Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, December 14, 2018 5 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, July 6, 2007
முத்தலாக் சொல்வதை தடுப்பது தான் நிக்காஹ் ஹலாலா 2 மனைவிகளை திருமணம் செய்தவர்களின் சதவிகிதத்தில் முஸ்லிம்கள் தான் குறைவு ஷரியத் சட்டத்தில் கைவைத்தால் வேடிக்கை பார்த்துகொண்டிருக்க மாட்டோம் நிக்காஹ் ஹலாலா, பலதார மணம் குறித்து விளக்கமளித்து ஈரோட்டில் செய்தியாளர்கள் மத்தியில் பேராசிரியர் கே.எம்.கே பேட்டி


ஈரோடு, ஜூலை. 06-முத்தலாக் சொல்வதை தடுப்பது தான் நிக்காஹ் ஹலாலா. 2 மனைவிகளை திருமணம் செய்தவர்களின் சதவிகிதத்தில் முஸ்லிம்கள் தான் குறைவு. முஸ்லிம்களின் உயிரினும் மேலான ஷரியத் சட்ட த்தில் கைவைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று (04-07-2018) புதன் கிழமை ஈரோடு தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் நிக்காஹ் ஹலாலா, பலதார மணம் குறித்து விளக்கமளித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி அளித்தார்.

அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

ஊடக நண்பர்கள்

ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக இங்கு வந்த இடத்தில், ஊடக நண்பர்களாகிய உங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. வெகு நாட்க ளுக்கு முன்பாக உங்களை நான் இங்கு சந்தித்தித்துப் பேசியிருக் கின்றேன். தற்போது மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்குக் கிடைத்த பாக்கியம். சமுதாயத்தையும், நாட்டையும் பற்றி உள்ளங்கள் சேர்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பே இதுபோன்ற சந்திப்புகள். இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து ள்ள மாவட்ட முஸ்லிம் லீகிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேச ஒற்றுமை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -

National Unity, Communal Amity, Preservation of Cultural Identities of Communities - இந்திய தேசிய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், சிறு பான்மை மக்கள் மட்டு மின்றி இந்நாட்டின் அனைத்து வகுப்பினரும் அவரவர் மத ஆச்சாரங்கள், கலாச் சாரங்களின் தனித் தன்மை யைப் பாதுகாப் பதற்காகப் பாடுபடும் கட்சியாகும்.பொதுவாகவே நம் நாட்டில் ஒவ்வொரு மதத் தினருக்கும் - அவரவர் மத அடிப்படையிலான நம்பிக்கை, உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில்தான் தனியார் சட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன. தனியார் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இந்துக்களுக்கு இந்து தனியார் சட்டம் உள்ளது. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவ தனியார் சட்டம் உள்ளது. அதுபோலவே முஸ்லிம் களுக்கு முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டம்

முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் என்பது இறைவேதம் திருக்குர்ஆன், இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகள், 1400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தத் தனியார் சட்டம்தான் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளம். நான் முஸ்லிம்; அவர் இந்து; இவர் கிறிஸ்துவர் என்ற அடை யாளம் அவரவருக் கான தனியார் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. தலையில் தொப்பி அணிந்திருப்பதோ, துண்டு அணிந்திருப்பதோ, பெயரை ‘காதர் முகைதீன்’ என்று வைத்திருப்பதோ அடையாளம் என்று கூறிவிட முடியாது. இவை எதுவும் இல்லாமலோ, ‘காதர் முகைதீன்’ என்றில்லாமல் ‘கதிரவன்’ என்று பெயர் வைத்துக்கொண்டோ கூட ஒரு முஸ்லிம் இருக்க முடியும். இந்த வெளிக்கோலங்கள்தான் பலரால் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது என்றாலும் கூட, உண்மையான அடை யாளம் என்பது அவரவர் தனியார் சட்டத்தைப் பின்பற்றுவதில் மட்டுமே அமைந்துள்ளது.

