முக்கிய செய்தி

டெல்லியில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

டெல்லியில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

ஜனநாயக, சமயசார்பற்ற காங்கிரஸ் ஆட்சி அமைய சோனியா காந்திக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்
டெல்லியில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

புதுடெல்லி, நவ. 21-

ஜனநாயக, சமயசார்பற்ற ஆட்சி வரக்கூடிய காலம் வரும் என்றும் காங்கிரஸ் ஆட்சி அமைய சோனியா காந்திக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் கூறினார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

இந்த மாதம் 11-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள பானக்காட்டில் மரியாதைக் குரிய தலைவர் செய்யது அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் முடி வெடுத்தோம். அது என்ன முடிவென்றால் நாட்டில் நிலவி கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் லீகில் முடி வெடுத்திருக்கிறோம். பேசுகி றோம். கருத்துக்களை தெரி விக்கின்றோம். அதேநேரத்தில் முஸ்லிம் லீக் எடுத்திருக்கின்ற கருத்துக்கள் சமுதாயத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் ஏற்றுக்கொள்கிறதா? அல் லது எதிர்க்கப்படுகிறதா? என்கிற விவாதம் அதனால் முஸ்லிம் லீக் எடுக்கின்ற எந்தவிதம் முடிவானாலும், அந்த முடிவை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்போம்.  அதில் எந்தவித சந்தேகமும் கிடை யாது. அதேநேரத்தில் இந்தியா என்பது பெரிய நாடு. இங்கு ஏறக்குறைய 20 கோடி முஸ்லிம்கள் வாழுகின்ற நாடு. முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு சமுதாய அமைப்புகள் இருக்கின்றன. அரசியல் கட்சிகள் உள்ளன. அத்தனை சமுதாய அமைப்பு களும், அரசியல் இயக்கங்களும் ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு கோணத்தில் அணுகுகிறது. 

சமீபத்தில் பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை 1989-லிருந்து இன்றுவரை என்ன சொல்லிக் கொண்டு வந்தோம் என்றால், உச்சநீதிமன்றம் அளித்திருக்கின்ற தீர்ப்பை நாங்கள் மதிப்போம். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்று வரை இருக்கிறோம். அதேநேரத்தில் நாங்கள் சொல்கின்ற உறுதி மற்ற அமைப்புகளில் இருக் கிறதா என்றால் இல்லை. பல இடங்களில் இல்லை. அந்த அமைப்புகள் பல் வேறு கருத்துக்களை சொல் கிறார்கள். அந்த கருத் துக்கள் என்னவென்றால் உச்சநீதிமன்றம் அளித் திருக்கின்ற தீர்ப்பில் பலதரப்பட்ட முரண்பாடுகள் நிறைந்திருக்கு. பல விஷயங்கள் முஸ்லிம்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டு முடிவு சொல்லும் போது முற்றிலும் எதிரான தீர்ப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள். அதனால் அந்த கருத்துக்களையும் கேட்டு நமது கருத்துக்களை முஸ்லிம் லீக் சார்பாக வைத்தால் நம்முடைய வரவேற்பு கூடும். இஸ்லாமிய சமுதாயத்திற்கு மதிப்புகள் கூடும் என்கிற அடிப்படையில் தான் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நாங்கள் எடுத்த முடிவு என்னவென்றால் டெல்லியில் சமுதாய அமைப்புகளின் அனைத்து தலைவர்களையும், சமுதாயத்தின் அரசியல் கட்சியில் உள்ள தலைவர் களையும் ஓர் இடத்தில் கூட்டி அவர்களுடைய கருத்துக்களை கேட்பதற்கு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு முதலில் ஒரு முடிவு செய்தோம். அந்த முடிவை நடைமுறைப் படுத்துவதற்காகத் வேண்டி நேற்றைய தினத்தில் இஸ் லாமிக் சென்டரில் கூட்டம் நடத்துவதற்காக தேசிய பொதுச்செயலாளர் குஞ் ஞாலி குட்டி அழைப்பு கொடுத்தார்.  இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த ஏராளமானனோர் கலந்து கொண்டனர். அவர்களின் கருத்துக்களை சொன்னார்கள். நாங்கள் எங்கள் கருத்துக்களை சொன்னோம். அந்த அடிப்படையிலே தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமுதாய பிரச்சினைகள் குறித்து எந்த சட்டம் வந்தாலும், அது மட்டுமல்லாமல் தேசிய அளவிலே எதிர்நோக்கக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாம் பேசி ஒரு நல்ல முடிவு எடுத்து நாமும் தெளிவு பெற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கு அறிவிக்கக் கூடிய வகையிலே முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் அடிக்கடி கூடுவது, கூடி கலந்து பேசுவது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

