முக்கிய செய்தி

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் குடும்பத்தினர், வழக்கறிஞர்களுடன் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. ஆலோசனை

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் குடும்பத்தினர், வழக்கறிஞர்களுடன் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர்  கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. ஆலோசனை
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் குடும்பத்தினர், வழக்கறிஞர்களுடன் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் 
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. ஆலோசனை

சென்னை, நவம் 28-
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் பிலீ கொள்ளூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் (வயது 18) என்ற மாணவி  எம்.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் 9ம் தேதி தனது அறையில் தூக்கிலிட்டு கொண்டதை தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. 

மாணவி பாத்திமாவின் தந்தை கேரள முதல்வரை சந்தித்து முறையிட்டார். கேரள சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவரும், எதிர்க்கட்சி துணைத்தலை வருமான டாக்டர் முனீர் கோயா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீபை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், காவல்துறை தலைவர் டி.ஜி.பி. ஆகியோரிடம் அழைத்து சென்று மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

திமுக பாராளுமன்ற குழு துணைத் தலைவர் கவிஞர் மு.க. கனிமொழி எம்.பி., நாடாளுமன்ற கூட்டத்தில் மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளியை தண்டிக்கப்பட வேண்டும், ஐஐடி தற்கொலைக்கு முடிவு கட்ட வேண்டுமென வலியுறுத்தினார்.

நேற்று (27.11.2019) மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கேரளா மாநிலம் கொல்லம் மாநகராட்சி மேயர் ராஜேந்திர பாபு, மாணவி பாத்திமாவின் சகோதரி ஆயிஷா லத்தீப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில வழக்கறிஞர்கள் ரசாக், அன்சாலா முஹம்மது, ஷமீர், எம்.பி. அன்வர் ஆகியோரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள கேரளா அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினார்.

விசாரணை குறித்து அனைத்து விவரங்களையும் கேட்டதோடு மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும் என உறுதியளித்ததோடு, சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவரிடத்தில் தான் மீண்டும் சந்தித்து பேசிய விவரங்களையும் நினைவு படுத்தினார்.

கேரள வழக்கறிஞர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளர் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரனுடன் ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக மாணவி பாத்திமா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை கூடுதல் கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி ஐ.பி.எஸ்சை, கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, முஸ்லிம் மாணவர் பேரவையின் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், தமிழ்நாடு மாநில தலைவர் மு. அன்சாரி ஆகியோருடன் சென்று சந்தித்து மாணவி பாத்திமா லத்தீப் விசாரணை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.