முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு....
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு....
 
 பேரன்டையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
 06.07.2019 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்குழு கூட்டங்களை விரைவாக நடத்தி  உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை துவங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு கீழ்க்கண்ட விவரங்களை தலைமை நிலையத்திற்கு அனுப்பிட மாவட்ட தலைவர், செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதுவரை தங்கள் மாவட்டத்திலிருந்து தலைமை நிலையத்திற்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. 
எனவே 05.11.2019க்குள் கீழ்க்கண்ட விவரங்களை தலைமை நிலையத்திற்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற வார்டுகளில் முஸ்லிம் லீக் கோரிப்பெற்று வேட்பாளர்களை நிறுத்துவதற்குரியவை எவை.
* ஊராட்சி ஒன்றியங்களில் முஸ்லிம் லீக் வேட்பாளர்களை நிறுத்துவதற்குரிய தொகுதிகள் எவை.
* மாவட்டங்களிலுள்ள கிராம பஞ்சாயத்துக்களில் முஸ்லிம் லீக் வேட்பாளர்களை நிறுத்துவதற்குரிய பஞ்சாயத்துக்கள் எவை.
தமிழகத்தில் உள்ளாட்சிமன்ற தேர்தல் 2019 டிசம்பர் மாதத்திற்குள் நடத்தப்படுமென நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் உடனே கவனம் செலுத்தி களப்பணியாற்றிட கேட்டுக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
தங்கள் அன்புள்ள,
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.,
மாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்