Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Tuesday, December 11, 2018 2 Rabiul Al-Akhir 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Friday, November 23, 2007
மனித வாழ்வின் முழுமைக்கும் வழி காட்டியிருக்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) இஸ்லாம் - நபிகள் நாயகம் - திருக்குர்ஆன் ஆகியவை முக்காலத்தையும் படைத்தவனால் தரப்பட்டது இஸ்லாமிய வாழ்வியல் சட்டத்தை மாற்ற நினைக்கும் முயற்சி குழப்பத்தில் முடியும் சென்னையில் நடந்த மீலாது விழாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரை


சென்னை, நவ. 23- மனித வாழ்வின் முழுமைக்கும் வழி காட்டி யிருக்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) என்றும், இஸ்லாம் - நபிகள் நாயகம் - திருக்குர்ஆன் ஆகியவை முக்காலத்தையும் படைத்தவனால் தரப்பட்டது என்றும் இஸ்லாமிய வாழ்வியல் சட்டத்தை மாற்ற நினைக்கும் முயற்சி குழப்பத்தில் முடியும் என்றும் சென்னையில் நடந்த மீலாது விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

நபி நேசர்கள் ஆன்மீக பேரவை மற்றும் மத்திய சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா சிறப்பு நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் சாலையில் உள்ள பைத்துல் மால் கண்வென்ஷன் ஹாலில் 19-11-2018 மாலை 6. 30 மணி யளவில் எஸ்.டி. குழுமங்களின் நிர்வாக இயக்குநர் கே. நவாஸ்கனி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசியதாவது:-

மகத்தான இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற் கண் எனது நல்வாழ்த்துக் களையும், சலாமையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவல்லிக்கேணி வா லாஜா பள்ளி கன்வென் ஷன் அரங்கில் இந்த மீலாது விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆன்மீக பேரவை நண்பர்கள்

தம்பிமார்களான கே.எம்.நிஜாமுத்தீன் அவ ரது சகோதரர் கே.எம்.இஸ் மாஈல், ஜெய்னுலாப்தீன், முஸ்தபா, சாலிஹ் சேட் பாக்கவீ, தாஜ் காஜா உள் ளிட்ட அன்பர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் பொறுப்பு வகிக்கும் அன்பர்களும், அவர்களோடு இணைந்து நவீன ஆன்மீக பேரவை நண்பர்களும் என இவர்கள் அனைவரும் ஆக கடந்த பல ஆண்டுகளாக இந்த மீலாது விழாவும் சிறப் போடு தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இஷ்குர் ரஸூல்

இவ்விழா விளம் பரத்திற் காக நடத்தப் படவில்லை. மாறாக, நபிகள் நாயகம் அவர்கள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பு, காதல் காரணமாகவே நடத்தப் படுகிறது. அந்த அன்புக்கு இஷ்குர் ரஸூல் என்று சொல்வர். இப்படி அவர்கள் மீது கொண்ட பேரன்பின் அடையாள மாகத்தான் அவர்களது பெயரில் மவ்லித் ஓதுதல், அவர்களைப் புகழ்ந்து பாடல்களைப் பாடுதல், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்து தல், அதில் அவர் களது மாண்பையும் மகத்து வத்தையும் மக்களுக்கு எடுத் துரைத்தல் என இவை அனைத் தும் நடத்தப்படுகிறது.

அதே பேரன்பின் காரண மாகத்தான் ஆண்டுதோறும் ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் 12 நாட்களில் அனைத் துப் பகுதிகளிலும் வீடு களை சுத்தம் செய்து, வீட்டு வெளிப்புறங்களில் தண் ணீர் தெளித்து, ஏழைகள் உள்ளிட்ட அனை வருக்கும் விருந்து வழங்கி உபசரித்து, பழையனவற்றைக் கழித்து, புதியனவற்றைப் புகுத்தி இன்பம் காணல், விதவை களுக்கும் சிறை கைதிகளுக்கும் உணவு - உதவிகளை வழங்கல், சமுதாயத்தில் தாழ்நிலையில் உள்ள - ஏறெடுத்துப் பார்க்கப் படாத - ஏழை மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைச் செய்தல் போன்ற நிகழ்வுகள் மரபாக தொன்று தொட்டு நடை பெற்று வருகி றது.

இறைவனின் பேரருள்

அந்த மாபெரும் மரபு அண்மைக்காலமாக சிறிது மங்கி, இப்பொழுது மீண்டும் பொங்கிப் பிரவாகம் எடுத்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம் மகத்தான செயலில் ஈடுபடும் அனைவருக்கும் இறைவனின் பேரருள் இம்மையிலும், மறுமையிலும் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் சந்தேக மில்லை.

