Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Wednesday, November 21, 2018 12 Rabiul Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Sunday, October 28, 2007
முஸ்லிம்களின் இதயங்களோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்தவர் கலைஞர் தளபதி மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் துணை நிற்பார்கள் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரை


சென்னை, அக். 27- முஸ்லிம்களின் இதயங்க ளோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்தவர் கலைஞர். தளபதி மு.க. ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் துணை நிற்பார்கள் என்று கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

முத்தமிழ் அறிஞர் கலை ஞருக்கு இஸ்லாமிய சமுதாயம் நிகழ்த்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று (26-10-2018) வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வை யாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியதலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலை மை வகிக்க இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டின் அமைச்சருமான ரஃவூப் ஹக்கீம் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டார். கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மனிதநேய மக்கள் கட்சிதலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, முன்னாள் நீதியரசர் ஜிஎம். அக்பர் அலி, நீதியரசர் கே.எம். பாஷா, ரிசர்வ் வங்கி முன்னாள் இயக்குநர் ஜெ. சதக்கத்துல்லா, இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை துணைத்தலைவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, முஸ்லிம் தனியார் சட்ட வாரிய பிரதிநிதி ஏ.எஸ். பாத்திமா முஸப்பர், அறுவை சிகிச்சை நிறுவனர் எஸ். முஹம்மது ரிலா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. அலாவுதீன், இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் சேமுமு முஹம்மது அலி, தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர் அமதுல் ஆதிஃபா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு செயலாள ருமான த. மஸ்தான் நெறிப் படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆற்றிய உரை வருமாறு:-

அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவன் திருப்பெயர் போற்றித் துவக்கு கிறேன்...

மு.க. ஸ்டாலின்

முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர் களுக்கு முஸ்லிம் சமுதாயம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்து கொண்டிருக்கக் கூடிய தளபதியார் மு.க. ஸ்டாலின் அய்யா உள்ளிட்ட தலைவர்களே, அறிஞர் பெருமக்களே, பொது மக்களே, தாய்மார்களே... உங்கள் அனைவரையும் முதற்கண் நான் உளமார வரவேற்று, என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித் துக்கொள்கிறேன்.

முஸ்லிம் சமுதாயம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழகத்தின் தலைவர், தமிழ் இனத்தின் தலைவர், உலகத் தமிழ் மக்களின் தலைவர் என உயர்ந்து ஓங்கி புகழ்பரப்பிய முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு முஸ்லிம் சமுதாயத்தை அவரது சேவைகளை நினைவு கூரும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

டாக்டர் மஸ்தான்

இதற்கான ஏற்பாடுகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான், அவருக்கு துணையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர், நிஜாமுதீன், அப்துர் ரஹ்மான் ஆகியோருடன் சென்னை மாநகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கத்தினர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். நன்றி பெருக்கோடு அவர் களை நான் மனதாரப் பாராட் டுகிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை முஸ்லிம் சமுதாயம் சார்பில் நடத்த வேண்டும் என்ற கருத்தை துவக்கமாக டாக்டர் மஸ்தான் அவர்கள்தான் முன்மொழிந்து, அதற்கான ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து, இப்பொழுது இந்த இனிய விழாவில் இந்த எளியோனுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் அரிய வாய்ப்பையும் தந்திருக் கின்றார். அதற்காகவும் அவருக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களது தகுதி, தகைமை, ஆளுமை, வரலாறு தமிழ் தொண்டு, ஆட்சிமுறை, ஆட்சித் திறமை, அரசியல் சாணக்கியம், புத்தி சாதுர்யம், சமயோஜிதம், தமிழ் நெறியின் மீதான தீராத பற்று, தமிழினத்தின் மீது கொண்டிருந்த பிரிக்க முடியாத பாசம், முஸ்லிம் சமுதாயத்தின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பு, நாட்டு மக்கள் மீது கொண்டிருந்த ஈடு இணையற்ற அக்கறை, ஏழை எளியோருக்கு இரங்கும் கருணையுள்ளம் என இன்னும் எத்தனை எத்தனை இருக்கிறதோ அவற்றை பற்றியெல்லாம் விரிவாக பேசுவதற்கான நிகழ்ச்சியாக இதை நான் கருதவில்லை.

