Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, October 17, 2007
வாழ்வில் எந்தவொரு தருணத்திலும் அவசரப்படக்கூடாது திருக்குர்ஆன், திருக்குறள், ஞானவான்களின் வழி என்பது ஒவ்வொரு மனிதனும் தனது மனசாட்சிப்படி வாழ்வது தான் தாவூத் பாட்சா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


தஞ்சாவூர், அக். 15- வாழ்வில் எந்தவொரு தருணத்திலும் அவ சரப்படக்கூடாது என்றும்திருக்குர்ஆன், திருக்குறள் ஞானவான்களின் வழி என்பது ஒவ்வொரு மனித னும் தனது மனசாட்சிப்படி வாழ்வது தான் என்று தாவூத் பாட்சா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி தாவூது பாட்சா கலை அறிவியல் கல்லூரி 15 வது பட்டமளிப்பு மற்றும் கல்வியியல் கல்லூரியின் 9 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிறுவனர் தலைவர் மற்றும் செயலாளர் முனைவர் அல்ஹாஜ் தாவூது பாட்சா தலைமை வகித்தார். கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் கே. பால சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார். திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது வாழ்த்துரை வழங்கினார்.

கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியல் கல்லூரி படித்த இளங்கலை, முதுகலை, இளம் இளை அறிஞர் மற்றும் பி.எட். படித்து முடித்த 245 பேர் களுக்கு பட்டங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வழங்கி பேருரை நிகழ்த்தி னார்.அவர் பேசியதாவது:-இவ்வினிய பட்டமளிப்பு விழாவில், மாணவச் செல்வங் களுக்குப் பட்டச் சான்றி தழ்களை வழங்கும் வாய்ப்பை எனக்கும் வழங்கியமைக்காக, இந்த ஆர்.டி.பி. கல்லூரியின் தலைவர், தாளாளர் உள் ளிட்ட நிர்வாகிகளுக்கும், நிர்வாகக் குழுவினருக்கும் முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டம் பெறுவது வாழ்க்கையில் சிறப்புக்குரிய நிகழ்வு

இங்கே பட்டம் பெறும் மாணவர்களின் வருங்கால வாழ்வு சிறக்க அனைவரும் வாழ்த்தி அமர்ந்திருக்கின்றனர். நானும் அவர்களை மனதார வாழ்த் துகிறேன். பட்டம் பெறுவதென்பது உங்கள் வாழ்க்கையில் சிறப்பிற் குரிய ஒரு நிகழ் வாக உள்ளது. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. மனி தன் தான் பிறப்பதையும் அறிய வில்லை... இறப்பையும் அறியப் போவதில்லை. ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்க்கையில் இந்தப் பட்டம் பெறும் நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளை அவர்கள் மனக்கண் முன் நிறுத்தி அசைபோட இயலும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

நீங்கள் எதற்கும் கை தட்டவில்லை

இங்கே உங்களைப் பற்றியும், உங்கள் கல்லூ ரியைப் பற்றியும், அதைத் தோற்றுவித்த சகோதரர் தாவூத் பாஷா அவர்களைப் பற்றியும் நிறையவே கூறி யிருக்கிறார்கள். """"என் னுடைய கணவரை விட இரண்டு மடங்கு அதிக ஊதியத்தை நான் பெற்றிட இந்தக் கல்லூரி காரண மாயிருந்திருக்கிறது"" என ஒரு மாணவி சொன்னதாக தாவூத் ஷா அவர்கள் இங்கு பெருமையுடன் கூறினார். நானும் துவக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... நீங்கள் துவக் கத்திலிருந்து எதற்கும் கை தட்டவில்லை. அதற்குத்தான் தட்டினீர்கள். நான் உங்களுக்கு இப்போது சொல்ல விரும்புவது - இரண்டு மடங்கு மட்டுமல்ல; பத்து மடங்கு வருமானம் தரவல்ல வாய்ப்பையும் இறைவன் உங்களுக்குத் தருவான். அப்படிப்பட்ட தகுதியும், திறமையுமிக்க ஒரு கல்லூரியிலிருந்துதான் நீங்கள் இப்போது பட்டம் பெற்றுச் செல்கிறீர்கள். மனித வாழ்வில் ஏற்றம் - இறக்கம், மேடு - பள்ளம், மகிழ்ச்சி - துக்கம், இலகு - கடினம் என அனைத்துமே வந்து செல்வது இயல்பே. இதில் சிக்கலான காலகட்டங்களில், அந்தச் சிக்கல் பூட்டுகளைத் திறக்கவல்ல தகுதியைக் கொண்டிருப்பதுதான் இன்று நீங்கள் பெறும் இந்தப் பட்டம். ஒரே யொரு பட்டத்தை வைத்துக்கொண்டு, எல்லாப் பூட்டுகளையும் திறந்துவிட முடியும்.

