முக்கிய செய்தி

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.18 ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19 ல் தொடங்கியது. மார்ச் 22 வரை 5 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் திமுக., காங் கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் வேட்பாளர் கா.நவாஸ் கனி, தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் தாக்கல் செய்தார். அவருடன் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், திமுக., மாவட்ட செயலர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், காங்., மாவட்ட தலைவர் தெய்வேந்தின் ஆகியோர் உடனிருந்தனர்.