Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Wednesday, November 21, 2018 12 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, October 19, 2007
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை தொலைநோக்குடையது என்பதை சபரிமலை விவகாரம் நிரூபிக்கிறது தெலங்கானாவில் 12 சதவீத இடஒதுக்கீட்டை பெற முஸ்லிம் சமுதாயம் அரசியல் ரீதியாக ஒன்றுபட வேண்டும் இ.யூ. முஸ்லிம் லீக் தெலங்கானா மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எழுச்சியுரை


ஹைதராபாத், அக். 19- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை தொலை நோக்குடையது என்பதை சபரிமலை ஐயப்பசாமி கோவில் விவகாரம் நிரூபிக்கிறது என்றும், தெலங்கானாவில் முஸ்லிம் சமுதாயம் 12 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் அரசியல் ரீதியாக ஒன்றுபட வேண்டும் என்றும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெலங்கானா மாநில பொதுக்குழு கூட்டம் ஹைதராபாத் நம்பர் 1 சாலையில் உள்ள பஞ்சாரா விழா அரங்கில் 18-10-2018 வியாழக்கிழமை பிற்பகல் 12.15 மணி முதல் 2. 45 வரை நடந்தது. கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றிய தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பின்வருமாறு குறிப்பிட்டார்.

இ. அஹமது சாஹிப்

""""தெலங்கானா மாநிலம் 2014 ஜூன் 2ஆம் தேதி உருவாக் கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்படு வதற்கு அரும்பாடு பட்ட இராமசந்திர ராவ் இன்றைக்கு இந்த மாநில முதலமைச்சராக இருக்கிறார். தெலங்கானா ஒரு புதிய மாநிலமாக உருவாவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதன் தலைவராக திகழ்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இ. அஹமது சாஹிப் அவர்கள் பெரும் உதவியாக இருந்தார். அவருக்கு தெலங்கானா முதல்வர் ராவ் அவர்கள் நன்றி கூறிய வரலாறு நம் கண்முன் நிற்கிறது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்கு உட் பட்டி ருந்த பகுதிகள் ஒன் றிணைக் கப்பட்டே தெலங் கானா இந்தி யாவின் 29-வது மாநிலமாக உருவாக்கப் பட்டது. இந்த மாநிலத்தில் முஸ்லிம் சமுதாய மக்கள் தொகை 14 சதவீதமாகும். இராமசந்திரராவ் முதலமைச் சர் பதவி ஏற்றபோது தெலங் கானா முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு தருவ தாக வாக்குறுதி தந்தார். அதைச் சட்டமன்றத்திலும் சட்டமாக நிறைவேற்றினார். ஆனால் நீதிமன்றத்தில் 12 சதவீத இடஒதுக்கீட்டுக்குத் தடை வாங்கிவிட்டார்கள். பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசத்தில் நடைமுறையில் இருந்த 4 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே இப்போதும் தெலங்கானாவில் நீடிக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயம் தனக்கு 12 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. தெலங்கானாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டால் இத்தகைய கோரிக்கைகளைப் பெற முடியும்.தெலங்கானா மாநிலத்தில் முதல் பொதுக்குழு கூட்டம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தபோது நாற்பது ஐம்பது ஆர்வலர்கள் மட்டுமே பங்கேற்றனர். இன்றைக்கு இந்தப் பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் 158 பேர்களுடன் அவர் களுக்குச் சமமாகச் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற் றிருக்கிறார்கள். தெலங் கானா மாநில முஸ்லிம் லீக் நல்லதொரு வளர்ச்சி பெற் றிருக்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

தளராத உழைப்பு

இன்று இங்கே நீங்கள் வெளிக்காட்டியுள்ள ஆர்வம், வெறுமனே ஆர்வமாக மட்டும் இருந்துவிடாமல், ஆக்கப் பூர்வமான அரசியல் சக்தியாக வளரவேண்டும். அதற்கு உங்களின் தளராத உழைப்பு மிக அவசியமாகும்.

இந்திய தேர்தல் ஆணையம்

இன்றைய இந்திய தேர்தல் ஆணையத்தில் 1688 கட்சிகள் தங்களை அரசி யல் கட்சிகளாகப் பதிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித் திருக்கிறது. இவற்றில் ஒன்றாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்திட முடியாது. இந்தியாவில் இன்றைக்குள்ள மக்கள் தொகையில் 15 சதவீதம் முஸ்லிம் சிறுபான்மையினர். 80 சதவீதம் இந்து சமுதாய பெருமக்கள். மீதமுள்ள 5 சதவீதத்திற்குள் கிறிஸ்துவர், சீக்கியர், ஜைனர், புத்தர், பார்சி, இப்போது புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் யூதர் ஆகிய சமுதாயங்கள் அடங்கியுள்ளன. இந்திய சிறுபான்மையினருள் பெரும் பான்மையாக உள்ள முஸ்லிம் சமுதாயம் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு ஒரு ஜனநாயக சக்தியாக வளரும்போது இந்திய அரசியலில் பல புரட்சி கரமான மாற்றங்களை - அதன் மூலம் சமுதாயத்திற்கும் நாட் டிற்கும் பல ஏற்றங்களை உருவாக்க முடியும்.