நேற்று நான் கேரளாவில் இருந்தேன். அங்கு பாரதீய ஜனதா கட்சி யினர் போராட் டத்தில் ஈடுபட்டிருந்த காரணத் தால், நாங்கள் செல்ல வேண்டிய பாதையை மாற்றி, வேறு வழியில் நீண்ட தொலைவு பயணித்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவும் நன்மைக்குத்தான் என்பதைப் பிறகுதான் உணர முடிந்தது. ஐந்து கிலோமீட்டர் தொலை வில் செல்ல வேண்டிய ஊருக்கு சுமார் 50 கிலோமீட்டர் பய ணித்து சென்றோம். செல்லும் இடங்களி லெல்லாம் அங்கே இருந்த மக்கள் தமது இல்லங்களையும், பள்ளி வாசல்களையும் ஒளி விளக்கு களால் அலங்கரித்துக் குதூக லமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அது குறித்து விசாரித்தபோது, நபிகள் நாயகம் பிறந்த நாள் மீலாத் விழா கொண்டாடப் படுகிறது என்று எனக்குச் சொல்லப்பட்டது. தவிடு பொடியான தடைகள்

இதே நிலைதான் தமிழகத்திலும் பல ஆண்டுகளாக இருந்தது. சிலரது தவறான பரப்புரை காரணமாக சில காலம் தடை செய்யப்பட்டு, தற்பொழுது மீண்டும் அந்தத் தடைகள் தவிடுபொடியாக்கப்பட்டு, முன்பை விட மிக அதிகளவில் மடை திறந்த வெள்ளம் போல நடைபெற்று கொண்டி ருக்கிறது.

வடக்கு கோட்டையார்

இதற்கெல்லாம் காரணம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளராகச் சேவை யாற்றிய மறைந்த பெருந் தகை வடக்குக் கோட் டையார் வ.மு.செய்யித் அஹ்மத் அவர்கள்தான். அவர்கள் தொடங்கிய இந்த அரும்பணியை, இன்று இங்கே இந்தத் தம்பிமார் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

டாக்டர் கலைஞர்

இங்கே பெருங்கவிக்கோ சேதுராமன் அய்யா, நம் முஸ்லிம் சமுதாயத்தின் தாய் மாமன் அண்ணன் வைகோ உள்ளிட்ட பிரமுகர்கள் எல்லாம் உரையாற்றி இருக்கிறார்கள். இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வரும் மீலாது விழாக்களில் பல்வேறு தலைவர்கள் பேருரையாற்றியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் எல்லாம் இந்த மீலாது மேடையில் பேருரையாற்றி இருக்கிறார்கள். ஆக இந்த மீலாது மேடை என்பது தமிழினத்தையே ஒருங்கிணைத்த ஒன்றிணைத்த மேடை.

பேரறிஞர் அண்ணா

சகோதரர் வைகோ அவர்கள் தொகுத்து மூன்று பாகங்களாக வெளியிட்டு பேரறிஞர் அண்ணா அவர் களின் உரைகள் அடங்கிய நூல் அண்மையில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட போது எனக்கும் வழங்கப்பட்டது அதில் அண்ணா அவர்கள் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மீலாது விழாக்களில் பங்கேற்று ஆற்றிய உரைகளின் தகவல்கள் பதிவிடப் பட்டுள்ளது.

தந்தை பெரியார்

தந்தை பெரியாரும், அவருக்கு முன்பு வாழ்ந்த தமிழ்ச் சான்றோரும், அவர்கள் அனைவரும் பயிற்றுவித்த பாடங்களை எல்லாம் தொகுத்து வழங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களும், அதைத் தொடர்ந்து விரிந்து மலரச் செய்த மறைந்த தலைவர் கலைஞர் அவர் களும், தற்பொழுது அவரது வாரிசாக அரசியலில் சாதித்துக் கொண்டிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களும், கலைஞரின் வாரிசு கள் வரிசையில் முன்னி லையில் இருக்கும் மாமா வைகோ அவர்களும் இந்தப் பாரம்பரியத்தைத்தான் நிலை நிறுத்திக் கொண்டிருக் கின்றனர்.

ஃபாத்திமா முஸஃப்பர்

எங்கள் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள், """"இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி!!"" என எங்க ளுக்குச் சொல்லித் தந்த அருமையான முழக்கத்தை இங்கே ஃபாத்திமா முஸஃப்பர் மிக அருமையாக எடுத்துரைத்தார். """"இஸ்லாம் எங்கள் மதம்"" என அவர்கள் சொல்லவில்லை. ‘வழி’ என்றார். ‘வழி’, ‘மார்க்கம்’ என்ற சொற்களெல்லாம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்கும் ஓர் அழகிய வாழ்வியல் நெறிதான் இஸ் லாம் என்பதைத்தான் உணர்த் துகின்றன. மனித வாழ்வில் எல்லா நல வளங்களையும் பெற, துன்பங்களையெல்லாம் இன்பங்களாக மாற்றிட, சோதனைகளைக் கடந்து சாதனைகள் புரிந்திட வேண்டுமானால் அதற்கு ஒரு வாழ்வியல் நெறி வேண்டும். அதைத்தான் நபிகள் நாயகம் வழியாக இஸ்லாம் நமக்குத் தந்திருக்கிறது.

