முக்கிய செய்தி

வியாசர்பாடியில் நடைபெற்ற மீலாது விழாவில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேச்சு

வியாசர்பாடியில் நடைபெற்ற மீலாது விழாவில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேச்சு
சமய நல்லிணக்கம் தான் இ.யூ. முஸ்லிம் லீகின் தாரக மந்திரம்
அண்ணலாரின் வாழ்வியல் வழிகாட்டலை முன்னுதாரணமாக 
கொண்டு செயல்பட்டால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற முடியும்
வியாசர்பாடியில் நடைபெற்ற மீலாது விழாவில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேச்சு

சென்னை, நவ. 04-
சமய நல்லிணக்கம் தழைத்தோங்க வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தாரக மந்திரம் ஆகும் என்றும், அண்ண லாரின் வாழ்வியல் வழிகாட்டலை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற முடியும் என்று 
வியாசர்பாடியில் நடைபெற்ற மீலாது விழாவில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசினார்.

நபிநேசர்கள் ஆன்மீக பேரவை சார்பில் உத்தம நபியின் உதயதின விழா 02-11-2019 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி 7வது தெருவில் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நபிநேசர்கள் ஆன்மீக பேரவை

அகிலத்திற்கோர் அருட் கொடையாக அவதரித்து, உலக மக்கள் அனைவருக்கும் தலைசிறந்த ஈடிணையற்ற முன்மாதிரியாக வாழ்ந்து வழிகாட்டிய இறைவனின் இறுதித் தூதர் எங்கள் பெருமானார் முஹம்மத் நபிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு, நபிநேசர்கள் ஆன்மிகப் பேரவை சார்பாக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மீலாத் பெருவிழா தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இன்று இங்கே இந்த விழா நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உறவுப்பாலத்திற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் துரைமுருகன் 

இங்கே, முஸ்லிம் சமுதாய த்துடன் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பல்லாண்டு காலமாகக் கொண் டிருந்த மாறாத பற்றுக்கும், அன்புக்கும் நடமாடும் சாட் சியாக இன்று நம்மிடையே திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொருளாளர் அய்யா துi ரமுருகன் அவர்கள் இருந்து, நம் உறவுப் பாலத்திற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார். நம் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் காலந் தொட்டு, டாக்டர் கலைஞர் அவர்களின் வழி நின்று, சிறுபான்மை மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கிற, அவர்களுடன் தோளோடு தோள் நின்றுத் துணை செய்து கொண்டிருக்கிறவராகத்தான் அண்ணன் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறுபான்மையினர் ஓரணியில் ஒன்றுபடுதல்

சிறுபான்மையினர் அனைவரும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும் என்பதையும், இந்துத்துவக் கொள்கையைப் பிடிக்காத பெரும்பான்மை இந்து சமுதாய மக்களும் - இந்த நாட்டின் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர சமுதாயத்தினரும் இந்துத்துவ வாதிகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என்றும் - எங்கள் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை அவர்களோடு ஒரே மேடையில் வலியுறுத்திக் கொண்டிருக்கும் அண்ணன் இனிகோ இருதயராஜ் அவர்களெல்லாம் இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற விருப்பது நமக்கெ ல்லாம் பெருமகிழ்ச்சி  யளிப்பதாக உள்ளது.

சமய நல்லிணக்க விழா

""""நபிகள் நாயகம் அவர்களின் நற்பண்புகளும், மகத்தான வாழ்வியல் நெறிமுறைகளும் உலக மக்கள் அனைவருக்கும் - குறிப்பாக இந்திய மக்கள் அனைவருக்கும் தொடர்ந்து எடுத் துரைக்கப்பட வேண்டும்... அதற்கு, இந்தியா முழுக்கவும் நபிகளார் பிறந்த நாளை முன்னிட்டு மீலாத் விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, அவற்றில் சகோதர சமுதாயங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து உரையாற்றச் செய்வதன் மூலம், இந்த விழாவை ஒரு சமய நல்லிணக்க விழாவாக நடத்திட வேண்டும்"" என, சமுதாயப் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சகோதர சமுதாயங்களின் பெருந்தலைவர்கள்

அவர்களது இந்தத் தொடர் வலியுறுத்தல் காரண மாகத்தான் கடந்த பத்தாண்டு காலமாக, தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் மீலாத் விழாக்கள் நடத்த ப்பட்டு, அவற்றில் சகோதர சமுதாயங்களின் பெருந்தலைவர்கள் எல்லாம் அழைக்கப்பட்டு, நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அவர்களது வாயால் புகழ்ந்துரைக்கச் செய்து, அந்த நல்ல செய்தியைப் பொது மக்களுக்குச் சேர்ப்பிக்கும் அரும்பணி முஸ்லிம் சமுதாய மக்களால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மீலாத் விழா நிகழ்ச்சிகள்

