முக்கிய செய்தி

​இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-தேர்தல் நிதி அனுப்பித் தர அன்பு வேண்டுகோள்

​இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-தேர்தல் நிதி  அனுப்பித் தர அன்பு வேண்டுகோள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-தேர்தல் நிதி 
அனுப்பித் தர அன்பு வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று மலப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி அவர்களையும், பொன்னானி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் அவர்களையும் நிறுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில கௌரவ ஆலோசகர் கே.நவாஸ்கனி அவர்களை போட்டியிட செய்திருக்கிறது. 
ஆந்திரபிரதேசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் நான்கு நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
தெலங்கானாவிலும், கர்நாடகத்திலும் , புதுச்சேரியிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் வெற்றிக்கு பாடுபடுவதென முடிவெடுத்திருக்கிறது. 
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ், தெலங்கானா, புதுச்சேரி ஆகியவை தவிர மற்ற மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது குறித்தும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்தும் ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுவதால் இத்தகையை ஆலோசனைக்கான கால அவகாசம் நீடித்து கொண்டிருக்கிறது. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் ஏற்படும் செலவினங்களை சமாளித்துக் கொள்ளும் நிலையில் இருந்தாலும் கட்சியின் சார்பில் செய்ய வேண்டிய செலவினங்களை சமுதாய புரவலர்களிடத் திலிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகளிலும், போட்டியிடாத தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கும், தேர்தல் காலத்தில் செலவுகள் மிகுதியாகவே ஏற்படும் என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் செலவினங்களுக்கான நன்கொடைகளை தாராளமாக அளித்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.இன்றைய காலகட்டத்தில் தேர்தலுக்கான செலவுகள் மித மிஞ்சி ஆகின்றன என்பதை சமுதாய புரவலர்களும், இயக்கத்தின் ஊழியர் திலகங்களும் நன்கு புரிந்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 11ம் தேதியன்று முதல் கட்ட தேர்தலும், மே 18ம் தேதியன்று -  7ம் கட்ட தேர்தலும் , மே 23ல் தேர்தல் முடிவுகளும் வரயிருக்கிற நிலையில் காலம் மிக விரைவாக ஓடிக்கொண்டிருக்கிறது. சற்றொப்ப 50 நாட்களே நமக்கு முன்னே இருக்கின்றன. இந்த காலகட்டத்திற்குள் நமது தேர்தல் பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றும் பெரும் பொறுப்பும், கடமையும் நம்மீது ஏற்பட்டிருக்கிறது. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தேர்தல் நிதியை தாராளமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ரூ. 10 ஆயிரமும் அதற்கு மேலுமுள்ள தொகையை அனுப்பும் நன்கொடையாளர்கள் தங்களது பேன்கார்டு எண்ணையும் குறிப்பிட்டு அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறோம்.
மிகவும் குறுகிய காலத்திற்குள் மிகப்பெரிய செலவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் நன்கொடை அளிக்க முன்வரும் நல்லுல்லங்கள் விரைவாகவும், தாராளமாகவும் அனுப்பி உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பாராளுமன்ற வேட்பாளர் தேர்வு குழு தலைவர் பானக்காடு தந்த ஞானத் தங்கம் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களும் மற்றும் குழு உறுப்பினர்களாக உள்ள தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாகிப், தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி சாகிப் எம்.பி., பி.வி. அப்துல் வகாப் எம்.பி., மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத் சாகிப், தேசிய செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர் ஆகியோரின் ஒருமித்த முடிவின் அடிப்படையில் தேர்தல் நிதிக்கான இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டிருக்கிறது.
சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள். சிறியதெனினும், பெரியதெனினும் அதனை உடனடியாக உள்ளன்போடு அளித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேர்தல் களப்பணியை  வீரியமுள்ளதாக்க ஒத்துழைக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தல் நிதி அனுப்பவேண்டிய வங்கி விவரம்:-
Name    : INDIAN UNION MUSLIM LEAGUE
Account Number    : 030501000029500
Bank        : INDIAN OVERSEAS BANK
Branch        : MUTHIALPET, CHENNAI
IFSC Code        : IOBA0000305
SWIFT Code    : IOBAINBB305

- பேராசிரியர்கே.எம். காதர் மொகிதீன்
       தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