ஓயாது ஒலிக்கும் கலைஞர் புகழ்

இங்கே உரையாற்றிய அத்தனை பேரும் - கலைஞரோடு தமக்குள்ள தொடர்பு, ஆங்காங்கு அவரால் நடைபெற்ற சேவைகள் என அனைத்தையும் சுட்டிக்காட்டி அழகிய முறையில் உரையாற்றி அமர்ந்திருக்கின்றனர். அவரது புகழ் வானம் உள்ளளவும், வானத்தில் சூரியன் சந்திரன் உள்ளளவும், கடலில் நீருள்ள அளவும், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் கடலலைகள் எப்படி ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கின்றன அதுபோல கலைஞர் அவர்களின் புகழ் ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

சாரணபாஸ்கரனார்

இங்கே உரையாற்றிய அனைவரும் கவிஞர்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கின்றனர். 1953 ஆம் ஆண்டில், கல்லக்குடியில் கலைஞர் அவர்கள் போரா ட்டம் நடத்திய பிறகு அவரைப் பற்றி முதன்முதலில் கவிதை எழுதியவர் கூத்தாநல்லூர் அகமது என்று சொல்லப்படும் முஸ்லிம் லீகை சேர்ந்த சாரண பாஸ்கரனார் அவர்கள்தான்.

இந்தக் கவிதையைப் பாடலாக முழங்காத திராவிட முன்னேற்றக் கழக மாநாடு ஒருபோதும் நடைபெற்றதில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் என்ற கவிதை எழுதப்பட்ட காலத்தில் தலைவர் இல்லை, சட்டமன்ற உறுப்பினர் இல்லை, அமைச்சராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் உருவாகி வந்து கொண்டிருந்த ஒரு தலைவர். அந்தத் தருணத்தில்தான் இந்தக் கவிதையை சாரண பாஸ்கரனார் எழுதினார். இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் அதை நாடு முழுக்க பாடி பறை சாற்றி இருக்கிறார். அந்தக் கவிதை இதுதான்:- கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே! -மக்கள்

உள்ளம் குடி கொண்ட உண்மைத் தலைவர் வாழ்கவே!

பொன்னான தமிழ்நாட்டின் அண்ணாவின் தம்பியாய்

பொலிகின்ற கருணாநிதி வாழ்கவே!

பன்னாடும் புகழ்ப்பாடி பணிகாட்டி அணிகாட்டி

கொண்டாடும் கருணாநிதி கண்ணான கருணாநிதி -கழகத்தின்

கண்ணான கருணாநிதி அரிதான எழுத்தாற்றல்

அழகான உரையாற்றல்

அமைந்திட்ட கருணாநிதி

பெரிதான கவியாற்றல்

புகழான நடையாற்றல்

நிறைந்திட்ட கருணாநிதி -புகழ்

பூக்கும் கருணாநிதி-தமிழ்

காக்கும் கருணாநிதி

ஏடெல்லாம் புகழ்கின்ற கதை தீட்டி

நாடகக்கலை வாழ பணியாற்றினார்

கேடெல்லாம் களைகின்ற நோக்கோடு

சினிமா வசனத்தில் அணி ஏற்றினார்

ஈடில்லா கருணாநிதி எங்கள்

இதயத்தின் கருணாநிதி

அண்ணாவின் அடிநின்று

அழகான நெறி செல்லும்

அதிமேதை கருணாநிதி

குண்டேந்தும் பீரங்கி வந்தாலும்

கொள்கையில் மாறாத கருணாநிதி

பண்போங்கும் கருணாநிதி - கொடும்

பகை வெல்லும் கருணாநிதி

இமயத் தோள் கொண்ட கருணாநிதி

பார்புகழும் கருணாநிதி -என்றும்

பேர் நிலைத்த கருணாநிதி கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!

