Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, September 21, 2018 10 Muharram 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, February 15, 2007
*சாதி, மத, வழக்கு வித்தியாசமின்றி 14 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்க * வக்ஃபு வாரிய தலைவர் தேர்தல் நடத்தும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் * காயிதே மில்லத் (ரஹ்) வழி நின்று ஹார்டுவார்டு தமிழ் இருக்கைக்கு ரூ.1 லட்சம் நன்கொடை * அக்.4-ந்தேதி திருச்சியில் சிராஜுல் மில்லத் பிறந்த நாளன்று மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு - சமய நல்லிணக்க மாநில மாநாடு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயற்குழுக்கூட்டத்தில் முடிவு


சென்னை, பிப்.14- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் 14.02.2018 புதன் கிழமை காலை 11 மணிக்கு தலைமை நிலையம், காயிதே மில்லத் மன்ஸில்,36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை-600 001 என்ற முகவரியில் நடைபெற்றது.

இ.யூ.முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., வரவேற்புரையாற்றினார்.

இ.யூ.முஸ்லிம் மாநில துணை தலைவர் தளபதி மௌலானா ஏ.ஷபிகுர் ரஹ்மான் துஆ ஓதி, மறைந்தவர்களுக்காக பிரார்த் தனை செய்தார்.

இ.யூ.முஸ்லிம் மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தீர்மானங் களை முன்மொழிந்தார்.

இ.யூ.முஸ்லிம் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷா ஜகான் நன்றி கூறினார்.

மாநில துணை தலைவர்கள், மாநில செயலா ளர்கள், மாநில துணை செயலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் மாநில செயற் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

இரங்கல் தீர்மானம்

அண்மையில் மறைந்த கீழ்க்கண்டவர்களுக்கு இக்கூட் டத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரி விக்கப்பட்டு, மஃபிரத்திற்கு துஆ செய்யப்படுகிறது.

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது சாகிப்

தமிழ்நாடு அரசு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா,

எஸ்.டி.யூ. தேசிய பொருளாளர் திருச்சி ஜி.எம். ஹாஷிம் ,

இ.யூ.முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் கூடலூர் எம்.ஏ. ஸலாம்,

இ.யூ.முஸ்லிம் லீக் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஏ. அல்லாபிச்சை ,

இ.யூ.முஸ்லிம் லீக் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏ. மேத்தப்பிள்ளை மரைக்காயர் ,

இ.யூ.முஸ்லிம் லீக் தேனி மாவட்ட செயலாளர் பெரியகுளம் ஆர்.எம். அப்துல் நசீர் ,

இ.யூ.முஸ்லிம் லீக் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வடுகன்காளிபாளையம் எம்.இ. பஷீர் ,

இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி எழுத்தரசு ஏ.எம். ஹனீப் சாகிப் ,

இ.யூ.முஸ்லிம் லீக் முதுபெரும் தலைவர் ஜம் ஜம் எஸ். பதுருதீன் ஹாஜியார்,

இ.யூ.முஸ்லிம் லீக் அய்யம்பேட்டை நகர செயலாளர் ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன்,

இ.யூ.முஸ்லிம் லீக் நாகை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தோப்புத்துறை புலவர் எம். ஹாஜா மைதீன் ,

இ.யூ.முஸ்லிம் லீக் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் மதுராந்தகம் ஐ. அசதுல்லா ,

இ.யூ.முஸ்லிம் லீக் விழுப்புரம் மாவட்ட மணலூர் நகர செயலாளர் எம். முஹம்மது இஸ்மாயில் ,

இ.யூ.முஸ்லிம் லீக் நாகைவடக்கு மாவட்ட எஸ்.டி.யூ. தலைவர் ஏ.எச். ஹாஜா மைதீன்,

இ.யூ.முஸ்லிம் லீக் மூத்த தலைவர் நாகூர் கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் ,

இ.யூ.முஸ்லிம் லீக் காஞ்சி நகர முன்னாள் தலைவர் சஜ்ஜாத் உசேன் ,

வேலூர் மாநகர முஸ்லிம் லீக் முதுபெரும் தலைவர் ஏ.ஜி. பக்கீர் அஹமது ,

இ.யூ.முஸ்லிம் லீக் இராமநாதபுரம் மாவட்ட உலமாக்கள் அணி துணை அமைப்பாளர் மௌலவி கலீல் ரஹ்மான் மன்பஈ ,