தாவூத் பாட்ஷா அவர்களின் வாகனங்கள்

பட்டம் என்பது நாம் பெற்றிருக்கும் ஒரு பயிற்சி. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும், எப்படித் துவக்க வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என்பனவற்றையெல்லாம் ஒரு கட்டமைப்பாகக் கற்றுத் தரும் ஒரு பயிற்சியே இந்தக் கல்வி. அந்தக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தமைக்காகத் தரப்படுவதுதான் இந்தப் பட்டங்கள். தாவூத் பாட்சா அவர்களின் வாகனங் களையெல்லாம் கவனித்தால், 0, 1, 2, 3 என்றுதான் இருக்கும்.

நான் நினைப்பதுண்டு! ஒன்று என்று துவங்கினால்தான் இரண்டு என்பதை எண்ண இயலும். ஒன்றே தெரியாமல் போனால் இரண்டை எப்படி எண்ணுவது? ஆக, எதையும் துவக்கத்திலிருந்து சரியாகச் செய்தால், அடுத்தடுத்து அனைத்தும் இலகுவாக அமையும். கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக - என வள்ளுவம் கூறுகிறது. நாம் கற்ற நல்லவற்றைக் குறைவின்றி முழு நிறைவாகக் கற்றிட வேண்டும். அவ்வாறு கற்ற பின், அதற்கேற்ப நம் வாழ்வை நிலையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என இக்குறள் வலியுறுத்துகிறது. அதன்படி, இன்று பயனுள்ள கல்வியைப் பெற்றுள்ள நீங்கள் வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் உங்களை நீங்களே வழிநடத்தும் அறிவையும், தகுதியையும் பெற்றிருக்கிறீர்கள். அதைச் சரிவர செய்து உங்கள் வாழ்க்கையை முன்னேற்றிச் சிறக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு நெடும்பயணம். அதில் எத்தனையோ சிக்கல், சோதனைகளையெல்லாம் தாண்டிச் செல்ல வேண்டி யுள்ளது. அப்படிப்பட்ட தருணங்களில் இந்தப் பட்டங்கள்தான் உங்களுக் குத் துணை நிற்கும் என்பதை நீங்கள் மறந்து விடலாகாது.

துபை தமிழ் உணவகம்

தாவூத் பாஷா அவர் களைத் துவக்கம் முதலே எனக்கு நன்கு தெரியும். அவர் துபையில் இருந்து லட்சங்களைச் சம்பாதித் தபோது, தமிழ் உணவகம் என்ற பெயரில் உணவகம் வைத்திருந்தார். நானறிந்த வரை, தமிழகத்திலிருந்து எந்த ஒரு அறிஞர், கவிஞர், அரசியல்வாதிகள், பட்ட தாரிகள் என யார் வந்தா லும் சரி! அவர்கள் அந்த உணவகத்தில் உணவுண் ணாமலோ, அங்கு நடக்கும் கூட்டத்திலே பேசா மலோ சென்றதில்லை. அப்படிப் பட்ட கல்வியார்வமும், தமிழார்வமும் அவருக்கு இயல்பிலேயே உள்ளது.திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில், அவரது பெயரா லும், அவரது மனைவி யின் தந்தை பெயராலும் கட்ட டங்கள் கட்டிக் கொடுத் திருக்கிறார். சுமார் இரண் டாயிரம் மாணவியர் தங்கிப் படிக்கும் வகையில் """"துபை ஹாஸ்டல்"" என்ற பெயரில் விடுதி அமைவதற்கும் அவர் மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கிறார். தன் குடும்பத் தேவைக்காக அவர் பொருளைத் திரட்டிய போதிலும், அவ்வாறு திரட்டும் தொகையில் ஒரு பெருந்தொகையை - தமிழகமெங்கும் கல் விச் சேவைக்காக கணக் குப் பார்க்காமல் பங்களித் திருக்கிறார். அந்த வகையில், ஒருவருடன் இணைந்து 40 லட்சம் ரூபாய் பங்குத் தொகையாக அளித்து, கல்விச் சேவையாற்றத் தூண்டியதும், அவரோ - தான் வளர்ந்த பின் இவரை விட்டுவிட்டார் என்பதும் நாமறிந்த ஒன்று. இவையெல்லாம் பழைய கதைகள்.

