Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Wednesday, November 21, 2018 12 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, October 21, 2007
சபரிமலை பிரச்சினையில் இ.யூ.முஸ்லிம் லீக் தெளிவான கொள்கை கொண்டுள்ளது மத விவகாரங்களில் அனைத்து சமுதாய நடைமுறைகளையும் மத்திய, மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும் கடலூர் எம்.எஸ்.எஃப் மாநில பயிலரங்கை துவக்கி வைத்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் முழக்கம்


அக்டோபர், கடலூர் - 21 - சபரிமலை பிரச்சினையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெளிவான கொள்கை கொண்டுள்ளது என்றும், மத விவகாரங்களில் அனை த்து சமுதாயங்களின் நடை முறைகளை மத்திய மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும் என்றும் கடலூரில் எம்.எஸ்.எஃப் மாநில பயிலரங்கை துவக்கி வைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம்.காதர் மொகிதீன் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை தமிழ்நாடு மாநில கிளையின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்ட ஏற்பாட்டில் மாணவர் களுக்கான நல்லொ ழுக்க அரசியல் பயிலரங்கம் கடலூரில் அக்டோபர் 20,21 ஆகிய இரண்டு தினங்கள் கே.எஸ். ஆர் மஹாலில் நடத்து வதென முடிவு செய்யப் பட்டது.

இதில் அனைத்து மாவட் டங் களிலிருந்தும் மாண வர் பேரவை நிர்வாகிகள் ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப் பிக்க வேண்டுமென அறிவிக் கப்பட்டு 366 பேர் விண்ணப் பித்திருந்தனர்.

துவக்க விழா

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநிலம் தழுவிய நல்லொழுக்க பயிலரங்கம் நேற்று 20.10.2018 காலை கே.எஸ். ஆர் மஹாலில் துவங்கியது.

துவக்க நிகழ்ச்சியில் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு பச்ச வண்ண எம்.எஸ்.எஃப் தொண்டர்களின் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

காலை 10 மணிக்கு வருகை பதிவு நடைபெற்று, முஸ்லிம் மாணவர் பேரவை கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது

.பயிலரங்க துவக்க நிகழ்ச்சி முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் பழவேற்காடு மு. அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

மஞ்சகுப்பம் இமாம், மௌலானா மௌலவி எச். முஹம்மது எஹ்யா கிராஅத் ஓதினார்.

கடலூர் வடக்கு மாவட்ட எம்.எஸ்.எப். தலைவர் ஏ.ஆர். அபூபக்கர் ரஸ்வி வரவேற்பு ரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் மௌலானா தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கௌரவ ஆலோசகர் கே. நவாஸ்கனி வாழ்த்துரை வழங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பயிலரங்கம் துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.

முஸ்லிம் மாணவர் பேரவை விழுப்புரம் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் கோட்டக்குப்பம் ஏ. முஹம்மது அலி நன்றியுரையாற்றினார்.

அமர்வு - 1

தலைப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு - சாதனைகள்

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பொருளாளர் லால்பேட்டை ஏ.எஸ். அஹமது தலைமையில் நடை பெற்றது.

வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கே.எச். அப்துல் ரஹிம் வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன் முன்னிலை வகித்தார்.

மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் , மாநில செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்.

நாகை மாவட்ட எம்.எஸ்.எப். தலைவர் எம். முஹம் மது ஷாகுல் நஃபிஸ் நன்றியுரை யாற்றினார்.

அமர்வு - 2

தலைப்பு: அரசியலமைப்புச் சட்டமும், சிறுபான்மையினர் உரிமைகளும்

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில துணைச் செயலாளர் மதுரை ஏ. அஜ்மல்கான் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை வடக்கு மாவட்ட எம்.எஸ்.எப். தலைவர் ஜே. முஹம்மது அபுதாஹிர் வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் சேலம் எம்.பி. காதர் உசேன் முன்னிலை வகித்தார்.

மாநில முதன்மைத் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், கத்தார் காயிதே மில்லத் பேரவை தலைவர் கடலூர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திருச்சி தெற்கு மாவட்ட எம்.எஸ்.எப். துணைச் செயலாளர் எஸ். சேட் கமால்தீன் (எ) ஃபாஜில் நன்றியுரையாற்றினார்.

அமர்வு - 3

தலைப்பு: அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் பணியில் எம்.எஸ்.எப்.பின் பங்களிப்பு

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில துணைத் தலைவர் திருப்பூர் எம். அப்பாஸ் தலைமையில் நடை பெற்றது.