அதற்கு எல்லா எம்.பி. களையும் அழைக்கிறது என்று முடிவு செய்திருக்கிறோம். அடுத்த முடிவு நாங்கள் கேர ளாவில்  எடுத்தது என்ன வென்றால் அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்தி களோடும் கலந்து பேசுவோம் என்ற அடிப்படையிலே முதல் முறையாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நாங்கள் பேசினோம். அதேபோன்று அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பேசுவோம். சோனியா காந்தியிடம் மூன்று விஷயங்கள் பற்றி பேசினோம். ஒன்று, இன்று மத்தியில் ஆளுக்கூடிய பாரதீய ஜனதா கட்சி இந்திய அரசியல் சாசனத்தை முற்றிலும் மதிக்காத ஒரு கட்சியாக இருக்கிறது. இந்த நாட்டினுடைய பாரம் பரியத்தை நசுக்கின்ற வகையில் இந்த நாடு 70, 71 ஆண்டுகளாக என்ன பாரம்பரியத்தை உருவாக்கினோமோ அந்த ஜனநாயகம், சமயசார்பற்ற, மதச் சார்பின்மை, பாரம் பரியத்தை ஆளுகின்ற கட்சி மதிக்காமல் முற்றிலும் மாறுபட்ட நாட்டை கொண்டு போகிறார்கள் என்றும், இந்தியாவை இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆட்சி நடத்துபவர்கள் எதிராக கொண்டு செல்கிறார்கள்.
அதற்கு மாற்றாக எந்த கட்சி என்றால், காங்கிரசை  தவிர வேறுஎந்த கட்சியும் இல்லை. அப்படி காங்கிரஸ் கட்சிக்கு தான் பெருமை, வரலாறு இருக்கிறது. காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறதாக நினைக்க கூடாது. கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரசுக்கு துணையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. துணையாக இருக்கிறது. 

கடந்த தேர்தலில் கலைஞர் இருக்கும் போது சோனியா பிரதமராவார் என்று தான் ஓட்டு கேட்டோம்.  இந்த தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராவார் என்று ஓட்டு கேட்டோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் ஓட்டு கேட்டோம்.  அதன் அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென்னகத்தில் அந்தமாதிரி உணர்வு இருந்தது. உணர்வு அங்கு மட்டுமல்ல இந்தியாவில் 37 சதவீதம் தான் இந்த ஆட்சியில் உள்ளவர்கள் பெற்று வந்திருக்கிறார்கள். 63 சதவீதம் வாக்குகள் பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக தான் போட்டிருக்கிறார்கள். 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக மரபு, அதனுடைய மதச்சார்பற்ற கொள்கை இவற்றை தெளிவு படுத்துவது தான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இந்த மாதிரியான முயற்சிகளை நீங்கள் செய்யும்போது எங்களுடைய ஒத்துழைப்பை எல்லாம் கொடுக்க நாங்கள் தயராக இருக்கிறோம். 

கேரளாவில் எப்படி ஒத்துழைப்பு தருகிறோமோ, தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமை யிலான கூட்டணியில் எப்படி உங்களுக்கு ஒத் துழைப்பு தருகிறோமோ அதே மாதிரியான ஒத்துழைப்பை இந்தியாவில் முழுவதிலும் உள்ள எல்லா மாநிலங்களிலும் கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆக நீங்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. அதிக நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். மீண்டும் இந்த நாட்டில் காங்கிரசின் ஆட்சி, ஜனநாயக, சமயசார்பற்ற ஆட்சி வரக்கூடிய காலம் வரும். அதற்கு நாங்கள் எல்லாம் உங்களுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம் என்று சோனியாகாந்தியிடம் சொல்லிட்டு ஒரு மனுவை யும் கொடுத்துவிட்டு வந்திருக் கிறோம். 

இவ்வாறு பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் கூறி னார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

கேள்வி : சிறுபான்மையி னருக்கு எதிராக செயல்படக் கூடிய மத்திய பாஜ.க. வுக்கு எதிராக என்ன செய்ய வேண் டும் என்று சொல்லிவிட்டு வந் திருக்கிறீர்கள்?

பதில் : இன்னும் முடிவை நாங்கள் செய்யவில்லை. சோனியா காந்தியை சந்தித்து குஞ்ஞாலி குட்டி சாஹிப் எல்லா பிரச்சினைகளையும் பற்றி சொன்னார். அதுபோல் காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தோம். பஷீர் சாஹிப் சொன்னதுபோல் பாராளுமன்றத்தில் முதல் மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்த போது கலைஞர் இருந்தார். அதுமாதிரி வரலாறு இப்பொழுது இல்லை. மாறிவிட்டது. அதனால் அந்த மாதிரியான நிலைமையை உருவாக்கனும் என்று முஸ்லிம் லீக் சார்பாக சொல்லியிருக்கிறோம்.  அதை செய்கிறோம் என்று சோனியா காந்தி சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி :- சிறுபான்மையி னருக்கு எதிராக நடக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் குரல் கொடுக் கின்றன.

பதில் : சிறுபான்மை பிரச்சினை மட்டுமல்ல. நாட்டில் எதிர்நோக்கியுள்ள எல்லா பிரச்சினைகளையும், தலித் மக்கள்,  மலைவாழ் மக்கள், ஏழை - எளிய மக்கள், பொருளாதாரம் சீரழிந்துள்ளவர்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் எல்லோருடைய பிரச்சினை களையும், அதே போன்று சட்ட ரீதியாக பாதிக்கப் பட்டிருக்கின்ற அனைத்து பிரச் சினைகளையும் தீர்க்கக் கூடிய வகையிலே ஆரம்பத் தில் எப்படி நீங்கள் ஒருங் கிணைப்பாளர்களை வைத்து செயல்பட்டீர்களோ அதே போன்று செய்ய வேண் டும் என்று பஷீர் கேட்டுக் கொண் டார். அதை செய்கி றோம் என்று சோனியா காந்தி ஏற்று கொண்டார். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.