Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Thursday, February 15, 2007
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு தலைவர் தேர்தல் நடத்தும் வரை இ.யூ.முஸ்லிம் லீக் போராட்டம் தொடரும் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு


சென்னை, பிப்.15- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு தலைவர் தேர்தல் நடத்தும் வரை இ.யூ.முஸ்லிம் லீக் போராட்டம் தொடரும் என தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரியும், வக்ஃபு வாரியத்திற்கு முழுநேர தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஒ.) நியமிக்கக்கோரியும், அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பாளர்களை நியமிக்க வலியுறுத்தியும், கடந்த 26 மாதங்களாக வக்ஃபு வாரியத்தை அமைக்காமல் அதன் பணிகளை முடக்கிய தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 14.02.2018 புதன்கிழமை இன்று மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை சென்னை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (முன்னாள் எம்.பி.,) அவர்கள் தலைமையில், வக்ஃபு வாரிய உறுப்பினர்களான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., (மாநில பொதுச்செயலாளர்), எம்.எஸ்.ஏ. ஷாஜகான் (மாநில பொருளாளர்) ஆகியோர் முன்னிலையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது:-

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க இந்த ஆர்ப்பாட்டம் நடைb பற்றுகொண்டிருக்கிறது. நாம் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிற பின் பக்கம்தான் ஒருகோடி மதிப்பில் கட்டப்பட்ட வக்ஃபு வாரிய அலுவலகம் இருக்கிறது. 6500க்கும் மேற்பட்ட வக்ஃபு வாரிய பரிபாலன சொத்துக்கள் உள்ளது. கடந்த காலங்களில் திறமை வாய்ந்த, சட்ட அனுபவம் தெரிந்த அறிஞர்களை கொண்டு செயல்பட்டு வந்தது. அண்ணன் கவிக்கோ அப்துல் ரஹ்மான், அதற்குமுன் இசைமுரசு நாகூர் ஹனீபா, அப்துல் லத்தீப் போன்றோர் திறம்பட வழிநடத்தி வந்தார்கள்.

அதேபோன்று அப்துல் ரசாக் போன்ற வழக்கறிஞர்களும் வழி நடத்திருக்கிறார்கள். வக்ஃபு போர்டு மிகச்சிறந்த அறிஞர்களை கொண்டு இயங்கி வந்தது. கடந்த ஆட்சியில் தமிழ்மகன் உசேன் தலைவராக நியமிக்கப்பட்டார். குளறுபடிகள் எழுந்ததின் காரணமாக அவர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அதன்பிறகு வக்ஃபு வாரியத்திற்கு பல்வேறு கட்டங்களில் உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. எம்.பி. ஒருவர் நியமிக்க வேண்டும் என்பதால் அருமை நண்பர் அன்வர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் இருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் நம்முடைய பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கரும், திமுகவை சேர்ந்த செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்ட ஆளுநரால் அறிவிக்கப்பட்டது.

வக்ஃபு வாரியத்திற்கு லட்சக்கணக்கில் வருமானத்தை வழங்கும் பள்ளிகளை நிர்வகிக்கும் முத்தவல்லிகள் சார்பில் டாக்டர் ஹாஜா கே. மஜீத்தும், அக்பர் அலி, பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சிராஜ்தீன், அஜ்மல்கான் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டனர். சுன்னத் மற்றும் ஷியா ஜமாஅத் பிரிவில் தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இதுவரை சுன்னத் தலைமை காஜியும், ஷியா தலைமை காஜியும் நியமிக்கப்பட்டு வந்த நிலையில். மத்தியில் பா.ஜ.க. அரசு ஏற்பட்ட பிறகு அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு ஆண்களை நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, பெண்களை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது மகள் பாத்திமா முஸப்பர், ஷியா ஜமாஅத்தை சார்ந்த ஹாதியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆக 9 பேர் தேர்வு செய்யப்பட்டு அரசு கெசட்டில் வெளியிடப்பட்டது. இரண்டு பேர் அரசு சார்பில் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஒருவராக ஏற்கனவே ராஜினாமா செய்த தமிழ்மகன் உசேனை நியமித்திருக்கிறது. ஒரு. ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்க வேண்டும். அனைவரையும் ஆளுநரால் அறிவிக்கப்பட்ட பிறகும் வக்ஃபு வாரிய தலைவர் தேர்தலை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாதது ஏன்? அப்படி தேர்ந் தெடுக்கப்பட்டிருந்தால் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டிருக்கும்.

