முக்கிய செய்தி

வியாசர்பாடியில் நடைபெற்ற மீலாது விழாவில் கே.நவாஸ் கனி எம்.பி. பேச்சு

வியாசர்பாடியில் நடைபெற்ற மீலாது விழாவில் கே.நவாஸ் கனி எம்.பி. பேச்சு
உலகின் புகழ்பெற்ற நூறு தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர்
அரசியல், ஆன்மீகம், குடும்பம், பொருளாதாரம் என அனைத்து 
துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
வியாசர்பாடியில் நடைபெற்ற மீலாது விழாவில் கே.நவாஸ் கனி எம்.பி. பேச்சு

சென்னை, நவ. 04-
உலகின் புகழ்பெற்ற நூறு தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர் என்றும்,அரசியல், ஆன்மீகம், குடும்பம், பொருளாதாரம் என அனைத்து துறைகளுக்கும் முன்னோடி யாக திகழ்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்று வியாசர்பாடியில் நடைபெற்ற மீலாது விழாவில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்களவை கட்சி கொறடாவும், இராமநாதபுர தொகுதி உறுப்பினருமான கே. நவாஸ் கனி எம்.பி.  பேசினார்.

நபிநேசர்கள் ஆன்மீக பேரவை சார்பில் உத்தம நபியின் உதயதின விழா 02-11-2019 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி 7வது தெருவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கே. நவாஸ் கனி எம்.பி. பேசிய தாவது:-

பிறந்த நாள் விழா

இருலோக இரட்சகர் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் விமரிசையாக நடத்திக் கொண் டிருக்கும் நபிநேசர் ஆன்மிகப் பேரவையின் அங்கத்தினர் அனைவரையும் துவக்கமாகப் பாராட் டியவனாக எனதுரையைத் 

தமிழகம் முழுவதும் மீலாது விழாக்கள்

தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், அதன் தூண்ட லிலும் தமிழகம் முழுவதும் இன்று தொடர்ச்சியாக மீலாத் விழாக்கள் நடத்தப் பட்டுக் கொண்டி ருக்கிறது. அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்ச்சபையின் நிர்வாகிகள் இந்தப் பகுதியில் ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சியை  ஒருங் கிணைத்து, அதில் நம் அண்ணன் துரைமுருகன் போன்ற தலைவர்களை யெல்லாம் அழைத்து, இந்த விழாவையே ஒரு சமய நல்லிணக்க விழாவாக அன்பிற்கினிய சகோதரர்கள் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இரட்டை குழல் துப்பாக்கி

இதுபோன்ற மீலாத் விழா மேடைகள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத் தினரையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகினரையும் ஒரே இடத்தில் உரையாற்றச் செய்து கொண்டி ருக்கின்றன. இரண்டின் கொள்கைகளும் பெருமளவில் ஒத்துப் போவ துவே இதற்கான காரணமாக உள்ளது. அப்படிப்பட்ட இந்த மேடைகளில் எம் பெரு மானாரின் சிறப்பு, இஸ்லாம் மார்க்கத்தின் மகத்தான வழிகாட்டல் குறித்தெல்லாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி, சகோதர சமயங்களைச் சேர்ந்த தலைவர்களும் புகழ்ந்துரைக்க, அவற்றை நாம் காதுகுளிரக் கேட்க, இதுவரை இஸ்லாம் பற்றியறியாத மக்களும் புதிதாக அவற்றைக் கேட்டறிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது.

தேசிய தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள்

எங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள், """"தமிழகத்தில் மட்டு மல்ல! ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் மீலாத் விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!"" என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக, இன்று தமிழ கத்தில் மட்டுமல்ல! கேரளாவில் மட்டுமல்ல! இந்தியாவின் பெரும் பாலான பகுதிகளிலும் தொடர் நிகழ்ச்சியாக இது போன்ற மீலாத் விழாக்கள் நடத்தப்பட்டு, அவற்றில் சகோதர சமுதாயப் பெருமக் களையும் அழைத்து, நபிகளார் புகழ் குறித்து உரை யாற்றச் செய்திரு க்கிறார்கள்.

உலகின் புகழ்பெற்ற நூறு தலைவர்கள்

நபிகளார் குறித்து முஸ்லிம்களாகிய நாம் புகழ்ந்துரைப்பது இருக்கட்டும். உலகின் புகழ்பெற்ற நூறு தலைவர்களை ‘தி ஹன்ட்ரெட்’ என்ற நூலில் வரிசைப்படுத்தி எழுதியிருக்கிற மைக்கேல் ஹார்ட் என்ற மிகப்பெரிய எழுத்தாளர், அவ்வனைத்து தலைவர்களிலும் நபிகளாருக்கு முதலிடம் வழங்கியிருக்கிறார். அதுகுறித்து, அந்நூலின் முன்னுரையில் அவரே குறிப்பிடும்போது, ஒன்று அல்லது ஒருசில துறைகளில் கோலோய்ச்சியவர்கள் என் றிருக்க, நபிகளாரோ அரசி யல், ஆன்மிகம், குடும்பம், பொரு ளாதாரம் என அனைத் துத் துறைகளுக்கும் மூத்த முன்னோடியாகத் திகழ்வதா லேயே அவர்களை முதலாவ தாகக் குறிப்பிட்டு எழுதக் காரண மாயிற்று என்று கூறி யிருக்கிறார்.