சிவில் சட்டங்கள்

ஓர் இந்தியக் குடி மகனாக இந்நாட்டின் கிரிமினல் சட்டம், சிவில் சட்டங்கள் அனை வருக்கும் பொதுவானது. மனித வாழ்வின் அனைத்து அம்சங்களுக்குமானது. இதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் தனியார் சட்டம் என்பது, மத அடிப்படையிலான திருமணம், விவாகரத்து, சொத்து பாகப் பிரிவினை, வணக்க வழிபாடு ஆகியவற்றைச் செய்து கொள்வதற்கானது மட்டுமே. ஒரு குறுகிய வட்டத்தி ற்குள்ளானதுதான் இந்தத் தனியார் சட்டம். இதுதான் அவர்களது அடையாளம். """"நான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல; எந்தக் கடவு ளையும் நம்புப வனல்ல!"" என்று கூறுபவருக்கு இந்த அடையாளம் பொருந்தாது. அவருக்கு தனி அடையாளம் உள்ளது.எல்லோரும் ஒரே அமைப்பில் திருமணம் செய்துகொள்ளவோ, விவா கரத்து செய்துகொள்ளவோ, வணக்க வழிபாடுகளைச் செய்யவோ, சொத்துக்களைப் பிரித்துக்கொள்ளவோ இயலாது. இந்த அம்சங்களில் மட்டும் அவரவர் மத நம்பிக்கை அடிப்படையில் பின்பற்றிக்கொள்வதற்குத்தான் இந்தத் தனியார் சட்டம் வழிவகுக்கிறது. நாங்கள் கூற வருவது யாதெனில், முஸ்லிம் தனியார் சட்டத்தை வைத்துதான் அவர்களின் அடையாளமே அமைந்துள்ளது. அந்த அடை யாளத்தையே அழிக்கும் வகையில் முஸ்லிம் தனியார் சட்டத்தையே மாற்ற முயற்சிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

முத்தலாக் தடை சட்டம்

எடுத்துக்காட்டாக, மத்திய அரசு அண்மையில் முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்தது. ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூறி விவாகரத்து செய்வது என்பது நபிகள் நாயகம் காலத்தில் நடந்திருக்கிறது. நபிகள் நாயகம் காலத்தில் ஒரு சில சம்பவங்கள் நடந்திருக் கின்றன. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுத்து கண்டித் திருக்கிறார்கள். ஆக, இஸ்லாமில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தாலும் - அது மிகக் கடுமையான முறை; அவ்வாறு செய்யக்கூடாது என்று கண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொல்வதை இஸ்லாமிய சட்டம் அனு மதிக்கவில்லை; ஆனால் நடைமுறையில் வந்து விட்டது. அவ்வாறு ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொல்வதைத் தவறு என்று உச்ச நீதமன்றம் வழங்கிய தீர்ப்பை, முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியா முழுக்கவுள்ள அனைத்து மஹல்லா ஜமாஅத்துகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியும் இருக்கிறது. முஸ்லிம்கள் பலரும், சட்ட நிபுணர்களும் இதுகுறித்து வலியுறுத்திச் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இங்கே கவனிக்க வேண் டியது என்னவெனில், அந்த முத்தலாக் தடைச் சட்டத்தின் படி - தன் மனைவியை விவா கரத்து செய்த ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பது, ஒவ்வொரு வீட்டிலு முள்ள கணவரை கிரிமினல் குற்றவாளியாக்கும் செயல். ஆக, ஊசiஅiயேடளைiபே ய ஊiஎடை டுயற ளை ஊடினேநஅயேடெந

