Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி




{Click for News Headlines}

<<PreviousNext>>
Wednesday, December 19, 2007
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பி. ஜாபர் காலமானார் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல்


கிருஷ்ணகிரி,டிச. 19- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பி. ஜாபர் வயது 45. 18-12-2018 செவ்வாய் கிழமை இரவு 11 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று 19-12-2018 புதன்கிழமை மாலை 5 மணியளவில் கிருஷ்ணகிரி மதீனா பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த ஜாபருக்கு மனைவியும், இரண்டு ஆணும், இரண்டு பெண் மக்களும் உள்ளனர்.

மறைவு செய்தியறிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அருமை தம்பி ஜாபர் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த வே தனையும், துக்கத்தையும் அளித் திருக்கிறது. இளமை காலத்திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து சிறந்த தொண்டு கள் செய்து சன்மார்க்க அறி ஞர்கள், சமுதாய பிர முகர்கள், பொதுவாக எல்லா சமுதாய மக்களும் பாராட்டும் படியாக வாழ்ந்து காட்டியவர்.

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் தாய்சபையின் வளர் ச்சிக்கு பெரிதும் உழை த்து எல்லா தரப்பு மக் களையும் லீகில் இணைப்பதற்கு பெரும் முயற்சி செய்து அதில் சிறந்த வெற்றிகளையும் பெற்றார்.

சமூக நல்லிணக்கம் பேணி வாழ்ந்ததோடு, தோழமை கட்சிதலைவர்கள், தொண் டர்கள் ஆகியவர்களுடன் மிக அன்பாகவும் நெருங்கிய தோழமையுடன் பழகி நட்பு பாராட்டி எல்லோருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்த முஸ்லிம் லீக் முன்னணி தலைவராவார்.

சித்தா, ஆயுர்வேதிக் சிகிச்சைக்குரிய மூலிகைகள் கடை வைத்து தொடர்ந்து மக்களுக்கு வணிகத்தோடு, வைத்தியமும் செய்து மக்களுடைய நன்மதிப்பை பெற்றிருந்தார். அவரின் மறைவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் எல்லோரும் அவர் இழப்பு தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டமாக கருதுகின்றனர். அவருடைய மஃபிரத்துக்கு எல்லோரும் இறைஞ்சுவோம்.

அவரது மறைவால் வாடும் அவரின் குடும்பத்தார், உற்றார் உறவினர் ஆகியோருக்கு நமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்போம்.

இவ்வாறு பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் இரங் கல் செய்தியில் கூறியு ள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்ஏ., மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ஏ. சித்தீக் பாஷைவை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மறைந்தவரின் மஃபிரத்துக்கு துஆ செய்தனர்.

நல்லடக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் எச். அப்துல் பாசித், வாணியம்பாடி நகர செயலாளர் நரி முஹம்மது நயீம் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் பங்கேற்று மறைந்தவரின் மஃபிரத்துக்கு துஆ செய்கின்றனர்.

<<PreviousNext>>

Show News from

Image Gallery










































More Links


All India


Live Video



M.P.Speech







Our News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்