Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Saturday, October 20, 2018 9 Safar 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, September 14, 2007
நாதியற்றோரின் துயர் துடைப்பவருக்கு அல்லாஹ் உதவுகிறான் கேரள மழை வெள்ள நிவாரண பணிகளில் வெளிநாட்டு கே.எம்.சி.சியை விஞ்சும் வகையில் உள்நாட்டு கே.எம்.சி.சி பணியாற்றி இருக்கிறது தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


5சென்னை, செப். 12- கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மேற் கொண்ட அகில இந்திய கேரள முஸ்லிம் கலாச்சார சென்டர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டு விழா சென்னை கிரீம்ஸ் ரோடு ஜெய்த்தூன் ரெஸ்ட்டாரன்ட் அரங்கில் 10-09-2018 திங்கள் மாலை 5 மணியளவில் கே.எம்.சி.சி தமிழக துணைத்தலைவர் பக்கர் காரியாடு தலைமையில் நடைபெற்றது.

அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ. ஷம்சுதீன் அனைவரையும் வரவேற்றார். அகில இந்திய துணைத்தலைவர்கள் பி.கே. போக்கர் ஹாஜி, கே.பி. முஹம்மது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, எம்.எஸ்.எஃப் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம் காதர் மொகிதீன் சிறப்புரை யாற்றியதாவது:-

இயற்கை வளம் செறிந்த இந்தக் கேரள மாநிலத்தில், வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு, பொது மக்களுக்கு உயிரிழப் பும், பொருளிழப்பும் பெருமள வில் ஏற்பட்டுள்ளது எங்கள் அனைவருக்கும் பெரும் வேதனையைத் தந்துள்ளது.

தன்னார்வமிக்க சேவை

இந்நிலையில், பாதிக் கப்பட்ட சகோதர - சகோதரியருக்கு உதவு வதற்காக, தன்னார்வமிக்க சேவை எண்ணத்துடன் திருச்சியிலிருந்து கஃபூர் அவர்கள் ஷஹீர் ஆகியோர் இங்கே வந்துள்ளனர்.

இங்கு வெள்ளம் பாதித்த அடுத்த நாளில் திருச்சியில் - ஜமால் முஹம்மத் கல்லூரியில் பயிலும் கேரள மாணவர்கள் நிவாரண உதவிகளைப் பெறுவதற்காக பொதுமக்களைச் சந்திக்க பெருந்திரளாக வந்தனர். வீடு வீடாக ஏறி இறங்கினர். அந்த வரிசையில் என் வீட்டிற்கும் வந்த அவர்களைச் சந்தித்தேன். எனக்கு அவர்கள் யாரெனத் தெரிந்துவிட்டது. ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரிய வில்லை போலும். அப்போது என்னிடம் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. அதைக் கொடுத்துவிட்டேன்.

கேரள மாணவர்கள்

பின்னர் அவர்கள் அருகி லுள்ள பள்ளிவாசலுக்குச் சென்ற னர். ஜும்ஆ தொழுது விட்டு வந்த பொதுமக்களிடம், பள்ளி நுழைவாயிலில் இருந்த வாறு அவர்கள் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி கோரி நின்றனர். அப்போது அப்பள்ளிவாசலின் அங்கத்தினர் சிலர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிதி சேகரிக்க வந்திருக்கும் அவ் விளைஞர்களின் உண்மைத் தன்மை குறித்து வினவினர். """"அவர்கள் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள்... நம்பிக்கைக் குரியவர்கள்... தம் மக்களின் பாதிப்பிற்கு நிவாரண உதவி வழங்குவதற்காக அவர்கள் நிதி திரட்டிக் கொண்டிருக் கின்றனர்... எனவே, பள்ளிக்கு வரும் மக்களிடம் - அவர்களால் இயன்றளவுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கக் கூறுங்கள்"" என்றேன். உடுக்கை இழந்தவன்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

என்று தமிழில் -திருக்குறள் என்ற நூலில் ஒரு குறள் உண்டு. ஒருவனது ஆடை அவனது உடலை விட்டும் அகலும் போது எப்படி உடனடியாக அவனது கை அதைக் கவ்விப் பிடித்துக் கொண்டு மானம் காக்கிறதோ அதுபோல, சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது உடனடியாகச் சென்று உரிமையுடன் உதவுவதே நல்ல நட்புக்கு அடையாளம் என அக்குறள் கூறுகிறது. அதற்கேற்ப, இங்கே கேரளத்து மக்களுக்குப் பாதிப்பு என்று கேள்வியுற்ற உடனேயே ஓடோடிச் சென்று உதவிய உங்கள் செயல் மிகுந்த பாராட்டிற்குரியது. எவ்வளவு நிதி திரட்டப்பட்டது என்பது முக்கியமல்ல.