காயிதே மில்லத் காட்டிய பாதை

இன்றைக்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசு காந்திஜி இல்லாத, நேருஜி இல்லாத இந்தியாவை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டே, இஸ்லாம் இல் லாத, முஸ்லிம்கள் இல் லாத இந்தியாவை உரு வாக்கும் முயற்சியில் இறங்கி யிருக்கிறது. வானத்தில் இருந்து சூரியனையும், சந்திர னையும் நீக்கிவிட்டு, ஒரு புதிய வானத்தை உருவாக்க நினைப்பதுபோல் தான் இந்தக் கற்பனையும் - மத்தியில் ஆளுவோரின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளைப் பார்க்கும்போதும் - அனுபவிக் கும்போதும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் அஞ்சி ஒடுங்கி அடங்கிப் போவதா? அல்லது ஆக்ரோசப்பட்டு ஆத்திரப்பட்டு கோபப்பட்டுத் தீவிரப்போக்கிற்குச் செல்வதா? அல்லது இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண் டால் என்ன? நாம் நமது பாதையில் யாரும் கண்டு கொள்ளாமலிருக்க ஆன்மீகப் பாதையில் போவதா? இப்படிப்பட்ட கருத்தோட் டங்கள் சமுதாயத்தில் அவ்வப்போது வெளிவந்து கொண்டுமிருக்கின்றன. இந்தக் கருத்தோட்டடம் எது வும் இந்திய முஸ் லிம் சமுதாயத்திற்கு ஒரு போதும் பயனளிக்காது. அப்படியானால் என்ன செய்வது? எவ்வழியைப் பின்பற்றுவது? என்ற கேள்வி எழும்போதுதான் காயிதே மில்லத் அவர்கள் காட்டிய பாதை நம் நினைவுக்கு வருகிறது. அந்தப் பாதைதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகும்.

ஜனநாயக பாதை

இந்திய முஸ்லிம் சிறுபான் மையாக உள்ள ஒரு சமுதாயம். இந்திய ஜனநாயகத்தில் இந் திய முஸ்லிம்கள் செல்ல வேண் டிய பாதையும் ஜனநாயகப் பாதைதான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் சமுதாயம் எந்த எந்த நாட்டில் சிறுபான்மையாக இருக்கிறதோ, அவர்களுக் கெல்லாம் உகந்ததும், சரியான தும் மிகுந்த பயன்தருவதுமான பாதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அளித்திருக்கும் பாதைதான். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாண்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆப்ரிக்க நாடுகளில் உள்ள தலைவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பின்பற்றி, தங்களின் நாடுகளில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமுதாயங்களுக்கான அரசி யலை - ஜனநாயக முறையில் தேர்வு செய்து ள்ளதைப் பெருமையோடு பேசுவதைக் காணும் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அபிமானம் இன்னும் அதிக அதிகமாக விரிவடைகிறது.

மூன்று முக்கிய தூண்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூன்று முக்கிய தூண்களில் எழுந்து நிற்கும் அற்புத மாளிகையாகும். அது நம்பிக்கை, ஒற்றுமை, கட்டுப்பாடு ஆகியவற்றில் மேல்நிலைத்து நிற்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய ஒற்றுமை ஒருமைப் பாட்டுக்கு முதலிடம் தருகிறது; எல்லா சமுதாய மக்களுடனும் நல்லிணக்கத்துடன் வாழும் இணக்கமான கொள்கையை வலியுறுத்துகிறது; சிறு பான்மை யினர் மட்டுமின்றி, நாட்டில் உள்ள எல்லா சமுதாய மக்களும் அவரவர் கலாச்சாரத் தனித்தன்மையைப் பாதுகாத்து வரும் போதுதான் இந்தியாவின் பன்முகத்தன்மை சிறப்படையும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது பிரதான இலட்சி யங்களாக கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையில் அப்பழுக்கற்ற நம்பிக்கை முதலில் ஏற்பட வேண்டும்.இந்திய முஸ்லிம் சமுதாயம் அரசியல் ரீதியாக ஒன்று படுவது யாருக்கும் எதிராக அல்ல. நாட்டில் பல முஸ்லிம் அரசியல் அமைப்புகள் இருந்தாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லா முஸ்லிம் அமைப்புகளை விடவும் சிறந்தது., ஜனநாயக ரீதியானது, சட்ட ரீதியானது, நாட்டின் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்துக்கும் ஏற்றது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. காயிதே மில்லத் ஒருமுறை குறிப்பிட்டார்கள். இந்திய முஸ்லிம்களில் யாரும் ஒரு நியூசன்ஸ் வழக்கில்கூட ஈடுபடக் கூடாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜனநாயகப் பாதையில் சட்ட ரீதியான வாகனத்தில் பயணிக்கும் கட்சியாகும்.

