முக்கிய செய்தி

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்
இ.யூ.முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது
மேலிட தேர்தல் பொறுப்பாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

ராஞ்சி, அக் 15-

2019 டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கக்கூடிய ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜார்கண்ட் மாநில செயற்குழு கூட்டம் 12.10.2019 அன்று மாலை 4 மணிக்கு ராஞ்சி தி கென் ஹோட்டல் ஹாலில் மாநில தலைவர் செய்யது அம்ஜத் அலி தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், ஜார்கண்ட் மாநிலத்திற்கான மேலிட தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

ஜார்கண்ட் மாநில பொருளாளர் டாக்டர் நஸ்ருதீன் உமரி கிராஅத் ஓதினார்.

மாநில பொதுச்செயலாளர் முஹம்மது சாஜித் ஆலம் வரவேற்று கூட்டத்தினுடைய நோக்கத்தை எடுத்து கூறினார்.

கேரள பிரவாசி லீக் செயலாளர் பாலக்காடு எம்.எஸ். அலவி துவக்கவுரையாற்றினார்.

கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பங்கும் பணிகளும் குறித்து மாவட்ட வாரியாக கருத்து தெரிவிக்கும்படி அறிவிப்பு செய்யப்பட்டது. 
தொடர்ந்து  மாவட்ட நிர்வாகிகளான தன்பாத் டாக்டர் ஜாவித் இப்ராஹிம், ஜம்செட்பூர் மஸ்ஹர்கான், கிரீடி மௌலானா இலியாஸ், மௌலானா செய்யது ஆலம், பக்குரோ முஹம்மது மீராஜ், பாக்கூர் ஷாக்கிர் அஹமது, தியோகர் ஆபித் உசைன், ராம்கர் இஸ்மாயில்கான், கொட்டா இலியாஸ் உசைன், ராஞ்சி அலக்குமார் சிங், லத்தேஹர் ஆரிப் இக்பால் நத்வீ, பலமு இமாமுத்தீன்கான், ஜாம்தாரா சதாம் உசைன், சிம்டெகா முஹம்மது அமானுல்லா, லுகர் தகா முர்ஷித், ஹஸாரி பாக் சம்சுல் ஹக், 

முஸ்லிம் யூத் லீக் சார்பில் தப்ரேஸ் அஹமது, இர்பான்கான், முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் ஷாபாஸ், மகளிரணி சார்பில் ரபாத் காத்தூன், நஜ்முன் காத்தூன் ஆகியோர் கருத்துரை யாற்றினர். செய்தி தொடர்பாளர் முப்தி அப்துல்லா காசிமி கூட்டத்தை நெறிப்படுத்தினார். 

இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், ஜார்கண்ட் மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.  தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், தொகுதியை தேர்வு செய்து பூத் கமிட்டி ஏற்படுத்தி வாக்கு எண்ணிக்கை வரை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1. ஜார்கண்ட் மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகரிக்கப்பட்ட துணை அமைப்பான கேரள முஸ்லிம் கல்சுரல் சென்டர் (கே.எம்.சி.சி.) மூலம் 10க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள், குடி தண்ணீருக்கான ஆழ்துளை கிணறுகள், கல்விச் சாலை கட்டிடங்கள் உள்ளிட்ட சமூக நலப்பணிகள் நடைபெற்று பொது மக்களிடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு நற்பெயர் கிடைத்திருப்பதற்கு உதவி இருக்கக்கூடிய அகில இந்திய தலைமைக்கும், கேரள மாநில நிர்வாகத்திற்கும், கே.எம்.சி.சி. நிர்வாகத்திற்கும் இக்கூட்டம் இதயப் பூர்வமான நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. 