மனித வாழ்வு

இப்படிச் சொல்வதால், உலகில் வேறெந்தத் தலைவ ருமே மனிதர்களுக்கு வழிகாட்டவில்லை என்று பொருளாகி விடாது. அவர்கள் காட்டிய வழிமுறைகளுக்கும் - நபிகள் நாயகம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கும் ஒரேயொரு பெரிய வேறுபாடு என்னவென்றால், அவர்களெல்லாம் மனித வாழ்வின் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே வழிகாட்டிச் சென்றிருக்கின்றனர். ஆனால் நபிகளாரோ மனித வாழ்வின் முழுமைக்கும் வழிகாட்டியிருக்கிறார்கள். அந்த வழியை மிகச் சரியா கப் பேணுபவர்தான் - கட்டுப்பட்டவர், இயல் பானவர், அமைதி யானவர், சாந்தமானவர் என்ற பொருள்களையெல்லாம் பொதிந்த ‘முஸ்லிம்’ என்று அழைக்கப்படுகிறார். வாழ்வியல் நெறி """"ஒருவன் அரபியில் பெயர் வைத்துக்கொண்ட ஒரே காரணத்தால் அவன் முஸ்லிமாகிவிட முடியாது... மாறாக, நபிகளார் காட்டித் தந்த வாழ்வியல் நெறியை முழுமையாகப் பின்பற்றி நடக்க வேண்டும்"" என எங்கள் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆக, முஸ்லிம் என அடையாளப்படுத்தும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அவன் முஸ்லிமா கிவிட முடி யாது. நபிகளார் கற்றுத் தந்த வாழ்வியல் நெறியை முழுமை யாகக் கடைப் பிடித்தால் அவர் தன் பெயரை யும் மாற்றித்தான் ஆக வேண்டும் என இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை.

வெற்றிப்பாதை

இந்த ஒலிவாங்கி, விளக்கு, தொலைதொடர்புக் கருவிகள் போன்ற பொருட்களை யெல்லாம் யார் யாரோ கண்டு பிடித்திருக்கின்றனர். ஆனால் அவ்வாறு கண்டுபிடித்த வர்கள் இன்று இல்லை என்றாலும், அவற்றை யார் வேண்டுமானாலும் பயன் படுத்திக்கொள்ள முடியும். காரணம் அது பொது. அதுபோல, நபிகளார் காட்டித் தந்த வழி பொதுவானது, அனைவருக்குமானது. அது சிறந்தது. அந்தப் பாதையில் செல்வோருக்கு வெற்றியைத் தவிர வேறு எதுவும் கிடையாது. ஒருவன் நிம்மதியடைய வேண்டும்; சிக்கல்களிலிருந்து விடுபட்டுச் சிறந்தோங்க வேண்டும் என்றெல்லாம் விரும்பினால், அதற்கு நபிகளார் கற்றுத் தந்த இந்த முழுமையான வாழ்வியல் முறையைக் கடைப் பிடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அப்படிப்பட்ட அந்த வழிமுறை எங்களுக்கு மட்டுமே சொந்தம் என யாரும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாடி விட முடியாதது.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர் களோடு சிராஜுல் மில்லத் அவர்களும், நாங்களும் நிறைய மீலாத் மேடைகளில் பங்கேற்ற காலம் உண்டு. 1960 - 65 களில் அவர் மீலாது மேடைகளில் நிறைய பேசியிருக்கிறார். அப்படிப் பேசுகையில் அவர் சொல்வார்... """"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்"", """"யாதும் ஊரே யாவரும் கேமர்"", """"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"" போன்றவை யெல்லாம் இந்தத் தமிழகத்தில் பிறந்த தத்துவங்கள். மனித இனம் தோன்றி காலந்தொட்டு இந்தத் தத்துவங்கள் உள்ளன. இவற்றைத்தான் சைவத் தத்துவம் என நாங்கள் சொல் வோம். அவை வெறும் தத்துவங்களாக மட்டுமே இருந்தன. ஆனால், நபிகள் நாயகம் அவர்களோ வெறும் தத்துவமாக இருந்த இந்த சைவ சித்தாந்தக் கொள்கைகளை நடைமுறைப் படுத்திக் காட்டியவர். அதனால் அவர் எங்கள் நாயகம் என்றார் முத்தமிழ்க் காவலர் அவர்கள்.