1953ஆம் ஆண்டில் இதைப் பாடியது உண்மையிலேயே வியப்பிற்குரியது. இப்பொழுது ஊரில், நாட்டில், ஏட்டில், உலகில், சட்டமன்றத்தில், பாராளு மன்றத்தில், மக்கள் மன்றத்தில் கலைஞ ரின் தகுதிகளையும், சேவைகளை யும் பற்றி என்னென்ன பேசப் படுகிறதோ அவை அனைத் தையும் அன்றே பாடி யிருக்கிறார் சாரணபாஸ் கரனார் அவர்கள்.

அன்று கலைஞரை புகழ்ந்து பாடிய கவிஞரின் பாடல் வரிகள் ஒன்றுவிடாமல் இன்று உண்மையாகி விட்டது என்பதை உணர்த்தும் வகையில் தமிழ் உலகெங்கும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச் சியும் அதை உணர்த்திக் கொண் டிருக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்திற்கும் கலைஞருக்கும் உள்ள உறவை ஏதோ ஒருசில வரிகளில் சம்பி ரதாயத்திற்காகச் சொல்லிச் சென்றுவிட முடியாது. அவர் இஸ்லாமை இஸ்லாமாக பார்த்தவர். முஸ்லிம்களை முஸ்லிமாகப் பார்த்தவர். இன்னும் ஒரு படி மேலே சொல்வதென்றால் அவர் தன்னை முஸ்லிமாகக் மாற்றிக் கொள்ளவில்லையே தவிர - அவரது பார்வை, சிந்தனை, செயல்பாடு என அனைத்தும் ஓர் உண்மையான முஸ்லிமின் நடவடிக்கைகளாகவே இருந் தன. பாபரி மஸ்ஜித்

1992 ஆம் ஆண்டில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அப்பொழுது திருச்சியில் அரிஸ்டோ ஹோட்டலில் தலைவர் சமது சாஹிப் அவர்களும், நாங்களும் இருந்து கொண்டிருந்தோம். இன்று போல அன்று நிறைய தொலைக்காட்சி அலை வரிசைகளோ, எளிதில் தொடர்பு கொள்ள கைபேசி கருவிகளோ இல்லை. அந்தத் தருணத்தில் தொலைபேசியில் அழைத்து பேசினார் கலைஞர்: ""சமத்! பாவிகள் பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டார்கள்...."" என்றார். அப்படி அன்று அவர் பேசியதற்கு அங்கு உடன் இருந்த நாங்களே நேரடி சாட்சி. ஆக இது போன்ற ஒரு பதவி ஒரு முஸ்லிமிடம் இருந்து வரலாம். ஆனால், அந்த நேரத்தில் கலைஞர் அவர்களது அந்தப் பதறலை - எங்களைப் பொருத்த வரை ஒரு முஸ்லிமின் பதறலை விட அதிகமானதாகவே உணர்ந் தோம். அவர் முஸ்லிம்களின் கல்புகளோடு - இதயங்களோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்து இருக்கின்றார் என்பதை எடுத்துக்கூற இதைவிட வேறு சான்று தேவை இருக்காது அல்லவா? கலைஞரின் அறிக்கைகள்

பொதுவாகவே ஒருவரது அறிக்கையில் பல திருத்தங்கள் சொல்லப்படுவதுண்டு. கலைஞர் அவர்களும் பல அறிக்கைகளைப் பலவற் றுக்காக வெளியிட்டிருக்கிறார். அந்த வரிசையில் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் அவர் ஏராளமான அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த அறிக்கைகள் எந்த ஒன்றின் மீதும் யாரும் சிறு திருத்தம் கூட சொல்லிவிட முடியாத அளவுக்கு அவர் இஸ்லாமையும், முஸ்லிம் களையும் நன்கு புரிந்து வைத்திருந்தார். ஆக பெயரை மாற்றாத ஒரு முஸ்லிமாக இருந்து, முஸ்லிம்களின் வாழ்வோடும் உணர்வுகளோடும் இரண்டறக் கலந்து, தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்திருக்கின்றார் தலைவர் கலைஞர். இங்கே பேசியவர்கள் ஏற்கனவே சொன்னது போல - இது நினைவேந்தல் கூட்டம் அல்ல; மாறாக நன்றி செலுத்தும் மாபெரும் நிகழ்ச்சி.

