Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, July 17, 2018 4 Zul-Qida 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Monday, April 9, 2007
முஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு


முஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு திருச்சி ஏப்,9 முஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில புதிய மாநில நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டி-10 ஹோட்டலில் 07.04.2018 சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் முஸ்லிம் யூத் லீக் தேசிய பொதுச்செயலாளர் சி.கே. ஜுபைர் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.சாதிக்குல் அமீன் கிராஅத் ஓதினார். கூட்டத்தில் அனைத்து வட்டார மற்றும் கிராமப் புரங்களில் முஸ்லிம் யூத் லீகை அமைப்பது குறித்து வருகை தந்த நிர்வாகிகள் விரிவாக பேசினர்.

பின்னர், இளைஞரணி சார்பாக மாநில மாநாடு நடத்த வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை எடுத்து கூறினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் கீழ்கண்டவர்களை தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகி களாக அறிவிப்பு செய்தார்.

புதிய நிர்வாகிகள்

மாநில தலைவராக பள்ளப்பட்டி எம்.கே முஹம்மது யூனூஸ், மாநில பொதுச் செயலாளாராக சென்னை எஸ். அன்சாரி மதார், மாநில பொருளாளராக ஆயப்பாடி ஏ.அபு பாரீஸ், மாநில துணைத் தலைவர்களாக கடையநல்லூர் எஸ்.கே.எம் முஹம்மது ஹபிபுல்லா, பாம்புக்கோவில் ஏ. செய்யது பட்டாணி, கூடலூர் எஸ். முஸ்தாக்,

மாநில செயலாளர்களாக திருப்பூர் எம்.சிராஜுதீன், பேர்ணாம்பட்டு முஹம்மது தைய்யூப், கம்பம் முஹம்மது சாதிக் அலி, சேலம் ஹசன் ஜக்கரிய்யா, கோட்டக்குப்பம் முஹம்மது இல்யாஸ் ஆகியோரும், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளராக எம். கீழை மனாஜிர், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளராக என்.கே அமீருத்தீனும், மேலும் மூன்று மண்டலங்களுக்கான ஒருங் கிணைப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

முஸ்லிம் யூத் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக பாம்புகோவில் சந்தை ஏ. செய்யது பட்டாணி, நீலகிரி முஹம்மது பைசல், முஹம்மது ஜமான் ஆகியோரை நியமிக்க தேசிய நிர்வாகத்திற்கு இக்கூட்டம் பரிந்துரை செய்கிறது.

தலைவர் பேராசிரியர் பேச்சு

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில நிர்வாகி களை அறிவிப்பு செய்து உரை யாற்றியதாவது:-

முஸ்லிம் யூத் லீகின் மாநில நிர்வாக செக்ரிடேரியட் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும். மாநில செயலாளர்களும், மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் ஒருங்கிணைந்த முறையில் அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம் யூத் லீக் அமைப்பை விரிவுபடுத்தக்கூடிய பணிகளை அவ்வப்போது செய்ய வேண்டும். முஸ்லிம் யூத் லீகின் மாநில நிர்வாகிகள் வங்கி கணக்கை துவக்கி அதை முறையாக பராமரிப்பதோடு யூத் லீகினுடைய செலவினங் களுக்கான நிதி ஆதாரத்தை உருவாக்கி தங்களின் பணிகளை தாங்களே செய்து செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் தலைமையை நம்பி இருக்கக்கூடாது.

ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் முஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு கிளையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைமைக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும். இந்த அடிப் படையிலு இந்த நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்படும் என்ற நம்பிக்கையோடு இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை அறிவிப்பு செய்து அவர்களின் பணி தாய்ச்சபையின் வளர்ச்சிக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசி னார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன :

வருகிற ஜுலை இறுதியில் மாநில அளவிலான முஸ்லிம் யூத் லீக் மாநட்டை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் தேசிய தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் கேரள மாநில நிர்வாகிகள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

காவிரி நதிநீர் பிரச்சினை

தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரியில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு 6வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும், அமைக்காத மத்திய பிரதமர் மோடி அரசை இக் கூட்டம் கண்டிக்கிறது. மேலும், தமிழக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசையும் இக்கூட்டம் கண்டிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசாங்கம் விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கமலும், அனைத்து அரசியல் கட்சி தலைவரகளை சந்திக்க மறுப்பதோடு, உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதித்து தமிழர்களை வஞ்சித்து வருகிறது. இதை இக்கூட்டம் கண்டுக்கிறது.

எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்

எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு, கைது நடவடிக்கையை மேற்கொள்ள தடைவிதித்த உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு கண்டிக்கத்தக்கது. தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினரால் சாதிய ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இத்தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. ஸ்டெர்லைட்டை மூட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் தாமிர ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டுவதோடு, 55வது நாளாக தொடர்ந்து போராடி வரும் பொதுமக்களின் வாழ் வாதாரத்திற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ரயில்வே மேம்பாலம்

திருச்சியில் நீண்டகாலமாக ரயில்வே ஜங்சன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது, மேலும், விபத்துக்கள் அதிகமாகவும் நேரிடுகிறது. ஆகவே, விரைவில் மேம்பாலம் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு மென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திருச்சி வாய்க்காலில் சாக்கடை நீர்

திருச்சி உய்யங்கொண்டான் வாய்க்காலில் சாக்கடை நீர்கள், கி.ஆ.பெ அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து கழிவுகள் கலக்கப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதிப் படுகிறார்கள். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உய்யங் கொண்டான் வாய்க்காலை சீர்செய்து அங்குள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் வாழ வழிவகை செய்ய இக்கூட்டம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங் கள் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.

இறுதியாக முஸ்லிம் யூத் லீக் மாநில தலைவர் எம்.கே. முஹம்மது யூனுஸ் நன்றி கூறி துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்