முக்கிய செய்தி

(எம்.எஸ். எப்) குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

(எம்.எஸ். எப்) குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்
பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிராக கருப்பு சட்டங்களான
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு ஆதரவு அளித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாணவர் பேரவை 
(எம்.எஸ். எப்) குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

சென்னை, பிப். 07-
அண்ணா, கலைஞர், எம்.ஜி. ஆர்., ஜெயலலிதா கடை பிடித்த மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிராக கருப்பு சட்டங்களான சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி. ஆருக்கு ஆதரவு அளித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து 
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாணவர் பேரவை எம்.எஸ். எப் சார்பில் நடைபெற்ற குடி யுரிமை பாது காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப் பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாணவர் பேரவை எம்.எஸ். எப் சார்பில் குடி யுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் (06-02-2020) வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மாநிலத் தலைவர் பழவேற்காடு மு.அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. 

முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசியர் கே.எம் காதர்மொகிதீன், காங்கிரஸ் மூத்த தலைவர், பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முகம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, கே நவாஸ்கனி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்

எம்.எஸ்.எப். தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத் வரவேற் புரை ஆற்றினார்.

தேசிய செயலாளர் புளியங் குடி எம். அல் அமீன் நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார்.

இம்மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ்கனி எம்.பி., துறைமுக வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் எஸ். ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
எம்.எஸ்.எப். மாநில துணைத்தலைவர் ஈரோடு என். முஹம்மது பாரூக் நன்றியுரை ஆற்றினார்.

இம்மாநாட்டில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.

இந்திய அரசாங்கம் நிறைவேற்றி ருக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிராக இருப்பதால் நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், ஜனநாயக சக்திகள் அறவழியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மதிப் பளித்து இச்சட்டத்தை உடன டியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை  இம்மாநாடு  கேட்டுக் கொள்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாண வர்கள் மீது வன் முறையை கட்டவிழ்த்து விட்ட காவல்துறையை கண்டிப் பதோடு, அதற்கு துணை போன மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

மக்களை ரீதியாக பிரிக் கின்ற இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, இந்த போராட்டத்தில் பங்கு கொண்டு காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிலும், தொடர் போராட்டங்களி லும் கலந்து கொண்டும் உயிர்நீத்த தியாகிகளுக்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் தொன்று தொட்டு தொடரும் அரசியல் பாரம்பரியத்திற்கு மாற்றாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்றோர் கடைபிடித்த மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிராக தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு அடமானம் வைத்து சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற கருப்புச் சட்டங்களுக்கும், திட்டங் களுக்கும் ஆதரவளித்து வரும் அதிமுக அரசை கண்டிக்கிறோம்.  கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளை பின்பற்றி இக்கருப்புச் சட்டங் களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் மாநில செயலாளர்கள் காயல் மகபூப்,  எஸ்.பி. முஹம்மது  இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ், எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.எச்.எம். முஹம்மது  இஸ்மாயில், தலைமை நிலைய பாடகர் கவிஞர் ஷேக் மதார், முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச் செயலாளர் எஸ். அன்சாரி மதார், வடசென்னை மாவட்ட கமுதி ப. சம்சுதீன், தென் சென்னை மாவட்ட தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, தென்சென்னை மாவட்ட செயலாளர் மடுவை எஸ்.பீர் முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.கே. உசேன்,  திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் காயல் அஹமது, மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.கே. செய்யது இப்ராஹிம், கிழக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ. சிக்கந்தர் பாஷா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் படூர் எஸ். அல்லாஹ்பக்ஸ், மாவட்ட செயலாளர் ஏ. அஸ்லாம் பாஷா, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பம்மல் எஸ். முஹம்மது பேக், வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல் காதர், தெற்கு மாவட்ட அமைப்பாளர் கே.எஸ். தாவூது, தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் அஜ்மீர் காஜா, மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவர் முதஸ்ஸிர் காலித், சேப்பாக்கம் ஆலம் கான், ராயபுரம் காதர்ஷா, மண்ணடி சுக்கூர், மண்ணடி மஹ்ரூஃப், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில துணைத்தலைவர் எம். அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.