முக்கிய செய்தி

தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் சோதனைகள் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல் கனிமொழி இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம்

தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் சோதனைகள் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல் கனிமொழி இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம்
தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் சோதனைகள் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல்
 
கனிமொழி இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு  பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம்
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் திருமதி கனிமொழி அவர்கள் தங்கியிருக்கும் இல்லத்திலும், தேர்தல் அலுவலகத்திலும் 16ம் தேதி மாலை 6 மணியோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் வருமான வரித்துறையினர் நுழைந்து சோதனை என்கின்ற பெயரில் கனிமொழி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கத்தோடும், வேலூரை தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்யும் அந்தரங்க சூழ்ச்சியோடும் இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
தேர்தல் நடப்பதற்கு ஒரு நாளே உள்ள நிலையில் வேட்பாளர் வீட்டில் சோதனை நடத்துவதற்குரிய காரணம் என்ன? தொகுதியில் உள்ள பூத்களில் பணிபுரியும் கட்சி ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருப்பதை கூட வருமான வரித்துறை உள்ளே நுழைந்து அதையும் கைப்பற்ற முயற்சி செய்வது தேர்தலை முடக்கக்கூடிய காரியமல்லவா. அது மாதிரியான தொகைகூட கனிமொழி இல்லத்திலும், அலுவலகத்திலும் எடுக்கப்படவில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள். இது தமிழக மக்களை கேவலப்படுத்துகிற ஒரு பெரிய சதி முயற்சியாகவேபடுகிறது.
 
தேர்தல் ஆணையம் இதுபோன்ற வருமான வரித்துறையினரின் அத்துமீறிய சோதனைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மட்டுமே குறி வைத்து இத்தகையை கேவலமான நடவடிக்ககைகளை மேற்கொள்வது ஜனநாயகத்தை கேலி கூத்தாக ஆக்குவதாகும். 
 
நாட்டில் நடைபெறக்கூடிய தேர்தல் இத்தகையை அநியாயத்திற்கும், அதர்மத்திற்கும் அத்துமீறிய செயல்பாட்டுக்கும் தமிழக வாக்காளர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமோகமாக வெற்றிபெற செய்வதன் மூலம் சரியான படிப்பினையை தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 
தங்கள் அன்புள்ள,
 
 
 
     பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
       தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்