முக்கிய செய்தி

2019 நாடாளுமன்ற தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில வேட்பாளர்கள் அறிவிப்பு

2019 நாடாளுமன்ற தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில வேட்பாளர்கள் அறிவிப்பு
2019 மே திங்கள் நடை பெறயிருக்கக்கூடிய இந்திய நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று 09.03.2019 கேரள மாநிலம் கோழிக்கோடு லீக் ஹவுஸ் மாநில தலைமை நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னிலையில் 
கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநிலம் மலப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, 
பொன்னானி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடுவதென அறிவிப்பு செய்தார்.
அப்போது மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி தங்ஙள், கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வகாப் எம்.பி., 
தேசிய செயலாளர் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினருமான அப்துஸ் ஸமது சமதானி , தேசிய செயலாளர் சிராஜ் இப்ராஹிம் சேட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.