""""நடைபெறாத் தத்துவம் சாகுமே மெல்ல"""" என்று ஒரு கவிஞன் சொன்னான். ஆக, இஸ்லாம் நடைமுறைப்படுத்த முடியாத வெற்றுத் தத்துவ மல்ல. மாறாக, அனைவ ராலும் எளிதில் நடை முறைப்படுத்தத்தக்க - எளிய வாழ்வியல் நெறியே அது. ஐக லடிர ளயல லடிர மnடிற, லடிர ளாடிரடன மnடிற hடிற வடி னடி வை. முnடிறiபே ளை ளாடிரடன நெ னடிiபே. எனக்கு ஒன்று தெரியும் என்றால் அதைச் செய்ய வேண்டும். """"எனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியும்; கார் ஓட்டத் தெரியும்"" என வெறுமனே சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? அதை ஓட்டி னால்தானே பயன்? வெறும் மnடிறடநனபந இஸ்லாமல்ல. முnடிறடநனபந என்பது கணினியில் இன்று சர்வசாதாரணமாகத் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, பெற்ற அறிவின் அடிப் படையில் அதை நடைமுறைப் படுத்துவதுதான் இஸ்லாம். அதைத்தான் நபிகளார் செய் தார்கள்.

பகுத்தறிவு

இஸ்லாமில் கற்பனைக்கு இடமில்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதையுமே இஸ்லாம் சொல்லவில்லை. ஆக, எதைச் சொன்னாலும் அது காரண - காரியங்களோடு ஒத்துப் போவதுதான் இஸ்லாம். """"றுhநசந சநயளடிn நனேள, சநஎநயடயவiடிn நெபiளே"" என்பார்கள். பகுத்தறிவுக்கு ஓர் எல்லை உண்டு. அதற்கு மேல் போக முடியாது. அப்படிப் பகுத்தறிவு முடியும் இடத்தில்தான் இறைஞான வெளிப்பாடு துவங்குகிறது. ஆக, ஞான வெளிப்பாடு என்பது பகுத்தறிவுக்கு அப்பாற் பட்டதல்ல. மாறாக, பகுத்தறிவை முழுமையாக உள்ளடக்கி, அதற்கு மேலும் மனிதனைப் பயணிக்கச் செய்து, அவனது தெளிவின்மை -சந்தேகம் எனும் இருள்களை நீக்கி ஒளியேற்றுவதுதான் ஞான வெளிப்பாடு.

வானவர் ஜிப்ரீல்

இறைவனிடமிருந்து, வானவர் ஜிப்ரீல் மூலமாக - நபிகளாருக்கு ஹிராக் குகை யில் தரப்பட்ட ஞான வெளிப் பாடுதான் 6666 வசனங்களைக் கொண்ட திருக்குர்ஆன். இது வெறும் கற்பனையல்ல. இந்தத் தெளிவு முஸ்லிம்களுக்கும் இருக்க வேண்டும்; இஸ் லாம் பற்றியறிந்த முஸ்லி மல்லாதவர்களுக்கும் இருக்க வேண்டும். அந்தத் தெளிவைத் தான் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், மாமா வைகோ போன்றோ ரெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். திருக்குர்ஆனில் 6666 வசனங்கள் உள்ளன. நபிகளா ரின் வாழ்வியல் நெறிகள் பல லட்சம் ஹதீஸ்களாகப் பதிவிடப் பட்டுள்ளன. இவற்றை யெல்லாம் ஒருவன் என்று முழுமையாகப் படித்து முடித்து, என்று கடைப் பிடிப்பது? நபிகளாரிடம் ஒரு காட்டரபி வந்து, """"அல்லாஹ் வின் தூதரே! உங்களுக்கு இறைவனிடமிருந்து செய்திகள் வருவதாகவும், அதன்படி நீங்கள் மக்களுக்கு வழிகாட்டுவதாகவும், நற் செயல்களின்பால் அவர் களைத் தூண்டுவதாகவும், தீமைகளிலிருந்து அவர்களைத் தடுப்பதாகவும் அறிகிறேன். ஆனால், இவையனைத்தையும் பெற்றிட நான் உங்களருகில் இல்லை. நான் ஒரு காட்டில் தனித்திருக்கிறேன். நான் இவற்றை யெல்லாம் எப்படிப் பெறுவது, கற்பது, கடைப் பிடிப்பது?"" என்று கேட்ட போது, """"அவை எதுவுமே உனக்குத் தெரிந்துதான் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை... மாறாக, நீ எதைச் செய்தாலும் உன் மனசாட்சிப்படி செய்!"" என்றார்கள்.

மனசாட்சி

ஆக, ஒவ்வொரு மனிதனி டத்திலும் மனசாட்சி என ஒன்றிருப்பதை நான் அறிவோம். அதைத்தான் திருக்குர்ஆனில், """"இறைவன் முதல் மனிதனைப் படைத்து, அவனுள் தனது ஆன்மாவை - ரூஹை ஊதினான்"" என்று இறைவன் கூறுகிறான். ஆக, இறைவனுக்கும் -மனிதனுக்கும் இடையிலுள்ள அந்தத் தொடர்பு ஆதி மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து துவங்கிய துதான். அதுதான் இன்று நம் அனைவருக்குள்ளும் ஒரு மின்சாரம் போல இருக்கிறது. அதுதான் எனக்குள்ளும் ஓடுகிறது, இங்கே இருக்கும் ஃபாத்திமாவுக்குள்ளும் ஓடுகிறது... அதுதான் வைகோ வுக்குள்ளும் ஓடுகிறது. அதை உணர்ந்தால்தான் சமுதா யத்தில் வரும் ஒரே ஜாதி - ழரஅயn செடிவாநசாடிடின.