களப்பணி, அர்ப்பணிப்பு

மாறாக, நிவாரண நிதியைச் சேகரிப்பதற்காக நீங்கள் ஆற்றிய களப்பணி, அர்ப்பணிப்பு, வெள்ளம் போல விரைந்தோடிச் சென்று நிதி திரட்டிய உங்கள் செயல்முறை என இவைதான் எங்களை வியப்பிலாழ்த்தியது. நாதியற்றோருக்கு உதவுப வருக்கு அல்லாஹ் உதவுகிறான். இதுதான் மனித வாழ்வின் ரகசியம். இதைத்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வலியுறுத் துகிறார்கள். அந்த வகையில் அல்லாஹ் உங்கள் யாவருக் கும் நிறைவான நற்கூலி களை ஈருலகிலும் வழங்கியருள் வானாக. கே.எம்.சி.சி. அமைப்பு

இங்குள்ள கே.எம்.சி.சி. அமைப்பை அகில இந்திய அளவில் விரிவாக்குவதற்காக ஷம்சுத்தீன் அவர்கள் என்னை அடிக்கடி காண வருவார். இதுகுறித்து -தொடர்பானவர்களிடம் கலந்தாலோசிப்பதற்காக அவர் ஒரு முழு வருடத்தைச் செலவிட்டிருக்கிறார். அவரது இந்த முன்னெடுப்பு குறித்து மஜீத் ஸாஹிப் அவர்களிடம் நானும் தெரிவித்திருக்கிறேன். நீண்ட கலந்தாலோசனைக்குப் பிறகு, இறையருளால் இந்த கே.எம்.சி.சி. அமைப்பு அகில இந்திய அமைப்பாக விரிவுபடுத்தப்பட்டு, அதற் காக அமைப்பு சட்ட விதி கள் உருவாக்கப்பட்டு, வடிவ மைத்து இறுதி செய்யப் பட்டு, நிறைவில் அகில இந்திய கே.எம்.சி.சி. அமைப் பால் அதற்கு இசைவும் தெரிவிக் கப் பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் அகில இந்திய கே.எம்.சி.சி.யின் அங்கத்தினரா கியிருக்கிறீர்கள்.

குஞ்சுமோன் ஹாஜி

இந்த கே.எம்.சி.சி. உடைய கிளைகளை - இந்தியாவின் மாநில மெங்கிலும் விரிவாக்கி யிருக்கிறீர்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் குஞ்சுமோன் ஹாஜி இதன் தகுதிமிக்க தலைவராகச் சேவையாற்றி வருகிறார். போக்கர் ஸாஹிப் அவர்கள் அதன் பொதுச் செயலாளராகவும், முஹம்மத் அப்பாஜீ பொருளாளராகவும், அனைத்து மாவட்டங் களிலிருந்தும் துணைத் தலை வர்களும் சேவையாற்றிக் கொண்டி ருக்கிறார்கள். ஹிஷாப், ரஹீம், ஸகீர், அப்துஸ்ஸமத், கையான், செய்யித் அலவீ உள்ளிட்டோர் இதன் செயற்குழுவினராகச் சேவையாற்றி வருகின்றனர். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இவ்வமைப்பு தமிழகத்தில் மகத்தான சேவைகளாற்றி வருகிறது.

வெள்ள நிவாரண உதவி

தமிழகத்தில் உங்கள் வெள்ள நிவாரண உதவி திரட்டும் பணிகளை 5 மாவட்ட மண்டலங்களாகப் பிரித்துப் பகிர்ந்து, மொத் தத்தில் ஒரு தலைமை ஒருங் கிணைப்பாளர், அவர் கீழ் 5 துணை ஒருங்கிணைப் பாளர்கள் என குழுவமைத்து, திறம்பட சேவையாற்றி வருவதாக ஷம்சுத்தீன் என்னிடம் கூறியிருக்கிறார். மொத்தத்தில் - ஒரு கோடி ரூபாய்க்கு வெறும் 15 லட்சம் ரூபாய் குறைவாக சுமார் 85 லட்சம் ரூபாய் நிதியைத் திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்கள், மருந்துகள், உணவுப் பொருட்களை வாங்கி யிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயைச் சேகரித்ததன் மூலம் மிகப்பெரிய நிதி சேகரிப்பாளர் களாகியிருக்கிறீர்கள்.