சமய நல்லிணக்கம் தழைத்தோங்க வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தாரக மந்திரமாகும். எனவேதான், இதுபோன்ற மீலாத் விழா நிகழ்ச்சிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து உற்சாகத்துடன் நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்தாண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு அருகில் நடைபெற்ற உள்ளரங்க மீலாத் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அண்ணன் துரைமுருகன் அவர்கள், """"இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு உரையாற்றுவது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிறது... இதைப் பொதுக்கூட்டமாக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..."" என்று ஆலோசனை தெரிவித்ததன் அடிப்படையில்தான், அதற்குப் பிறகு நடத்தப்பட்ட மீலாத் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் - இன்று நடத்தப்படும் இந்த மீலாத் விழாவும் மிகப் பெரிய சமய நல்லிணக்கப் பொதுக்கூட்டங்களாக நடத்த ப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய சாம்ராஜ்யம்

மனித வாழ்வின் அனைத்துப் படித்தர ங்களையும் தன் அற்புதமான வாழ்க்கை முறையால் உலகுக்கு உதாரணமாகத் தந்தவர்கள்தான் நம் உயிரினும் இனிய உத்தமர் நபிகளார் அவர்கள். இதற்காக அவர்கள் தம் வாழ்வில் சந்தித்த துன்பங்களையும், துயரங் களையும் வேறெந்தத் தலைவரும் இந்த உலகில் சந்தித்த தில்லை. ஆனால், அவையத் தனையையும் பக்குவமாகத் தாங்கி, தன் பண்பட்ட வழிகாட்டலால் - அவர்களுக்காக உயிரையே துச்சமெனக் கொண்டிருந்த லட்சக்க ணக்கான தோழர் களைப் பெற்று, அவர்களோடு இணைந்து மதீனா மாநகரைத் தலைமை யகமாகக் கொண்டு மாபெரும் இஸ்லாமிய சாம் ராஜ் யத்தையே நிறுவினார்கள்.

உண்மைக்கும், நேர்மைக்கும் புறம்பாக எதுவும் செய்ததில்லை

தான் பிறந்த நாள் முதல், இந்த உலகை விட்டும் மறைந்த நாள் வரை ஒருபோதும் பொய் உரைத்ததில்லை... உண்மை க்கும், நேர்மைக்கும் புறம்பாக எதையும் செய்ததில்லை... அனைவரின் உரிமைகளையும் பாது காத்தார்கள்... ஏழைகளைச் சமுதாயம் புறக்கணித்து விடாதிருக்கும் பொருட்டு, அவர்களோடும் -ஒடுக்கப்பட்ட மக்களோடும் உற்ற துணையாக இருந்து, அவர்களையே தன் வாழ்வின் பெரும்பகுதியில் தோழமை களாகவும் கொண்டிரு ந்தார்கள். அப்படிப்பட்ட மகத்தான வாழ்வியல் நெறிப்படி நாம் அனைவரும் வாழ்ந்து சிறக்க வேண்டும் என்பதுதான் இதுபோன்ற மீலாத் விழா நிகழ்ச்சிகளின் நோக்கமாக உள்ளது.

சோதனையான காலகட்டங்கள்

இந்த நோக்கம் நிறைவேற வில்லையானால் இவ்வளவு செலவழித்து இதுபோன்ற விழாக்களை நடத்துவதில் எந்தப் பொருளுமிருக்காது. அது எந்தப் பயனையும் தராது. நேர விரயமாகவே போய்விடும். ஆகவே, நம் வாழ்வின் எல்லாக் காலகட்டங்களிலும் - குறிப்பாக சோதனையான காலகட்ட ங்களிலும் அண்ண லாரின் வாழ்வியல் வழிகாட்டலை முன்னு தாரணமாகக் கொண்டு செயல்பட்டால்தான் நாம் வெற்றி பெற்றிட இயலும். அதை உணர்ந்தவர்களாக இந்த விழாவை நடத்திக் கொண் டிருக்கும் நபிநேசர் ஆன்மிகப் பேரவையின் நிர்வாகி களுக்கும், அங்கத்தினருக்கும் நான் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி மறவாமை

நபிகளாரின் உயர்ந்த உன்னதப் பண்புகளுள் ஒன்று நன்றி மறவாமை. அந்த வகையில், இங்கே நான் நன்றி சொல்வதற்காகவும் நின்று கொண்டிருக்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட எங்களுக்குத் துணை நின்று, களம் அமைத்துத் தந்தது தலைவர் கலைஞர் தலைமையிலான - இப்போது தளபதியார் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகம். 