வள்ளலார்

‘ஆன்மநேய ஒருமைப்பாடு’ குறித்து வள்ளலார் பேசினார். ஆன்மாவின் அடிப்படையில் ஒருமைப்பாடு கண்டவர் வள்ளலார் என்றால், அதற்கு ஆதாரமாக இருப்பது திருக்குர்ஆனின் வசனம். ஆதமுக்கு ஊதப்பட்ட ஆன்மாதான் ஹவ்வாவுக்கு வந்தது. அவ்விருவரிட மிருந்துதான் அடுத் தடுத்துப் பிறந்து, இன்றளவும் பிறந்து கொண்டிருக்கிற - இனியும் பிறக்கப் போகிற அனைவருக் குள்ளும் வந்தது; வரவிருப்பது. ஆக, அனைவருக்குள்ளும் உள்ள அந்த ஆன்மாதான் மனசாட்சி. இதை உலக மக்கள் அனைவரும் சரிவரப் புரிந்து கொண்டால், அவர்களுக்குள் ஜாதி, மத, இன, மொழி, குல, பிராந்திய வேறுபாடுகள் இருக்காது. எல்லோருமே ஒரே இனம் என்பது புரியும்.

சிராஜூல் மில்லத்

""""மீலாத் மேடைகளில் உரையாற்றுகையில் பெரும் பெரும் தத்துவங்களை யெல்லாம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை... நபி களார் வாழ்வின் சில நிகழ்வுகளை எடுத்துரைத் தாலே போதும்"" என அடிக்கடி சொல்வார்கள் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள். சொல்லப்படுவது ஒரேயொரு நிகழ்வுதான் என்றாலும் கூட அதில் நிறைய படிப்பினைகள் பொதிந் திருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு நிகழ்வு:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை ஃபஜ்ர் தொழுதுவிட்டு, தனது ஆட்டின் பாலைக் குடிப்பதற்காகக் கறந்து கொண் டிருந்தார்கள். அப்போது அவ்வழியே முஸ்லிமல்லாத காட்டரபி வந்ததைப் பார்த்தார்கள். தான் உணவருந்துகையில் யார் வந்தாலும் அவரை விருந் தாளியாக்கிக் கொள்வது அண்ணலாரின் வழக்கம். அதன்படி, தான் கறந்த பாலை அந்தக் காட்டரபிக்குக் கொடுத்தார்கள். அவரும் குடித்தார். இரண்டாவது ஆட்டுப் பாலைக் கறந்து கொடுத்தார்கள்; குடித்தார். இவ்வாறாக 7 ஆடுகளின் பாலைக் கறந்து கொடுக்கக் கொடுக்க அவர் குடித்துக்கொண்டே இருந்தார். 8ஆவது ஆட்டின் பாலைக் கறந்துகொடுத்தபோது, """"எனக் குப் போதும்!"" என்று கூறிச் சென்றுவிட்டார்.

பிஸ்மில்லாஹ்

ஆறு மாதங்கள் கழித்து அதே போன்று அண் ணலார் ஆட்டுப் பாலைக் கறந்து கொண்டிருந்தபோது அதே காட்டரபி எதிரில் வந்தார். அண்ணலார் கறந்து கொடுத்தார்கள். அவரும் குடித்தார். இரண்டாவது ஆட்டுப் பாலைக் கொடுத்தபோதே போதும் என்று கூறிவிட்டார். இதற்கான காரணத்தை அண்ணலார் கேட்டபோது, """"அல்லாஹ்வின் தூதரே! துவக்கத்தில் நான் நிராகரிப்பாளனாக இருந்தேன்... எனவே எனக்கு எல்லாமே பற்றாக்குறையாக இருந்தது... இப்போதே நான் முஸ்லிமாகி விட்டதால், எதை உட்கொண்டாலும் பிஸ்மில்லாஹ் சொல்லி உட் கொள்கிறேன். எனவே, எனக்கு ஒரு ஆட்டின் பாலிலேயே ஏழு ஆட்டுப் பாலின் தேவை பூர்த்தியாகிவிட்டது"" என்றார். இதைக் கேட்ட அண்ணலார் அவர்கள், பிஸ்மில்லாஹ் சொல்லி உட்கொண்டால் அது பன்மடங்காக மாறும் என்ற தத்துவத்தை விளக் கினார்கள்.