இக்கல்லூரியில் இலக்கிய மாநாடு

இந்தக் கல்லூரியைத் துவக்குவதற்கான அனுமதி யைப் பெற்றிட யார் யாரெல் லாம் துணை நின்றனர் என்பன பற்றியெல் லாம் இங்கே தெரிவிக்கப்பட்டன. அவற்றை மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். இதே ராஜகிரியில், தமிழகத்திலுள்ள அனைத்து அறிஞர்களையும், தலை வர்களையும், இலக்கிய ஆர்வலர்களையுமெல்லாம் அழைத்து வந்து, இலக்கிய மாநாடு, மீலாத் மாநாடு என தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார். அவற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிட்டியிருக்கிறது. அவருக்குக் கல்வி, கல்வித் துறை, இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் இருந்த அளவற்ற ஈடுபாடு, அதன் வழி வந்த அர்ப் பணிப்பு உணர்வுகளை வெளிப்படுத்திடவே இவற்றை நான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். அந்த வகையில்தான் இன்று இந்தக் கல்லூரி ஓங்கி வளர்ந்து, உயர்ந்து நிற்கிறது. நகர்ப்புற மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டாரங்களிலுள்ள கிராமப் புற மாணவ-மாணவி யரும் கூட இந்தக் கல்லூரியில் பயின்று, பல் துறை வல் லுநர்களாக உருவா கிக் கொண் டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, இந்த முயற்சி மிகப்பெரிய முயற்சி என வியக்க வைக் கிறது. மனித சமுதாயம் சிறந்த கல்வியை பெற வேண்டும்

இந்தக் கல்லூரியைக் கொண்டு பிறருக்குக் கல்வி யளிப்பது மட்டு மின்றி, தானும் கற்றுக்கொண்டிருக் கிறார். தமிழில் ஆய கலைகள் அறுபத்து நான்கு உள்ளது என்பார்கள். அவற்றுள், தாவூத் பாஷா அவர்கள் ஒரு பாதியளவாவது தெரிந்து வைத்திருப்பார் என்று நான் கருதுகிறேன். ஃபோட்டோக்ராஃபி, லைப்ரரி சைன்ஸ், எம்.எஸ்ஸி., எம்.ஃபில்., பி.எச்டி., என பல பட்டங்களைத் தாங்கியது போதாதென்று, இந்தக் கல்லூரியின் நிறுவனர், ஆட்சிக்குழு தலைவர், அதன் தாளாளர், முற்காலத்தில் இதன் பேராசிரியர், முதல்வர் என எல்லாப் பரிமாணங்களிலும் இவர் மிளிர்ந்திருக்கக் காரணம் என்னவெனில், கல்வியின் மீது இவர் கொண்டுள்ள அளவிலாக் காதல்தான். மனித சமுதாயம் சிறந்த கல்வியைப் பெற்று உயர வேண்டும் என்ற அவரது நல்ல நோக்கம்தான் இன்று அவரை இத்தனை பெரிய உயர்வுக்குக் கொண்டு சென்றிருக்கிறது. எதிலும் முதலிடம் என்பதே அவரது குறிக்கோள். அந்த வகையில், அனைத்திலுமே அவர் அதைச் சாதித்திருக்கிறார்.