- சிவில் சட்ட த்தின் அடிப்படை யிலானதைக் க்ரிமினல் குற்றமாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்றுதான் ஊடகங்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பாராளு மன்றத்தில் அனைத்து எதிர்க் கட்சியினர் என அனைவரும் கூறினர்; நாங்களும் கூறி வருகிறோம். கூடுதலாக, இந்த நாட்டிலுள்ள நான்கு கோடிக்கும் அதிகமான முஸ்லிம் பெண்கள் - """"எங்களுக்கு இந்தச் சட்டம் தேவையில்லை"" என்றும் கூறி யிருக்கின்றனர். இவ்வளவும் இருந்தும் எதையுமே கண்டு கொள்ளாமல் இன்றைய மத்திய பாஜக அரசு எதேச்சாதிகாரமாக தன் கருத்தைத் திணிப்பதற்கு முயல் வதைத்தான் நாங்கள் வன்மை யாகக் கண்டிக் கின்றோம். தன் கருத்தைத் திணிப்பது -

iஅயீடிளவைiடிn ளை உடினேநஅயேடெந; ரயேஉஉநயீவயடெந; வை ளாடிரடன nடிவ நெ டநபயடளைநன என்ற அடிப் படையில்தான் இந்த முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக நாங்கள் அவ்வளவு தெளி வாகவும், தீவிரமாகவும் இருக்கி றோம்.இந்த அகால நேரத்தில் உங்கள் வசதிக்குறைவை யெல்லாம் பொருட்படுத்தாமல் ஊடக நண்பர்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள். கல்வி யாளர்களான நீங்கள் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக சரியான கருத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சிறிது விரிவான விளக்கத்தை நான் தருவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன். எனவே, சிரமம் பாராமல் கவனிக்க வேண்டுகிறேன்.

பலதார மணம் ஞடிடலபயஅல

எனும் பலதார மணம் இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘நிகாஹ் ஹலாலா’ இஸ்லாமில் உள்ளது. இதை எதிர்த்து பாஜக மகளிர் அமைப்பினர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருக்கின்றனர். நீதிமன்றமும் அதைப் பரிசீலனைக்கு எடுத்திருக்கிறது. இதுகுறித்த கருத்தைப் பதிவு செய்யுமாறு இந்திய அரசும் கேட்டிருக்கிறது. இது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.முத்தலாக் என்பது சட்ட த்திற்குப் புறம்பானது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. சிவில் சட்டத்தைக் க்ரிமின லாக மாற்ற முயற்சிப்பதால் - அவ்வாறு """"அந்த சட்டத் திலுள்ள 3 ஆண்டு சிறைத் தண்டனை எனும் அம்சத்தை மாற்றிவிட்டு இச்சட்டத்தைக் கொண்டு வாருங்கள்"" என்று நாம் கூறியிருக்கின்றோம்; அது செய்யப்படவில்லை.இவையெல்லாவற்றுக்கும் மேலாக - திருக்குர்ஆனில் சொல்லப் பட்டுள்ள ‘நிகாஹ் ஹலாலா’வைத் திருத்துவதற்குத் தற்போது முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் உண்மையான பொருள் """"குர் ஆனையே திருத்த வேண்டும்"" என்பதுதான். திருக்குர்ஆன் இந்தத் திருக்குர்ஆனின் அடிப்படையிலான இஸ்லாமிய சட்டப்படி, தலாக் என்பதை நினைத்தவுடன் ஒருவர் கொடுத்து விட இயலாது. 3 தவணைகளில் அதைக் கொடுக்க வேண்டும். முதல் தலாக் கொடுப்பதையே கூட உடனடியாகச் செய்துவிட முடியாது. ஒரு கணவனுக்கு தன் மனைவியுடன் விவகாரம் ஏற்படுகிறதெனில், அவளது அந்தச் செயலைத் தடுக்க படுக்கையை விட்டும் தள்ளி வைக்க வேண்டும்; அப்போதும் கேட்காவிட்டால் கண்டிக்க வேண்டும்; அப்போதும் கேட்கவில்லையெனில், அவ்விரு குடும்பத்தாரிலும் இத்தம்பதியின் நலவை மட்டுமே சிந்திக்கக் கூடிய பெரியவர்களை வைத்து சமாதானம் பேச வேண்டும். இவை எதற்கும் சரிப்பட்டு வரவில்லையென்றால் மட்டும்தான் முதல் தலாக்கே கூற முடியும்.அவ்வாறு முதல் தலாக் கூறப்பட்ட பின், அப்பெண் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் அவள் கருவுற்றிருக்கவில்லையெனில் அந்த தலாக் நிறைவேறி விடும். இந்த 3 மாத கால அவகாசத்திற்குள், நல்ல சூழல் ஏற்பட்டால் கணவனும் - மனைவியும் சேர்ந்துகொள்ளலாம். எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால், அந்த 3 மாத கால அவகாசம் தாண்டிவிட்டால், அவ்விருவரும் - மஹர் நிர்ணயித்து, சாட்சிகள் முன்னி லையில் மீண்டும் புதிதாகத் திருமணம் செய்துகொள்வதன் மூலமே சேர்ந்து வாழ முடியும்.இரண்டாவது முறையும் ஏதோவொரு விவகாரம் காரணமாக தலாக் சொல் கிறான் என்றால், அப்போதும் 3 மாத கால அவகாசத்திற்குள் சேர்ந்து கொள்ள வேண்டும். காலம் தாண்டிவிட்டால் அவ் விருவரும் புதிதாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.மூன்றாவது முறையும் கணவன் தலாக் கூறிவிட்டால், அத்தோடு அவர்கள் தொடர்பு முடிந்துவிட்டது. அதாவது அக்கணவன் மீண்டும் தன் மனைவியாக இருந்தவளை மீட்டிக்கொண்டு வாழ இயலாது. அதாவது தலாக் கூறப்பட்ட மனைவியை மீட்டெடுக்க இஸ்லாம் தந்துள்ள வாய்ப்பு 2 முறை மட்டுமே. அவள் மனமுவந்து வேறொருவரைத் திருமணம் செய்து, ஒருவேளை அவ்விருவருக்கிடையில் பிரிவு என்று ஏற்பட்டால் மட்டுமே அப்பெண்ணை முந்தைய கணவர் புதிதாகத் திருமணம் செய்து வாழ முடியும். இதுதான் தலாக் தொடர்பாக இஸ்லாம் கூறும் சட்டம்.""""இலகுவாக தலாக் சொல்லி விடாதீர்கள்! இத்தனை பிரச்சி னைகள் அதில் உள்ளன"" என்று அவர்களை தலாக் சொல்வதை விட்டும் தடுக்கும் வகையில்தான் இச்சட்டம் அமைந்துள்ளது. மனித வாழ்வில் இதுபோன்ற நிகழ்வு கள் ஏற்பட்டால் அதற்குத் தீர்வு சொல்லும் வகையில் இவ்வாறு சட்டங்கள் உள்ளனவே தவிர, இச்சட்டம் இருப்பதாலேயே உலகெங்கும் கணவர்கள் தலாக் சொல்லிவிடுகிறார்கள் என்று பொருளல்ல.

