல்லாம் கலந்துகொள்ள விருக்கின்றனர். இவற்றை நான் இங்கே குறிப்பிடுவதற்கான காரணம், இப்பயிலரங்கங்கள்தான், இவ்வணிகளின் மாநில அளவிலான பொதுக்குழுக் கூட்டங்களை நடத்துவதற்கான முன்னோடிகளாக இருக்கும்; அது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்பதற் காகவே நினைவுபடுத்தினேன்.

தமிழகத்தின் இன்றைய நிலை மிகவும் வேதனைக் குரியதாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் எப்போதோ நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றளவும் நடத்தப்படவில்லை. திமுக செயல் தலைவர் தளபதியார், """"தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வராது! சட்டமன்றத் தேர்தல்தான் வரும்! தகுதி நீக்கம் செய்யப் பட்ட 18 உறுப்பினர்களின் நிலை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்துவிட்டால், அதன் பிறகு தமிழகத்திற்கே தேர்தல் என்ற நிலைதான் வரும்"" என்று சொன்னதுதான் உண்மை யாகப் போகிறதோ என்னவோ தெரியவில்லை.

உள்ளாட்சி வார்டு மறுசீரமைப்பில் குளறுபடிகள்

உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. ஆனால், வார்டு மறு சீரமைப்பு எனும் பெயரில் மோசமான செயல் நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவாக வார்டு மறு சீரமைப்பு என்றால், அதிக வாக்காளர் எண்ணிக்கை கொண்ட வார்டு களிலிருந்து ஓரத்திலுள்ள ஒரு பகுதியினரை குறைந்தளவு வாக்காளர்களைக் கொண்ட பக்கத்து வார்டில் இணைத்து அமைப்பார்கள். வாக் காளர்களை அடிப்படையாகக் கொண்டே இச்சீரமைப்பு நடக்கும்.

ஆனால் இப்போது நடக்கும் கூத்து என்னவென்றால், ஒவ்வொரு வார்டிலும் எத்தனை வீடுகள் இருக்கிறது என்று பார்க்கப்பட்டு, அதனடிப் படையில் சீரமைக்கப்படுகிறது. இது பெரும் வேடிக்கையாகும். ஒரு வார்டில் 500 வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் 2 பேர் என மொத்தம் 1,000 பேர்தான் இருப்பார்கள். இன்னொரு வார்டில் 500 வீடுகள் இருக்கும். அங்கு ஒவ்வொரு வீட்டிலும் 5 பேர் என மொத்தம் 2,500 பேர் இருப்பார்கள். எனவேதான் வீடுகள் அடிப்படையில் வார்டுகளைப் பிரிப்பதை வேடிக்கை என்றும், வாக் காளர்களை அடிப்படையாகக் கொண்ட சீரமைப்பை அறிவுப் பூர்வமானது என்கிறோம். தற்போது செய்யப்பட்டு வரும் வார்டு மறுசீரமைப்பு தேர்தல் ஆணையத்தால் மேற் கொள்ளப் படும் கேலிக்கூத்தான செயல். இதை அவர்களாகச் செய்யவில்லை. வைகை நதி ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் பரத்திய புத்திசாலி களைக் கொண்ட அரசின் வழிகாட்டலில் செய்யப்படுகிறது.

கடமை உணர்வோடு செயலாற்றுங்கள்

தமிழக தேர்தல் ஆணையர், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவ்வாறு அவர் வருகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஊர்களிலும் உள்ள வார்டு மறு சீரமைப்பில் உள்ள குளறுபடிகள் குறித்து அக்கறையுடனும், சரியான ஆவணங்களுடனும் அவரிடத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கத்தினராகிய குறிப்பாக இளைஞரணி, மாணவரணி அங்கத்தினராகிய உங்களுக்கு உள்ளது என்பதை உணர்ந்து, யாருக்கோ வந்த விருந்து என்று இருந்துவிடாமல் கடமை யுணர்வுடன் செயலாற்றிட கேட்டுக்கொள் கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலங்கடத்திக்கொண்டே செல்வது மிகவும் தவறான போக்கு. அதைத் தவிர்த்து, விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட இம்மாநாட்டின் வாயிலாக தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

திமுக நல்லாட்சி அமைக்கும்

நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி என எந்தத் தேர்தல் வந்தாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை யிலான கூட்டணியில்தான் இருக்கிறோம், இருப்போம், வெல்வோம், கோட்டைக்குச் செல்வோம். மொத்தத்தில் திமுக கூட்டணி தமிழகத்தில் நல்லதொரு ஆட்சியை அமைக் கும்.