இது ஏதோ ஒரு கதை யல்ல. எந்தக் காரியத்தைச் செய்தாலும் பிஸ்மில்லாஹ் சொல்வது, வலது கையால் உணவெடுத்து உண்பது, பக்கத்தில் உள்ளோருக்குப் பகிர்ந்தளிப்பது, வாய்ப்பற் றோருக்குத் தேடிச் சென்று அளிப்பது என்ற நல்ல பழக்க வழக்கங்களை நீங்கள் ஒவ்வொருவரும் இந்தச் சின்ன வயதிலேயே உங்களுக்குள் நிரந்தரமாகக் குடிகொள்ளச் செய்ய வேண்டும். இவ்வாறாக நீங்கள் மாறும்போது, உங் கள் வாழ்வு சிறக்கும். உங் களால் உங்கள் சமூகம் தழைத்தோங்கும்.

பன்மடங்கு அபிவிருத்தி

நமது தாய்மார் எல்லாம் இதைச் சரியாகச் செய்து வந்தார்கள். வீட்டில் அடுப்பில் உலையை ஏற்றினாலும், அரிசியை இட்டாலும், அரிசி கொதித்து உலையை இறக்கினாலும், சாதத்தைத் தட்டில் இட்டாலும், சாப்பிடத் துவங்கினாலும், குழந்தைக்குப் பாலூட்டினாலும், வீட்டில் பாயை விரித்தாலும், தலைய ணையைப் போட்டாலும் பிஸ்மில்லாஹ் சொல்லியே செய்தனர். இன்று அந்த நிலை அருகி வருவது வேதனை யளிக்கிறது. பிஸ்மில்லாஹ் சொல்லி செய்யப்படும் எந்தக் காரியமானாலும் அது பன்மடங்கு அபிவிருத்தியைத் தரும் என்ற நாயக வாக்கு ஒருபோதும் பொய்யாகாது என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

தைமூர்

முஸ்லிம்களின் வரலாற்றில் கூலஅடிசந வாந டயஅந - தைமூர் எனும் நொண்டி என்றொரு கதை உண்டு. தைமூர் ஒரு பெரிய வீரர். அவர், அன்றைய பாரசீகம் - இன்றிருக்கும் ஈரான் மீது படையெடுத்துப் போனார். போனவர் நேராக அதன் தலைநகருக்கே சென்று தாக்கினார். ஈரானி யர்கள் அவரைச் சுற்றி வளைத்துத் தாக்கினார்கள். இறுதியில் அவர் தன் படைகளையெல்லாம் இழந்து, தனித்துவிடப்பட்ட நிலையில், சந்நியாசி போல ஊர் ஊராகத் தலைமறைவாகித் தப்பித்துச் சென்று கொண் டிருந்தார். அப்படிச் செல் கையில் ஒரு கிராமத்தின் வழியாகச் செல்கிறார். அப்போது அவருக்குப் பசி. கிராமத்திலுள்ள ஒரு வீட்டி னருகில் சென்று, """"சாப்பிட ஏதாவது கிடைக்குமா?"" என்று கேட்க, """"உட்காருப்பா! உணவு தருகிறேன்"" என அங்கிருந்த ஒரு மூதாட்டி சொல்லி, கொதிக்கும் கோதுமை உணவை ஒரு தட்டில் வைத்து, சந்நியாசி வேடத்திலிருந்த தைமூர் முன் வைக்கிறார்.

உணவு சாப்பிடும் முறை

அவரோ தன் பசி வேகத்தில், கொதிக்கும் சோற்றில் நடுவில் கை வைத்து எடுக்க முயற்சிக்கிறார்... சூட்டில் கை பொசுங்கி விடுகிறது. இதைக் கண்ட அந்த மூதாட்டி, """"என்னப்பா... நீ தைமூர் மாதிரி சாப்பிடுகிறாய்?"" என்று கேட்க, தைமூர் வெல வெலத்துப் போகிறார். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், """"ஏனம்மா அப்படிக் கேட்டீர்கள்?"" என்று கேட்டபோது, """"இல்ல தம்பீ! தைமூர் படையெடுத்து வந்தார்... தன் படைகளுடன் எல்லை யோரங்களில் கொஞ்சங் கொஞ்சமாகத் தாக் கிக் கொண்டு வந்திருந்தால் நாட்டைக் கைப்பற்றி இருப்பார்... ஆனால் அவரோ தன் அனைத்துப் படை பட்டாளங்களுடன் எடுத்த எடுப்பிலேயே தலைநகரைத் தாக்கப் போய், ஒன்று மில்லாமல் பரதேசியாக்கப் பட்டார்... அதுபோலவே நீ உணவைச் சாப்பிடுகிறாய்... எங்களுக்கு நபிகள் நாயகம் அவர்கள் கற்றுத் தந்தது, தட்டில் உள்ள உணவில் நடுப்பகுதிக்கு எடுத்த எடுப்பி லேயே செல்லக் கூடாது; மாறாக, தனக்கருகில் ஓரத்தில் உள்ளதிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக எடுத்து உண்ண வேண்டும் என்று! நீ அதைக் கடைப்பிடிக்கவில்லை... எனவே உன் கை பொசுங்கிவிட்டது... சாப்பாட்டில் சரியாக இருப்பாயானால், ஒரு சாம்ராஜ்யத்தையே சரியாக ஆள முடியும்"" என்றாராம். இதைத்தான் கூலஅடிசந யனே வாந பசயனே டயனல வரலாற்றில் என்று தலைப்பிட்டுக் கூறுவர். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல! ஆயிரக்கணக்கில் பதிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் பாடம், படிப்பினைகள் உள்ளன. ஆக, நபிகளார் காட்டித் தந்த வாழ்வியல் நெறியில் எக்கச்சக்கமான பாடங்கள், படிப்பினைகள் புதைந் திருக்கின்றன. அவற்றை உணர்ந்து பின்பற்றி நடப் போமேயானால் வாழ் வில் வெற்றியைத் தவிர வேறெ துவும் இல்லை.

