முக்கிய செய்தி

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ் கனி எம்.பி. பேச்சு

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ் கனி எம்.பி. பேச்சு
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் பணிகள் முடக்கம்
ஏழை, எளிய மாணவ மாணவியரின் மருத்துவ படிப்பு கனவை சிதைக்கும் நீட் தேர்வு
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ் கனி எம்.பி. பேச்சு

விக்கிரவாண்டி, அக். 16-
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் பணி கள் முடக்கப்பட்டுள்ளது என் றும், ஏழை, எளிய மாணவ மாணவியரின் மருத் துவ படிப்பு கனவை சிதைக் கும் நீட் தேர்வு

விக்கிர வாண்டி இடைத் தேர் தல் பிரச்சாரத்தில் இராமந hதபுர மக்களவை உறுப்பினர் கே. நவாஸ் கனி எம்.பி. பேசி னார்.

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு. கழக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் (15-10-2019) செவ்வாய்கிழமை மாலை 5. 30 மணியளவிலும், அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் கானை பஸ் நிலையம் அருகிலும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். அமீர் அப்பாஸ் தலைமையில் பிரச்சார கூட்டம் நடை பெற் றது.
 விக்கிரவாண்டியில் நடைபெற்ற பிரச்சார கூட் டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ் கனி எம்.பி. பேசியதாவது:-

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக இந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு அறிவிக்கப் பட்டுள்ள அண் ணன் நா.புகழேந்தி அவர் களுக்கு உதயசூரியன் சின் னத்தில் வாக்குகளைக் கேட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும், தமிழ்நாடு மாநில பொதுச் செய லாளரும் - கடைய நல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களும், காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் அங்கத்தினரும் உங்க ளைச் சந்திக்க வந்திருக் கின்றோம்.

டெல்லியில் அடமானம்

மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை... ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை... ஏன் வார்டு கவுன்சிலர்கள் கூட இல்லை. ஆனால், இந்தத் தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில அரசு நிர்வாகத்தையே மொத்தக் குத்தகைக்கு எடுத்தது போல அவர்களின் செயல்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ஒத்து ஊதும் வகையில் அதிமுக அரசின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள். இந்த ஆட்சியையே டெல்லியில் அடமானம் வைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.

டாக்டர் கலைஞர்

ஏழை மாணவ - மாணவி யரும் கூட நன்றாகப் படித்துத் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து, மருத்துவராகி, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ்நாடு மாநிலம் முழுக்க மருத்துவக் கல்லூரிகளை அமைத்துத் தந்தார் மறைந்த டாக்டர் கலைஞர் அவர்கள். ஆனால் எந்த நோக்கத்திற்காக அவை அமைக்கப் பட்டனவோர் அதை முற்றிலுமாக இல்லா மல் ஆக்கி, நீட் தேர்வு என்ற ஒரு கடுமையான நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்து, அதன் மூலம் ஏழை மாணவ - மாணவியரின் மருத்துவப் படிப்புக் கனவைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி, அவர்களைத் தற்கொலை செய்து இந்த உலகைவிட்டே அனுப்பி வைக்கும் செயலை அதிமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. ‘‘நீட் தேர்வைத் தமிழகத்தில் நடை முறைப் படுத்த விட மாட்டோம்!"" என்று ஜெயலலிதா அம்மையார் சொல்லவாவது செய்தார். ஆனால் அதை வாய் திறந்து சொல்லக் கூடத் திராணியற்ற நிலையில் இன்றைய ஆட்சி யாளர்கள் இருந்து கொண்டி ருக்கிறார்கள்.

புதிய கல்வி கொள்கை குலக்கல்வி

இந்த ஏழை மாணவ - மாணவியர் மேல்நிலைக் கல்வியை முடித்து விட்டால், எப்படியாவது உயர்படிப்பைப் படித்து விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டு, அவர்களது படிப்பை ஆரம்ப நிலையிலேயே ஒன்றுமி ல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, புதிய கல்விக் கொள்கை என்று ஒன்றை அறிமுகப்படுத்தி, சின்னஞ்சிறு சிறுவர்-சிறுமியர் கூட மூன்றாம், ஐந்தாம் வகுப்புகளிலும், எட்டாம் வகுப்பிலும் அரசுப் பொதுத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்று விதிமுறை கொண்டுவரப் பார்க்கிறது. அது மட்டும் நடந்துவிட்டால்... பாவம்! இந்த அப்பாவி சிறுவர் - சிறுமியரின் படிப்பு துவக்கப் பள்ளியளவிலேயே முடிந்துவிடும். அப்படிச் செய்வதன் மூலம் மீண்டும் குலக்கல்வி முறையைக் கொண்டு வந்து, ஒவ்வொரு ஜாதியினரும் காலங்காலமாக எந்தத் தொழிலைச் செய்து கொண்டி ருந்தார்களோ அதே தொழிலிலேயே அவர்களை அடிமைப்படுத்த ஆளும் மத்திய அரசு துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்குத் தமிழக அரசு துணை போய்க் கொண்டிருக்கிறது.

