முக்கிய செய்தி

நா. புகழேந்திக்கு ஆதரவு கோரி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேச்சு

நா. புகழேந்திக்கு ஆதரவு கோரி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேச்சு
மத்திய அரசிடமிருந்து எதையும் கேட்டுப்பெற இயலாத அ.தி.மு.க. அரசு
தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைக்க நமக்கு கூடுதலாக தரப்பட்டுள்ள
ஓர் அரிய வாய்ப்பு தான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்
நா. புகழேந்திக்கு ஆதரவு கோரி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேச்சு

விக்கிரவாண்டி, அக். 16-

மத்திய அரசிடமிருந்து எதையும் கேட்டுப்பெற இயலாத  நிலையில் அ.தி.மு.க. அரசு  உள்ளதாகவும், தமிழ கத்தின் தலை விதியை மாற்றி அமைக்க நமக்கு கூடுதலாக தரப்பட்டுள்ள
ஓர் அரிய வாய்ப்பு தான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் என்று
தேர்தல் பிரச்சாரத்தில்  நா. புகழேந்திக்கு ஆதரவு கோரி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசினார்,

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி இடைத் தேர் தலில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட் டணியின் தி.மு. கழக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் (15-10-2019) செவ்வாய்கிழமை மாலை 5. 30 மணியளவிலும், அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் கானை பஸ் நிலையம் அருகிலும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். அமீர் அப்பாஸ் தலைமையில் பிரச்சார கூட்டம் நடை பெற் றது.

விக்கிர வாண்டியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர்  கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

அண்ணன் ராதாமணி

அண்ணன் ராதாமணி அவர்கள் இதே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, மக்கள் குரலை உடனுக்குடன் ஓடோடிச் சென்று கேட்டு, அவர்களது கோரிக்கையை சட்ட மன்றத்தில் அவ்வப்போது எடுத்தியம்பி, தேவையான தீர்வுகளை உடனுக்குடன் பெற்றுத் தந்தவர். இதை அவரோடு உறுப்பினராகப் பணியாற்றிய சுந்தரம் அண்ணன் அவர்களும், நானும் நன்கு அறிவோம். இயற்கையின் நாட்டம்... மக்கள் பணியாற்றிய போதே அவர் நம்மை விட்டும் மறைந்து விட்டார்.

சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்க இருக்கும் புகழேந்தி

அவர் விட்டுச் சென்ற பணி களைத் தொட்டுத் தொடர் வதற்காக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக அண்ணன் புகழேந்தி அவர்களை, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித் திருக்கிறார்கள். அண்ணன் புகழேந்தி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிமட்டத்திலிருந்து தனது செயல்பாடுகளை துவக்கி, படிப்படியாக முன்னேறி, இன்று உங்கள் அனைவரின் மகத்தான பேராதரவுடன் சட்டமன்றத்திலும் அடி யெடுத்து வைக்க விருக்கிறார்.

மத்திய அரசிடமிருந்து எதையும் கேட்டுப்பெற இயலாத
அ.தி.மு.க. அரசு

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அம்மை யார் அவர்களின் மறைவுக்குப் பிறகு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக அதே கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் அவர்களால் மத்திய அரசிடமிருந்து எதையுமே கேட்டுப் பெற இயலவில்லை. உள்ளாட்சித் தேர்தலும் குறித்த நேரத்தில் நடத்தப்படாத காரணத்தால் - உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் மானியத் தொகை கிடைக்காமலேயே உள்ளது. இவர்களின் அரசு சார்ந்த நடவடிக்கைகளைப் பார்த்து இன்று நாடே எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. நம் தாய் மொழியாம் தமிழ் மொழி யைப் பாதுகாப்பதற்கு எந்த உத்தரவாதமும் தரப் பட வில்லை. சுருங்கச் சொன்னால், கிடைக்க வேண்டிய எதையும் இவர்கள் கேட்டுப் பெற ஆயத்தமாகவும் இல்லை; கிடைத்தவற்றைத் தமக்குள் பங்கு போடுவதிலும் இவர் களுக்கிடையே பங்கா ளிச் சண்டை மிகைத்து, மக்களை மறந்தவர்களாகப் பொறுப் பற்ற நிலையில் இருந்து கொண்டி ருக்கிறார்கள்.

தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைக்க...

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! தமிழகத்தின் தலைகுனிவைச் சரிசெய்து, அதன் தலைவிதியை மாற்றி யமைக்க வேண்டுமானால், இன்னும் இவர்களை நம்பிக் கொண்டிராமல் - இந்தத் தேர்தலை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, உங்களது பொன்னான வாக்குகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் அண்ணன் புகழேந்தி அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் அளிக்க வேண்டியது உங்கள் தார்மீகக் கடமையாக இருக்கிறது.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியா

நம் நாடு இந்தியா பன்முகத் தன்மை கொண்ட - உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு பல்வேறு மதங்களை பின்பற்றக்கூடிய, பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய, பல்வேறு ஜாதி களையும் - கலாச்சாரக் கட்ட மைப்புகளையும் கொண்ட, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோடிக்கணக்கில் வசித்து வருகிறார்கள். நமது தமிழக த்திலும் ஏராள மான ஜாதி - மதப் பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும், நமக்குள் வேற்றுமை என்பதே இல்லை. அண்ணன் - தம்பிகளாக, மாமன் - மச்சான்களாக, அக்காள் - தங்கைகளாக நமது உறவு முறை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கெல்லாம் வேட்டு வைத்து, நமது ஒற்றுமையைச் சீர்குலைத்து, தங்களது ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை இந்த நாட்டின் சித்தாந்தமாக மாற்றியமைத்து, மக்களைச் சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய பாரதீய ஜனதா அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதன் அடிவருடியாக, கொஞ்சம் கூட எதிர்க்குரல் எழுப்பாமல் நமது மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிற அதிமுக அரசு அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறது.

மாநில சுயாட்சி உரிமைகள்

காலங்காலமாகப் பாதுகாத்து வரப்பட்ட மாநில சுயாட்சி உரிமைகள் கொஞ்சங் கொஞ்சமாகக் கைகளை விட்டும் நழுவிப் போய்க் கொண்டிருக்கின்றன. கேட்பதற்கு நாதியற்ற நிலையில் தமிழக அரசியல் நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டுவந்து, ஏழை மக்களின் மருத்துவப் படிப்புக் கனவைச் சிதைத்து, விலைமதிக்க முடியாத பல மாணவியரின் உயிர்கள் தற்கொலையால் மாய்வதற்கு இவர்கள் காரணமாக இருக் கிறார்கள். இவர்களது ஆட்சி நிர்வாகத்தை சட்ட மன்ற உறுப்பினராக - சட்ட மன்றத்தில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில், இந்த ஆட்சியின் அவலங்களைப் பல மணி நேரம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டே போக முடியும். ஆனால் அதற்கான நேரம் இல்லை.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்

இவர்களுக்கு வாக்களிப் பதும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைத் தலை மேல் தூக்கி வைத்துக்கொண்டு, இந்த நாட்டையே அதன் கீழ் கொண்டுவர நினைக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதும் வெவ் வேறானவை அல்ல என்பதை மட்டும் புரிந்து கொண்டு செயல்படுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆட்சியின் அவலங்களைத் தட்டிக் கேட்க நமக்குக் கூடுதலாகத் தரப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்புதான் இந்த விக்கிர வாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல். அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி, அண் ணன் புகழேந்தி அவர்களை வெற்றி பெறச் செய்தால் - அவர் அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்வார்.

தளபதி மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் அடுத்த ஆட்சி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. அதற்கு முன்னோடி யாகத்தான் இந்த இடைத்தேர்தலை நாம் பார்த்துக் கொண் டிருக்கி றோம். எனவே, அண்ணன் புகழேந்தி அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளைப் பதிவு செய்து, மகத்தான வெற்றியை அவருக்குப் பெற்றுத் தருமாறு - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளராக உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு எனது உரையை முடிக்கிறேன் நன்றி.