தாய்ப்பால்

ஒன்றை மட்டும் கூறி நான் நிறைவு செய்கிறேன். இன்று நாட்டில் பல சட்டங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இஸ்லாமும் அன்றே மனித வாழ்விற்குத் தேவையான சட்டங்களை வகுத்துத் தந்திருக்கிறது. குறைந்தது ஆறு மாதங்களுக்காவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என இன்று அரசால் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதற்காக, பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியரெல்லாம் """"தாய்ப்பால் வாரம்"" என்று கடைப்பிடித்து, தாய்ப்பாலின் மகத்துவத்தை வலியுறுத்தும் வாசகங்களைத் தாங்கிய பதாகைகளைத் தூக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

திருமறை குர்ஆன், """"பெற்ற குழந்தைக்கு இரண்டாண்டு காலம் தாய்ப்பால் கொடு"" எனக் கூறுகிறது. """"தாய்ப்பால் முறையாகக் கொடுக்கப்படாத குழந்தைக்கு முதுகெலும்பில் வலுவிருக்காது; அவர் குதிரையேறி சவாரி செய்ய முடியாது"" என நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள். தாய்ப்பால் கொடுப்பது நாகரிகமற்றது என்று கருதி வந்த மேலைநாடுகளில் எல் லாம் இன்று தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம் என சட்ட மாக்கப்பட்டுள்ளது. ஆக, இறைவனின் சட்டம் நிலை யானது; மாற்ற முடியாதது; மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.

சீனா

கம்யூனிச நாடான சீனாவில் அண்மையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது - கணவனை இழந்த விதவை ஓராண்டு பூர்த்தியான பிறகே மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அச்சட்டம். அதற்குக் காரணம் என்ன? அங்கு ஒரு பெண் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள்... பொது வாகவே இரட்டை குழந்தை கள் என்றால் ஒரே சாயலில் இருக்கும். ஆனால் இந்தக் குழந்தைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தாத வெவ்வேறு சாயலில் இருப்பதைக் கண்டு, அது பிரச்சனையாக்கப்படுகிறது. அதுகுறித்து அப்பெண்ணிடம் விசாரிக்கப்பட்டபோது, """"என் முதல் கணவர் இறந்த சில நாட்களில் அடுத்த கணவரை மணமுடித்துக் கொண்டேன்... அவ்விருவரின் குழந்தைகளாக அவை இருக்கலாம்"" என்று கூற, உடனடியாக அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, பிறகு அக்குழந்தைகள் இரண் டும் அப்பெண்ணின் முந்தைய கணவர் உடைய தும், தற்போதைய கண வர் உடையதும் என உறுதி செய்யப்பட்டது. இனி யும் இதுபோன்ற குழப் பங்கள் நிகழக் கூடாது என்பதற் காகவே அச்சட்டம் இயற்றப் பட்டது. திருமறை குர்ஆன், ஒரு பெண் கணவனை இழந்து விட்டாள் அவள் மூன்று மாதவிடாய்க் காலம் வரை காத்திருக்க வேண்டும்... அதன் பிறகே மறுமணம் செய்து கொள்ளலாம் என்கி றது.

மாதவிடாய்

நேபாளத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாதவிடாய் கண்ட பெண்களை அங்கு வீட்டிற்கு வெளியே தனியொரு குடிசை யில் அமர்த்தும் பழக்கம் உள் ளது. இங்கும் கூட பல இடங்களில் இருந்தது. இன் றும் சில இடங்களில் இருக் கிறது. அப்படி வெளியில் குடிசையில் அமர்த்தப்பட்ட பெண் ஒருவர் பாம்பு கடித்து இறந்து விட, அது நாடு முழுக்க பரபரப்பாகி, பாராளு மன்றத்தில் எதிரொலித்து, அதுகுறித்து நீண்ட விவா தங்கள் செய்யப்பட்டு, நிறைவில், """"மாதவிடாய் கண்ட பெண்களை வீட்டை விட்டும் வெளியே வைப்பது தண்டனைக்குரிய குற்றம்"" என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆனால், இஸ்லாம் இந்தச் சட்டத்தை 1,440 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்துத் தந்துவிட்டது. மாதவிடாய் என்பது ஒரு கழிவுநீக்கம் மட்டுமே. அது ஏற்பட்ட காலகட்டத்தில் உடலுறவில் மட்டும் கவனமாக இருந்துகொள்ள வேண்டுமே தவிர, உடலை வருத்தாத எந்தப் பணியையும் அவர் செய்யலாம் என்கிறது இஸ்லாம். நபிகளார் அவர்கள் தன் மனைவி ஆயிஷாவிடம் ஒரு வேலையைச் செய்யச் சொல்ல, """"அல்லாஹ்வின் தூதரே! நான் மாதவிடாயுடன் இருக்கிறேன்"" என்கிறார்கள். அதற்கு நபிகளார், """"மாதவிடாய் என்பது உன் கையில் இல்லை; போய் எடுத்து வா!"" என மீண்டும் பணிக்கிறார்கள்.