தமிழகத்தின் முதலமைச் சராவதற்கு இன்று நிறைய தலைகள் முளைத்துக் கொண்டிருக் கின்றன. ஆனால் காந்தி என்கிற பெயர் வைப்பதால் மகாத்மா காந்தியாகிவிட முடியாது. """"மகாத்மா காந்திக்குப் பல் இல்லை. எனவே நான் பல்லைத் தட்டிக் கொண்டேன்.

நானும் மகாத்மா காந்தி"" என்று சொன்னால் அவரைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள். தமிழகத்தில் ஏராளமான தலைகள் இருக்கலாம். ஆனால் மிகச் சரியான, தகுதி வாய்ந்த தலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை மட்டுமே. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. """"திராவிட"" எனும் பெயரை வைத்துக் கொண்ட தால் எல்லாக் கட்சிகளும் திராவிடக் கட்சிகளாகிவிட முடியாது. """"ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!!"" என்று மனித சமூகத்தை ஒரே குடும்பமாக, ஒரே கடவுளைக் கொண்டதாகக் கொள்கை வடிவத்தைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

பிரம்மன் ஏகன், இறைவனே!

பிரம்மன் ஏகன். அந்த ஏகன்தான் இறைவன். அவனைக் கோயில்களில் உருவங்கற்பித்து வணங்கு கிறார்கள். அதனைப் பார்த்து, இந்தியாவிலுள்ள இந்துக்கள் கோயில்களுக்குச் சென்று விக்கிரகங்களை வணங்கு வதால் அவர்களையெல்லாம் பல தெய்வ வணக்கவாதிகள் என்று கருதாதீர்கள்! ஏதோ புரியாத பாமர மக்கள், விக்கிரகங்களை வைத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் வணங்குவதோ எல்லாம்வல்ல பரம்பொருளைத் தான்! இதை நீங்கள் நம்புங்கள்!"" என்று சுவாமி விவேகானந்தர் வெளிநாடு களிலும், இந்தியாவிலும் பரப்புரையாற்றினார்.

திராவிடம்- இஸ்லாமிய கொள்கையே

ஆக, """"ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!!"", """"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!"", """"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!"" என்ற முழக்கங் களைக் கொள்கையாகக் கொண்டதுதான் திராவிடம். அதுதான் இஸ்லாமிய கொள்கையும், நம்பிக்கையு மாகும். எல்லோரும் நம் சகோதரர்கள்தான். இங்கிருக் கும் பவானி என் சகோதரி. தெய்வேந்திரன் என் சகோதரன். திவாகர் என் சகோதரர். பிற சமயத்தவரை """"சகோதரன் / சகோதரி"" என்று சொல்வதை ஒருசில முஸ்லிம் அமைப்புகள் வெறும் அலங்காரத்திற்காக வைத்துக்கொண்டுள்ளன. ஆனால், அதை மனதார நம்ப வேண்டும். அவ்வாறு நம்பாமல் போனால் நான் முஸ்லிமல்ல! இந்து சமயத்தைப் பின்பற்றும் பத்திரிக்கைகளுக்கு நான் சொல்கிறேன். பவானி ராஜேந்திரன் எனது சகோதரி என்றும், தெய்வேந்திரன் / திவாகரன் / இங்கே வந்து கொண்டிருக்கும் அருமைத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரெல்லாம் எனது சகோதரர்கள் என்றும் சொல்வதல்ல! அதை நம்ப வேண்டும். இதுதான் இஸ்லாம் வழங்கும் பாடம். இதைத்தான் இந்தத் தமிழ் மண்ணில், வள்ளுவன் முதல் வள்ளலார் வரை, திருமூலர் முதல் திருவிக வரை, தொல்காப்பியர் முதல் இன்றுள்ள தோழர்கள் வரை இந்நாட்டின் அத்தனை தலைவர்களும் சொன்ன தத்துவங்களும் இதுதான். இதுதான் உண்மையான ஆன்மிக நெறி. இதுதான் நன்னெறி, பொன்னெறி, மக்களுடைய நெறி. இதை முழுமையாகப் பின்பற்றி வாழும் இயக்கமாக தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், இந்திய அளவில் ராகுல் காந்தி அவர்களின் தலைமையைத் தாங்கிய இந்திய தேசிய காங்கிரசையும் கருதுகிறோம். ஆக இத்தலைமைகளின் கீழ்தான் மத்திய மாநில அரசியல் பணிகள் தொடர்ந்து இயங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியும், மாநிலத்தில் திமுக கூட்டணியும்தான் ஆள வேண்டும். அந்த நன்னோக்குடன் நாம் தொடர்ந்து பயணிப்போம். அதுவே இம்மாநாட்டின் அரசியல் நிலைப்பாடு என் பதைத் தெரிவித்துக் கொள்கி றேன்.

இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இங்கே பேசிய பல தம்பிமார், இந்திய நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் களுக்கு எதிரான மத்திய அரசின் போக்கைப் பற்றி ஆதங்கத்துடன் குறிப்பிட்டார் கள். நான் சொல்ல விரும்பும் ஒரே விஷயம்:- சுவாமி விவேகானந்தரின் சொல்லைக் குறிப்பிட்டு மத்திய பட்ஜெட் வாசித்த அமைச்சர் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். ப.சிதம்பரம் அவர்கள் திருக்குறளின் வாசகத்தைச் சொல்லி பட்ஜெட் உரையை முடிப்பார். இவர் சுவாமி விவேகானந்தரின் சொல்லைக் கூறி முடித்திருக்கிறார்.

விவேகானந்தர் சொன்னது என்ன?

ளுநடநஉவiடிளே கசடிஅ வாந உடிஅயீடநவந றடிசமள டிக ளுறயஅi ஏiஎநமயயேனோய எனும் தலைப்பில் ஹனாஎயனைhய ஹளாசயஅய எனும் அமைப்பு வெளியிட்ட நூலில், இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் குறித்து சுவாமி விவேகானந்தர் சொன்னதென்ன? இன்று """"காந்தியில்லாத இந்தியா!"", """"காங்கிரஸ் இல்லாத இந்தியா!"", """"முஸ்லிம் இல்லாத இந்தியா!"", """"இஸ்லாம் இல்லாத இந்தியா!"", """"முத்தலாக் இல்லாத இந்தியா!"" என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டிருக்கிற மத்திய அரசுக்கு, சுவாமி விவேகானந் தரை மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருக் கும் மத்திய அமைச்சர்களுக்கு நான் சுட்டிக்காட்டுவேன்: We are firmly persuaded that without the help of practical Islam, theories of Vedhantism however fine and wonderful, they may be or entirely valueless to the vast mass of mankind. We want to lead the mankind to the place where there is neither the Vedhas nor the Bible nor the Quran. Yet, this has to be done by harmonizing The Vedhas, The Bible and The Quran. Mankind aught to be taught that the religions are but the varied expressions of the religion which is oneness so that each may choose the path that suits him best. For our motherland, a junction of the 2 great systems Hinduism and Islam. Vedhantha brain and Islam body is the only hope. I see in my mind’s eye, the future perfect India rising out of this chaos and strife, glorious and invensible, with the Vedhantha brain and Islam body. இதன் தமிழாக்கம் வருமாறு

வேதாந்த கொள்கைகள் சிறந்தவையாக இருந்தபோதிலும் இஸ்லாமிய நடைமுறைகளின் உதவி இல்லையென்றால் அந்த கொள்கைகளால் மனித குலத் திற்கு எந்தவித பலனும் கிடைக்கப் போவதில்லை. வேதங்கள், பைபிள் மற்றும் திருக்குர்ஆனை கடந்த ஒரு பாதையை மனித குலத்திற்கு காட்ட விரும்புகிறோம். அதா வது வேதங்கள் பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக் குவதன் மூலம் இதனை சாதிக்க முடியும். மதங்கள் ஓரிறைக் கொள்கையைத்தான் வலியு றுத்துகின்றன என்பதை மனித குலத்திற்கு போதிக்க வேண் டும். இதன் வாயிலாக அவர்கள் தங்களுக்கு ஏற்ற சிறந்த வழி முறையை தேர்ந்தெடுக்க முடியும்.

