முக்கிய செய்தி

அமைதி, சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் தொடர வேண்டும்: தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

அமைதி, சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் தொடர வேண்டும்: தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி
அமைதி, சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் தொடர வேண்டும்
பாபரி மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி வழக்கின் உச்சசீதிமன்ற தீர்ப்பு இறுதியானது
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று (09.11.2019) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

நவம்பர் 09ம் தேதி இன்றைய தினம் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாட்கள். பல நாட்கள் வந்திருந்தாலும் இன்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். பாபர் மஸ்ஜித் - ராமர் கோவில் பிரச்சினை ஏதோ இன்று நேற்று நடந்ததல்ல. ஏறக்குறைய 200 ஆண்டுகள் நடக்கும் பிரச்சினை. 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே வழக்கின் அடிப்படை சாரம்சமாகும். 1949க்கு முன்பே ஏறக்குறைய 19ம் நூற்றாண்டிலே ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினை. அப்படிப்பட்ட பிரச்சினைதான் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பென்ஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில்  ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் 5 நீதிபதியும் ஒரே கருத்தை சொல்லி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு பென்ஞ்ச் நீதிபதிகள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள், இதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு யாரும் எங்கும் செல்ல முடியாது. இது இறுதியான தீர்ப்பு. இதை மதிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள எல்லோரும் ஜனநயாகத்தை மதிக்கக்க கூடியவர்கள். வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பவர்கள். எந்த சாதி, மொழி, மதத்தை கொண்ட அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்.

அனைத்துக் கட்சியினரும், எல்லா தரப்பினரும் ஏற்று கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கருத்தாகும்.

பாபர் மஸ்ஜித் இடிப்பதற்கு முன்பே 1989ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பம்பாய் பிரகடனம் என்று பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் நீதிமன்றம் தினந்தோறும் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டுமென்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில்தான் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பில் பல அம்சங்கள் இருக்கலாம். அதை விளக்கிக் கூறலாம். ஆனால் வாதம், எதிர் வாதம், விவாதம் நடத்த தேவையில்லை. எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ கூடாது. தீர்ப்பை குறை சொல்லும் காலம் இதுவல்ல. மதங்களையும் , இனங்களையும் வைத்து சச்சரவு ஏற்படுத்த தேவையில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லா அரசியல் கட்சிக்கும் பணிவான வேண்டுகோளாக இதை தெரிவிக்கிறது.

உச்சநீதிமன்ற உச்சக்கட்ட தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அது சொல்லப்பட்ட கருத்துக்களை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். இன்று 09ம் தேதி பாகிஸ்தான் கர்த்தர்பூர் குருத்துவாரில் குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அரசாங்கம் ஒத்துழைப்போடு அமைதியாக நடைபெறுகிறது.  குருநானக் அமைதியை விரும்பினார். அந்த அமைதி காக்கும் நாளில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்திருக்கிறது. எப்போதும் அமைதி நாளாகவே  அமைய வேண்டும் என்று நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
உலமா பெருமக்கள், மார்க்க அறிஞர்கள் இந்த தீர்ப்பை மதித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும். மத்திய - மாநில அரசுகள் விரைவில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அமைதி, சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் தொடர வேண்டும். இதை இன்றும் சொல்வோம்; நாளையும் சொல்வோம்; என்றும் சொல்வோம். சட்டத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதை விமர்சிப்பது இன்றைய தேவை கிடையாது.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டியில் குறிப்பிட்டார்.

பேட்டியின் போது மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், பாராளுமன்ற கட்சி கொறடா கே. நவாஸ்கனி எம்.பி., மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன், அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி, துணைத் தலைவர் முஹம்மது தாஹா, எம்.எஸ்.எப். தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத் ஆகியோர் உடனிருந்தனர்.
தங்கள் அன்புள்ள,

      பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
        தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்