தவறான பரப்புரைகள்

அதுபோல, முஸ்லிம் தனியார் சட்டத்தில் பலதார மணத்திற்கு உள்ள அனுமதி குறித்தும் பரவலாக திட்ட மிடப்பட்டே தவறான பரப்பு ரைகள் மேற் கொள்ள ப்பட்டு வருவதால், அது குறித்தும் இங்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.""""நீங்கள் இரண்டு, மூன்று, நான்கு மனைவியர் வரை திருமணம் செய்து கொள்ளலாம்... அவ்வாறு செய்தால், அந்நால்வரிடமும் சமமாக நடந்துகொள்ள வேண்டும்!"" என்ற கருத்தில் திருமறை குர்ஆன் கூறுகிறது. இச்சட்டம் கூற வருவது என்னவெனில், விதவைகள் - அநாதைப் பெண்களுக்கு வாழ்வு கொடுத்தல் போன்ற சூழ்நிலை வரும்போது இரண்டு, மூன்று, நான்கு மனைவியர் வரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று அனுமதியை மட்டும் வழங்கியிருக்கிறதே தவிர, """"எல்லோரும் நான்கு திருமணம் செய்துகொள்ளுங்கள்"" என்று கட்டாயப்படுத்தவில்லை.ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்வதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. ஒரேயொரு மனைவியைக் கட்டியவரே மிகச் சரியாக நடக்க முடியாத சூழல் இருக்க, ஒன்றுக்கும் மேற்பட்டதை எப்படி நாம் வலியுறுத்த மாட்டோமோ அதே போல இஸ்லாமிய சட்டமும் வலியுறுத்தவில்லை. மாறாக, ஒருவேளை அவ்வாறு சூழல் ஏற்பட்டால் - அனைவரிடம் மிகச் சரியாக - நியாயமாக - பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறது. எனவேதான், """"அவ்வாறு அனைத்து மனைவியரிடமும் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் கருதினால், ஒரேயொரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து திருப்திபட்டுக்கொள்!"" என இஸ்லாம் கூறுகிறது.மூன்று, நான்கு மனைவியரைத் திருமணம் செய்வது ஒருபுறமிருக்கட்டும். இந்தியாவில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரப்படி, இரண்டு மனைவியரைத் திருமணம் செய்தவர்கள் சதவிகிதத் திலேயே ஆகக் கடைசி நிலையில்தான் முஸ்லிம்கள் உள்ளனர் என்பது யதார்த்தம். இவ்வாறாக, வழிகாட்டலு க்காக வேதத்தில் உள்ள சட்ட த்தைத் தேவையே இல்லாமல் கிளறியெடுத்து, """"அதை நான் மாற்றப் போகிறேன்..."" என்று துணிவது என்பது, இந்திய முஸ்லிம்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ள அடையாளத்தை அழிக்கும் முயற்சியே.