நமது தாய்நாட்டை பொருத்தமட்டில் இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய இரண்டு மாபெரும் கொள்கைகள் சங்கமிக்கின்றன. வேதாந்த மூளை யாகவும் இஸ்லாம் உடலாகவும் செயல்படுவது தான் ஒரே தீர்வு. வேதாந்த மூளை மற்றும் இஸ்லாமிய உடல் வாயிலாக எதிர்கால இந்தியா குழப்பம் மற்றும் கலவரங்களிலிருந்து மீண்டு ஒரு உன்னதமும், மகத்து வமும் வாய்ந்த நிலையை அடைய முடியும் என்று நம்புகிறேன்.

சுவாமி விவேகானந்தர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் நாளன்று நைனிட்டாலி லிருந்த தனது நண்பர் சர்ஃபராஸ் ஹுஸைனுக்கு எழுதிய கடிதத்தின் வாசகம் தான் இது. இக்கடிதத்தை நாம் வெளியிடவில்லை. நான் மேற்குறிப்பிட்ட அத்வைத ஆஷ்ரமத்தினர்தான் தொகுப்பாக வெளியிட்டிருக் கிறார்கள். இதை இதற்கு முன் உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. இந்த மாநாட்டைப் பயன்படுத்தி நான் மேற்கோள் காட்டியிருக் கிறேன்.

இந்தியாவை வல்லரசாக்க முடியும்

சுவாமி விவேகானந்தரின் இந்த வாசகத்தை விட சிறப் பாக இந்நாட்டின் சமய நல்லிணக்கத்தை யாரால் பறைசாற்றி விட முடியும்? இந்தியாவுக்கு நம்பிக்கை யளிக்கக் கூடிய, பெருமை சேர்க்கிற, வல்லரசாக்குகிற, இந்தியாவை உலகில் யாரும் வெல்ல முடியாத நிலையிலாக்க வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு மட்டும்தான்! (1) ஏநனாயவோய க்ஷசயin: வேதாந்த அதாவது ஏக இறைவனின் சிந்தனை, (2) ஆரளடiஅ க்ஷடினல: ஐளடயஅiஉ டயற அதாவது இஸ்லாமிய சட்டங்கள். இவ்வி ரண்டும் கொண்டிருந்தால் தான் இந்தி யாவை வல்லரசாக மாற்ற முடியும் என்று அவர் கூறுகிறார்.

எந்த இஸ்லாமிய சட்டத்தை மாற்ற வேண்டுமென்று விவே கானந்தரைத் தூக்கிப் பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்துத்துவ வாதிகள் கூறுகின்றனரோ அதற்கு நேர் மாற்றமான கருத்தையே சுவாமி விவேகானந்தர் அழுத்தமாகக் கூறுகி றார். அதுதான் வருங் காலத்தில் நடக்கும் என எனது மனக்கண் கொண்டு பார்த் ததை நான் வெளிப் படையாக நம்பிக்கையுடன் இங்கே தெரி விக்கிறேன்.

மத்திய அரசின் அங்கங்களே! நீங்கள் தூக்கிப் பிடிக்கும் சுவாமி விவே கானந்தரின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி நான் இங்கே அழுத்தமாகக் கூறுகிறேன். இந்தியாவில் முஸ்லிம்களையும், அவர்களின் மார்க்க விழுமியங் களையும் எள்ளி, இகழ்ந்து, இழிவுபடுத்த நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது! அந்தப் பருப்பு இந்த நாட்டில் ஒரு காலமும் வேகாது! என்று கூறி எனதுரையை நிறைவு செய்கிறேன். நன்றி.

இவ்வாறு இராமநாதபுரம் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் பிரகடன உரை யாற்றினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்