Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Friday, December 14, 2018 5 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, September 14, 2007
* ஒட்டுமொத்த இந்தியாவையும் பலவீனப்படுத்தும் பா.ஜ.க. அரசு * வரும் நாடாளுமன்ற தேர்தலில் வலிமையான மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதில் காங்கிரஸ் கூட்டணிக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட அமைப்புகளை டெல்லியில் சந்தித்து பேசவும் திட்டம் கேரளா பானக்காட்டில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி


பானக்காடு, செப் 13- நிர்வாக திறனற்ற, மக்கள் உணர்வுகளை மதிக்காத, பணமுதலைகளுக்கு சாதகமான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் பலவீனத்தில் தள்ளியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வலிமையான மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதில் காங்கிரஸ் கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என கேரள மாநிலம் பானக்காட்டிலுள்ள கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் முன்னிலையில், அவரது இல்லத்தில் 11-09-2018 செவ்வாய் காலை 11 மணியளவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டி விவரம் வருமாறு:-

செய்தியாளர்கள்: பாரதீய ஜனதாவின் மத்திய அரசுடைய தற்காலச் செயல் பாடுகள் குறித்த உங்கள் கருத்து என்ன? வரும் 2019 மக்களவைத் தேர் தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் நிலைப்பாடு என்ன? தனிக் கூட்டணி அமைக்கும் திட்டமுள்ளதா? அல்லது தற்போதிருக்கும் நிலையில் தொடருவீர்களா? உங்கள் வலிமையை எப்படி வெளிப்படுத்தப் போகிறீர்கள்?

தலைவர் பேராசிரியர்: மிகச் சரியான கேள்வியை சரியான தருணத்தில் கேட்டிருக்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தல் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில், பாரதீய ஜனதா கட்சியின்நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, """"அஜய் பாரத்; அடல் பிஜேபீ"" எனும் முழக்கத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால் உண்மையில் தற்போது நடப்பது அஜய் பாரத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக, இவர்களின் நிர்வாகத் திறனற்ற மக்கள் உணர்வுகளை மதிக்காத பணமுதலைகளுக்குச் சாதகமான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் பலவீனத்தில் தள்ளியிருக்கிறார்கள்; இன்னும் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, நமது இந்திய நாட்டை வளமிக்கதாகவும், வலிமை மிக்க தாகவும் ஆக்கத்த தவறியதற்காக இது """"அஜய் பாரத்"" அல்ல! மாறாக """"றுநயமநநேன க்ஷாயசயவா"".

ரூபாய் மதிப்பு சரிவு

நான் ஏதோ பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்தித்தாள்களில் இவர் களின் நிர்வாகத் திறமை யின்மையைப் பறைசாற்றும் வகையில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இன்று வந்த செய்தித்தாளில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 72.5 என்ற அளவில் சரிந்துள்ளதை பெருஞ் செய்திகளாக வெளி யிட்டுள்ளன. ஆனால், இதே பாஜக அப்போது கடுமையாக விமர்சித்த நேரத்திலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல் பாட்டின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.5 என்ற அளவிலேயே இருந்தது. இன்று 72.5 ரூபாய் என்ற அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைச் சரித்துவிட்டு, எப்படி """"அஜய் பாரத்"" என்று மார்தட்டிக் கொள்ள இவர்களுக்கு நாவு எழுகிறது என்று தெரிய வில்லை.

வேலைவாய்ப்பு

இவர்கள் அரசாட்சியில், நம் நாட்டு மக்களைத் தன்னிறைவுள்ளவர்களாக ஆக்கியிருக்க வேண்டும்... இவர்கள் தேர்தலில் வாக்குறுதி யளித்த படி அனைவருக்கும் வேலைவாய்ப்பளித்திருக்க வேண்டும்... தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்... தொழில்வளம் அதிகரித்திருக்க வேண்டும்... இவையெதையுமே செய்யாமல் """"அஜய் பாரத்"" என்று சொல்வது நகைப்பிற்குரிதே. உண்மையைச் சொல்லப் போனால், இது இந்திய மக்களை ஏமாற்றக் கருதி முழங்கும் மிக மோசமான முழக்கமேயாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை

ஆனால், மோடி அவர்களது அந்த முழக்கத்தின் மறு பகுதியான """"அடல் பிஜேபீ"" (வலிமையான பாஜக) என்பது ஒரு வகையில் ஏற்புடையதே. ஆம்! இந்திய மக்களைப் பிரித்தாள்வதில் மிக வலிமையுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவின் வரலாற்றுப் பாரம்பரியமிக்க கலாச்சார, அரசியல் கொள்கைகளை யெல்லாம் சிதைப் பதில் வலிமை யுடன்தான் செயல்பட்டு வருகிறார்கள். நம் இந்திய நாட்டின் உயிர்மூச்சான ஜனநாயகத்தைச் சிதைப்பதில் வலிமையுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவின் வரலாற்றை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்னிகரற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டுமானால், அதற்காகக் காலமெல்லாம் சிந்தித்துச் செயலாற்றி, இன்று நமக்கு அழகிய அரசியல் சாசனத்தை வடிவமைத்துத் தந்த காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரது அந்த விலைமதிக்கவியலாத முயற்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இத்தனை காலம் அவை பாதுகாக்கப்பட்டே வந்தன. தற்போதோ அவற்றையும் சிதைக்கும் முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன.