இ.யூ.முஸ்லிம் லீக் நெல்லை மாவட்டம் குற்றாலம் நகர பிரைமரி தலைவர் ஷஹாபுதீன் ஜமாலி ,

இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி ஆழ்வார்தோப்பு எம்.எஸ். முஸ்தபா,

இ.யூ.முஸ்லிம் லீக் மூத்த ஊழியர் சென்னை எம். ஜாபர் பேக்

தமிழ்நாடு அரசு பால்வாரிய முன்னாள் தலைவர் செங்கம் ஜப்பார் ,

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் ,

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முன்னாள் உறுப்பினர் புரசை எம். சிக்கந்தர் ,

மணிச்சுடர் முகவர் சென்னை இராயபுரம் அப்துல் ரசாக் ,

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் டாக்டர் கே.ஏ. அப்துல்லாஹ் பாஷா ,

ஜமாஅத்துல் உலமா சபை மூத்த தலைவர் டி.ஜே.எம். சலாவுதீன் ரியாஜி துணைவியார் சிந்தா மதார் பாத்திமா ,

தமிழறிஞர் மணவை முஸ்தபா ,

மலேசியா டத்தோ தஸ்லிம் முஹம்மது இப்ராஹிம் ,

நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளர் கானகத்தி மீரான் மனைவி ஹபிபுன்னிஷா,

லால்பேட்டை முன்னாள் தலைவர் கே.ஏ. அபு சுஹுத்,

முஸ்லிம் லீக் மூத்த தலைவர்கூடலூர் பிகே.முஹம்மது ஹாஜி,

புதுக்கோட்டை மாவட்ட கௌரவத்தலைவர் எஸ்பி.மீரா மைதீன்,

அரசியல் தீர்மானங்கள்

சிறுபான்மையினர் வாழ்வுரிமை காத்தல்

பன்முகத்தன்மைக் கொண்ட நம் தேசத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே சிறப்பம்சமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் நடை முறைக்கு வந்துள்ளது.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள 6 அடிப்படை கடமைகளும் சட்டப்பாதுகாப்பு பெற்றவை. இதில் சமய சுதந்திர உரிமைகள் 25 முதல் 28 சரத்துக்களாகவும், கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள் 29,30 சரத்துக்களாகவும் இடம் பெற்றுள்ளன.

இதன்படி விரும்புகின்ற மதத்தை ஏற்கலாம், பின்பற்ற லாம், பரப்பலாம். அந்த மதச் சட்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.இதற்கு முற்றிலும் விரோதமாக பொதுசிவில் சட்ட சரத்து வழிகாட்டு நெறிமுறையில் இடம் பெற்றுள்ளது. ஆயினும் முஸ்லிம்கள் விரும்பாத வரை அது கொண்டு வரப்பட மாட்டாது என இந்திய அரசியல் சட்ட அவையில் உறுதியளிக்கப் பட்டது.ஆனால் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை நீக்கி விட்டு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சிக்கப்படுவதோடு அதற்கு முதற்படியாக தனியார் சட்டத்தை நீக்கும் நடவடிக் கையாக முத்தலாக் தடை சட்டம் என்ற பெயரில் """"முஸ் லிம் பெண்கள் பாதுகாப்பு சட்ட மசோதா"" கொண்டு வரப் பட்டுள்ளது. இது முஸ்லிம் சமூகத்தை சிறுமைப்படுத்தும் செயலாகும்.

இச்சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமலும் உள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டங்களுக்கு இடையூறு செய்யவோ, பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற் சிக்கவோ கூடாது என மத்திய அரசை இக்கூட்டம் வலியு றுத்துகிறது

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை

14 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்து வரும் ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் அறிவித் துள்ளார். சிறைத் துறையும் இதற் கான கணக் கெடுப்பில் ஈடுபட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் அவர்களும் அறிவித் துள்ளார்கள். விஷேசகாலங் களில் அரசு அறிவிக்கும் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை வாய்ப்பு பலமுறை முஸ்லிம் சிறை வாசிகளுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய அரசிய மைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவு மாநில ஆளுநருக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி தமிழக அரசே பரிந்துரை செய்து சிறைவாசிகளை விடுவிக்க முழு அதிகாரம் இருக்கின்றது.