மாதவிடாய் கண்ட ஒரு பெண் தன் கணவனோடு ஒரே பாயில் படுக்கலாம்; கணவன் - மனைவி முத்தமிட்டுக் கொள்ளலாம்; கட்டி யணைத்துக் கொள்ளலாம்; கழிவு நீக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதால் அப்பாதை வழியே உடலுறவு மட்டும் இருக்கக் கூடாது என்றுதான் கூறுகிறது இஸ்லாம்.

இறைச்சட்டம்

மனிதனைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பதை உணர்த்துவதாக இது அமைய வில்லையா? எனவேதான் சொல்கிறோம்... இறைச்சட்டம் ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாதது; மாற்ற அவசியமற்றது. உலகம் முழுக்க முஸ்லிம் சமுதாயம் நபிகள் நாயகம் அவர்கள் வகுத்துத் தந்த வாழ்வியல் நெறிப்படியே பயணம் செய்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில்தான் இந்திய முஸ்லிம்களும் தம் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இன்று அச்சட்டங்களையெல்லாம் மாற்றி, தன் அறிவுக்குத் தோன்றும் அனைத்தையுமே சட்டமாக்க சிலர் இந்நாட் டில் முயற்சித்துக் கொண் டிருக்கிறார்கள். அவர்களது முயற்சி முழுக்க முழுக்க குழப் பத்திலேயே சென்று கொண் டிருக்கிறது.

இவற்றையெல்லாம் நான் சொல்வதற்குக் கார ணம், இஸ்லாம் - நபிகள் நாயகம் - திருக்குர்ஆன் என்பதெல்லாம் நேற்று, இன்றைக்கானது மட்டுமல்ல. இனி வரப்போகும் நாளைக்கும் அது பொருந்தக் கூடியது. காரணம், முக்காலத்தையும் படைத்தவனால் தரப்பட்டது அந்தச் சட்டம். இந்த நபிக்குப் பிறகு இனியொரு நபி கிடையாது. இந்த வேதம் திருக்குர்ஆனுக்குப் பிறகு இனியொரு வேதம் கிடையாது. இதுவே இறுதி வேதம். இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் உறுதியானவை. இதில் சந்தேகமே கிடையாது என திருக்குர்ஆனே கூறுகிறது.

ஆக, சந்தேகத்திற்கப் பாற்பட்டு சத்தியத்தை முழங் கும் இந்த மார்க்கம் ஒவ்வொரு வராலும் பின்பற்றப்பட வேண்டியவையே. ஆக, இஸ்லாம் ஒரு மதமல்ல; ஒரு வாழ்வியல் நெறி மட்டுமே. திருக்குர்ஆன் ஏதோ சிலருக்குச் சொந்தமானதல்ல; மாறாக அது உலகப் பொதுமறை. அதைப் பார்க்க, படிக்க, பின்பற்ற அனைவருக்கும் உரிமை உண்டு. அது அவசியமும் கூட. அந்த வழிமுறை - முஸ்லிம் என்று அடையாளப்படுத்தும் பெயரை மாற்றிக் கொள்ளா மலேயே பின்பற்றும் வகையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட இந்த வழிமுறையை நாம் அனை வரும் பின்பற்றி, இம்மையிலும் - மறுமையிலும் முழு வெற்றி பெறுவோம். அந்த மகத் தான வழிமுறையை நமக்களித்த வர்கள்தான் நபிகள் நாயகம் அவர்கள். அதற்காகத்தான் அவர்களை நாம் புகழ்ந்து இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம். அவர்களது பெயர் கூறப்பட்டாலே நாம் அவர்கள் மீது ஸலவாத் எனும் பிரார்த்தனை மூலம் இறைவனிடம் நன்றி செலுத்துகிறோம். மகத்தான இந்த இஸ்லாமிய வாழ்வியல் நெறியைப் பின்பற்றி நடந்தால் அவருக்கு வெற்றியைத் தவிர வேறெதுவும் இல்லை, இல்லை, இல்லை என்று கூறி எனதுரையை நிறைவு செய்கிறேன், நன்றி.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்