முக்கிய செய்தி

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர்மொகிதீன் அறிக்கை

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர்மொகிதீன் அறிக்கை
வடக்கிலிருந்து வரும் வாடைக்காற்றால் ஒரு போதும் திசை மாறாது
விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தலில் உதயசூரியனையும், கையையும் அமோகமாக வெற்றி பெற செய்வீர்
வாக்காளர்களுக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

நடைபெறவுள்ள இடை த்தேர்தலில் விக்கிர வாண்டி தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர் நா. புகழேந்தி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கும், புதுவை மாநிலம் காமராஜர் நகரில் போட்டியிடும் ஜான் குமார் ஆகிய இருவருக்கும் கை சின்னத்திலும் வாக்களித்து தமிழகத்திலும் புதுவையிலும் மதச்சார்பற்ற கூட்டணிக்கு பேராதரவு என்றும்போல் பெருகி வருகிறது என்பதை வாக்காள பெருமக்கள் நிச்சயமாக நிரூபிப்பார்கள்.

தமிழக பூமியில் என்றும் மனம் பரப்பும் சமூக ஒற்றுமை தென்றல் வடக்கிலிருந்து வரும் வாடைகாற்றால் ஒருபோதும் திசைமாறாது என்பது திண்ணமாகும் வகையில் உதய சூரியனையும், கையையும் அமோக வெற்றி பெற செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.