சட்ட ரீதியாக எல்லாம் செய்துவிட்டு ராஜினாமா செய்தவரையும் நியமனம் செய்துவிட்டு காலம் கடத்துவது ஏன். தமிழக அரசு எல்லா துறையிலும் மந்தமான நிலையில் இருப்பது போல வக்ஃபு வாரியத்திலும் மந்த நிலையை கடை பிடிக்கிறது. இது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம். எதிராக அல்ல. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 2016ம் ஆண்டு வெற்றி பெற்றவுடன் புதிய அமைச்சரவை பட்டியலை மாலையில் அறிவிக்கிறார். அந்த நேரத்தில் நாங்கள் கலைஞரை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறோம். பின்னர் வெளியே வந்த போது செய்தியாளர்களிடத்தில் மூச்சுக்கு 300 முறை முஸ்லிம்களை பற்றி பேசும் ஜெயலலிதா இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று எங்களுடைய வருத்தத்தை தெரிவித்தோம். மறுநாள் காலையில் நிலோபர் கபிலை அமைச்சராக அறிவித்தார். ஏன் இதை சொல்கிறேன் என்றால் அவருடைய எதிரி கலைஞர் வீட்டுக்கு சென்று அங்கே தெரிவித்த கருத்துக்கு உரிய முக்கியத்துவத்தை ஜெயலலிதா வழங்கினார். இதை எங்கள் சுயநலத்திற் காக அப்போது நாங்கள் சொல்லவில்லை. சமுதாய நலனுக்காக கூறினோம்.

அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறுபவர்கள் சொந்த நலனுக்காகத்தான் பதவியை அனுபவிக்கிறார்கள். உண்மையாக அவருடைய வழியில் ஆட்சி நடத்துபவர்கள் என்றால் வக்ஃபு வாரியத்திற்கு தலைவர் தேர்தலை நடத்த வேண்டும். வக்ஃபு வாரியத்திற்கு 1000 கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஒ) இருந்தால்தான் இதையெல்லாம் நல்ல முறையில் நடத்த முடியும்.

வக்ஃபு வாரியத்திற்கு சுகாதார இயக்குனரை கூடுதல் பொறுப்பாக நியமித்திருக்கிறார்கள். அவர் சுகாதரத்தை பார்ப்பாரா? வாரியத்தை கவனிப்பாரா? இப்படிப்பட்ட ஒரு கேவலமான நிலை நீடித்திருக்கிறது.

எனவே தலைமை நிர்வாக அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும்.தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்கள் உள்ளது. வக்ஃபுக்கு 1000 கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. அதனை நிர்வகிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும். 18 மாவட்டத்திற்கும் சேர்த்து ஒரு கண்காணிப்பாளர் என்று நியமித்திருக்கிறார்கள். அவர் ராக்கெட்டில் போய் பணியாற்ற முடியுமா? கார்கூட கொடுக்கவில்லை. தமிழக அரசு வக்ஃபு வாரியத்தை பாரபட்சமாக ஓரவஞ்சனையில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறேன். நாங்கள் இதுபோன்று ரோட்டிற்கு வந்து போராடியது கிடையாது.

எங்களின் உரிமையான வக்ஃபு வாரியத்திற்காக ரோட்டிற்கு வந்திருக்கிறோம். நியாயம் கிடைக்கும் வரை வீட்டிற்கு போக மாட்டோம். வக்ஃபு போர்டு தலைவர் தேர்தலை உடனே நடத்த வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் ஓயாது.

அடுத்த கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் தளபதி மௌலானா ஷபீகுர் ரஹ்மான், காயல் மகபூப், கே.எம். நிஜாமுதீன், மில்லத் இஸ்மாயில், ஆடுதுறை ஷாஜகான், எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ், மாவட்ட தலைவர்கள் எம். ஜெய்னுல் ஆபிதீன், பூவை முஸ்தபா, யூசுப் குலாம் முஹம்மது, செய்யது இப்ராஹிம் ,மகளிரணி ஏ.கே. தஷ்ரீப் ஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்..

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்