மக்கள் குறைகள் - தீர்வு

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் - முஸ்லிம்கள் மட்டுமல்லாது, அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேட்பாளரான என் மீது நம்பிக்கை வைத்து, பெரு வாரியான வாக்குகள் வேறு பாட்டில் எனக்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற நாள் தொட்டு இன்றுவரை மக்களைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டு, அதை முன்வைக்க வேண்டிய இடங்களில் முன்வைத்து, தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்தையும் என்னால் முடிந்த மட்டிலும் செய்து கொண்டிருக்கின்றேன்.
முதியோர் உதவித்தொகை
அப்படி வயது முதிர்ந்த மக்களைச் சந்தித்தபோது அவர்கள் என்னிடம், ""கலைஞர் அவர்களது ஆட்சிக் காலத்தில் முதியோர் உதவித் தொகையை நாங்கள் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தோம்... இன்று அது நிறுத்தப்பட்டுவிட்டது... மீண்டும் பெற்றுத் தாருங்கள்!"" என்று வேதனையோடு கோரிக் கையை முன்வைக் கிறார்கள். ""திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்தவுடன் நிச்சயம் முதியோர் உதவித் தொகை யைப் பெற்றுத் தருவோம்!"" என நாங்கள் அவர்களிடம் உத்தர வாதம் அளித்து இருக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அது நடத்தப் பட்டிருந்தால் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பணிகள் இன்று மலையளவு தேங்கி போயிருக்காது. வார்டு கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்துப் பெற வேண்டிய வற்றை எல்லாம் - நாடாளு மன்ற உறுப் பினர்களான எங்க ளிடம் முறையிட வேண்டிய அவசியமும் இருந் திருக்காது. குடிநீர், தெருவிளக்கு எரிய மின்சாரம், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை என உள்ளாட்சி மன்றங்கள் செய்து கொடுக்க வேண்டிய அனைத்துமே இன்று செய்யப்படாமல் - மாநிலமே வக்கற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. எங்கே உள்ளாட்சித் தேர்தல் நடந்து விட்டால், எதிர்க்கட்சியினர் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று விடுவார்களோ... மக்கள் நம் மீது கொண்டுள்ள அவநம்பிக்கை வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள். இப்போதும் கூட ஏதோ தேர்தலை வெகு விரைவில் நடத்தி விடுவது போலப் பாசாங்கு காட்டி கொண் டிருக்கிறார்களே தவிர, சில நாட்களில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, தேர்தலை மீண்டும் தள்ளிப் போடுவார்கள். இதுதான் இத்தனைக் காலமாக நடந்து வந்து இருக்கிறது. இவர்கள் அதிகாரப் பசியில் இருந்து கொண்டி ருக்கிறார்கள். மக்க ளுக்குப் பணி செய்வது பற்றிய சிறு கவலையும் இவர்களுக்கு இல்லை. அதிகாரத்தைப் பிற ருக்குப் பங்குபோட இவர்கள் ஆயத்தமாக இல்லை.
புகழேந்தி

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! இப்போதைய ஆபத்தான சூழ்நிலையை நன்கு கருத்தில் கொண்டு, சரியான வேட்பாளரான அண்ணன் புகழேந்தி அவர்களுக்கு உங்க ளது வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யு ங்கள். உங்கள் வாக்கு களை எப்படியாவது பெற்று விடுவதற்காக, உங்களுக்குப் பணத்தைக் கொண்டு வந்து தருவார்கள். அதையெல்லாம் பெற்று, வாக்குகளை விற்று விடாமல், நம் மக்கள் நலனை - நம் வருங்கால சந்ததியினருக்குத் தேவையானவற்றை உரிய நேரத்தில், சரியான முறையில் செய்து கொடுப்பதற்கு அண் ணன் புகழேந்தி அவர் களுக்கு உங்களது பொன்னான வாக் குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து அவரை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் உங்களை அன்போடு கேட்டு எனது உரையை நிறைவு செய்கிறேன், நன்றி.