திருவள்ளுர் கிழக்கு மாவட்ட எம்.எஸ்.எப். தலைவர் ஏ. ஹாருண் பாஷா வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் திருப்பூர் பி.எஸ். ஹம்சா முன்னிலை வகித்தார்.

இந்தியன் குரல் நிறுவனர் இ. பாலசுப்ரமணியன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச்செலாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஈரோடு தெற்கு மாவட்ட எம்.எஸ்.எப். தலைவர் ஏ. இர்ஷாத் நன்றியுரை யாற்றினார்.

அமர்வு - 4

தலைப்பு: மாணவர் பேச்சரங்கம்

முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைச்செயலாளர் புளியங்குடி எம். அல் அமீன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை தெற்கு மாவட்ட எம்.எஸ்.எப். செயலாளர் பி.சுல்தான் அலாவுதீன் வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், மாநில துணைச்செயலாளர் க்யூ. அக்பர் அலி, எம்.எஸ்.எப். சென்னை மண்டல செயலாளர் குண்டு முஹம்மது பைசான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கடலூர் தெற்கு மாவட்ட எம்.எஸ்.எப். செயலாளர் ஏ.எச். அப்துல் ஜப்பார் நன்றியுரையாற்றினார்.

கடலூரில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவையின் நல்லொழுக்க அரசியல் பயிலரங்கத்தில் சிறப்புரையாற்றிய பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித் தார். பேட்டியின் விவரம் வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாணவர்கள் இயக்கம் மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது. இந்த மாநாடு மாணவர்கள் கல்வி கற்பதோடு ஒழுக்கமும் சேர்ந்து கற்பித்தால்தான் வெற்றி பெற மடியும். இதனால்தான் இந்த மாநாடு நடக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் தொடர்கிறோம். மேலும் அரசியல் கூட்டணி மட்டுமில்லாமல் கொள்கை ரீதியான கூட்டணி தி.மு.க.வுடன் தொடர்கிறது. ஆனால், கேரளாவில் காங்கிரஸுடன் தான் கூட்ட ணியை தொடர்கிறோம்.

வரவேற்பு

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிமீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் பழனிச்சாமி உடனடியாகி பதவி விலக வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அந்தக் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

சபரிமலை பிரச்சினை இந்து மதத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையாகும். மத விவகாரத்தில் நாங்கள் மிக தெளிவான கொள்கையை பின்பற்றக்கூடியவர்கள். இதில் மத்திய & மாநில அரசு மத விவகாரம் வரும்போது மதம் சார்ந்த பிரதிநிதி சபை சொல்வதை மதித்து நடை முறைப்படுத்துவது அரசின் செயலாகும்.

ஆனால், ஒரு சிலர் கோர்ட்டுக்கு சென்று தீர்ப்பு வாங்கிவிட்ட காரணத்தினால் மத சம்பிரதாயம் உடனடியாக மாற்ற முடியாது. ஒவ்வொரு மதத்தினரும் மதத்தில் உள்ள உரிமைகள், நடை முறைகள் என்ன? என்பது மத ஆச்சாரியர்கள், தலைவர் களுக்கு மட்டும்தான் தெரியும்.

இந்தியாவின் ஒற்றுமை குறையும்

சபரிமலை பிரச்சினை என்றாலும் வேறு கோவில் பிரச்சினை என்றாலும் அந்த மதத்தில் உள்ள தலைவர்கள் எதை கூறுகிறார்களோ அதனை தான் ஏற்றுக் கொள்ள ணேவ்டும். இதனை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிவிட்டால் திடீ ரென்று மாற்று நடை முறைபடுத்தி னால், ஒழுக்கம் கட்டுப்பாடு குறைந்து இந்தியா வின் ஒற்றுமை குறையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் சபரிமலை பிரச்சினையில் மத்திய அரசு முந்தைய காலத்தில் எடுத்த தெளிவான கொள்கை என்ன வென்றால், மதம் சார்ந்த பிரச்சினைகளில் மதத்தில் உள்ள ஒப்புக் கொள்ளப்பட்ட மத சபையினர் எதனை சொல்கிறார்களோ அதனை அரசு பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில துணைத்தலைவர்கள் தளபதி மௌலானா ஏ. ஷபிகுர் ரஹ்hமன் மன்பஈ, எஸ்.எம். கோதர் முகைதீன், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குனர் கே. நவாஸ்கனி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான், வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய் னுல் ஆபிதீன், அஹமது, அஜ்மல் கான், முஹம்மது இஸ்மா யில், முஹம்மது முஸ்தபா, பஷீருல்லாஹ் உள்ளிட் டோர் உடனிருந்தனர். விழுப்புரம் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது அலி நன்றி கூறினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்