காங்கிரஸ் கூட்டணி

அரசியல் கட்சிகளாக காங்கிரஸ், தெலுங்குதேசம், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் ஆகியோர் சிற்சில கருத்துக்களில் முரண்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாத்து, இந்த நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு வலிமை சேர்த்து நல்லவற்றைச் செய்யும் புனிதமான எண்ணத்தில் இவர்கள் யாரும் வேறுபட்டிருக்கவில்லை. அந்த வகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்தே இயங்குவார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் அக்கூட்டணிக்குத் தன் வலிமையான உறுதியான ஆதரவை என்றும் போல் தொடர்ந்து வழங்கும்.

டெல்லியில் கலந்தாலோசனை

இதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் அமைப்புகளையும் சந்தித்துப் பேசவிருக்கின்றோம். மஹாராஷ்டிரா, பிஹார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங் களிலிருந்து முஸ்லிமல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அமைப்பினர் இந்த நோக்கத்தை முன்னெடுப் பதற்காக எங்களுக்குக் கடிதம் மூலம் வேண்டுகோளும் விடுத்துள்ளனர். இவற்றை யெல்லாம் கருத்திற்கொண்டு முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அனைத்து அமைப்புகளையும் இந்தியத் தலைநகர் டெல்லியில் சந்தித்துப் பேசவும், கூட்டுக் கலந்தாலோசனை நடத்திடவும் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதன் முதற்கட்டமாக டெல்லியில் நாங்கள் விரைவில் கூடிப் பேசவுமிருக்கிறோம்.

தமிழகம்

தமிழகத்தில் இதற்கான முன்னெடுப்புகள் துவங்கி விட்டன. திமுகவுடன் பேசத் துவங்கியிருக்கிறோம். இந்த நாட்டில் மதச்சார்பற்ற மக்களின் வாக்குகளைச் சிதறாமல் ஒருங்கிணைத்து, வலிமையான மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழுக் கவனம் செலுத்தும்.

நான் மேற்சொன்ன நோக்கத்தை முன்னிறுத்தியே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் திட்டங்களும், செயல்பாடுகளும் அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரள வெள்ள நிவாரணம்

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கேரள வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழகத்திலிருந்தும், அகில இந்திய அளவிலும் மேற் கொள்ளப்பட்டுள்ள உதவி கள் குறித்து பேராசிரியர் பேசிய தாவது:-

இந்தக் கேரள மாநிலத்தில் பெருமழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளானதைக் கேள்வியுற்று, தமிழக மக்களாகிய நாங்கள் பெரும் மன வேதனையடைந்தோம். எங்கள் உணர்வுகளை உங்களுக்கான ஆறுதல் சொற்களைக் கொண்டும், எங்களாலியன்ற எங்களுக்குக் கடமையான உதவிகளைக் கொண்டும் எங்கள் ஆதரவை இயன்றளவுக்கு இந்தக் கேரள மக்களுக்காக வெளிப்படுத்தினோம். கேரள மக்களும், தமிழக மக்களும் அரசியலுக்காக மட்டும் இணைந்திருக்கவில்லை... மாறாக, கலாச்சார ரீதியாகவும், உணர்வுகள் கலந்த நிலையிலும் இணைந்திருக்கிறோம் என்பதையே இந்த நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன.

தமிழகத்திலிருந்து தமிழக அரசும் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறது. அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் அரசு மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் தங்கள் கடமைகளைச் செய்திருக் கின்றன. வெள்ளத்தால் கேரள மக்கள் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடனேயே தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் தன் னார்வத்துடன் இங்கே பெருந்திரளாக வந்து நிவாரணக் களப் பணியாற்றியும் சென்றிருக் கின்றனர்.

சந்திரிகா-மணிச்சுடர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை, இங்கே கேரளாவில் நம் அதற்கென """"சந்திரிகா"" எனும் பெயரில் நாளிதழ் இருப்பதைப் போல தமிழகத்தில் """"மணிச்சுடர்"" என்ற நாளிதழ் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் முஸ்லிம் லீகர்களுக்கும், பொதுமக்களுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்ததன் அடிப் படையில், வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகை ககளுக்குப் பின்பும், கடந்த ஹஜ் பெருநாளின்போதும் 55 லட்சம் ரூபாய் நிதியும், சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் - 10 டன் எடையளவிலான நிவாரணப் பொருட்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிலுமிருந்து திரட்டப் பட்டு, இங்குள்ள கேரள மக்களுக்கு அவை முறைப்படி சேர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இங்கே பி.கே. குஞ்ஞாலிகுட்டி எம்.பி. குறிப்பிட்டதைப் போல அடுத்து மீள் கட்டமைப்பு சுநாயbடைவையவiடிn பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த இமாலயப் பணிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, கலந்தாலோசனைகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக பெருமளவில் நிதியாதாரம் தேவைப்படுகிறது. என்றாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதுவரை நாம் சேகரித்த 55 லட்சம் ரூபாய் நிதியை மட்டுமே தங்ஙள் ஸாஹிப் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்.