கடையநல்லூர் தாலுகா அலுவலகம்

நான் சட்டமன்ற உறுப்பினரான திலிருந்து இன்று வரை எனது சட்டமன்றப் பணிகளுக்கும் - குறிப்பாக எனது தொகுதிப் பணிகளுக்கும் நான் குரலெழுப்பும் போதெல்லாம் முழுத் துணையாக நின்று கொண்டிருப்பது அய்யா துரைமுருகன் அவர்களும், அவர்களோடு இணைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் பெருமக்களும்தான். அதன் காரணமாகத்தான், எனது கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் எளிதில் சென்று வர இயலாத நிலையில் அமைவிடத்தைக் கொண்டிருந்த தாலுகா அலுவலகத்தை கடையநல்லூர் ஊர் எல்லைக்கு மாற்றக் கோரி தொடர்ந்து 3 ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து, அதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் துணை நின்றதன் பயனாக இன்று அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

காட்டுப்பகுதி

யாரும் செல்ல முடியாத காட்டுப்பகுதியில் அந்த அலுவலகத்தை அமைத்திடத் தீர்மானித்து, அதற்காக அடிக்கல்லையும் அரசாங்கம் நாட்டிவிட்டது. அந்த நேரத்தில்தான், என் தொகுதி மக்களின் முறையீட்டைக் கருத்திற்கொண்டு அதற்காகக் களமிற்ங்கினேன். தமிழக அரசின் பொதுக் கணக்குக் குழு தலைவராக அண்ணன் அவர்களும், அதன் உறுப்பினர்களுள் ஒருவனாக நானும் இருந்துகொண்டிருக்க, என் தொகுதியருகே வந்த அண்ணன் அவர்களை, நேரில் வந்து பார்க்கக் கோரியதன் விளை வாக அவர்களும் உட னடியாக வந்து, அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டப் பட்டிருந்த காட்டுப் பகுதியையும் -ஊருக்குள் அமைவதற்காக நான் காண்பித்த பகுதியையும் பார்த்துவிட்டு, கண்டிப்பாக இந்த இடத்தில்தான் அலு வலகத்தை அமைத்திட வேண்டும் என்று வலியுறுத் தினார்கள்.

நகர எல்லையில் தாலுகா அலுவலகம்

பின்னர் இதற்காக நான் சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்க, எனக்கு அந்த இடத்தில் உறுதுணையாக இருந்தது மட்டுமின்றி - முதலமைச்சர், துணை முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இருக்க, அக்கூட்டம் நிறைவுற்ற பின் இந்தப் பிரச்சினையை எழுப்பி, இதற்கு ஒரு நல்ல தீர்வை மக்களுக்காகத் தர வேண்டும் என்று கேட்க, அதனைத் தொடர்ந்து அந்த அலுவலகம் நகர எல்லையிலேயே அமைக்க ப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அவர்களும் தெரிவித்து, அதன்படி கடந்த புதன்கிழமையன்று கடைய நல்லூர் தாலுகா அலுவலகம் நகர  எல்லையிலேயே அமைக்கப்படுவதற்கு அடிக்கல் நாட்டப் பட்டிருக்கிறது. இந்த மகத்தான வெற்றிக்கு முதுகெலுப்பாக அய்யா துரைமுருகன் அவர்கள் இருந்த காரணத்தால்தான் இன்று அது கைகூடியிருக்கிறது.

மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்

இதற்காக நன்றி தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அந்த வகையில், அவர்களது இல்லத்திற்குச் சென்று ஒரு சால்வை அணிவித்து கண்ணியப் படுத்திவிட்டு வந்துவிட்டால் கடமை முடிந்திருக்கும். ஆனால் பொது வெளிக்குத் தெரிந்தி ருக்காது என்பதால், இந்த மாபெரும் மீலாத் விழா பொதுக்கூட்டத்தில் -எங்கள் தொகுதி மக்களுக்குத் துணை நின்ற அண்ணன் அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பில் உளமார்ந்த நன்றியை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதுவும், """"மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்"" என்று கூறி, நன்றியுணர்வைக் கடமையாக்கிய எங்கள் பெரு மானாரின் புகழ் பாடும் இந்த இனிய மீலாத் விழாவில் அந்த நன்றியறிவிப்பை வெளி யிடுவதை எண்ணி நான் பேருவகையடைகிறேன்.
இதற்காக இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய நபிநேசர் ஆன்மிகப் பேரவை நிர்வாகி களுக்கும், அங்க த்தினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, எனதுரையை முடிக்கிறேன், நன்றி.
இவ்வாறு கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்ஏ. பேசினார்.