DO CONTRIBUTE YOUR SHARE FOR THE
 INDIAN UNION MUSLIM LEAGUE'S ELECTION FUND
Indian Union Muslim League is a constituent of the electoral alliance headed by Indian National Congress in Kerala and has fielded it's National General Secretary  Mr.P.K.Kunhalikutty as it's candidate in Malappuram Parliamentary Constituency and it's National Organising Secretary Mr.E.T. Muhammed Basheer in Ponnani Parliamentary Constituency. 
In Tamil Nadu IUML is a constituent of the electoral alliance headed by Dravida Munnetra Kazhagam (DMK) and has fielded Mr.K.Navas Gani, the State Honorary Adviser  of IUML as it's candidate in Ramanathapuram Parliamentary constituency. 
In Andhra Pradesh IUML is contesting independently without joining in any electoral alliance and has fielded it's candidates in 4 Parliament constituencies and 22 Legislative Assembly constituencies.
In Telengana, Karnataka and Pudhucherry States IUML has resolved to support the candidates fielded by the Indian National Congress and work hard to ensure their victory.
In the States other than Tamil Nadu, Kerala, Andhra Pradhesh, Telengana, Karnataka & Pudhucherry the deliberations are going on regarding selection of IUML candidates to contest the election and the modality to support the Indian National Congress. Since the election is going to be held in seven phases, it is taking time to complete these deliberations.
Even though the IUML candidates are in a position to meet their election expenses themselves,  IUML also has to meet out the Party's election expenditures and for that IUML is wholly depending on the financial contributions from the philanthropists belonging to the community and the public at large.
Not only in the constituencies where IUML candidates are contesting, but also in the rest of the constituencies IUML has to take the election propaganda work in a large scale and everybody knows that it involves  lot of expenditures.
The Philanthropists as well as the Party workers very well know that the election work involves a lot of expenditure and we are in need of  huge money. Hence we have appealed to you to contribute liberally to the IUML's Fund.
The time is running very fast as the 1st phase of polling is on April 11th, the 7th phase is on May 18th and the final results will be declared on May 23rd and as such we have only 50 days left. A great duty and responsibility of completing all the election works successfully within this short time is cast upon us.
IUML is appealing you to contribute liberally and deposit the same in the below given Bank Account. Whoever is contributing more than Rs.10,000/- in the said Account, please furnish your PAN number details also.
As we are in such a situation of having very short duration and to incur more of election expenses, it is appealed to all the good hearts to contribute for Election Fund liberally and also quickly.
This appeal calling you to contribute for IUML Election Fund is an unanimous  call by the IUML's National Parliamentary Candidates Selection Committeee headed by Mr.Panakkad Seyyad Ali Shihab Thangal including it's members the National President Prof.K.M.Kader Mohideen Sahib Ex.M.P., National General Secretray Mr. P.K.Kunhalikutty Sahib M.P, National Organising Secretary Mr.E.T. Muhammed Basheer Sahib M.P, Mr.P.V.Abdul Wahab Sahib M.P, Malappuram District President Mr. Seyyad Sadiq Ali Shihab Thangal, the General Secretary of Kerala State K.P.A.Majeed Sahib Ex MLA, and the National Secretary Mr.Khorrum Anis Omer Sahib.
Little drops make the Ocean. Whatever your contribution to the fund is, please make the  contribution soon and help IUML to carry out the election work more enthusiastically and effectively.
The Bank Account details for sending the contributions:

Account Name     : Indian Union Muslim League
Account No    : 030501000029500
Bank        : Indian Overseas Bank
Branch         : Muthialpet Branch, Chennai
IFSC Code    : IOBA0000305
SWIFT Code    : IOBAINBB305
                                        Yours sincerely,


                                  Prof. K.M. Kader Mohideen Ex.M.P.,
                                 National President, Indian Union Muslim League
1. Panakkad Seyyad Ali Shihab Thangal     -25000
2. Prof.K.M.Kader Mohideen Sahib Ex.M.P., -25000
3. P.K.Kunhalikutty Sahib M.P,          -25000
4. .E.T. Muhammed Basheer Sahib M.P,     -25000
5. P.V.Abdul Wahab Sahib M.P,          -25000
6. Seyyad Sadiq Ali Shihab Thangal         -25000
7. K.P.A.Majeed Sahib Ex MLA         -25000
8. Khorrum Anis Omer Sahib         -25000
9. Lalpettai Thalapathy Shafiqur Rahman    -2000
10. Chennai K.M. Nijamudeen        -1000
11. North Chennai M. Zainulabideen        -5000
Note:- Contributors sending Cheques / M.O’s / Drafts drawn in favour of Indian Union Muslim League are requested to post their letters to Indian Union Muslim League, Quaid-e- Millath Manzil, 36, Maraikayar Lebbai Street, Chennai- 600 001 and Contributions shall be published in Manichudar Tamil Daily.