ஜாதி வேறுபாடுகள் கூடாது

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுயமரியாதைக் கொள்கை சமத்துவத்தையும், சகோதரத் துவத்தையும் வலியுறுத் துகிறது என்றால், இஸ்லாமும் அதைத்தானே வலியுறுத்திக் கொண்டி ருக்கிறது? அதனால்தான் இவ்விரு சாராராலும் எல்லா இடங்களிலும் இணைந்து பயணித்துச் சமூகப் பணிகள் ஆற்றிட இயலுகிறது.

கடவுள் மறுப்புக் கொள்கையைக் கையிலெடுத்த தந்தை பெரியார் துவக்கத்தில் கடவுளை யெல்லாம் மறுக்க வில்லை. ஜாதி வேறுபாடுகள் கூடாது என்றபோது, அது சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ளதாகக் கூறப் பட்டது. அப்படியானால் அந்த சாஸ்திரங்களும் வேண்டாம் என்றபோது, சாஸ்திரம் வேதங்களில் சொல்லப் பட்டவை என்று சொல்லப்பட்டது. அப்படி யானால் வேதங்களும் வேண்டாம் என்று அவர் கூறியபோது, வேதங்கள் கடவுள் சொன்னவை என்று சொன்னபோது, இத்தனைப் பிளவுக்கும், பிரச்சினைக்கும் அவர்தான் காரணம் என்றால் அப்படிப்பட்ட கடவு ளும் வேண்டாம் என்று பகிரங் கமாகக் கூறினார்.

ஆக, சமத்துவம் -சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று களமிறங்கிய தந்தை பெரியார், அதற்கு முட்டுக்கட்டையாக ஜாதி என்ற நச்சுமரம் இருப்பதைக் கண்டறிந்து, அதை வேரோடு பிடுங்கியெறியத் தலைப் பட்டார். அதற்காகத்தான் இயக்கம் கண்டார். எண்ணிலடங்காத மக்களை எல்லா ஜாதிகளிலிருந்தும் அபிமானிகளாகப் பெற்றார்.

பிறப்பால் ஏற்றத்தாழ்வு காட்டாத மார்க்கம் இஸ்லாம்

மொத்தத்தில், """"கடவுள் என்கிற அடிமரத்தை வெட்டாமல் ஜாதி என்கிற பேயை விரட்டிட முடியாது"" என்று பெரியாரியம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால், கடவுள் என்கிற அடிமரத்தை வெட்டாமலேயே ஜாதி என்கிற வர்க்கபேதத்தை அடியோடு ஒழித்துக் காட்டி யிருக்கிறது இஸ்லாம். அதனால்தான் இஸ்லாம் குறித்து தந்தை பெரியார் கூறுகிறபோது, """"பிறப்பால் ஏற்றத்தாழ்வு காட்டாத, வணங்கி வழிபடக் கட்டணம் கேட்காத ஒரு கடவுளும், அதை நம்பும் ஒரு மதமும் இருக்கிறது என்றால், நான் ஏன் அதை எதிர்க்க வேண்டும்?"" என்று கேட்டார்.

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்

ஆக - தந்தை பெரி யாராலும், ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று ரைத்த அண்ணா அவர் களாலும் வழிநடத்த ப்பட்ட கொள்கைதான் இஸ்லாமியக் கொள்கை. அதை உணர்ந் தவராகத்தான், டாக்டர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நட்பையும், என்றும் மாறாத அன்பையும் பெற்ற அய்யா துரைமுருகன் அவர்களும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்துக் கொண்டி ருக்கிறார்கள். முஸ்லிம்கள் மீது அவர் எந்தளவுக்குப் பற்றோடு இருக்கிறவர் என்பதைப் பல தருணங்களிலும் நாங்கள் பார்த்துவந்தாலும் கூட, அண்மையில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் அதை நானும், பொதுச் செயலா ளர் அவர்களும் கண் கூடாக நேரிலேயே பார்த் தறிந்தோம். பொது வாகத் தேர்தல் களங் களில் வெளியிறங்கிப் பணியாற் றிடாத பல முஸ்லிம் தொழி லதிபர்களும் கூட, """"எங்கள் வீட்டுப் பிள்ளை கதிர் ஆனந்த் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்... அவரை வெற்றிபெறச் செய்வது எங்கள் கடமை"" என்று கூறிக் களமிறங்கிப் பணி யாற்றியதைப் பார்த்த போதுதான் அதை நாங்கள் மீண்டும் உணர முடிந்தது.

கிறிஸ்துவநல்லெண்ண இயக்கம்

அத்தகு சிறப்பிற்குரிய திமுக பொருளாளர் அண்ணன்  துரைமுருகன் அவர்கள், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் அய்யா இனிகோ இருதயராஜ் அவர்கள், எங்கள் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அபூபக்கர் அவர்கள் எல்லாம் இங்கே ஒரே மேடையில் இருப்பதைக் கண்டு உள்ளபடியே நான் மிகவும் மகிழ்கிறேன். இந்த உறவு எப்போதும் போல இனியும் என்றென்றும் பிணைக் கப் பட்டிருக்கும் என்று உறுதியாக நம்புகி றேன். அதற்காக, திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற அணி யில் நாங்கள் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து, இணைந்து செயலாற்றுவோம் என்றும் இந்த நேரத்தில் அன்புடன் தெரிவித்து, எனதுரையை முடிக்கிறேன், நன்றி.
இவ்வாறு கே. நவாஸ் கனி எம்.பி. பேசினார்.