இந்தக் கேரள மாநிலத்தில் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தகவல் அறிந்தவுடனேயே தமிழகத்தில் நாங்கள் பெரும் வேதனையுற்றோம். பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்புகள் இல்லாமல் காப் பாற்றிடுமாறு உடனடியாக இறையோனிடம் மனமுருகிப் பிரார்த்தித்தோம். அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் - ப்ரைமரி கிளைகளிலுமுள்ள முஸ்லிம் லீகர்கள் தாமாக முன்வந்து நிவாரணப் பொருட் களையும், நிதியையும் சேகரிக்கத் துவங்கினர். நிறைவில் ஏராளமான லாரிகளிலும், கன்டெய்னர் களிலுமாக சுமார் 10 டன் அளவுக்கு நிவாரணப் பொரு ட்களை கேரளாவிற்கு அனுப்பி வைத்தோம். அப்பொருட்கள், இங்குள்ள அனைத்து நிவாரண முகாம்கள் மூலமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. மணிச்சுடர் நாளிதழ்

அது மட்டுமின்றி, எங்கள் ‘மணிச்சுடர்’ நாளிதழ் வாயிலாக பொதுமக்களிடம் நிதி கோரி அறிவிப்புச் செய்தோம். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகை களுக்குப் பிறகும், ஹஜ் பெருநாள் தொழு கைக்குப் பிறகும், ஹஜ் பெருநாளையொட்டி மக்கள் திரண்ட பகுதிகளிலும் தமிழகத்து முஸ்லிம் லீகர்கள் நிதி சேகரித்தனர். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு, இருநூறு, ஐநூறு, ஆயிரம், ஐந்தாயிரம் என அவரவர் தகுதிக்கேற்ப தாராளமாக நிதியுதவி செய்தனர். நிவாரண நிதியளித்த அந்த நல்ல உள்ளங்களின் பெயர்களையும், அவர்கள் அளித்த நிதியையும் அதில் பட்டியலாக வெளியிட்டோம்.

இவ்வாறாக மொத்தத்தில் எங்களாலியன்ற அளவுக் குக் களப்பணி யாற்றிய தில் 53 லட்சம் ரூபாய் மட் டும் நிதியாகச் சேகரிக்கப் பட்டு, இங்கே பாதிக்கப் பட்டவர்களுக்குச் சேர்ப் பிக்கப் பட்டுள்ளது. ஏற்க னவே லாரிகளிலும், கன்டெய் னர்களிலும் அனுப்பி வைக்கப் பட்ட 10 டன் நிவாரணப் பொருட்கள் இந்த நிதியில் சேராது.

இந்த 53 லட்சம் ரூபாய் தொகையை இன்றிரவு இன்ஷாஅல்லாஹ் பானக்காடு புறப்பட்டுச் சென்று, நாளை காலையில் தங்ஙள் ஸாஹிப் அவர்களிடம் வழங்குமாறு எங்கள் தமிழக முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரிடம் நான் கூறினேன். அவர்கள் என்னையும் அங்கு வருமாறு வலியுறுத்தியதையடுத்து நானும் செல்கிறேன். என்னு டன், மாணவரணி மாநில செயலாளர், மாநில நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். நாங்கள் அனைவரும் இணைந்து இந்த நிவாரண நிதியை வழங்கவிருக்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