வரும் காலங்களில் இப்பணிகளை ஜார்கண்ட் மாநில நிர்வாகத்தோடு முழுமையாக இணைந்து பணிகளாற்றி இயக்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்று வழிகாட்ட வேண்டுமாய் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைமையையும், கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களையும் இக்கூட்டம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
2. 2019 டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கக்கூடிய ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் குறைந்தது 4 முதல் 5 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட ‘ஏணி’ சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்கிடுமாறு தேசிய தலைமையை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

3.  சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகோடு கூட்டணி அமைத்து போட்டியிட முன் வந்திருக்கும் ஜார்கண்ட் கட்சி மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. நமது கூட்டணியில் ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளையும் இடம்பெறச் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டிட மாநில தலைமையையும், ஜார்கண்ட் மாநிலத்திற்கான மேலிட தேர்தல் பொறுப்பாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. சமூக நல பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருவதின் காரணமாக தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு நற்பெயர் கிடைத்திருக்கின்றது. 

எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மை மக்களாக உள்ள பழங்குடியினர் ஆதிவாசிகள் மற்றும் வங்க மொழி பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கக் கூடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமேஷ்வர் பைத்தா தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கிறிஸ்துவ சமுதாய மக்களின் பெரும் ஆதரவை பெற்றிருக்கும் முன்னாள் மாநில அமைச்சர் அசோக்குமார் பகத் நிர்வாகத்திலான ஜார்கண்ட் பார்ட்டி ஆகிய கட்சிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகோடு கூட்டணி அமைக்க முன் வந்திருப்பது தேர்தல் களத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெருவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றது.

எனவே நடைபெறவிருக்கக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட் பாளர்கள் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தேசிய தலைமையை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

5. சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் மாநிலத்தில் முக்கிய நகரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளையும், தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடனான தேர்தல் பிரச்சார கூட்டங்களையும் தேசிய நிர்வாகிகளை அழைத்து நடத்துவதென் இக்கூட்டம் தீர்மானிக் கிறது.

6. தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவதற்கு சாதகமான தொகுதிகளைகண்டறிந்து மாநில அரசியல் ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஆய்வு செய்து 20.10.2019க்குள் தேசிய தலைமைக்கு தெரிவிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜார்கண்ட் மாநில, மாவட்ட அமைப்புப் பணிகள் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை, முஸ்லிம் யூத் லீக், மகளிர் அணி நிர்வாக சீரமைப்பு பணிகளை சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பின்  முறைப்படுத்துவது என்றும், தற்போது அனைவர்களும் தேர்தல் பணிகளில் முழு கவனத்தை செலுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களின் வெற்றிக்கு களப்பணி ஆற்ற வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கின்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் அப்துல் கையூம் அன்சாரி, முஹம்மது சகாபுதீன், அஞ்சலி சின்ஹா, மாநில செயலாளர்கள் ஆபித் அக்தர், பதாக்கான், சானூல் ஹக், துணைச் செயலாளர்கள் ராஜீவ்குமார் சின்ஹா, இர்சாத் உசைன், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சோனுஷேக், ராஞ்சி இஸ்தியாக் அஹமது, தன்வீர் ஜமால்கான், ராம்கர் சபீக்கான் வாசி, ஜம்செட்பூர் முஹம்மது யூசுப், புகாரோ முஹம்மது சமீர் உசேன், முஹம்மது முஹ்சின், முஹம்மது தப்ரேஸ் ஆலம், பாக்கூர் உமர் அன்சாரி, கிரீடி முஹம்மது அபூசர், பலமு குலாம் குவைஸ் ரப்பானி, ஜாம்தாரா ரஹ்மத்துல்லா, சிம்டெகா டாக்டர் அஸ்லம், தேகர் குத்தூபுர் ரஹ்மான், முஹம்மது வக்கீல், இளைஞர் அணி நவ்ஷாத் ஆலம், மாணவர் பேரவை தவ்சீப் அமீர், இர்ஷாத் ரஹ்மான், அமான்கான், இக்ரம்கான் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சகாபுதீன் நன்றி கூற, முப்தி அப்துல்லா காசிமி துஆவுடன் கூட்டம் நிறைவுபெற்றது.