இதன்படி 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் அனைவரையும் சாதி, மத, வழக்கு வித்தியாசமின்றி கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டுவதோடு, சிறைச் சாலைகளிலுள்ள 47 முஸ்லிம் ஆயுள் சிறைவாசி களுக்கும் பாரபட்சம் காட்ட வேண்டாம் எனவும் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

பேருந்து கட்டண உயர்வு

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தற்போது 67 முதல் 110 சதவீதம் வரை முன்னறி விப்பின்றி விஷம்போல் பேருந்து கட்டணத்தை உயர்த் தப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள் ளனர். பேருந்து கட்ட ணத்தை உயர்த்தும் அதி காரம் அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது தமிழக அரசின் பொறுப்பின்மையை காட்டு கின்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை நிர்வாகச் சீரமைப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய தவறி விட்டது.

தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சியான திராவிட முன் னேற்றக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நிர்வாகம் சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குழு அமைத்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதை இச்செயற் குழு வரவேற்கிறது. தமிழக அரசு செய்ய வேண்டிய முக்கியமான பணியை எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக்கழகம் செய்து இருப்பதை இக்கூட்டம் பாராட்டுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில், கா. பொன்முடி எம்.எல்.ஏ., கே.என். நேரு எம்.எல்.ஏ., சண்முகம், செங்குட் டவன் எம்.எல்.ஏ., ஆகியோர் அடங்கிய குழு ஆய்வறிக்கையில் 27 சிறப்பான பரிந்துரைகளை செய்திருக்கிறது.

அப்பரிந்துரைகளை தமிழக அரசும், அரசு போக்கு வரத்து கழக நிறுவனங் களும் உடனடியாக பரிசீலித்து தாமத மில்லாமல் அப்பரிந் துரைகளை செயல்படுத்த வேண்டுமெனவும் இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

உள்ளாட்சி வார்டு மறு வரையறை

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது. அதேசமயம் வார்டு மறுவரையறை அவசர கோலத்தில் செய்யப்பட்டு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட் சிகளில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதிகள் சிதைக்கப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்வு பெற முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தை வேதனைப்படச் செய்துள்ளது.

எனவே திட்டமிட்டு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ள இந்த வார்டு வரையரையை ரத்து செய்து விட்டு அனைத்து சமுதா யங்களில் பிரதிநிதித்து வமும் பாதிக்காத வண்ணம் மீண்டும் வார்டு மறு சீரமைப்பை மேற் கொள்ள உத்தரவிடுமாறு தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணை யத்தையும், தமிழ்நாடு அரசை யும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் தேர்தல்

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் பதவி விலகி 2 வருடம், 2 மாதங்கள் ஆகின்றது. கண் காணிப்பாளர்கள் மண்டலத் திற்கு ஒருவர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 10 மாவட்டம், 15 மாவட்டங்களை ஒருவரே கண்காணிக்க வேண்டிய அவல நிலையில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் உள்ளது. மேலும் வக்ஃபு வாரிய அன்றாட பணிகளை கவனித்து உத்தரவு பிரப்பிப்பதற்கு நிரந்தர தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) நியமிக் கப்படாமல் மருத்துவ இயக் குனர் ஒருவரே கூடுதல் பெறுப் பாளராக நியமிக்கப்பட்டிருப் பதால் அன்றாட வக்ஃப் வாரிய பணிகள் முடங்கி யுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தியதை தொடர்ந்து தற்போது வக்ஃபு வாரியம் உறுப் பினர் தேர்தல் நடத்தப்பட்டு 5 மாதங்கள் ஆகியும், வக்ஃப் வாரிய தலைவருக்கான தேர்தலை தமிழ்நாடு அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இப்படியாக சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார உரிமைகளை நிலை நிறுத்தும் பணிகளுக்கான இறை இல்லங்கள், தர்ஹாக்கள், கபருஸ்தான்கள் உள்ளிட்ட சமுதாய நலக்காரியங்களை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டிய வக்ஃப் வாரிய பணிகளை முடக்கி இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிப்ப தோடு உடனடியாக வக்ஃபு வாரி யத் தலைவர் தேர்தலை நடத்தி வாரிய பணிகளை முடுக்கி விட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இன்று 14.02.2018 மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய பணிகள் முடக்கப் பட்டதை கண்டித்து தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சமுதாய பெருமக்களும், அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு நல்கிட இக்கூட்டம் வலியுறுத் துகிறது.