உட்பிரிவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மாணவரணி (ஆளுகு), இளைஞரணி (லுடீருகூழ டுநுஹழுருநு), மகளிரணி (றுடீஆநுசூளு டுநுஹழுருநு), சுதந்திர தொழிலாளர் யூனியன் (ளுகூரு) ஆகிய நான்கு பதிவுபெற்ற துணை அமைப்புகள் உள்ளன. அவற்றுடன், உங்கள் கேரள மாநிலத்தின் கே.எம்.சி.சி. அமைப்பும் - பதிவுபெற்ற ஐந்தாவது துணை அமைப்பாகியிருக்கிறது. எனது பொறுப்புக் காலத்திலும், நமது மறைந்த தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் வாழ்ந்த காலத்திலும் இதுகுறித்து பல்வேறு கோணங்களில் நிறைய விவாதிக்கப்பட்டே - இறுதியில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறாகத் துவக்கப் பட்ட அகில இந்திய கே.எம்.சி.சி.யின் மூலம் மிகச் சிறந்த பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தேசிய தலைவர் பெங்களூரு நவ்ஷாத் இதற்காகக் கடுமையாக உழைக்கிறார். அவரது வழிகாட்டலில் நீங்கள் யாவரும் திறம்பட செயலாற்றிக் கொண்டி ருக்கிறீர்கள். ஷம்சுத்தீன், குஞ்சுமோன் ஆகியோ ரெல்லாம் கலந்தா லோசனையில் இருக்கும்போது தமது வணிகத்தை மறந்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க எப்படி எப்படி செயலாற்றுவது என்று அவர்கள் விவாதிக்காத நாளே இல்லை; நேரமே இல்லை. இதுவே இவ்வமைப்பின் மீது எங்கள் ஆர்வமிகுந்த கவனம் கூடியதற்குக் காரணமாகிவிட்டது.

கத் அஃப்லஹ மன் தஸக்கா

""""கத் அஃப்லஹ மன் தஸக்கா - தன்னைச் சுத்தப் படுத்திக்கொண்டவர் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்"" என அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகிறான். தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டவர் என்றால் யார்? தனது எண்ணம், சிந்தனை அனைத்தையும் சுத்தப்படுத்திக் கொண்டவர்... எல்லாவற்றுக்கும் மேலாக தான் திரட்டிய செல்வத்தைச் சுத்திகரித்துக் கொண்டவர். பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவையுடையோருக்கும் - தான் திரட்டிய செல்வத்திலிருந்து உதவுவதே - தனது செல்வத்தைச் சுத்திகரிப்பதாகும்.

அந்த வகையில், தற்போது இந்தக் கேரள மாநிலத்தில் ஆலப்புழா, வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர் என பல பகுதிகளிலும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டி ருக்கிறது. நேற்று வரை கோடீஸ்வரர்களாகவும், மாளிகைகளில் வசிக்கக் கூடியவர் களாகவும் இருந்த இங்குள்ள மக்கள் தற்போது தேவையுடையவர் களாகி விட்டனர். கிடைக்கப் பெற்ற புள்ளிவிவரத்தின் படி, மொத்தமுள்ள பாதிக்கப் பட்ட மக்களுள் மூன்றில் இரண்டு பங்கினர் நமது முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர் களுக்காக நீங்கள் தாராளமாக உதவியிருக்கிறீர்கள். பலரும் உதவியிருக்கின்றனர். யார் யார் உதவியிருக்கின்றனரோ அவர்கள் அனைவரும் தமது செல்வத்தைச் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது குஞ்ஞாலிக்குட்டி அவர்கள் சொன்னது போல, நாம் அனைவரும் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கியிருக்கிறோம். இனி, அவர்களது வசிப்பிற்கான சுநாயbடைவையவiடிn றுடிசமள எனப்படும் மீள்கட்டுமானப் பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

அகில இந்திய கே.எம்.சி.சி. அமைப்பின் ஆற்றல்மிக்க பங்களிப்பால் - கேரள முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பைத்துர்ரஹ்மா எனும் பெயரில் மறுவாழ்வு இல்லங் களைப் பல இடங்களிலும் ஆயிரக் கணக்கில் கட்டியமைத் திருக்கிறார்கள். உரிமை மறுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வட இந்திய முஸ்லிம்கள், அஸ்ஸாம் - உத்தரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை - கடலூர் மக்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நமது குஞ்ஞாலிக்குட்டி ஸாஹிப், தங்ஙள் ஸாஹிப், கே.பீ.ஏ.மஜீத் ஸாஹிப், அப்துல் வஹ்ஹாப் ஸாஹிப், இ.டீ.முஹம்மத் பஷீர் ஸாஹிப், கே.எம்.சி.சி.யின் சஊதி மண்டல தலைவர் முஹ்யித்தீன் குட்டி உள்ளிட்ட தலைவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட அடுத்த கணமே அவர்கள் விரைந்து செயல்பட்டு, தொடர்ந்து கலந்தாலோசித்து - பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளும், மீள் கட்டமைப்பாக பைத்துர் ரஹ்மா இல்லங்களும் கட்டி, அவர்களது வாழ்வில் மீண்டும் ஒளியேற்றி இருக் கிறார்கள்.