முத்தலாக் விவகாரம்

இந்திய முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்டம் அவர்களின் அடையாளமாக உள்ளது. முத்தலாக் விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அரசு, அவசரச் சட்டம் ஒன்றைப் பிரகடனம் செய்துவிட்டது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை காலப் போக்கில் திருத்திவிடடலாம் என நம்புகிறது. அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. அது வேறு விஷயம்!முத்தலாக் விவகாரத்தை அவசரச் சட்டம் மூலம் ஒரு கிரிமினல் சட்டமாக மாற்ற முயலும் மத்திய அரசின் போக்கை எதிர்ப்பதற்கு இந்திய முஸ்லிம் சமுதாயம் ரோட்டுக்குப் போக வில்லை; கோர்ட்டுக்குப் போயிருக்கிறது. அவசரச் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனியார் வாரியமும் மற்றும் பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பசாமி கோவில் விவகாரம்

அதே சமயம் இன்றைக்கு கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பசாமி கோவில் விவகாரம் பூதாகரமாகியிருக்கிது. ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசமின்றி எல்லோரும் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டது. ஆனால், கோவில் நிர்வாகிகளும் அதற்கு ஆதரவாக உள்ள இந்து சமுதாய மக்களும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசின் தீர்ப்பை ஆதரிக்கும் போக்கை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

மதவிவகாரங்கள்

மத விவகாரங்களில் தனிப்பட்டவர்கள் தொடுக்கும் வழக்குகள் மூலம், மத அனுஷ் டானங்களுக்கு எதிரான தீர்ப்பு வரும்போது இப்படிப்பட்ட போராட்ட ங்கள் வெடிக் கின்றன.

அதனால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு கருத்தை வலியுறுத்தி

வருகிறது. மத விவகாரங்களில் மாற்றம், திருத்தம், சீர்திருத்தம் போன்ற எது நடக்க வேண்டும் என்றாலும், அந்த மாற்றம், திருத்தம் அந்தந்த மதத்தைப் பின்பற்றும் சமுதாயத் திலிருந்து வரவேண்டும். அந் தந்த சமுதாய பிரதிநிதி சபை யோர் மூலமே அந்த மாற்ற மும் திருத்தமும் வர வேண்டும். அதை விடுத்து தனிப் பட்டவர்கள், மதத்தைத் திருத்த முனைவோர் நீதிமன்றத்துக்கோ, அரசு துறைகளுக்கோ எடுத்துச் செல்லும்போது, அவற்றை நீதிமன்றமும் அரசுத் துறையும், ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த மாற்றம், திருத்தத்திற்கான கோரிக்கை அந்த சமுதாயப் பிரதிநிதித்துவ சபையாரி டமிருந்து வரவேண்டும் என்று தெரிவித்திட வேண்டும். பண்டிதர் நேரு அவர்கள், டாக்டர் அம்பேத்கார் அவர் கள் காட்டிய வழி இதுதான். ஆனால், இன்றைக்கு மதக் கோட்பாடுகளை நீதிமன் றங்களும் சட்டாக்க மன்றங்களும் திருத்தவும் மாற்றவும் முனைவதால்தான் நாட்டில், சமூகங்களில் கொந்தளிப்பும் எதிர்ப்பும் போராட்டங்களும் தொடர் கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற் கொண்டு வரும் கொள்கை எவ்வளவு சிறந்தது என்பது இப்போது புலனாகின்றது.இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தெலுங்கானா வில் பலமுள்ள

தாக உயர்த் தும் வகையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட் டிருக்கி றார்கள். புதிதாகப் பொறுப்பேற் றுள்ள நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்தையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகளின் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



2019 நாடாளுமன்ற தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமூக நீதியை நிலைநிறுத்துகிற சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிற மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. தேசிய அளவில் இந்த நல்ல ஜனநாயக பாதுகாப்பு முயற் சிக்கு இந்திய யூனியன் முஸ் லிம் லீகும் துணை நிற்கிறது. தெலங்கானா மாநில அளவில் இத்தகைய ஜனநாயக பாது காப்பு முயற்சிக்கு இங்குள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதுணையாக

இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வளர்ப்போம்; அதற்காக ஒன்றிணைந்து உழைப்போம்; உயர்வோம்; சமுதாயத்தையும், நாட்டையும் உயர்த்துவோம்.இவ்வாறு பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் தனது நிறைவுரையில் குறிப்பிட்டார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்