இவ்வுலகம் தொடர்பான பட்டப் படிப்புகளோடு நின்றுவிடாமல், ஈருலகிற்கும் பயன்தரவல்ல ஆலிம், ஹாஃபிழ், முபல்லிஃகா பட்ட யப் படிப்புகளையும் அவர் இணைத்து அமைத்திருப்பது தனித்துவம் வாய்ந்த ஒரு செயலாகும். இந்தக் கனவு எல்லோருக் கும் சாதாரணமாக வந்து விடாது. பொதுவாகக் கல்லூரி யைத் துவக்கி நடத்து வோர் பல நோக்கங்களில் அதைச் செய்யலாம். ஆனால் இவரது நோக்கமோ, இந்தச் சமுதாயம் பயனுள்ள கல்வி யைப் பெற்றிட வேண் டும் என்பதாக இருந்த காரணத்தால்தான் இவற்றை யெல்லாம் அவரால் சாதிக்க முடிந்திருக்கிறது.

வாழ்வில் எந்தவொரு தருணத்திலும் அவசரப்படக்கூடாது

இந்த உலகில் நம்மைச் சுற்றி நிறைய அறிவாளிகள், வரலாற்றாய்வாளர்கள், ஞானிகள், பெருந் தலைவர் கள், ஆட்சியாளர் களெல் லாம் இருக்கிறார்கள். இவ்வ ளவு பேர் இருக்கும்போது, யாரைப் பின்பற்றி வாழ் வது, யார் சொல்லைக் கேட் பது? திருக்குர்ஆனில் 6,666 வசனங்கள் இருக்கின் றன. நபிகளாரின் பொன் மொழிகள் சுமார் 10 லட்சம் வரை பதிவிடப் பட்டிருக் கின்றன. அவற்றையெல்லாம் எப்போது படித்து முடித்து, எப்போது செயல் படுத்துவது? திருக்குறளில் 1,330 பாக்கள் உள்ளன. சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்களெல்லாம் ஏராளமாக உள்ளனவே...? அவற்றையெல்லாம் எப்படி, எப்போது படித்து முடித்து, வாழ்வில் பின்பற்றுவது? வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் அவசரம் இருக்கக் கூடாது. அதைத் தான் உங்களுக்கு ஆசிரியர் களும் கற்றுத் தந்திருப்பார் கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ராணுவத்திற்குச் சென்றார். ஒருநாள் பணி முடிந்து வீடு திரும்புகையில் தன் வீட்டுச் சாளரம் வழியே உள்ளே பார்க்கிறார். அங்கே தன் மனைவியை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடப்பதைக் காண்கிறார். ராணுவத்திலிருக்கும் இவரது கைகளிலோ துப்பாக்கி இருக்கிறது. கோபம் கொப்பளிக்கிறது. என்றாலும், எதிலும் அவசரப்படக் கூடாது என தனக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததன் படி, தன் கோபத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு, கதவை மெதுவாகத் தட்டுகிறார். உடனே ஓடி வந்த மகள் தன் தந்தையைக் கட்டிப்பிடித்து வரவேற்கிறார். அப்போது தான் தெரிகிறது... குளிர் மிகுதி காரணமாக தந்தையான தனது உடைகளைத் தன் மகள் அணிந்த நிலையில் தன் தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்கியிருக்கிறாள் என்று.

நம் தேசத் தந்தைமகாத்மா காந்தி

கொஞ்சம் ஆத்திரத்திற்கு இடங்கொடுத்திருந்தால் என்னவாகி இருக்கும்? மனை வியையோ, மகளையோ கொன்றுவிட்டு, இவரும் வெறுப்பில் தற்கொலை செய்தி ருப்பார். ஒரு நொடி யில் பொறுமையுடன் சிந் தித்து செயல்பட்ட காரணத் தால் அந்தத் தீய நிகழ்வு நடக்காமல் தவிர்க்கப்பட் டது. தன் வாழ்வில் உண் மையை மட்டும் தவறாமல் பின்பற்றியொழு கினார் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள். அதனால் அவருக்கு ஏற்பட்ட சோதனைகள் பல. அனைத்திற்கும் முகங் கொடுத்தபோதிலும், உண் மையை மட்டுமே தன் வாழ் வில் கடைப்பிடித்ததால் இன்று நமக்கெல்லாம் மகாத் மாவாக அவர் திகழ் கிறார். இதை இங்கே சொல்வதற்குக் காரணம், வாழ்வில் எத்தனையோ அம்சங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் தேடிக் கொண்டிராமல், உண்மை என்ற ஒன்றை மட்டும் உறுதியுடன் கடைப்பிடித்த காந்தி மகாத்மாவானார்.