நன்றி

அப்படி நன்றி செலுத்துவது இன்றோடு முடிந்து விடக் கூடியதல்ல. வானம், பூமி, சூரியன், சந்திரன், கடல், மரம், மண் உள்ளளவும் வாழும் முஸ் லிம்கள் அனைவரும் - எல் லாக் காலங்களிலும் நன்றி பெருக்கோடு நினைவு கூற வேண்டும் என்பதை வலி யுறுத்தும் முதல் நிகழ்ச்சி யாகவே இதை முஸ்லிம் களாகிய நாம் கருத வேண்டும்.

முஸ்லிம் சமுதாயம் நன்றிக் கடன் பட்டது. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், அவர்களது வாரிசாக இன்று தளபதியாரும் வழிகாட்டிய / வழிகாட்டிக் கொண்டிருக்கிற சூரியன்கள். முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய / ஆற்றிக் கொண்டிருக்கிற சேவைகளுக்காக, அவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருந்தமைக்காக உலகம் உள்ளளவும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் காட்டும் வழியில்தான் தமிழக மக்கள் செல்ல வேண்டும்; குறிப்பாக முஸ்லிம்கள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால்தான் அனைத்தையும் வெல்ல முடியும்.

திராவிட பாரம்பரியம்

ஆக, அப்படி அவர்கள் காட்டுகிற பாதையில் செல் வோம்... வெல்வோம்... தமிழகத் திலும், தமிழ் கூறும் உலகிலும் திராவிட பாரம்பரியத்தை, தத்துவத்தை, கொள்கையை, நெறியை மங்காமல் மாறாமல் எடுத்துச்சொல்வோம். ""ஒன்றே குலம் ஒருவனே தேவன்""

""யாதும் ஊரே யாவரும் கேளீர்""

""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்""

- எனும் கொள்கைகளில் கிஞ்சிற்றும் பிசகாமல் வாழ்ந்து காட்டுவோம்.

தளபதியார்

ஈடு இணையற்ற இந்தக் கொள்கையை தத்து வத்தை தமிழகமெங்கும் நிலை நிறுத்தவும் இந்திய மண் ணில் என்றும் இருக்கச் செய்ய வும் தளபதியாரே நீங்கள் நடவடிக்கைகளை முன்னெ டுத்துச் செல்லுங்கள் உங்கள் பின் நாங்கள் அடி எடுத்து வருகிறோம். சாதனைகள்

செல்லுங்கள்! வெல்லுங் கள்!! கலைஞர் அவர்கள் எத்தனை சாதனை களைச் செய்துள்ளார்களோ அத்தனை யையும் நீங்களும் செய்யுங்கள்! அவற்றுக்கு மேலாகவும் செய்யுங்கள்! உங்களோடு நாங்களும் இருக்கிறோம்; என்றும் இருப்போம். இந்த மண்ணில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உங்கள் தலைமையில் அமை யும்; அனைத்தையும் வெல்லும்.

வெற்றிக்கனி

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் முஸ்லிம் சமுதாய மக்கள் நாங்களும் உடன் நிற்போம். நீங்கள் வெல்கையில் உங்களோடு இணைந்து நாங்களும் அந்த வெற்றிக்கனியைச் சுவைப் போம். இந்த உணர்வு தமிழக முஸ்லிம் மக்களிடம் இருந்து என்றும் மாறாது என்பதை நீங்கள் உளப்பூர்வமாக என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டு எனது உரை யை நிறைவுசெய்கிறேன் நன்றி.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்