முக்கிய செய்தி

கேரளா மஞ்சேஸ்வரம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.சி. கமருதீன் வெற்றி

கேரளா மஞ்சேஸ்வரம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.சி. கமருதீன் வெற்றி
பா.ஜ.க. வேட்பாளரை தோல்வியுற செய்து 7923 வாக்குகள் வித்தியாசத்தில் 
கேரளா மஞ்சேஸ்வரம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.சி. கமருதீன் வெற்றி

கேரளா, அக் 24-
கேரளா சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 5 தொகுதிகளில் நடைபெற்றது. மஞ்சேஸ்வரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.சி. கமருதீன், பா.ஜ.க. வேட்பாளர் ரவீஸ் தந்தீரி குண்டாரை விட 7923 வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற்றார்.
எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.ஜே. வினோத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மனோ ராயை விட 3750 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார். 
திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூர் காவு சட்டமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.கே. பிரசாந்த், காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரை விட 14465 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பத்தினம் திட்டா மாவட் டம் கோணி சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜெனீஸ்குமார், காங்கிரஸ் வேட்பாளர் மோகன் ராஜை விட 9953 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆழப்புலா மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சானிமுல் உஸ்மான், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளர் மணுஸீ புலிக்கல்லை விட 1955 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு விவரம் வருமாறு:-
மஞ்சேஸ்வரம் சட்டமன்ற தொகுதி
எம்.சி. கமரூதீன் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 65407,  ரவீஸ் தந்தீரி குண்டார் - பா.ஜ.க., 57484, சங்கரா ராய் மாஸ்டர் - சி.பி.எம். 38233, 
எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதி
டி.ஜே. வினோத் - காங்கிரஸ் 37891, மனுராய்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 34141, ராஜகோபால் - பா.ஜ.க. 13351, 
வட்டியூர் காவு சட்டமன்ற தொகுதி
என்.கே. பிரசாந்த் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 54830, மோகன் குமார்- காங்கிரஸ் 40344, சுரேஸ் - பாஜ.க. 27453,
கோண்ணி சட்டமன்ற தொகுதி
ஜெனீஸ்குமார் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 54099, மோகன்ராஜ் - காங்கிரஸ் 44146, கே. சுரேந்திரன் - பா.ஜ.க. 39786,
அரூர் சட்டமன்ற தொகுதி
சானிமுல் உஸ்மான் - காங்கிரஸ் 68851, மனுஸீப் புலிக்கல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 66896, பிரகாஷ் பாபு - பா.ஜ.க. 16215,
கேரளாவில் நடைபெற்ற 5 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.