சென்னை பெருவெள்ளப் பாதிப்பின் போது, சைதாப்பேட்டையில் நமது முஸ்லிம் சமுதாய மக்களும், இதர சமூகங்களைச் சேர்ந்த மக்களும் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு நிவாரண உதவிகளை நமது கேரளத் தலைவர்கள் வழங்கியபோது, அவர்கள் உள்ளம் உருகி அழுதேவிட்டனர். உதவிய நல்ல உள்ளங்களுக்காக அவர்கள் இறையோனிடம் இருகரமேந்தி துஆ பிரார்த்தனை செய்தனர்.

பைத்துர் ரஹ்மான் இல்லங்கள்

அதுபோல, கடலூரில் 41 பைத்துர்ரஹ்மா இல்லங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. அனைவ ருமே பிற சமுதாயங்களைச் சேர்ந்தவர் கள்தான். அவர்களுக்கெல்லாம் நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிலும் குறிப்பாக உங்கள் கே.எம்.சி.சி.யின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டுக் கிளைகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு உதவி யிருக்கின்றன. தற்போது இந்த கேரள மழை வெள்ள நிவாரணப் பணிகளில், வெளி நாட்டு கே.எம்.சி.சி.யை விஞ்சும் வகையில் உள்நாட்டு கே.எம் .சி.சி. பணியாற்றி யிருக்கிறது.

இவ்வாறான அரிய பல உதவிகள் மூலம், கே.எம்.சி.சி. சரியான திசையில், சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மிகச் சிறந்த சேவைகளை ஆற்றி வருவதை நாம் அனைவரும் உணர முடியும். இவ்வரிய சேவைகள் அனைத்தும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இவையனைத்தும் இவ் வமைப்பின் மொத்தச் செயல் பாடல்ல; துவக்கம் மட்டுமே என்றுதான் நான் கருதுகிறேன். இந்த உணர்வு, உற்சாகம், செயல்திறன் உங்களிடம் தொடர்ந்து இருக்கும்; இருக்க வேண்டும் என நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வுக்காக ஒருவர் தேவையுடைய ஒருவருக்கு ஒரு ரூபாய் வழங்கினால், அல்லாஹ் பத்து ரூபாய்க்கான கூலியை வழங்குகிறான். ஒன்று கொடுத்தால் பத்தாக அது இறைவனால் திருப்பிக் கொடுக்கப் படுகிறது. பத்து மட்டுமல்ல; நூறாகவும் கொடு க்கப் படுகிறது. அது மட்டுல்ல. பல நூறு மடங்குகளாகவும் கொடுக்கப் படுகிறது. இது திருமறை குர்ஆனின் கூற்று. அல்லாஹ் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறான். நம் தேவைக்கு நாம் பயன் படுத்துவதோடு நின்று விடாமல், பிறருக்கும் வழங்க வேண்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பு. அந்த வகையில், இறைவனின் அந்த எதிர்பார்ப்பை நீங்கள் உங்கள் மேலான உணர்வால், ஊக்கமிகுந்த செயல்பாட்டால் இன்று பூர்த்தி செய்திருக்கிறீர் கள். இதற்காக உங்கள் யாவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். உங்களுக்காக, உங்கள் வணிகம் சிறப்பதற்காக, உங்கள் குடும்பங்கள் தழைத் தோங்குவதற்காக, உங்கள் ஈருலக வாழ்வும் நனிசிறப் படைவதற்காக நான் உளமாரப் பிரார்த்தித்து என துரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய கே.எம்.சி.சி. செயலாளர் திருச்சி கபூர், மாநில துணைத்தலைவர் கிரசண்ட் செய்யதுஅலவி, பிராட்வே அப்துர் ரஹீம், அப்துல் சமது, திருச்சி முஹம்மது ஷகிர், இஷாக் பொத்தேரி, செய்புதீன், பைசல் பாபு, ஜெய்த்தூன் நவ்பல், பாம்ஷோர் சாஜித், கிரசண்ட் சலீம், மயிலாப்பூர் சாஜிர், மயிலாப்பூர் முஹம்மது, உசேன் பாப்பு, வெள்ளூர் முஹம்மது ரியாஸ், சோழிங்கநல்லூர் யூனூஸ் அலி, சர்புதீன், கோவை முஹம்மது ஷபி, முஹம்மது அலி, பொள்ளாச்சி ரஷீது, திருச்சி ரஹ்மான், பிராட்வே அசீர், சுஹைர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்