முக்கிய செய்தி

காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை பாராளுமன்ற பொதுத் தேர்தலுடன் நடத்த வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வலியுறுத்தல்

காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலை பாராளுமன்ற பொதுத் தேர்தலுடன் நடத்த வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வலியுறுத்தல்

காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான 
இடைத்தேர்தலை பாராளுமன்ற பொதுத் தேர்தலுடன் நடத்த வேண்டும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் உட்கட்சி பிரச்சினையால் பேரவை தலைவரின் நடவடிக்கை மூலம் பதவி இழந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக அத்தொகுதிகள் காலியாகி மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

மேலும் இரண்டு தொகுதிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ளன.

ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீதிமன்ற உத்தரவி னால் பதவி இழந்துள்ளார்.

மொத்தமாக தற்போது 21 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் மக்கள் பணிகள் தொய்வடை ந்துள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இழந்துள்ள அதிமுக அரசு காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்தாமல் மத்தியிலுள்ள பா.ஜ.க. ஆட்சியாளர்கள் மூலம் காலம் தாழ்த்தி வருவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனத்தை தெரிவித்து க்கொள்கிறது.

இடைத்தேர்தலை சந்திக்க அச்சப்படும் அஇஅதிமுகவின் கோளைத்தனம் மக்கள் விரோத போக்கையே காட்டுகின்றது. 
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் பாராளு மன்ற பொதுத்தேர்தலோடு நடத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.