ஹார்டுவார்டு தமிழ் இருக்கைக்கு ரூ. 1 லட்சம்

இந்திய அரசியல் நிர்ணய சபையில் தேசிய மொழி எதுவாக இருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்த போது """"தொன்மை, எளிமை, இனிமை, இலக்கிய, இலக்கண வளம் நிறைந்த ஒரு மொழியே பொது மொழியாக இருக்க வேண்டும். இத்தகுதிகள் அனைத்தும் பெற்ற ஒரே மொழி என் தாய்மொழி தமிழ்மொழியே இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டுமென"" முழக்கமிட்டவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்கள். அவர் வழிநின்று பணியாற்றும் இவ்வியக்கம் ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு ரூ. 1 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம்) நன்கொடையாக வழங்குவதென இக்கூட்டம் மகிழ்வோடு தீர்மா னிக்கின்றது.

இயக்கத் தீர்மானங்கள்

மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 71வது நிறுவன நாள்

சுதந்திர இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மை யினரின் கலாச்சார தனித் தன்மை பாதுகாத்தல் என்ற இலட் சியங்களோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவங் கப்பட்டு வருகின்ற மார்ச் 10, 2018 அன்றுடன் 71வது நிறுவன நாளை மகிழ்வோடு கொண்டாட இருக்கின்றோம். தமிழ்நாடு முழுவதிலும் அன் றைய தினத்தில் தாய்ச்சபையில் உழைத்து மறைந்த தியாகச் செம்மல்களின் நல்வாழ்வுக்காக துஆ மஜ்லிஸ் நடத்துதல், மூத்த ஊழியர்களை கௌர வித்தல், அனைத்து வார்டு பிரைமரிகளிலும் வரலாற்று பேரியக்கத்தின் 112 வருடங்களை கடந்த மூத்த கொடியான நட்சத்திரம் பொறித்த பிறைக் கொடி ஏற்றும் நிகழ்ச் சிகளை நடத்திடுமாறு மாவட்டம், நகர, பிரைமரி நிர்வாகிகள் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, இந்திய யூனியன் மகளிர் லீக், சுதந்திர தொழிலாளர் யூனி யன் ஆகிய அணிகளின் பொறுப் பாளர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு - சமய நல்லிணக்க மாநில மாநாடு

எதிர்வரும் அக்டோபர் 4ம் தேதி, வியாழக்கிழமை சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது சாகிபின் 93வது பிறந்த நாளாகும். அன்றைய தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு - சமய நல்லிணக்க மாநில மாநாட்டை திருச்சி மாநகரில் நடத்துவதென்றும், இம்மாநாட் டிற்கு தாய்ச்சபையின் தேசிய நிர்வாகிகள், தோழமைக் கட்சி தலைவர்களை அழைப்ப தென் றும் இக்கூட்டம் தீர்மானிக் கிறது.

மாநாடு நடத்திய மாவட்டங்களுக்கு நன்றி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வு ரிமை மாவட்ட மாநாடுகளை எழுச்சியுடனும், வெற்றிகர மாகவும் நடத்தியிருக்கும் தூத் துக்குடி, கடலூர் வடக்கு, திருவள்ளுர் மேற்கு, ஈரோடு தெற்கு, தஞ்சை வடக்கு - நாகை வடக்கு, நெல்லை மேற்கு மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இம்மாநில செயற்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

கேரள மாநில புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து

இந்திய யூனியன்முஸ்லிம் லீக் கேரள மாநில குழுவின் தலைவராக, பாரம்பரியமிக்க ஆன்மீக அரசியல் தலைவரான பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தலை வராகவும், செயல் திற மையும், தியாகச் சீலரு மான கே.பி.ஏ. மஜீத் பொதுச் செயலாளராகவும், பல் லாண்டு காலம் தொழிற்சங்க (எஸ்.டி.யூ.) தலைவராக திறம்பட செயல்பட்டு வந்த செர்க்களம் அப்துல்லாஹ் பொருளாள ராகவும் மற்றும் இளைஞர்கள், மகளிரணியினர் சிறப்பாக இடம்பெற்றுள்ள நிர்வாகி களுக்கு இக்கூட்டம் வாழ்த்துக் களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

துஆவுடன் இக்கூட்டம் நிறைவுபெற்றது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்