கலாச்சார அடையாளம்

சுருக்கமாக நாங்கள் கூற விரும்புவது என்னவெனில், முஸ்லிம் தனியார் சட்டம் என்பதுதான் இந்த இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம் மக்களின் கலாச்சார அடையாளம். இந்திய அரசியல் சாசனத்தில் இந்த தனியார் சட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாதுகாப்பை இல்லாமலாக்கும் வகையில் இன்றைய மத்திய அரசு தனது பிடிவாதத்தால் ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கை பார்க்க இயலாது.

ருnநேஉநளளயசல iவேநசகநசநnஉந in ஞநசளடியேட டுயற ளை யn யவவநஅயீவ வடி நசயனiஉயவந வாந டயற.

என்ற அடிப்படையில் கடுமையாக கண்டிப்போம்; எதிர்ப்போம்; போராடுவோம்; அப்போராட்டம் எந்த நிலைக்குச் சென்றாலும் கடைசி வரை நிற்போம். இவ்வாறு அமைதியாக நடக்கும் இப்போராட்டங்கள் காலப்போக்கில் - முந்தைய பாபரி மஸ்ஜித் விவகாரம் போல அசாதாரண நிலைக்கும் கூட சென்றுவிடும். அப்படி அது எந்த நிலைக்குச் சென் றாலும் நாங்கள் முன்வைத்த காலைப் பின்னெடுக்க மாட் டோம்.

மத நம்பிக்கை

இந்தியாவைப் பொருத்த வரையில், மத நம்பிக்கையில் கைவைத்தால் அது சீரியஸான நிலைக்குத்தான் செல்லும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை -

நுஎநசல inஉh றந யசந ய உடிளேவவைரவiடியேட யீயசவல

. """"ஒரு முஸ்லிம் லீகன் தனது எல்லா நிலைகளிலும் அரசின் சட்டங்களுக்கு உட்பட்டே நடந்துகொள்ள வேண்டும்; ஒரு நியூஸன்ஸ் வழக்கில் கூட சிக்கக் கூடாது!"" என்று எங்களுக்கு காயிதே மில்லத் அறிவுறுத்தியிருக்கிறார். அதனடிப்படையில்தான் நாங்கள் இதுகாலம் வரை செயல்பட்டுக் கொண்டிரு க்கிறோம். ஆகவே, இவ்விஷய த்தையும் சட்ட ரீதியாகவே நாங்கள் எதிர்க்கிறோம்.மொத்தத்தில், முத்தலாக் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு க்குப் பிறகு, அப்படி யெல்லாம் முத்தலாக் சொல்லும் நிலை இன்று இல்லை. தமிழகத்தில் சுத்தமாகவே இல்லை. தமிழகத்தில் மாவட்டந் தோறும் காஜிகளை தமிழக அரசு நியமித்திருக்கிறது; அவர்களுக்கு ஊதியத்தையும் கூட அறிவித்திருக்கிறது. அது பாராட்டுக்குரியது. அந்த காஜிகள் தமது பணியை மிகச் சிறப்பாக செய்துகொண்டு மிருக்கின்றனர். சமூகத்தில் நடைபெறும் செயல் பாடுகளை அவர்கள் தத்தம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்தத் தீர்ப்பே பொதுமக்களுக்குப் போதுமான அச்ச உணர்வை வழங்கியிருப்பதால் அந்தத் தீர்ப்பே போதும். சட்டத்திருத்தமெல்லாம் தேவையே இல்லை. அதிலும், சிவில் சட்டத்திற்குட்பட்ட பிரச்சினையான முத்தலாக் விவகாரத்தில், தொடர்புடைய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று அறிவித்து, சிவில் சட்டத்தை கிரிமினல் ஆக்க பண்ண முயற்சிப்பதை அறவே ஏற்க இயலாது.

கேள்வி:- ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு மானியத்தை ஒதுக்கி அறிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்:- மத்திய அரசு ஹஜ் பயணத்திற்கு இதுநாள் வரை கொடுக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது. ஆனால் தமிழக அரசோ ஹஜ் பயணத்திற்கு மானியத்தை வழங்குவதாக அறிவித் திருக்கிறது. இதன்மூலம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் ஒரு முன்னுதாரணமாக விளங் குகிறது.

ஹஜ் பயணம்

இந்தியாவிலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1 லட்சத்து 75 ஆயிரம் ஹாஜிகளுக்காக இதுவரை மத்திய அரசு செலவழித்துள்ளது வெறும் 50 கோடி ரூபாய் மட்டும்தான் என்று அறிவித்திருக்கிறது. மானியம் என பல ஆயிரம் கோடிகள் செலவிடப்படுவ தாகத் தவறான பரப்புரைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசே -- வெறும் 50 கோடி ரூபாய்தான் செலவழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. இது மிகச் சிறிய தொகை மட்டுமே.ஆனால் தமிழக அரசு ஹஜ் கமிட்டிக்கு மட்டும் 70 லட்சம் ரூபாய் நிர்வாகச் செலவினங் களுக்காக வழங்கியிருக்கிறது. அது தவிர, ஹஜ் பயணியருக்கு மானியமாக 6 கோடி ரூபாய் தொகையை அறிவித்து, நிதியையும் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்களை நாங்கள் மனதாரப் பாராட்டுவதோடு, தமிழக அரசைப் பின்பற்றி, பிற மாநில அரசுகளும் மானியத்தை வழங்கினால் வரவேற்போம்.ஆனால் ஒன்று! """"எங்கள் பணத்தை வாங்கித்தான் முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்கள்"" என்று சொல்லி விடக் கூடாது. இப் பணம், ஹாஜிகளின் பயணச் செலவில் சிறிய அளவைக் குறைக்கும், அவ்வளவுதான்.இவ்வாறு கே.எம்.கே. பேட்டி அளித்தார்.பேட்டின்போது ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் நூர் முஹம்மது சேட், தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப், தெற்கு மாவட்ட பொருளாளர் அஹமது சிராஜ், பாரத் பிரஸ் ஏ. ஷாகுல் ஹமீது, தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் பவானி பாசித், முத்து பாவா, அலாவுதீன் சேட், சிக்கந்தர், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் பவானி அமீனுத்ன், இனாயத்துல்லா, தெற்கு மாவட்ட எம்.எஸ்.எப். துணைத் தலைவர் முஹம்மது யாசர், துணைச் செயலாளர் முஹம்மது ஹாரீஸ், தெற்கு மாவட்ட எஸ்.டி.யூ. சபீர், பெருந்துறை நகரச் செயலாளர் ஜான் பாட்ஷா, மணிச்சடர் முகவர் இப்ராஹிம், திருச்சி மணிச்சடர் செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்