திருக்குர்ஆன் வழி

நபிகள் நாயகம் அவர்களி டம் ஒரு காட்டரபி வருகிறார். """"இறைவனின் தூதரே! நான் உங்களுக்கு அருகிலில்லை... உங்கள் அருகிலிருக்கும் தோழர்களுக்கோ நீங் கள் திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறீர்கள்... எண் ணற்ற நல்ல பழக்க வழக்கங் களையும், வாழ்க் கைத் தத்துவங்களையுமெல்லாம் கற்றுக்கொடுக்கிறீர்கள்... அவற்றையெல்லாம் அறி யவோ, தெரியவோ எனக்கு வாய்ப்பில்லையே... நான் தொலைவில் இருக்கிறேனே...? எனக்கு வேறு என்ன வழி?"" என்று கேட்க, """"நீர் எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டு கவலைப்படத் தேவை யில்லை... யார் சொல்லையும் கேட்கத் தேவையில்லை... உம் மனசாட்சி சொல்வதை மட்டும் கவனித்துக் கேட்டு, அதன்படி நடந்தாலே போதும்..."" என நபிகளார் மறுமொழி பகர் ந்தார்கள் என்பது வரலாறு.ஆக, நாம் உளத்தூய்மை யுடன் நம் மனசாட்சி சொல் வது படி பேணி நடந்தால், அதுதான் திருக்குர்ஆன் வழி, திருக்குறள் வழி, ஞானிகளின் வழி, எல்லா நல்லவர்களின் வழியுமாகும்.தன்னெஞ்சறிவது பொய் யற்க பொய்த்த பின்தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்றார் வள்ளுவர். ஆக, மனசாட்சிப் படி நடந்தால் அதுவே மெய். மனசாட்சிக்கு மாற்றமாக நடந்தால், அதை நினைத்து நினைத்து மனசாட்சியே தன்னைக் கொல்லும்.

நாம் கற்ற கல்வி நம் உள்ளங்களை பக்குவப்படுத்த வேண்டும்

நாம் கற்ற கல்வி நம் உள்ளங்களைப் பக்குவப் படுத்திட வேண்டும். அவ்வாறு பக்குவப்பட்ட உள்ளத்திற்குப் பெயர்தான் மனசாட்சி. அந்த மனம் என்ன நினைக்கிறதோ அதை வாய் சொல்லும். வாய் என்ன சொல்கிறதோ அதை மனிதன் செய்வான். ஆக, எண்ணமே தலையாக உள்ளது. எண்ணம் தூய்மையானால் எல்லாம் தூய்மையாகும். எல்லோரும் தூய்மையானவர்களாகத் திகழ்வர். அந்த வகையில், இன்று பட்டம் பெற்றுள்ள மாண வச் செல்வங்களாகிய நீங் கள், கற்ற கல்விக்கேற்ப - உங்கள் மனசாட்சிப் படி இந்த உலகில் வாழ்ந்து, எல்லா நலங்களையும், வளங் களையும் பெற்றுத் திகழ்ந்து, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நீங்கள் சார்ந்த பகுதிக்கும், நம் தமிழ் மண்ணுக்கும், நம் இந்தியத் திருநாட்டிற்கும் - ஏன் ஒட்டுமொத்த உலகிற்கும் உதவியானவர்களாகவும், சிறந்த முன்மாதிரிகளாகவும் வாழ்ந்து உயர வாழ்த்தி விடை பெறுகிறேன், நன்றி.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாவட்ட செயலாளர் ராஜாஜி காசிம், மாவட்ட பொருளாளர் ஜுல்பிகார், மாணவரணி மாநில செயலாளர் திருச்சி அன்சாரி, மாவட்ட துணை தலைவர் கமாலுதீன் ஃபைஜி, மாவட்ட துணை செயலாளர் முகம்மது உசேன், மாவட்ட மின்னனு ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மக்கி பைசல், தஞ்சை வடக்கு மாணவர் பேரவை மாவட்ட தலைவர் அபுதாஹிர், வடக்கு மாவட்ட பொரு ளாளர் ஷபீக் அகமது , திருச்சி மாவட்ட மணிச்சடர் செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, மற்றும் நிர்வாகிகள் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், மாணவர்கள் பொற்றோர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். இறுதியில் கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. மரிய சகாயம் நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்