அகில இந்திய கே.எம்.சி.சி.

இவற்றுக்கும் மேலாக ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மாணவரணி (ஆளுகு), இளைஞரணி (லுடீருகூழ டுநுஹழுருநு), மகளிரணி (றுடீஆநுசூளு டுநுஹழுருநு), சுதந்திர தொழிலாளர் யூனியன் (ளுகூரு) ஆகிய நான்கு பதிவுபெற்ற துணை அமைப்புகள் உள்ளன. அவற்றுடன், உங்கள் கேரள மாநிலத்தின் கே.எம்.சி.சி. அமைப்பும் - பதிவுபெற்ற ஐந்தாவது துணை அமைப்பாக அண்மையில் ஆக்கப்பட்டிருக்கிறது. அதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது;

உருவாக்கப்படவிருக்கிறது. அவற்றின் மூலம் கே.எம்.சி.சி. நிர்வாகத்தினரும், அங்கத்தினரும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக பெருமுயற்சிகளை மேற் கொண்டு, பல்வேறு வகை களில் களப்பணியாற்றி வரு கின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு மாநில கே.எம்.சி.சி. அமைப்பின் தலைவராக உள்ள குஞ்சுமோன் ஸாஹிப் இங்கே வந்திருக்கின்றார். எப்போதும் தன் முகத்தை வெளிக்காட்டாமல் திரை மறைவிலிருந்தே அரிய பல பெரும்பணிகளைச் செய்து முடிக்கின்றவர் அவர். ஆக, அவ்வமைப்பினரின் கூட்டு முயற்சியால் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை நிவாரண நிதி சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து 45 லட்சம் ரூபாய் பணமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய நிதியைக் கொண்டு தேவைப்படும் பொருட்கள் வாங்கப்படவிருக்கின்றன.

இதுநாள் வரை இவ்வளவுதான் தமிழகத் திலிருந்து எங்களால் செய்ய முடிந்த பங்களிப்புகள் என்றாலும், இத்தோடு நாங்கள் நின்று விடவில்லை. இது முதற்கட்ட நிவாரணப் பணி மட்டுமே. இன்னும் பொது வேண்டுகோள் வைத்தவண்ணமே இருக்கின்றோம்.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.,

இங்கே தமிழகத்தின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், நம் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வந்திருக்கின்றார். அவரது தொகுதியிலுள்ள கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் நீலகிரி, கூடலூர், கோயமுத்தூர், பாலக்காடு உள்ளிட்ட பல நகரங்களிலிருந்தும் இங்குள்ள கேரள மக்களுடன் குடும்ப உறவும், வணிக உறவும் பெருமளவில் கொண்டுள்ளனர். எனவே, கேரள மக்களின் வெள்ளப் பாதிப்பினது துயரம் என்பது தமிழகத்தில் ஏற்பட்டதாகவே எங்கள் உள்ளங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாகவே இந்த களப்பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன.

மேலதிகமாக, நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலக் நிர்வாகங்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில், அவர்களும் அகில இந்திய அளவில் தங்களது நிவாரண நிதிகளையும், பொருட் களையும் சேகரித்து தலைமையிடம் ஒப் படைத்தவண்ணம் உள்ளனர். இதுவரை பெறப்பட்ட நிதியும், பொருட்களும், அவற்றுக்கான கணக்கும் தங்ஙள் ஸாஹிப், மஜீத் ஸாஹிப் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் நிதி பெறப்பட்டு வருகிறது. அனைத்திற்கான கணக்குகளும் இறுதி செய்யப்பட்டு, அவையும் விரைவில் ஒப்படைக்கப்படும்.

மொத்தத்தில், இந்த பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். அதற்கு எல்லாம்வல்ல இறைவன் எல்லா வகையிலும் துணை செய்து அருள வேண்டும் என இந்நேரத்தில் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தேசிய பொதுச்செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., தேசிய செயலாளர்கள் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., அப்துஸ் ஸமது சமதானி, தமிழ்நாடு மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், யூத் லீக் தேசிய பொதுச்செயலாளர் சி.கே. முஹம்மது ஜுபைர், கேரள மாநில செயலாளர் பி.எம்.ஏ. சலாம், மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, கே.எம்.சி.சி. தமிழ்நாடு தலைவர் குஞ்சுமோன் ஹாஜி, எம்.எஸ்.எப். தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்