Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Saturday, October 20, 2018 9 Safar 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Saturday, August 11, 2007
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் துயர் துடைக்க தாராளமாக நிதி உதவி அளிப்பீர்


கேரள மாநிலம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுகிறார்கள். இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை தேடி செல்லுகிற கஷ்டங்களிலும் மூழ்கி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மழை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பை தேடி கோயம்பத்தூர், தேனி போன்ற மாவட்டங்களில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

நமது அண்டை மாநிலத்தில் அல்லல்பட்டு ஏங்கி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கப்பட இறைவன் அருளை எல்லோரும் வேண்டுவோம்.

மத்திய அரசின் இராணுவமும், மாநில அரசின் நிர்வாகமும், அரசியல் மற்றும் சேவை இயக்கங்களின் ஊழியர்களும், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு பெரும் அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல்வேறு அணிகளை சார்ந்த இளைஞர்கள், வெள்ள நிவாரண பணியாளர்களாக தங்களை ஈடுபடுத்தி பெரும் சேவையில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில தலைவர் ஆன்மீக பேரொளி செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையில் முஸ்லிம் லீக் முன்னணி தலைவர்கள் ஒன்றுகூடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதற்கு பெரும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் குறிப்பாக சென்னை, கடலூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு நிகழ்ந்த போது கேரள முஸ்லிம் லீக் தலைவர்கள் தங்களது அன்பு, சகோதர, சகோதரிகளுக்கு ஏற்பட்ட ஆபத்தாக நினைத்து பெரும் நிதி சேவையளித்து தமிழக மக்களுக்கு உதவி செய்தது என்றும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும்.

இப்போது கேரள சகோதர, சகோதரிகள் பாதிக்கப்படுகிற நேரத்தில் அவர்களுக்கு பக்க பலமாக இருந்து உதவிகள் புரிவது நமது தார்மீக கடமையாகும்.

கேரள மக்களின் துயர் துடைப்பதற்கு நம்மாலான உதவிகளை செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். வெள்ள நிவாரண பணிக்கு தாராளமாக உதவி புரிவதற்கு முந்தி வர வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் சார்பாக ஒரு வார காலத்திற்குள் கணிசமான நிதியை திரட்டி கொடுப்போமானால் கேரள மக்களின் துயர் துடைப்பதற்கு ஒரு சிறு பங்களிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த கடமையை ஒவ்வொருவரும் முன்னின்று நிவாரண நிதி சேர்த்து உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொல்லாத நேரத்தில் உதவிக்கு முந்துவது அல்லாஹ்வின் அருளுக்குரிய காரியமாகும். இத்தகைய உதவிக்கு ஒன்றுக்கு பத்தாக, எழுபதாக, எண்ணற்றதாக திரும்ப வரும் என்பது இறை நம்பிக்கை கொண்டவர்களின் நிறை நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் ஊறி திளைத்திருக்கிற சமூக சகோதர, சகோதரிகள் நிவாரண நிதியை கீழ்கண்ட முகவரிக்கு விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Name : IUML TN RELIEF FUND

Account Number : 030502000005282

Bank : INDIAN OVERSEAS BANK

Branch : MUTHIALPET, CHENNAI

IFSC Code : IOBA0000305

- பேராசிரியர்கே.எம். காதர் மொகிதீன் தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

பணம் அனுப்பவேண்டிய வங்கி விவரம்

பணம் அனுப்பியவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் :

044 - 2521 8786 / 2521 7890

9443839401, 8220228781, 9626441180

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்